Total Pageviews

Friday, May 4, 2012

புத்தம்! சமணம் !!

சனாதனமதத்தின் வீழ்ச்சியும் புத்த மதத்தின் வளர்ச்சியும்!
புத்தமதத்தின் வீழ்ச்சியும் சமண மதத்தின் வளர்ச்சியும்!
சமணமதத்தின் வீழ்ச்சியும் சைவ சமயத்தின் வளர்சியும்!



புத்தருக்கு முன்பு உருவ வழிபாடும் பலகடவுள் கொள்கையும் அந்தணர்கள் உயந்த வகுப்பாக கடவுளுக்கு குத்தகைதாரர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர் !அதனை மாற்றி அரச மதமாக ஆனது புத்த மதம்!
புத்தர் கடவுள் மறுப்பாளாரல்ல! தடியெடுத்தோர் தண்டல்காரன் என கடவுள்கள் பல இட்டுகட்ட படுவது ஒரு புறம் ; பிரபலமானைவகளில் பூசாரிகள் என கடவுளை குத்தகை எடுத்துகொண்டவர்கள் ஒருபுறம் என கடவுளின் பெயரால் பிழைப்புவாதங்கள் பெருகி அடிமைத்தனத்தில் பொதுமக்களை ஆட்டிபடைத்த அறியாமை இருளை களைய வந்தவர் புத்தர்!

பலகடவுள் கொள்கையை உடைத்து இந்தியா முழுமையும் ஏக இறை கொள்கையை ஸ்தாபித்தவர்! எல்லா மனிதனுக்குள்ளும்  (தனக்குள் மட்டும் அல்ல) துலங்கும் இறைவனை தன்னை தூய்மையாக்கி இச்சைகளை அடக்கிய புத்தனாக மாறிய மணிதனே கண்டுணரமுடியும்! அப்படிப்பட்ட துறவிகள் மட்டுமே ஆண்மீகம் தொடர்பாக மக்களுக்கு வழிகாட்ட முடியுமே தவிற பிறப்பாலும் மந்திரம் கற்று ஓதுவதால் மட்டும் அந்தணர் --பூசாரி ஆகிவிட முடியாது என்பதை பலத்த எதிர்ப்புக்கு இடையில் ஸ்தாபித்தவர்!

ஆலயங்கள் பிழைப்புவாதிகளின் கொள்ளைகூடாரமாக மாறி பிறப்பாலும் மந்திரம் கற்றதாலேயும் கடவுளை குத்தகை எடுத்துக்கொண்டவர்கள் பொதுமக்களின் ஆண்மீகதலைமை ஆக மாறிய இருண்ட இந்தியாவில் தன்னை உணர்ந்து தனது அய்ம்புலன்களை அடக்கியாள கற்றுகொண்டவனே ஆண்மீக தலைமை ஏற்க வேண்டும் என்றது புத்த நெறி !
மணிதர்களின் புலண்கள் இச்சையை தூண்டி ``ஆசையை`` கொடுக்கிண்றன! அந்த ``ஆசையே துண்பத்திற்கு காரணம்`` அது பாவபதிவுகளை உண்டாக்கி கடவுளிடமிருந்து மணிதனை அன்னியப்படுத்துகிறது!

கடவுள் +பாவபதிவுகள்= மனிதன்! கடவுளுக்கு அன்னியமானவன்!
மனிதன் -பாவபதிவுகள்= புத்தன்! கடவுளோடு இணைந்த நிலை!
அந்த புத்த நிலை என்பது அடிப்படையில் எங்கும் எல்லா உயிர்களிலும் துலங்கும் எக இறைவனை உள்ளத்தால் வழிபடுவது!
புத்தர் இந்தியாவில் ஏக இறைகொள்கையை உயர்த்திபிடித்த ``குரு``


இக்கொள்கை அசோகர் மூலம் இந்தியாவின் அரச மதமாக மாறி இலங்கை மங்கோலிய இணம் முழுமையும் பரவி நிலைபெற்றது!அதன் பிறகு இச்சைகளை அடக்கு என்ற கொள்கையை பயிற்சிக்கிற புத்தவிகாரங்களில் பொன்னும் பொருளும் புகழும் வந்து குவிந்தன !

இப்போது பிழைப்புவாதிகளின் கவணம் புத்தவிகாரங்களின் மீது விழுந்தது! அந்த பொன்னையும் பொருளையும் புகழையும் நாடி பிழைப்புவாதிகள் புத்ததுறவிகளாய் மாறினார்கள்! புத்த விகாரங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரங்களாக மாறத்தொடங்கின!

ஒரு நடைமுறையை உங்களுக்கு சொல்கிறேன்! ஏழ்மையான நிலையில் ஒரு குடும்பம் இருந்தால் ஒரு எளிய வழி! ராணுவத்தில் சென்று சேர்வார்கள்! அது குடும்பத்திற்காக ஒரு தியாகம் போல! அங்கு குடும்பத்தை கொண்டு வைத்திருப்பது அவ்வளவு ஒத்துவராது !பணமும் செலவாகும்! ஆனால் குடும்பத்தை பிறிந்து அங்கிருக்கும் ஒருவருக்கு உணவு உடை இருப்பிடம் ராணுவ செலவு! மாதாமாதம் சம்பளம் மிச்சம் ! அந்த சம்பளத்தால் குடும்பத்தை மூண்று படி முன்னேற்றி விடலாம் !அது ஒரு மணிதன் தன்னை தியாகமாக்கி வீட்டுக்கும் நாட்டுக்கும் அர்ப்பணிப்பது!

இது போன்ற ஒரு தியாகம் --ஒரு எளிய வழி--கத்ததோலிக்கர்களுக்கு உண்டு! குடும்பத்தில் ஒருவர் பாதிரியாராக --அல்லது சகோதரியாக மடத்தில் சேர்ந்து விட்டால் போதும் !பதவியில் இருக்கும் போது மடத்தின் சொத்துகளை நிர்வாகிக்கிற வகையில் தனது உடன்பிறந்தவர்களை பல மடங்கு உயர்த்திவிடுகிறார்கள்! இந்த வசதியை கொள்கைக்கும் அப்பாற்பட்ட பிழைப்புவாதிகள் தெறிந்து கொண்டு பிழைப்பதற்காக கொள்கை பேசும் ஆண்மீக வாதிகளாய் ஆவது இயற்கை! இந்தியாவில் இப்படி பல குடும்பங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர்! எப்போதும் உண்மையை விட பொய்மை தன்னை அதிகம் பிரபலபடித்திக்கொள்ளும்! நடிக்கும்! சாய்பாபா மீது உண்மையான பக்தி கொண்ட சீடர்கள் வெளியே இருந்தார்கள்! ஆனால் அவரிடமிருந்த செல்வத்தின் மீது கண் வைத்த பொய் சீடர்கள் அதிகம் நடித்து அவரிடம் ஒட்டி கொண்டு பலனடந்தார்கள்! அவர் இறந்தவுடன் எவ்வளவு செல்வத்தை கடத்த முடியுமோ கடத்திவிட வில்லையா?

இதுபோல செல்வம் ஓரிடத்தில் குவியும் போது கொள்கையில் ஈடுபாடு இல்லாத பிழைப்புவாதிகள் பிழைப்புக்காக கொள்கையை ரெம்பவே பசப்பி புத்தமடாலயங்களில் புகுந்து கைப்பற்றிகொண்டு திறைமறைவில் பல ஆட்டூளியங்களை செய்யதொடங்கினார்கள்!

அவர்கள் தங்களை புத்தரின் மீது ரெம்ப அபிமாணம் கொண்டவர்கள் போல காட்டிகொள்ளும் பசப்பு வாதத்தின் ஒரு பகுதியாக ஒரு பெரிய சீரழிவு திருத்தல் வாதத்தை புத்தரின் கொள்கையில் சேர்த்தார்கள்! அது புத்தருக்கு ஆயிரம் ஆண்டுக்கு பிறகு ஒரு புத்தமஹாநாட்டில் காணாத ஒன்றை கண்டுவிட்டதாக அறிவித்தார்கள்! ``கடவுள் தான் புத்தராக பூமிக்கு வந்தார் !எனவே இன்று முதல் புத்தரையே கடவுளாக வைத்து வழிபட போகிறோம்`` என்பதே! அதுவரை அரூப ஏக இறைவனை உள்ளத்தை தூய்மையாக்கி வேள்வியாக வழிபட்ட புத்தமதம் ``ஹீணயானம்`` என முத்திரை இடப்பட்டு புத்தரையே கடவுளாக்கி ``மஹாயானம்`` என்ற முத்திரையில் நின்றனிலையில் புத்தர் உட்கார்ந்த நிலையில் புத்தர் படுத்தனிலையில் புத்தர் ஆயிரம் படுத்த புத்தர் என தெருத்தெருவாக உருவ வழிபாடாக மாற்றினார்கள்! புத்தரை கடவுளாக மற்றி தாங்கள் தான் உத்தம சீடர்கள் என்பதுபோல காட்டிகொள்கிற சாக்கில் போலிசீடர்கள் புத்தரின் கொள்கையை குழிதோண்டி புதைத்து விட்டணர்!புத்த விஹாரங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக மாறி வீழ்ச்சியை நோக்கியது!


அப்போது அரூப ஏக இறைக்கொள்கையின் தொடர்ச்சியாக மஹாவீரரால் முன்னெடுக்க பட்டது ``சமண மதம்``! பிழைப்பு வாதிகள் உள்ளே நுழையாமல் தடுத்தாக வேண்டும் என்பது அவசியம் என்பதாலேயே ``சமண முனிகள் சகலத்தையும் துறந்த பக்குவம் எட்டியிருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக மஹா நிர்வாணம் வலியுருத்தபட்டது !மலை குகைகளில் கல்படுக்கைகளில் தான் வாழவேண்டும் ! பொதுமக்கள் கட்டிய கட்டடங்களில் வாழகூடாது! ஊருக்குள் சென்று முதல் வீட்டில் பிச்சை கிடைத்தால் உண்ணலாம்; கிடைக்கவிட்டால் அடுத்த வீடு செல்லாமல் பட்டிணி இருக்கவேண்டும்! காசை கையாலும் தொடக்கூடாது என்ற கடும் சட்டங்கள் அமலுக்கு வந்தன! இந்த சாதகன் எதையும் துறந்து தன் உணவுக்கு கூட கடவுளை மட்டுமே நம்பி வேண்டி முதல் வீட்டை தேர்ந்தெடுத்தாக வேண்டும்! இத்தகைய பயிற்சி உள்ளர்ந்த இறைதேடல் இல்லாத பிழைப்புவாதிகளால் ஒரு நிமிடம் கூட நிற்க முடியாதது! இந்த சமண மதம் தனது பற்றுருதியால் தர்ம நெறியால் இந்தியா முழுவதும் 1800 ஆண்டுகள் வரை அரசமதமாக மாறிற்று! கலப்பிரர் என்று இல்லை தமிழக சேர சோழ பாண்டியர் வரை சமணமதத்தை தழுவியவர்களாகவே இந்தியா இருந்தது!

சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம், மணிமேகலை,திருக்குறள்--இவையெல்லாம் சமணர்களின் இலக்கியங்களே! இங்கு இறைவன் ``ஆதிபகவன்`` இருள்சேர் இரு விணையும் சேரா இறைவன் என குறிக்க படுவதை காணலாம்! அரூப ஏக இறைவனே உள்ளத்தால் வழிபடப்பட்டவர்! சித்தன்னவாசல் குடைவரை கோவில் என்பது சமணர்களின் தியாண மண்டபமாகும்! அந்த கோவிலின் பெயர் ``அறிவர் கோவில்`` கடவுள் முற்றறிவாளன்--அறிவர் என இங்கு குறிக்க படுகிறது! செயல்விளைவு தத்துவம் --கர்மா தத்துவம் என்ற இந்துமத்தத்தின் ஜீவ நாடியான தத்துவம் புத்த,சமண மதங்களின் உபதேசமாகும்! எங்கும் எல்லா உயிர்களிலும் நிறைந்த இறைவனை உள்ளத்தால் வழிபடுவது என்பதாலேயே ஒரு எறும்பை கூட அறியாமல் மிதித்து விடக்கூடாது என்ற ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைபிடிக்க பட்டது! ஆயிரம் ஆயிரம் துறவிகள் கூடி உண்ணாமல் உறங்காமல் தியாணித்து அதன் பலனாய் இந்தியா செழிப்பானா நாடாய் இருந்தது! மக்கள் மண்ணர்கள் இறைஅச்சம் உள்ளவர்களாய் நீதிதவறாமல் வாழ்ந்தனர்! மண்ணர்களுக்கிடையில் சண்டைசச்சரவுகளும் யுத்தங்களும் கூட அதிகம் இல்லை! உண்மையில் அது ஒரு ``பொற்காலமே`` ஆனால் உருவ வழிபாடு கோவில்கள் யாவும் அடைக்க பட்டு புல்மண்டி போய் இருந்தது! அந்தணர்கள் விவசாயம் பல தொழில் செய்து பிழைக்கும் நிலையில் இருந்தனர்!

மதுரை கூண்பாண்டியனை திருனாவுக்கரசர் சைவத்திற்கு மாற்றும் வரை சமண மதமே அரச மதமாக இருந்தது! திருனாவுக்கரசர் சைவசமயத்தை மீண்டும் உயிரூட்டி கோவில்கோவிலாக திறந்து புல் வெட்டும் வேலையைதான் செய்தார்! ``உழவாரப்படை `` அமைக்க வேண்டிய அளவு உருவவழிபாட்டு கோவில்கள் யாவும் அடைக்க பட்டு இருந்தன! அடுத்து மாணிக்கவாசகர் பாண்டிய மண்ணனின் அமைச்சராக இருந்து சைவசமயத்தை உயிரூட்டினார்!

அதுவரை வேறு தொழில் செய்த அந்தணர்கள் மீண்டும் கோவில் நிர்வாகத்திற்கு வந்து சேர்ந்தனர் !அது நாள் வரை அடக்கி வாசித்தவர்கள் தங்கள் பழியை தீர்த்து கொண்டனர்! சமண முனிவர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது உண்மையே! சமண மதம் சுவடே இல்லாமல் அழிக்கபட்டது! ஸவ்ராஸ்ட்ராவில் மட்டுமே நிலை கொண்டு உள்ளது!

சமண மதத்தின் வீழ்ச்சிக்கு வழக்கம் போல கலப்பு ஒரு காரணமாகும்! எந்த ஒரு தத்துவமும் நாளடைவில் மனித கற்பனைகள் கலப்புள்ளதாகி சீர்கெட்டு போவது இயற்கை! சமண மதத்தில் ஏக அரூப வழிபாட்டில் சிறுகசிறுக ஆவிமண்டல சக்திகள் மீது நம்பிக்கை வளந்தது! பல வாணவர்கள் நன்மை செய்ய உள்ளனர் என்கிற நம்பிக்கையும் அவர்களை துணைக்கு அழைப்பதும் ஏவல்செய்வதும் வளர்ந்தது! மணிமேகலையில் இப்படி வாணவர் ஒருவர் ``மணிமேகலையை ஆசை கொண்ட சோழ இளவரசணை கொண்றதாக ஒரு கதை உள்ளது!`` அது ஏவல்! இந்த ஏவல் கலை சமண மதத்தை தழுவியவர்கள் செய்ய தொடங்கி பொதுமக்களுக்கு இடரல்கள் கொடுக்க தொடங்கினர்! வாணவர்களை சிலையாக செதுக்குவது கிராம தெய்வ வழிபாட்டுக்காரர்களை கொல்லுவது கலுவேற்றி கொல்லுவது என ஆதிக்கம் செய்கிறவர்களாய் மாறத்தொடங்கினர்!அதுவுமல்லாமல் மாஹாவீரரை அரச மரத்தடியில் உபதேசிக்கிற குருவாக சிலை வடிக்க தொடங்கினர் ! உருவ வழிபாட்டை முற்றிலும் துடைத்து அந்தணர்களை செல்லாக்காசாக மாற்றி வேறு தொழில் செய்யவைத்த சமணர்கள் காலப்போக்கில் உருவ வழிபாடு போல வாணவர்களை பற்றிய கதைகளை பரப்பியதால் மீண்டும் உருவ வழிபாட்டிற்கு அவர்களே பாதையை திறந்து கொடுத்தது போல ஆயிற்று! ஆதியில் வாதில் சமணர்களை வெல்ல முடியாமல் மாற்று சமயத்தினர் பல முறை தோல்வியடைந்தனர்! அவர்களை சமணர்கள் கலுவேற்றினர் ! எறும்பை கூட மிதிக்க கூடாது என்ற ஆதி உபதேசம் மறைந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைனிறுத்த மணிதர்களை கலுவேற்றுகிறவர்களாக சமணர்கள் மாறியது அவர்களின் சீரழிவுக்கு காரணமாயிற்று! அவர்களின் பல தவறுகள் கடவுளின் பலத்தை அவர்கள் இழந்து போவதற்கு காரணமாயிற்று!

முதலில் ``தர்மசேனர்`` என பெயரை மற்றிகொண்டு சமண துறவியாக மாறியவர் திருனாவுக்கரசர்! அங்கு சமண மத குருமார்கள் செய்கிற அக்கிரமங்களை கண்டு வெறுப்படைந்தும் அக்காள் திலகவதியின் முயற்சியாலும் அவர் மீண்டும் சைவரானர்!
காலசக்கரம் மீண்டுவரும்; இக்கரைக்கு அக்கரை பச்சையாக அடிக்கடி மாறும்! மக்கள் மாறிமாறி ஓட்டுபோடுவது போல!அதனை பலகடவுள் கொள்கையை உபதேசிக்கும் ஆவிமண்டல சக்திகள் பயன்படுத்தி கொண்டன! ஏக இறைகொள்கை பேசிணாலும் கடவுளுக்கு பிரியமில்லாத அக்கிரமங்களை கடவுள் ஆதரிக்கமாட்டார்! அதனால் வாதில் திருனாவுக்கரசர் வென்றார்! வைகையில் திருனாவுக்கரசர் விட்ட சுவடி எதிர்னீச்சலடித்து திருவேடகத்தில் கரை ஏறிற்று! கூண்பாண்டியர் சைவமதத்தை ஏற்று அரச மதமாக்கிணார்! அப்போது சமணர்கள் முன்பு பிறரை கலுவேற்றியது போல சமணரையும் கலுவேற்றினார்கள்! இருப்பினும் சமண மதத்தின் ஆதிகால நண்மைகளை மறக்கமுடியாததாலும் மஹாவீரரின் சாதனையை மதித்தும் மஹாவீரர் குருவாக தட்சிணாமூர்த்தியாக அரசமரத்தடியிலிருந்து உபதேசிப்பவராக சைவ கோவில்களில் சேர்த்து கொள்ளப்பட்டார்!``குரு``என்ற சொல்லுக்கு நீங்காத மரியாதையை சைவர்கள்  மகாவீரருக்கே கொடுத்துள்ளனர் !!

கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????

இறைதூதர் பூமியில் இருக்கும்போது அவரை மனிதர்களை தூண்டி விட்டு எதிர்ப்பதும் கொடுமைப்படுத்துவதும் கொல்லுவதும் சாத்தானின் இயல்பு!இறைதூதர்கள் சென்றுபோனவுடன் அவர்களை கடவுளுக்கு இணைவைத்து கும்பிட்டால் போதும் என சீடர்களின் அபிமாணத்தை மிகைப்படுத்தி தூண்டி விடுவதும் சாத்தானின் இயல்பு!
                       இயேசு சதா கடவுளை துதிப்பவராக உயர்த்துபவராக வாழ்ந்து காட்டியும்``என் பிதாவின் சித்தத்தை செய்கிறவனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவேகர்த்தாவே என அழைக்கிறவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை``என எச்சரித்தும் இன்றைக்கு கிரிஸ்தவர்கள் ஜெபம் என்ற பெயரில் 99% இயேசுவிடம் பேசிவிட்டு முடிக்கும் போது மட்டும் பிதாவே-கடவுளே என முடிக்கும் பழக்கம் வந்துவிட்டது!திரித்துவம்,திரியேகத்துவம் என குழப்பத்தில் மூழ்கி கடவுளை விட்டுவிட்டார்கள்!
                       கடவுளுக்கும் கடவுளின் வார்த்தைக்கும்(இயேசு) வித்தியாசம் உள்ளது!வழிபாடு கடவுளுக்கு மட்டும் உரியது!நான் `வழி` என்பதை ` நான்தான்` என சொன்னதாக கிறிஸ்தவர்கள் திரித்து விட்டனர் !
                        இது போலவே முந்தய இறைதூதர்களான ராமனும் கிரிஸ்ணரும் கடவுளாக்கப்பட்டனர்!நான் உடைத்தால் மண்சட்டி நீ உடைத்தால் பொண்சட்டி! வெளி நாட்டில் மரித்தவர்களை  கடவுளுக்கு இணை ஆக்கு ஆனால் உள்நாட்டில் மரித்தவர்களை ஓரங்கட்டு!என்றால் மதச்சண்டை வராமல் என்ன வரும்?!
              `லார்ட்` என்பது அதிகாரிகளை குறிக்கும் மரியாதை சொல்!லார்ட் ஜீசஸ், லார்ட் காட் என்று மரியாதை சொல்லை கர்த்தர் என்று தமிழ் தெறியாத ஒருவர் மொழிபெயர்க்க கர்த்தரை ஒரு கடவுளாக்கிய கொடுமை கிரிஸ்தவர்கள் மீது சத்தானின் நுட்பமான
ஆளுகைக்கு சான்று!லார்ட் ஜட்ஜ்,லார்ட் மினிஸ்டர்,லார்ட் கவர்னர்,லார்ட் சீ,எம்,லார்ட் பி.எம்,லார்ட் பிரசிடெண்ட் என்று அழைப்பது அரசு மரபு!இந்த லார்ட்-ய் கர்த்தர் என மொழிபெயர்த்து ``கர்த்தாவேகர்த்தாவே``என பிரார்த்திக்கும் கிரிஸ்தவர்கள் எந்த கர்த்தரை அழைக்கிறார்கள்?
                       உலகம் முழுவதிலும் மரித்த மனிதர்களின் மேலுள்ள அபிமானத்தை அவர்களின் பெயரை சொல்லி சில அற்புதங்களை செய்து அவர்களும் கடவுளாகி விட்டனர் என மாயையை பரப்புவது அசுரர்கள் ! கணக்கடங்காத கடவுளை உண்டாக்கி வழிபட செய்து கடவுளை காணாமல் போக செய்யும் வேலையை அசுரர்கள் வெற்றிகரமாக ஆதாம் முதல் செய்து வருகிறார்கள்!
                       அதே வேலையை தான் கடவுளும் இயேசு மூலம் செய்திருப்பாரா?ஆதாம் தான் அர்த்தனாரீஸ்வர்--ஆண் பாதி பெண் பாதி என்பது அவர்தான்!மரித்த மனிதர்கள் பலர் சாத்தானின் கைங்கரியத்தால் கடவுளாக்கபட்டனர்!அதை கடவுளும் காப்பியடித்திருப்பாரா?

ஆதி மனிதர்கள் வரலாறு!

முதல் மனிதனான ஆதாம் பாவம் செய்து சொர்க்கத்திலிருந்து பூமியில் இறக்க பட்டது நமது இந்தியாவும் தெற்க்கே இருந்த ஜலப்பிரளயம் வந்து அழிந்த லெமூரியாக்கண்டமாகும்!இங்கு பேசப்பட்ட மொழி `தேவனகரி`என்பதாகும்!இது தமிழுக்கும் சமஸ்கிரதத்திர்க்கும் மூலமான மூத்த மொழி! எனவே தான் தமிழை முன் தோன்றிய மூத்த மொழி எண்கிறார்கள்!

 ஆதாம் கடவுளை கடவுள் என்று மட்டும் வழிபட்டார்! உருவமற்ற ஏக இறைவனே அவரது தெய்வமாகும்! இதுவே உலகத்தின் ஆதி இந்து மதமாகும் !இந்து என்றால் கடவுளுக்கு பயந்த பக்தி என்று பொருள்! இம்மனிதர்கள் ஒவ்வொருவறும் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளனர்!


அக்காலத்தில் முனிவர்கள் தபோவனம் அமைத்து கடவுளை தேடுவதும் இறைபக்தி,போர்க்கலை,கல்வி,தர்மனியாயங்கள் பற்றி கற்பித்து வந்தார்கள்! வசிஷ்டர் விசுவாமித்திரர் சமகாலத்தவர்கள் ராமரின் குருமார்கள் ராமஅவதாரத்தைப்பற்றி முன்கூட்டியே தெரிந்தவர்கள் -முனிவர்கள்!


வசிஷ்டரின் மனைவி அகல்யை வானமண்டலத்து தேவதூதன் ஒருவரால் மோகிக்கப்பட்டு நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு சாபத்துககுள்ளானார்கள் அதுபோல அருந்ததி வான்வெளியில் சென்ற தேவதூதர்களை குளத்து தண்ணீரில் கண்டு அழகு என சிந்தித்ததற்கே கற்பு இழந்தவளாகி சாபம் பெற்றாள் என்கிற கதை உண்டு!


இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆதாம் முதல் நோவாவின் காலத்தில் பிரளயம் உண்டாகி பூமி அழியும்வரை பல ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் இரண்டு யுகங்கள் கடந்திருக்க வேண்டும் பைபிளில் தேவபுத்திரர்கள் மனிதபுத்திரிகள் அழகுள்ளவர்கள் என்று கண்டு தங்களுக்கு பெண்கொண்டதால் பூமியில் அரக்கர்கள் பிறந்து பலத்தார்கள் என்று ஒரு வசனம் உள்ளது சாகுந்தலை என்கிற புகழ் பெற்ற காதல் காவியத்தில் சகுந்தலை தன்னை திருமணம் செய்த கந்தர்வன் --தேவபுத்திரனான துஷ்யந்தனை- பிரிந்து சென்றவனை   தேடிகண்டுபிடித்த வரலாறு உள்ளது!


இப்படி மனிதர்களுக்கும் தேவதூதர்களுக்கும் பிறந்த  அரக்கர்கள் பலமும் ஆணவமும் கொண்டு மனித இனத்தை துண்பம் செய்தபோது ராமரும் கிருஷ்ணரும் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டினார்கள் அசுரர்களை அழித்தார்கள் அதன்பிறகு தேவபுத்திரர்கள் பூமியில் நேரடி தலையீடு செய்வது தடைசெய்யப்பட்டுவிட்டது! தேவபுத்திரர்கள்--கந்தவர்கள்-- தேவதூதர்கள் பூமியில் பெண் கொள்ளுவது தடைசெய்யப்பட்டுவிட்டது கிருஸ்ணர் தாம் பரலோகம் செல்லும்முன்னர் கலியுகம் பிறக்கபோவதைப்பற்றி தர்மருக்கு எச்சரிக்கை செய்துள்ளார்! கலிபுருசன் என்பவனது ஆட்சி என்பது அமானுஷ்யமானது! கடவுளுக்கு கீல்படிதலற்ற தேவதூதர்களுக்கு --அதாவது அசுரர்களுக்கு--சாத்தானின் கூட்டத்திர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது!


             அசுரர்கள் யாருக்கும் கண்முன்னால் தோன்றி உபதேசிப்பதில்லை! மனிதர்களின் உணர்வுகளை தூண்டி இச்சைகளை அழகாக்கி காட்டி ஆணவத்தை சுயபெருமையை குழு உணர்வுகளை தூண்டி ஒருவருக்கு ஒருவர் தீங்கு செய்ய தைரியம் கொடுப்பது அதை நியாயப்படுத்துவது அசுரர்களின் அமானுஷ்ய வேலை!காமம்,மோஹம்,குரோதம்,மதம்&மாச்சரியம் எங்கிர அய்ந்து வகை தீய குணங்களின் வழி அசுரன் ஆட்சி செய்கிரான்!இது மனிதர்களின் தீய குணங்கள் என்று மட்டும் வாதிடாதீர்கள் எதிரிகளை சரியாக கணிக்காவிட்டால் யுத்த களத்தில் முன்னேறவே முடியாது இக்குணங்கள் அஹிரினை அன்று உயர்தினை (personallity caused by Evil Spirits)பேய்,பிசாசு இருப்பதெல்லாம் உண்மையே!(இறந்தவர்கள் எப்படி பேயாய் வருகின்றனர் என்பதை விரிவாய் பிற்பாடு எழுதுகிறேன்)---மனிதருக்கு தீய குணங்களை ஆவியாய் இருந்து அசுரர்கள் தூண்டுகிறார்கள் என்றால் இதை இல்லை என்று மறுப்பதால் என்ன சாதித்துவிடப்போகிறீர்கள் ஏற்றுக்கொண்டால் என்ன குறைந்துவிடும்?ஆனால் நமது நற்குணங்களில் கடவுளின் அருள் வெளிப்படுவதைப்போல நமது தீய குணங்களில் அசுரர்களின் மருள் வெளிப்படுகிறது கடவுளின் அருள் வெளிப்படுகிற என்னிடத்திலேயே அசுரர்களின் மருளும் வெளிப்படுகிறது என்கிற எதார்த்ததை புரிந்துகொள்ளவேண்டும் மனித சரீரம் இரண்டு சக்திகளும் செயல்படுகிற ஒரு ஆடுகளம்!உயிராகிய ஆவியின் மூலமாக கடவுளும் சரீரத்தின் மூலமாக அசுரர்களூம் மனித ஆத்துமாவை ஆதிக்கம் செய்யமுடியும்! ஒரு மனிதனின் ஆத்துமா தன் உயிரை சார்ந்து அதிகம் உள்ளதா அல்லது உடலை சார்ந்து உள்ளதா என்பதைப்பொறுத்து அவன் ஆண்மீக மனிதனாகவோ லவ்கீக மனிதனாகவோ உள்ளான்!இரண்டு சக்திகளுக்கிடையிலும் பந்து போல பந்தாடப்படுகிறான்!கடவுளை அதிகம் சார்ந்துள்ள நிறை பக்தனிடம் கூட அசுரன் சில சமயங்களில் செயல்படுவான் எங்கிர நிதர்சனத்தை தாழ்மையோடு ஒத்துக்கொள்ளுகிற பக்குவம் வேண்டும்!தன்னிடமும் தவறுகள் அடிக்கடி அசுரர்களின் தூன்டுதலால் வருகிரது என்பதை ஒத்துக்கொள்ளாதவர்களே நானும் கடவுளும் மட்டுமே உள்ளோம் என கூப்பாடு போடுகிரார்கள்!
இப்படி கலி பெருத்து அக்கிரமம் பெறுகியபோது நோவாவின் காலத்தில் பூமி ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்டது!அப்போது நோவா குடும்பத்தினர் மட்டுமே மனித இனத்தில்  கப்பல் மூலமாக பாதுகாக்கப்பட்டனர்! இந்த கப்பல் தரை இறங்கிய இடம் அராராத் மலை--ஈராகில்  உள்ளது!


ஜலப்பிரளயத்திர்க்கு முந்தைய மனித சமூகம் இந்தியாவை மையமாக கொண்ட லெமூரியாக்கண்டத்திலும் ஜலப்பிரளயத்திர்க்கு பின்னால் யுப்ரட்டீஸ்,டைக்க்ரீஸ்,நைல் சமவெளியிலும் மனித சமூகம் வளரத்தொடங்கியது!
நோவாவிர்க்கு மூன்று மகன்கள் 1 )யாப்பே 2 )சாம் 3) காம்

காம் இளவயது முதலே நிர்வாணம்--காமவிகாரங்களில் போதிய அக்கறை இல்லாத போக்கு காரணமாக நோவாவால் சபிக்கப்பட்டு துரத்திவிடப்பட்டு அய்ரோப்பா கண்டத்தில் செண்று வாழ்ந்தனர்!இன்றளவும் காமவிகாரங்கலே அய்ரோப்பியர்க்கு பெறும் இடரலாகவும் தடுக்கலாகவும் உள்ளது. இது நாள் வரை அங்கு இறைதூதரும் இல்லை இணிமேலும் வரப்போவதில்லை!ஆசியாக்கண்டத்து கிரிஸ்தவம் பாவவிசயங்களில் மென்மையானது போல தெறிவதாலேயே வெள்ளைக்காராத்தணமான ஒரு இயேசுவை அவர்களாக உருவகப்படுத்திக்கொண்டு அய்ரோப்பிய மயமான கிருஸ்தவ மதத்தை-பாவமன்னிப்பு, இயேசு என்பதையே திரும்ப திரும்ப ஒப்பித்துக்கொண்டே காலம் ஒட்டுகிரார்கள்!பைபிளை பேறுக்கு கய்யில் வைத்துக்கொண்டு தானும் படிக்காமல் இவர்களைக்கண்டு வெறுத்து பிறரும் படிக்காதபடி தடுத்துக்கொண்டும் உள்ளனர்!


முதல் மகனான யாப்பே தாங்கள் வாழ்ந்த பூர்வீகபூமியான இந்தியாவுக்கு வந்து சிந்துசமவெளியில் வாழ்ந்தனர்!இவர்கள் இந்தியா வந்ததால் தாங்கள் அறிந்திருந்த ராமர் கிரிஷ்ணர் வரலாறுகளை செவிவழி செய்தியாக கிராமிய நாடகமாக நிணைவு கூர்ந்து பேணிக்காத்தனர்!


சாம்மின் சந்ததியிலேயே ஆப்ராம் பிறந்தார்! இவறை கடவுள் வேறு பிறித்து உருவமற்ற ஏக இறைவனை வழிபடுபவராக மாற்றி தன் இணத்தாரை விட்டு பிறிந்து கடவுளை மட்டும் நம்பி வாழும் மனிதனாக `அன்னியனும் பரதேசியுமாக` வாழ்கிற ஒரு வாழ்க்கைக்குள் இஸ்ரேலுக்கு வந்து வாழ்ந்தார்!இவரின் வாரிசுகலே சுன்னத் எங்கிர விருத்தசேதணம் செய்கிரவர்கள்---யூதர்கள்&அரபியர்கள்! யூதர்களுக்கு மோசே என்பவரை கடவுள் இறைதூதராக மாற்றி அவர் மூலமாகவே `தவ்ராத்` வேதம் கொடுக்கபட்டது!அரபியர்களில் முஹமது மூலமாக அதே வேதமே `குரான்` ஆக கொடுக்கபட்டது!இவ் வேதங்களை தங்களது அறிவினால் அவர்கள் கொண்டு வரவில்லை !மாறாக தேவதூதர்கள் மோசேக்கும் முஹமதுவுக்கும் பிரத்தியட்சமாக தோன்றி முகமுகமாய் பேசி அவர்கள் சொன்னதையே எழுதினார்கள்!ஆதனால் தான் மனிதன் தோன்றிய வரலாறு ஆதாம் முதல் நோவா -வரை சுருக்கமாகவும் ஆபிராம் காலமுதல் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது! இந்தவேதங்களில் கலி யுகத்தில் அசுரர்களின் செயல்பாடுகளும் அவர்களின் ஏவுதலுக்கு இணங்குகிர மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் கலி யுக முடிவிலே நியாயத்தீர்ப்பும் நரகமும் உண்டு என்பதும் கடவுளின் வழி-கடவுளால் அவ்வப்போது எச்சரிக்கையின் குரலாக அணுப்பபடுகிற இறைதூதர்களின் வழியில் நடந்தால் நித்தியஜீவன்-பரலோக ராஜ்ஜியத்திர்க்குள் பிரவேசிக்கமுடியும் என்பது வாக்களிக்கப்பட்டுள்ளது!

எனது தியான அணுபவங்கள்!!!

கடவுள், மனிதன் ,தேவர்கள் அசுரர்கள் என்ற கடவுளுக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட சக்திகள் இவற்றின் செயல்பாட்டு களம் பூமி!மனிதன் கடவுளை நோக்கி முன்னேறும்போது அசுரர்களை இனம் காண பழகாமல் மாயைகளை வெல்ல இயலாது!இனம் காணும் போது தனக்குள் தேடுவது மட்டும் போதுமானதல்ல கடவுளை சரண் அடைந்தே ஆகவேண்டும் என்பது விளங்கும்!குண்டலினி மணி பூரகத்தை எட்டியவுடன் கடுமையான ஆவிமண்டல தாக்குதலை சந்தித்தே ஆகவேண்டும்!அப்போதே ஆவியுலகை பகுத்தறிய அறிவை கடவுள் கொடுப்பார்!மூலாதாரத்தை விட்டு கிளம்பிவிட்டாலே மதி நுட்பம் நுண்ணிய அறிவு விசாரம் உண்டாகும்! இந்த நிலையிலேயே குருடன் குருடனுக்கு வழி காட்டமுடியும்!இதை நம்பி ஏமாறுவது நிறைய உண்டு !அசுரர்களை பற்றிய பிரக்ஞை வராதவர்கள் மணி பூரகத்தை எட்டாதவர்களே!மணி பூரகத்தை எட்டாத நிலையிலேயே சமாதியை போன்ற நிலை கிடைத்தது எனது அனுபவமும் கூட!

ஆழ்ந்த தியானம் ,தன்னை மறப்பது , ஒருமணி இரண்டு மணி தியானம் ஒரு சில நிமிடம் போல தெரிவது!உடல் மென்மையாவது மெருகேறுவது ,நம்மிடம் பழகும் போதே நல்லது நடக்கிறது என்பதை அனுபவத்தில் கண்டு நமக்கு அணுக்க நண்பர்கள் உண்டாவது 1988 ல் எனக்கும் இருந்தது!இதில் கொஞ்சம் கர்வம் இருந்தது போலவும் தெரிகிறது!ஆனால் அதன் பிறகு கடுமையான சூடு என் சரீரத்தை தாக்கியது!ஒரு தியானத்தில் என்னை சுற்றி சூறாவளி போல சுழன்று என்னை எதோ தாக்க முயற்சித்து விளித்து கொண்டேன்!திருப்பதி சென்று மலை இறங்கும் போது பஸ்சில் வளைவில் மயக்கம் உண்டாகி எனக்குள் ஒரு பெண் பேசிக்கொண்டே இருந்தது!அதன் பிறகு கொஞ்சம் தூக்கம் போல நினைவு தப்பி அதே குரல் பேசுவது அனுபவமாகி சொல்லொன்னாத மன குழப்பங்கள் ஆட்கொண்டு அதிலிருந்து விடுபட போராடிபோராடி நான் சரியதொடங்கினேன்!இந்த நிலையில் முழு மனித ஆவி ஒன்றை இரவில் பார்த்து நான் ஒதுங்கி போனேன் !சிந்திக்காமல் இருக்க முடிந்த பயிற்சி கைகொடுத்திருக்கலாம் !அடுத்து ஒரு முறையும் பார்த்தேன் !அடுத்து பகலிலேயே நல்ல பாம்பு ஆவி சீறி மறைந்தது !தெருவில் போகையில் வருகையில் காணும் அருவெருப்புகள் பிரேத அழுகல் உணர்வுகள் அப்படியே என் சரீரத்திற்குள் நிறைந்து விரக்தியடைவேன்!வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் இரண்டு முறை நேரடியாக தொட்டு ஆசி பெற்றும் விடுதலை இல்லை! அவரவர் பாவத்தை அவரவர்கள் அனுபவிக்க வேண்டும் உதவி நான் தூக்கி சுமக்க முடியாது என்பதுபோல அவரிடம் பயம் இருப்பது போல தெரிந்தது!வேணுகோபால சுவாமி நான் வழிகாட்டுகிறேன் என்றார்!ஆனால் அது போதவில்லை!!


ஜீவசமாதிகளை தேடி தியானித்தும் விடுதலை இல்லை!கோவிலாக சுற்றியும் தீரவில்லை!ராமானுஜர் சமாதிக்கு அருகில் கூட தியாணம் செய்தும் பலனில்லை! உடம்பில் கொப்புளங்கள் உண்டாகி அடுத்தவர் முன் அருவெருப்பாகி கூனி குறுகி மன ஊக்கம் தன்னம்பிக்கை சுயம் எல்லாம் அடியோடு போயிற்று !நடை பிணமாய் அதல பாதாளத்தில் ஜாதகம் பார்த்து அதனால் ஜாதகமும் கற்று சித்த வைத்தியர்களின் பின்னால் அலைந்து கொஞ்சம் மூலிகையும் தெரிந்து பல மருத்துவர்களை பார்த்து பலனற்று ஒரு மூன்று மாதம் படுக்கை நிலைக்கு செல்லும்படி ஆயிற்று!அப்போது ``வருத்தப்பட்டு பாரம் சுமக்கிரவர்களே என்னண்டை வாருங்கள் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்`` என்ற வாசகம் இயேசுவை பற்றிய ஆர்வத்தை கொடுத்தது!அவர் 10 பெரியாராய் தெரிந்தார்!சித்தர்களில் 10 சித்தருக்கான ஆற்றல், கடவுளது ராஜ்ஜியத்தை தேடுவதற்கு அழைப்பு, கடவுள் மீது பக்தி, அன்பு, சக மனிதர்களை நேசிப்பது, மன்னிப்பது, கடவுளால் பூமிக்கு அனுப்ப படுகிற குருவை -இறைதூதர்களை அடையாளம் கண்டு ஏற்றுகொள்வது ,மனிதர்களின் தீய செயல்களுக்கு பின்னணியில் அசுர சக்திகள் இருப்பது ,இந்த சக்திகளை அவர் தேவனது விரலினாலே துரத்துவது ,அசுர ஆவிகள் வெளியேறும் போது வியாதிகள் சுகமாவது ,அசுத்த ஆவிகள் அவரிடம் பேசுவது இதையெல்லாம் அவர் பிறவியிலேயே பெற்றிருந்தது சிந்திக்க வைத்தது!மனித முயற்சியால் குருவாவனவர்கள் தவிர கடவுளால் அனுப்பபடுகிரவர்களை பற்றி சிந்திக்க வைத்தது!அவர் ஆதியிலிருந்து ஆபிராமுக்கு முன்னமே இருக்கிறேன் மேரியின் மகனாக மட்டும் என்னை பார்க்காதீர்கள் என்றது ராமராகவும் அடுத்து கிரிஷ்ணராகவும் அவதரித்த அனுப்ப பட்டவரை ஞாபக படுத்தியது !அவர்களும் அசுர ஆவிகளை துரத்தும் பணியை செய்தவர்கள் !மறுபடி மறுபடி அவதரிக்கிற கீதையின் வாசகம் நெருடியது!மறுபடி மறுபடி பிறக்கிற கிரிஷ்னரை 5000 வருடமாக தூக்கி வைத்து ஆடுகிற நாம் 2000 வருடத்திற்கு முன் அவர் பூமிக்கு வந்ததை ஏன் உணரமுடியவில்லை?கல்கியாக அடுத்த யுகத்தில் வருவேன் என்று கிருஷ்ணர் சொன்னதை இயேசுவும் மீண்டும் வந்து உலகை ஆளப்போகிரவன் நானே என்றார்!இருவரும் வேறு வேறு என மத சண்டை போடும் நாம் இருவரும் ஒருவர் என்பதை ஏன் புரிந்து கொள்ள கூடாது!


ஆனால் அந்த இயேசு தன்னை கடவுளின் பிரதிநிதி என்றாரே தவிர அவர் இடைவிடாது பிரார்த்திப்பது வாடிக்கை!நாம் ராமரையும் கிரிஷ்ணரையும் கடவுளுக்கு இணை வைத்து ஒரு கும்பிடு போட்டு அவரது கொள்கைகளை காற்றில் விட்டது போல இயேசுவையும் கிறிஸ்தவர்கள் செய்துள்ளார்கள்!இயேசுவும் இறைதூதரே! வழிபாடு கடவுளுக்கு மட்டுமே என்பது குரானின் வெளிப்பாடு!முகமதுவுக்கு குர்ஆனில் உனக்கு சொல்லாத இறைதூதர்கள் உண்டு என சொல்லபட்டது !ராமர் முதல் முகமது வரை 3000 இறைதூதர்கள் பூமிக்கு வந்திருப்பதாக குரான் சொல்லுகிறது!படுக்கையில் பைபிளையும் குரானையும் புரிந்து கொண்டேன்!கீதையை படித்திருந்த எனக்கு என முதல் குருவான ராமரே பைபிளையும் குரானையும் புதிய கோணத்தில் புரிய வைத்தது!வியாதியிலிருந்து விடுபட 7 ஆண்டுகள் வரை கற்றுகொண்டேன்!தியானித்து விட்டு ஏக இறைவனை பிரார்த்திப்பது, எதற்க்கெடுத்தாலும் கடவுளை கெஞ்சுகிற பயிற்சிகள் எனக்கு உண்டாகிறது!அன்றாட வாழ்வில் ஆவிமண்டல செயல்பாடுகளில் அனுபவமேற்படுகிறது!மனதளவில் திருவோடு ஏந்தியவனை போல ஒரு நிலை உள்ளது!இருப்பினும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்!இந்த அனுபவத்தாலேயே அசுரர்களை பற்றிய எச்சரிக்கையை ஆன்மீக அன்பர்கள் பெற திரும்ப திரும்ப பேசிவருகிறேன் !இந்தியாவை உய்விக்க இறைதூதர் ஒருவரை கடவுள் அனுப்பினால் இத்தனை ஞானத்தேடல் உள்ள இந்தியா மீண்டும் உச்சத்திற்கு வருமே என்பதால் அதற்காக பிரார்திக்கிற மன நிலையை உருவாக்க முயற்சிக்கிறேன்!

தன்னை உணர்வது ;தனக்குள்ளாக தேடுவது என்பது முழுமையை நோக்கி அழைத்து செல்லாது!அது ஆவி மண்டல சக்திகளுடன் இடைபட பக்குவபடுத்தும் அவ்வளவே !கடவுளை நோக்கிய பிரார்த்தனை ;அவரோடு நேரடியாக உறவாட முயற்சிக்க வேண்டும் கடவுளால் அனுப்ப பட்ட சற்குரு நாதர்களான ராமர் கிருஷ்ணர் இயேசு முகமது ஆகியோர் மூலம் கடவுளே வெளிபடுத்தியுள்ள இறைவார்த்தையை விசாரிக்க பழக வேண்டும் !தியானம் யோகம் என்பது ஒரு கருவி அதனை அறிந்து கொண்டதை பற்றி மட்டுமே பெருமை பாராட்டி கொண்டிராமல் கடவுளை முக்கியப்படுத்தி பிரார்த்திக்கவும் தொடர்பு கொள்ளவும் முயலவேண்டும் !எல்லா புகழும் இறைவனுக்கே!!!

வெறுமை ஆக்கல்

இருக்கிறேன் என்ற இருப்பை தவிர வேறுதுவும் இல்லாது இருங்கள் !
                         --- Rrs Sundaram 
நான் நித்தியமானவல்ல பூமியும் வாணமும் ஓர் நாள் அழிக்கபடும் ஆனால் நித்தியமானவர் கடவுள் ஒருவரே அவர் நாடினால் நித்தியமானவனாக வாக்களிக்கபட்ட பரலோகத்திற்குள் நுழைவேன் இது கடவுள் தமது இறைதூதர்கள் மூலமாக உறுதிபடுத்தியது இதனை மறுக்கிற தத்துவ ஞானம் எவ்வளவு புலமை வாய்ந்தது ஆனாலும் சூனியவாதம் அசுரனின் கடைசி மாய்மாலம்

மனிதனின் குழப்பம் பிரச்சினைகளுக்கு காரணம் அவன் கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் -அவரின் சித்தம் மட்டும் செய்து விட்டு நிம்மதியாய் இருப்பதற்கு பதில் சுய சித்தம் செய்வதை தேர்ந்தெடுத்து கொண்டது !சுய சித்தம் சிறப்பாய் செய்து கடவுளை போலவே உன்னால் ஆகிவிட முடியும் என அசுரன் ஏமாற்றியதை கேட்டு கடவுளாகும் ஆசையில் இந்த குழப்பங்களுக்குள் மாட்டி கொண்டான் !


மனிதனுக்கு முந்தய படைப்பு --வானவர்கள் --இவர்களுள் எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் கடவுளின் சித்தம் மட்டுமே செய்கிறவர்கள் தேவர்கள் !எங்களுக்கும் ஆற்றல் இருக்கிறது ஆகவே நாங்களும் எங்கள் இஷ்டப்படி செயல்படுவோம் என கலகம் செய்கிறவர்களே அசுரர்கள் ! இந்த அசுரர்களே மனிதனுக்கு துர்போதனை செய்து அவனை தீமையில் வழிநடத்துபவர்கள் !தேவ -அசுர ஆவிமண்டல யுத்தம் மனிதர்கள் மூலமாக நடை பெற்றுகொண்டே இருக்கிறது !இது கற்பனையா உண்மையா மனித வாழ்வுக்கு ஒரு இலக்கு இருக்கிறதா இவை எல்லாவற்றையும் நான் நம்புகிறேன் !


தங்கள் கடிய உழைப்பு ஒரே ஒரு நூலிலையில் கடவுளை விட்டு விலகிநிர்க்கிறதோ விலகிநிர்ப்பதால் ஒரு இழப்பு இந்தியாவிற்கு உண்டாகிறதோ என கவலை உண்டாகிறது !


போகர் தேவ -அசுர யுத்தத்தில் அசுரர்களை அழிக்க மனிதானாக  மாறிவரும் முருகு இறைதூதன் என உருவகம் கொடுத்தார் !அந்த முருகன் எவ்வளவு ஆற்றல் உள்ளவனாக இருந்தாலும் கடவுளிடம் பிச்சை பாத்திரம் ஏந்தி எதிர்பார்த்திருக்கிற ஆண்டியாய்தான் இருப்பான் !அவன் சுயத்தை நம்பாமல் கடவுளுக்காக காத்திருக்கிற ஆண்டி மனப்பான்மையிலேயே இருப்பான் !இந்த மன நிலையில் நீங்கள் மேலே பதிவிட்டதை செய்து பாருங்கள் அது பெரும் வெற்றி !

விவேகானந்தரின் பிரார்த்தனை :


நான் பூஜ்யம் ,,இந்த உலகம் பூஜ்யம்,,நீர் மட்டுமே செயல் புரிபவர்! .

நான் உமது கரத்தில் வெறும் கருவி மட்டுமே!...... அன்பே வடிவான இறைவா !பலர் உனக்கு பலவற்றை அளிக்கின்றனர்.நான் ஏழை ,ஆனால் எனக்கு உடலும்,மனமும்,ஆன்மாவும்,உள்ள
ன.நான் இவற்றை உனக்கு அளிக்கிறேன்!

கண்டவர் விண்டிலர்!; விண்டவர் கண்டிலரே!!!

கடவுளோடு இடைபடவும்; அவரின் சித்தத்தை உணரவும்; அவரின் குரலை கேட்கவும் பழகி கொண்டவர்களே இறைதூதர்கள்!ஆனால் அவர்கள் கண்டதாக ஒரு உருவத்தையோ பெயரையோ சித்தரிக்க முயலவே இல்லை !அப்படி சித்தரித்தவர்கள் அனைவரும் கொஞ்சம்கூட இறை அனுபவம் இல்லாதவர்களே என்பது மேற்கண்ட சித்தர் வரிகள் !!!
வள்ளலார்; முருகன், சைவம் என படிபடியே கடந்து உண்மையான இறைஅனுபூதி பெற்றபோது அருட்பெரும்ஜோதி என முடிந்தார்!! முன்பு என் அறிவு குறைவாக இருந்தது எனவும் ஒத்துகொண்டார்!
அவர் கடவுளை உண்மையில் உணராதபோது உருவத்தை பெயரை விண்டார்!வழிபட்டார்! ஆனால் உண்மையை உணர்ந்தவுடன் விண்டதை விட்டுவிட்டார்!உருவ வழிபாட்டையும் விட்டுவிட்டார்!முழு உண்மையை உணாராதபோதும் அவருக்கு உள்ளிருந்த தேடுதல் மற்றும் இறைவனின் வழிகாட்டல் அவரை 5 திருமுறை பாடவைத்தது! அவர் கடவுளை வெளியே தேடிய பக்தி யோகி!தனக்குள்ளாக தேடிகொண்டே இருப்பதாக பசப்பு காட்டியவரல்ல!அவரின் பக்தி பேரன்பே ஞானத்தையும் அவருக்கு அருளவைத்தது! ஆனால் ஆழமாக உள்ளார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஞானமார்க்கிகள் என்கிற போர்வையை தற்போது போர்த்து கொண்டனர்! இது ஞானமல்ல மாயாவாதம்!!

ஞானம் போல தோன்றும் மாயாவாதம் அல்லது சூனியவாதம் என ஒன்று உள்ளது!அது கடவுளால் உருவாக்க பட்டுள்ள எல்லா இயக்கங்களையும் அதற்கான மின் காந்த புல மண்டலங்களின் செயல்பாடுகளை ஆய்ந்து அறிந்து விஞ்ஞான விளக்கமளிக்கிறது!இது தொழில் நுட்பத்தை குறித்த ஆய்வு!பிரபஞ்சம் இயங்கும் தொழில் நுட்பத்தை குறித்த ஆய்வு!மனதின் நுட்பத்தை குறித்த ஆய்வு!ஆனால் இது இதனை யார் இப்படி ஒழுங்கமைத்தார்கள் என்பதை --கடவுளின் திறமையை மறைத்து இதுவெல்லாம் இயற்கை என குறிப்பிடும்!இந்த அறிவை கொண்டு மனித வாழ்வை நாமே ஒழுங்கமைத்து சிறப்பாய் வழலாம்!கடவுள் என்றொருவர் தனியாய் தேவையில்லை என சொல்லி விடும்!
எவ்வளவு திறமை இருந்தாலும் அதனை நம்பாமல் கடவுள் மீது நம்பிக்கை வைக்க பழகுவதே உண்மையான ஞானம்!தன்னை வெறுமையாக்கி கடவுளிடம் ஒப்படைதவர்களே செயற்கரிய காரியங்களையும் மகத்தான ஞானத்தையும் பூமிக்கு கொணந்தவர்கள்!கடவுளின் சித்தம் எதுவென சரியாக கேட்டறிந்து அதனை சாதாரன பொதுமக்களும் கடைபிடிக்க எளிய வாழ்க்கை நெறியை உண்டாக்கி பலரை கடவுளோடு ஒப்புரவாக்கியவர்கள் இறைதூதர்கள்!ஆனால் கடவுளின் ஆளுமையை ஒதுக்கி மனித அறிவை கொண்டே வாழ்ந்துவிடலாம் என்பது மாயாவாதம்!உலகில் நடந்தவைகள் எப்படி நடந்தது என ஆழமாக தர்க்கித்து ``தர்க்கம்`` என்கிற தொழில் நுட்பத்தை ஞானம் போல சித்தரிக்கிறவை!சிறந்த தர்க்கம் பொய்யயும் உண்மை போல காட்டி விட கூடியது!அல்லது சில சார்பு உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட கூடியது!இந்த சார்பு உண்மைகள் அகண்ட உண்மையாகாது!
சார்பு உண்மை ;அகண்ட உண்மை என இரண்டு உண்மைகள் உள்ளன! அதில் சார்பு உண்மைகள் ஒன்றைவிட ஒன்று முன்னேறியதாக தெறியும்! அப்படி நட்ட கல்லை கடவுள் என சுற்றி வருவதை விட நமக்குள்ளிருக்கும் கடவுளின் ஆவியாகிய நமது உயிர் கடவுளை நெருங்கிய ஒன்று என்பது உண்மை !அந்த உயிரில் நிலைத்து நிற்க பழகும் தியானம், யோகம்; சிலை வழிபாட்டை விட நிச்சயம் மேலாதானது !ஆனால் அதுவே முழுமையானதல்ல!நமது உயிர்தான் சகலத்தையும் படைத்ததா?சகலத்தையும் நிர்வகிக்கிறதா?
கடவுள் எங்கும் நிறைந்தவரானாலும் அவர் தனித்த ஒரு நபர் அவரின் மையம் நமது உடலிலோ பூமியிலோ கூட இல்லை அவரது மையம் நமது பூமியை போல ஏழு பூமி வானங்களை நிர்வகிக்கும் சொர்க்கம் அல்லது பரமண்டலத்தில் உள்ளது! அங்கு அவர் மையம் கொண்டிருந்தாலும் எங்கும் வியாபித்துள்ளவர்!அவரை நமது உயிரில் நிலைத்து நின்று வழிபட வேண்டும் !ஜீவாத்துமாவிலிருந்து பரமாத்துமாவை நோக்கி வழிபட வேண்டும் !உயிரில் நிலைத்து நிற்க பயிற்சி கொடுப்பது மட்டுமே தியானம் !அதன் பிறகு கடவுளை நோக்கி தொழவேண்டும் !ஞான மார்க்கிகள் தியானம் செய்வதோடு நின்று விடுவது அல்லது எனக்குள்ளே கடவுள் இருக்கிறார் என பகுதி உண்மையை மட்டும் நம்பிக்கொண்டு அடுத்த வளர்சிக்கு வராமல் தேங்கி நிற்கும் போக்கு தமிழகத்தில் நிறைந்துள்ளது !இதை கடரவேண்டிய கட்டம் வந்து விட்டது !இதை கடந்தால் மட்டுமே கடவுளை நோக்கி முன்னேற முடியும் !
வித விதமான தியானத்தை போதிக்கிறவர்கள் புதுபுது முறையை கொண்டு வரும் தொழில் நுட்ப வாதிகளே !ஆனால் தமிழகத்திற்கு இப்போதைய தேவை அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது !
இயேசு கடவுளை பற்றியும் அவரை வழிபடும் முறை பற்றியும் சொன்னதை சற்று கவனியுங்கள்!

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.!
கடவுள் சர்வ வியாபியாய்--அகண்ட ஆவியாய் --அகண்ட உயிராய் இருக்கிறார் !எல்லா படைபினங்களிலும் அவரது ஆவி உயிராய் சிற்றுயிராய் உள்ளது !எனவே அந்த ஆவியில் நிலைத்து அது வந்த அகண்ட ஆவியாகிய கடவுளை நோக்கி உள்ளார்ந்த ஈடுபாடோடு தொழவேண்டும் !
நமது சிறு உயிரில் நிலைத்து அகண்ட உயிரை நோக்கி தொழவேண்டும்!

அல்லது
மனித உயிர் + மனிதஆத்துமா = ஜீவாத்துமா!
கடவுளின் உயிர் +கடவுளின்ஆத்துமா =பரமாத்துமா !
ஜீவாத்துமாவிலிருந்து பரமாத்துமாவை தொழவேண்டும் !!

இந்த ஆத்துமா உணர்வு தனக்குள்ளாக தேடுகிற தியானத்தின் மூலமாக மட்டுமே சித்திக்கும் !மற்றவர்கள் தன்னை உடலாக மட்டுமே கருதி உடலுக்கும் அதன் புலன்களை மயக்கி ஈர்க்கும் உலக மாயைகளுக்கு அடிமையாய் உள்ளனர் !தன்னை உடல் என கருதுபவர்ககே தன்னை போல ஒரு சிலையை கடவுளாக கண்டால் மட்டுமே கடவுள் பயம் வருகிறது!தன்னை போலவே அந்த உருவத்திற்கும் ஆசாபாசம்;குடும்பம் குழந்தைகள் சண்டைசச்சருவுகளை மேலேற்றி கற்பனைகளை புணையமுடிகிறது!இது இச்சாவாதம்!தன் உடல் மற்றும் புலணிச்சைகளின் மூலமாகவே பூமியையும் கடவுளையும் பார்க்கிறது! ஆனால் யார் `நான் உடலல்ல ஆத்துமா` என்பதை உணர்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பரமாத்துமாவை -உன்மையான கடவுளை பற்றிய உணர்வு உண்டாகும் !அதற்கு இச்சாவாதம் ,மாயாவாதம் என்ற இரண்டு வழி விலகல்களில் செல்லாமல் நடு பாதையில் கடவுளை தேடி பயணிக்க வேண்டும்! அந்த காலம் இப்போது வந்திருக்கிறது என்பதே இயேசுவின் வெளிப்பாடு !
யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.!!!

எனது பிரார்த்தனை!!!!

அன்றாடம் பிரார்த்தனையில் அனுகூலங்களை அதிகம் பெற வேண்டி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இறுதி வடிவம் பெற்ற எனது பிரார்த்தனை இப்பிரார்த்தனையோடு சொந்த தேவைகளையும் இணைத்துக்கொள்ளலாம் !!
தினமும் சொல்லி வருகையில் உலகியல் வாழ்விலும் அதிக முன்னேற்றமும் ஆன்ம வாழ்வில் அதிக மேன்மையும் ரகசியங்கள் வெளிப்படுவதும் தேவர்களின் அனுசரணையும் கிடைப்பதை அறியலாம் !!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  நாரயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் 
கடவுளே உம்மைத்துதிக்கிறேன் உமது அருளால் என்னை நிரப்புவீராக சாந்தி உண்டாக்குவீராக 

எல்லா புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து காத்து வளர்க்கும் இறைவனுக்கே ஆகும் !நீர் அளவற்ற அருளாளன் ;நிகரற்ற அன்புடையோன் !நீரே நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி !உம்மையே நாங்கள் வணங்குகிறோம் உம்மிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் எங்களை நேர் வழியில் நடத்துவீராக!எவர்களுக்கு அருள் புரிந்தீரோ அவ்வழி !உம் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல ;நெறி தவறியோர் வழியுமல்ல !

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பரம பிதாவே !உம் நாமம் மகிமைப்படுவதாக !உம் ராஜ்ஜியம் வருவதாக !பரமண்டலங்களில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக!எங்களுக்கு அன்றாடம் தேவையான ஆகாரத்தை இன்றைக்கு தாரும் !எங்கள் பாவ தோஷங்களை நீர் எங்களுக்கு மன்னியும் !அது போல பிறரின் தீமைகளை மன்னிக்கிற நல்ல இதயத்தை எங்களுக்கு தாரும் !எங்களை சோதனைக்கு உட்பட பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்!ராஜ்ஜியுமும் வல்லமையும் மகிமையும் என்றென்றும் உம்முடையவைகளே!

நித்தியமான  இறைவா !! நீரும் உமது வாக்காகிய நாராயணன் மட்டுமே நித்திய ஜீவன் உள்ளவர்கள் உங்களால் அருளப்படுபவர்கள் மட்டுமே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும்  !!! .உமது சித்தம் ஒன்றே செய்யப்பட தகுதியுள்ளது !!நான் உமது கரத்தில் கருவியாக மட்டுமே இருக்கவிரும்புகிறேன் !ஆனாலும் அசுரர்கள் உமக்கு விரோதமாக என்னை பயன்படுத்த முயல்கிறார்கள் !!!...... இதில் தற்காத்துக்கொள்ள நான் போதிய தெளிவற்றவனாக இருக்கிறேன்  !!அன்பே வடிவான இறைவா !. எனக்கு உடலும்,ஆன்மாவும்,நீர் அருளிய உயிரும் உள்ளன.நான் இவற்றை உமக்கே அர்ப்பணிக்கிறேன் ! .என்னை ஆண்டு கொள்வீராக !!! நேர் வழிபடுத்துவீராக !!!

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் எனது புலன்களில் சாந்தி உண்டாக்குவீராக ! உமது சக்தியால் எனது ஆத்மாவை துய்மையாக்குவீராக ! ஒளி சரீரம் பெரும் தகுதி உண்டாக்குவீராக ! 

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் உலகம் முழுமையும் சாந்தி உண்டாக்குவீராக  !! சகல் மதங்களுக்கிடையிலும் சாந்தி உண்டாக்கும் சமரச வேதத்தை அருள்வீராக !!

Sunday, January 29, 2012

யார் குரு?குருவிலும் பல படிகள் இருக்கிறதா ?சற்குரு யார் ?

யாரிடமிருந்தும் கற்றுகொள்கிர மன நிலை முதலாவது கடவுளை தேடுகிற சாதகனுக்கு வேண்டும்!ஏனென்றால் பூரண உண்மை,முற்றறிவு என்பது கடவுளின் தன்மை!முற்றறிவை நெருங்குவது என்பது குருடர்கள் யானையை தடவிய கதை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்!குருடர்கள் உணர்ந்ததெல்லாம் தவறு என ஒதுக்க முடியுமா?மனிதர்களின் முன்னேறிய அறிவு இப்படிபட்டதே!தும்பிக்கை கயிறு போலுள்ளது என்பது `பகுதி உண்மை`!கால் உலக்கை போலுள்ளதும் `பகுதி உண்மை`!இப்படிப்பட்ட பல `பகுதி உண்மைகள்` ஆண்மீக உலகில் வலம் வருகின்றன!இவை தவறல்ல!நான் கண்டதுதான் உண்மை மற்றது தவறு என புறந்தள்ளூவதில் தவறு வருகிறது!யானை கயிறு என்பதிலும் எவ்வளவோ மனதை மயக்கும் விளக்கங்களும் நுனுக்கங்களும் இருக்கும்!இவைகளை அறிந்துகொள்வதும் கடவுளை தேடுகிற ஒரு பாதையே!ஒரு பாதையில் கொஞ்சம் முன்னேறியவுடன் மற்ற பாதைகளில் உள்ள `பகுதிஉண்மைகளை` உள்வாங்கினால் முழுமையை நோக்கி முன்னேற முடியும்!ஆனால் தான் கண்டதுமட்டுமே உண்மை என்கிற மாயை தடுக்கிறது!அப்படியில்லாமல் மாற்று கருத்துகளை `விசாரம் செய்வது` உள்வாங்குவது கடவுளை நெருங்குகிற `யோகம்` என்கிறது கீதை!

பரமாத்துமாவை சிலர் தனக்குள்ளாக மூழ்கி தியானிப்பதாலும்;சிலர் தத்துவ விசாரம் செய்து முற்றறிவை விளையவைப்பதாலும்;இன்னும் சிலர் பலனில் பற்றுவைக்காத கர்மயோக உழைப்பினாலும் கண்டடைகிறார்கள்!--கீதை13:25

மனிதாபிமானம்,அஹம்பாவமின்மை,அஹிம்சை,சகிப்புதன்மை,எளிமை உடயவனாய் இறைதண்மை உணர்ந்த குரு ஒருவரை அண்டி சுயகட்டுப்பாடு,நிலைத்தமனம்,பரிசுத்தம் கற்று புலனிண்பங்களை விட்டவனும் ;பிறப்பு இறப்பு முதுமை வியாதி என்கிற பயத்தை கடந்து நான் என்கிற சுயத்தை அழித்தவனும் வீடு மனைவி பிள்ளைகள் செல்வம் என்கிற பந்தங்களில் தவிக்காதவனும் விருப்பு வெறுப்பு இரண்டிலும் மனசம நிலையை அடைந்தவனும் உள்ளார்ந்த பக்தியில் நிலைத்தவனும் தன்னை உணர்வதிலும் எல்லா தத்துவங்களையும் விசாரம் செய்து முற்றறிவை பெறுவதிலும் சலிப்பில்லாதவனுமாகிய இவைஅணைத்தையும் செய்கிறவனே ஞானி --இதில் ஒன்று குறைந்தாலும் அவன் அஞ்ஞானத்தில் உழல்பவனே!---கீதை 13:8

மேற்கண்ட குணாதிசயங்கள் அடையப்பெற்றவர் இறைதண்மை உணர்ந்த குரு!முழுமையடையாத ஒன்றிரண்டு கைவரப்பெற்றவரும் குருவாகிவிட முடியும்!தன்னை விட பெரிய குருடனுக்கு சிறிய குருடன் சிறப்பாகவே வழிகாட்ட முடியும்!நாமும் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அந்த குருவையே பெருமை பேசிக்கொண்டு தேங்கி நின்று விடாமல் அடுத்த அடுத்த படிகளில் உள்ள குருமார்களிடம் கற்றுகொண்டே வளறவேண்டும்!இதற்கு ஜன்னலை திறந்துவைத்து பழகவேண்டும்!மாற்று கருத்துகளை உள்வாங்கவேண்டும்!ஆனால் கிணற்று தவளை மனப்பாண்மை மனிதனை வஞ்சிக்கிறது!தெறிந்த விசயத்தையே திரும்ப திரும்ப பேசகேட்டு புளகாங்கிதம் அடையும் ஒருகூட்டத்தில் திருப்தியடைந்து விடுகிறோம்!நான் பெருசு நீ சிருசு என சண்டையும் போடுகிரோம்!மனித முயற்சியால் குருவாக உயர்ந்தவர்களிடம் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அவர்களை கடந்து சற்குருவை நாடி செல்லவேண்டும்!``தேங்கிய தண்ணீர் சாக்கடை ``ஆகிவிடும் !நாம் தேங்காமல் தேடவேண்டும் !முற்றறிவாளன் கடவுள் ஒருவரே!அவர் தனது செய்தியை;வழிகாட்டுதலை;ஞானத்தை தனது வாயாக உலகிற்கு தானே அனுப்பிய இறைதூதர்கள் மூலமாக அவ்வப்போது வெளிபடுத்தியுள்ளார்!இந்த இறைதூதர்கள் மூலமாக அந்த காலகட்டத்திற்கு அருளபட்டவைகள் பின்னாளில் கலப்படமும் அடைந்து விடுகின்றன!இருந்தாலும் அவைகளை கவனத்துடன் ஆராய்ந்து வேதத்தை உள்வாங்க வேண்டும்!அவைகளில் கலப்படங்களை மட்டும் சுட்டிகாட்டி  ஒதுக்கிவிடாமல் சாரத்தை பிழிய கற்றுகொள்ள வேண்டும்!
உலகின் சற்குருநாதர்கள் 1)ஸ்ரீராமர் 2)கிரிஸ்ணர் 3)மோசே 4)இயேசு 5)முஹமது மட்டுமே!இவர்கள் அந்த காலகட்ட சமுதாயத்தில் உள்ள சாதாரண மக்களும் இறைவனோடு ஒப்புறவு ஆக்கியவர்கள்!வேதம் கொணர்ந்தவர்கள்!இவர்களளவு இறைவனை நெருங்கிய குருமார்கள்:புத்தர்,மஹாவீரர்,ஜொராஸ்டியர்,குருனானக்&வள்ளலார்!இவர்கள் எல்லொரும் ஏக இறைவனை வணங்க ஊக்கபடுத்தியவர்கள்!சித்தர்கள்,ஞானிகள் எல்லாம் கீழ் நிலையில் உள்ளவர்கள்!இவர்கள் எல்லோரையும் உள்வாங்கி கடவுளை நெருங்கி செல்ல வேண்டுவது நமது கடமை!கலப்படங்கள் அதிகரிக்கும் போது கடவுள் இன்னொரு இறைதூதரை அணுப்புவார்!அவரை அணுப்பும்படி நாமும் வேண்டவேண்டும்!

கீதையின் மஹத்துவம் என்னவென்றால் எல்லா மனிதர்களும் அவரவர் உள்ள படியிலிருந்து கடவுளை அடைய 17 பாதையை மிக ஆழமாக விஞ்ஞான பூர்வமாக எளிமைபடுத்தி உபதேசித்துள்ளது!நாம் அறைகுறையாக செய்துகொண்டிருப்பதை பட்டைதீட்டி கொடுத்துள்ளது!கீதையின் சாரத்தை பிழிந்துகொண்டவன் மாத்திரமே ஆண்மீக வாழ்வில் தான் கடைபிடிக்கும் மார்க்கத்தை ஜீவனுடன் புரிந்து கொள்ளமுடியும்!கீதையை புரிந்துகொண்டால் மட்டுமே பைபிளையும் குரானையும் புரிந்துகொள்ளமுடியும்!இல்லாவிட்டால் வெறுமையான வழிபாடாகவும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் சண்டைபோடுகிறதாகவும் கலப்புள்ளதாகவும் முடியும்!

உண்மைகளை மறக்கடித்து மாயம் செய்கிறவைகள் மனிதனது குணங்கள் மட்டுமல்ல!உபதேசங்களில் கலப்பையும்;திரித்து உபதேசிப்பதும் மனிதனை விட மேலான சக்திகளான அசுரர்களின் மாய்மாலங்களாகும்!மனிதர்கள் தேராமல் நியாயத்தீர்ப்பு நாளன்று தங்களுடன் அழிக்க படவேண்டும் என்பது அசுரர்களின் திட்டமாகும்!கடவுளால் படைக்க படுகிற மனித ஆத்துமாவை அவனது சரீரத்தின் புலனிச்சைகளை தூண்டி அதற்கு சந்தர்ப்பமும் ஏற்படுத்தி உலக மாயைகளில் உலலும் படி அசுரர்கள் செய்கிறார்கள்!மனிதன் தவறுக்கு போகும் போது அதற்கு ஒத்துழைப்பு அதிகம் உண்டாக்குவதும் அதே மனிதன் கடவுளை நாடும்போது அதற்கு சொல்லொண்ணா முட்டுகட்டைகளை பிரச்சினைகளை உண்டாக்குவார்கள்!ஒவ்வொரு மனிதனின் மூலமும் இறைசக்தியும் அசுர சக்தியும் குருஸேத்திர யுத்தம் நடந்து கொண்டுதான் உள்ளது!மனிதனை தீங்குக்கு அழைக்க அசுரர்கள் படைதிறண்டு கவ்ரவர்களாய் தாக்குகிறார்கள்!மனித சரீரமாகிய தேரில் குடிகொண்டு உள்ள ஆத்துமாவாகிய அர்ச்சுணன் மீது அசுரர்கள் தாக்கும்போது அர்ச்சுணன் தனது சாரதியாக--வழிகாட்டியாக இறைதூதனாகிய கிரிஸ்ணரை வைத்து அவரின் உபதேசத்தை கேட்டு அசுரர்களுடன் அனுதினம் யுத்தம் செய்து ஜெயிக்க வேண்டும் என்பதே குருஸேத்திர யுத்தம்!இந்த யுத்த களத்தில் மனித ஆத்துமாக்கள் அசுரர்களுடன் போரிட்டே ஆகவேண்டும் என்பதை பலர் ஏற்றுகொள்வதில்லை!போர்க்களம் உணராத போர்வீரனாய் இருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்!மனிதர்களிடம் உள்ள தீய குணங்கள் அவர்களை மயக்கும் மாயைகளை அவர்கள் அஹிரினை என கருதுகிறார்களே தவிர அவைகளின் பின்னணியில் அக்குணங்களை தூண்டி விடும் அசுரர்கள் என்கிற உயர்திணை -ஆவிமண்டல அசுரர்கள் ,தேவர்கள் என்கிற மனிதனை விட உயர்ந்த சக்திகள் உள்ளன!கடவுளை அடையும் பாதையில் தனகுள்ளும் புறத்திலும் அசுரர்களுடன் போராடியே ஆகவேண்டும் !எனவே கீதை போர்க்களத்தில் வைத்து உபதேசிக்க படுகிறது!!!

குருஷேத்திர யுத்தம் என்பது என்ன?

குருஷேத்திர யுத்தம் என்பது நடந்ததா ?நடக்கவில்லையா ?ஏன் நடந்தது என்பதை விட யுத்தம் தொடங்கும் முன் ஒரு மனிதனாகிய அர்ச்சுனனுக்கு உண்டான மன கலக்கம் என்பது அன்றாடம் மனிதர்களுக்கு --முக்கியமாக கடவுளை தேடி அவரை கண்டடைய முயலும் பக்தனுக்கு எதிர் வருகிற சவாலே ஆகும்! இத்தகைய சோதனைகள் --இடறல்கள் உண்டாகும் பொது அதனை எதிர்கொள்ள நமக்கு அறிவூட்டும் ஞான உபதேசமே கீதை!கீதை வாழ்க்கைக்கான உபதேசம் ;பக்தனுக்கு கடவுளை நோக்கிய பயணத்தில் அன்றாட வாழ்வை கடந்தோட அனுபவ பூர்வமான செயல்முறை பயிற்சி! உலக வாழ்க்கையில் பல படித்தரமான நிலைமையில் மனிதர்கள் படைக்க படுகிறோம்!ஒரு சக்கரத்தின் அச்சுகள் பல உருப்புகள் எப்படி ஒன்றாக இணைக்க பட்டு அது சுற்றுகிறதோ;அதுபோல உலகவாழ்க்கை செம்மையாக நடக்க பலவிதமான வேலைகள்,பொறுப்புகள்,கடமைகள் பலரால் செய்ய படவேன்ண்டியுள்ளது!ஏற்றதாழ்வுகள்,பதவிகள்,பட்டங்கள்,செம்மைகள்,வறுமைகள்,முரண்பாடுகள் என கணக்கிலடங்கா பேதங்கள் இருந்தாலும் எல்லோரும் கடவுளை பொருத்து முக்கியமாணவர்களே!ஒரு சிரு துரும்பும் அவரின் கண்கானிப்பிலும் பேணுதலிலும் உள்ளன!அதுஅதற்குரிய எல்லையும் சுதந்திரமும் கொடுக்க படாமலுமில்லை!

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.(இயேசு;மத்தேயு 10:29)

கடவுள் நம்மை ஜனிக்க செய்த நாள் முதல் நம்மோடே இருக்கிறார்;நம்மிடம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட பணி-திட்டமும் இருக்கிறது என்கிற உள்ளூணர்வு நமக்கு வேண்டும்!அவர் நம்மைப்பற்றிய நோக்கம் வைத்துள்ளார் என்கிற புரிதலே நமக்கு சந்தோசத்தையும் நம்பிக்கையையும் அவரிடம் உள்ளார்ந்த உறவையும் கொண்டுவந்து விடும்!உள்ளார்ந்த உறவை அணுபவிக்க தெறியாத--முடியாத நிலைமையிலேயே பக்தி செலுத்தியும் வழி விலகி போகிறார்கள் சிலர்!அது ஒரு அறியாமையே!

இப்பூமிக்குரிய வாழ்க்கை என்னும் குருஸேத்திர யுத்தத்தில் மனிதனாகிய அர்ச்சுணன் ஒரு போதும் தனித்துவிடப்படவில்லை!அவனுக்கு வழிகாட்டும் படியாக அவனருகில் இறைதூதனாகிய கிரிஸ்ணர் இருந்தார்!அன்றைய உலகில் இறைவனை நெருங்கிய நபராகிய கிரிஸ்ணர் என்பவரை அர்ச்சுணன் குருவாக ஏற்றுகொண்டிருந்தது அவனுக்கு கடவுளின் வழிகாட்டுதலை உறுதி செய்துவிட்டது!அவன் கடவுள் மீது பக்தியுள்ளவனாகவும் இறைதூதனால் நண்பன் என அழைக்கபடும் உறவுக்குள் உள்ளவனாகவும் இருக்க முடிந்தது!பக்தி உள்ளுக்குள் விளைந்து கடவுளோடு உறவாக பரிணமிக்க வேண்டும்!
எல்லா மனிதர்க்குள்ளும் கடவுளுடன் உறவை அணுபவிக்க முடியவில்லையே என்கிற இனம்காணாத துயரம் இருக்கிறது!எல்லா மனிதர்களுக்கும் ஆத்தும தாகம் ஆழ்மனதில் இருக்கும் அது தனது உயிர் பிரிந்து வந்த கடவுளை குறித்தது! இந்த பிரிவு துயர் அடையாளம் மாறி உடலை தானாக என்னி மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை ஆக மாறி நிற்கிறது இதில் முழுமையும் திருப்தியுமடைய முடியாமல் முட்டி மோதி தவிக்கும்போது இனம்புரியா வேதனை வெளிப்படும் விரக்தியாகவோ வக்கிரமாகவோ மாறவும் வாய்ப்புண்டு! இந்த ஏக்கம் நமது பிதாவாகிய கடவுளைக்குறித்த தேடலாக பக்தியாக பரிணமித்தால் இறைவனோடு இடைபடுதல் உண்டாகும்!அந்த தேடலுக்கு கடவுள் தன்னை உணர்ந்த மனிதர்களை நமக்கு குருவாக அணுப்பி வைப்பார்! 

இயேசு குருவா? கடவுளா?

இதற்கு இயேசு சொன்ன பதிலே போதும்!!!

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.


கடவுளை வழிபடுவது மட்டுமே இயேசுவால் முக்கியபடுத்த பட்டுள்ளது!இயேசுவை கடவுளின் தூதராக --மனிதர்களுக்கு குருவாக ஏற்றுக்கொள்ளும் படி அவர் அளைத்தாரே தவிர தன்னை வழிபடும்படி அவர் வழிகாட்டவில்லை!

இயேசுவிடம் வேதத்தின் சாரம் என்ன என கேட்ட போது அவரின் பதில் :
29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கடவுள் ஒருவரே கடவுள் .

30. உன் தேவனாகிய கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.

எப்படி பிரார்திப்பது என்று இயேசுவிடம் கேட்ட போது:
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே!.

ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் கடவுளுடையவைகளே என்பது இயேசுவின் முடிவு !அவர் எப்போதும் கடவுளை பிரார்திக்கிறவராகவே வாழ்ந்து காட்டினார் !


பூமியின் முடிவு காலத்தில் இயேசு என்ன செய்வார் என பைபிள் சொல்லுகிறது :
I கொரிந்தியர் 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.


இயேசு பூமிக்கு வந்தது ;மீண்டும் வரப்போவது பூமியில் தாங்களும் கடவுளாகிவிட்டதாக சொல்லிக்கொண்டுள்ள அசுர ஆவிகளை பரிகரித்து கடவுளுக்கு ராஜ்ஜியத்தை உண்டாக்குவதற்கு!ஆனால் அவரின் வார்த்தைகளை திரித்து அவரும் கடவுளாகி விட்டதாக அசுர ஆவிகள் செய்கிற அதே வேலையை இயேசுவும் செய்வதாக கிறிஸ்தவர்கள் சொல்லுவது சரியா ?


இயேசு கடவுளின் ராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிக்க வந்தவர் !தனது சுயராஜ்ஜியத்தை கட்டும் அசுரர்களை வெல்ல கடவுளால் அனுப்ப பட்ட இறைத்தூதர் !மனிதர்களுக்கு குரு !இயேசுவின் மூலமாக கடவுளிடம் பிரார்திப்பதே இயேசுவுக்கு பிரியமானது !


இயேசுவின் எச்சரிக்கையை கவனியுங்கள் :
மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

வழிபாடு கடவுளுக்கு மட்டுமே !இயேசுவின் மூலம் வழிபடலாமே தவிர இயேசுவை வழிபட கூடாது !


0 Comments | Add Comment | Permalink RSS

ஞான மார்க்கத்தினருடன் ஒரு சம்பாஷனை!!!

நண்பரே !தங்களை வாழ்த்துகிறேன்!கீதையை கொஞ்சமாவது புரிந்திருந்த கண்ணோட்டத்தில் பைபிளையும் குரானையும் படித்த போது நான் புரிந்து கொண்டது வேறு ;அதனை சடங்காச்சாரமாக பின்பற்றும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் வியாக்கியானம் செய்வது வேறு என்பதை சொல்லி வருகிறேன் !பைபிளையும் குரானையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமானால் கீதையை படிப்பது அவசியம் என்பதை அவர்களின் தளங்களில் சொல்லிவருகிறேன் !இந்தியர்களாகிய நாம் இன்னும் தெளிவு பெற பைபிளையும் குரானையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் !

உலகம் முழுவதும் ஒரே இறைவனே !தனது பிள்ளைகளாகிய மனிதர்களுக்கு உலகம் முழுவதும் கடவுள் தன்னை பற்றிய வெளிப்பாடுகளை கொடுத்திருக்க மாட்டாரா ??எங்களுக்கு மட்டுமே சொன்னார் என்பது போல மற்றவர்களை ஒதுக்குகிற கிணற்று தவளை மனப்பான்மையை விட்டு வெளி வருதலே இன்றைய தேவை !நான் இயேசுவை ஒரு இறைதூதராக மட்டுமே பார்க்கிறேன்!ஆனால் அவரை மனிதர்கள் தங்களின் தவறினால் கடவுளுக்கு இணை ஆக்கி பார்க்கிறார்கள் --இந்தியாவில் ராமரையும் கிரிஷ்ணரையும் இணை ஆக்கி விட்டதை போல !

இந்த பூமிக்கு என்று ஒரு யுக புருஷன் கடவுளிடம் உண்டு !அவர் கடவுளல்ல !அவரும் கடவுளின் தூதர் மட்டுமே !ஆனாலும் பூமியை பொறுத்தவரை கடவுளின் ஏக பிரதிநிதி --கணக்கு பிள்ளை என்பதை போல --இந்த நபரே ``குமாரன்`` என அழைக்கபடுகிரார்! ராம் என்றாலும் ஜெரோம் என்றாலும் ரஹீம் என்றாலும் ஒரே அர்த்தத்தில் இந்த குமாரன் என்ற பொருளில் வழங்கப்பட்டது !இவரையே போகர் தனது ஞானத்தால் உணர்ந்து தேவதூதன் என்கிற நிலையிலிருந்து மனித சரீரத்தில் அவதரிக்கிற முருகு -மாறி வருகிற முருகன் என்றார் !அது ஒரு உருவக உபதேசம் !இந்த முருகனாகிய யுக புருஷனாகிய இறைதூதன் யாரென்றால் திரேதா யுகத்தின் ராமன் ;துவாபர யுக கிருஷ்ணன் ;கலியுக இயேசு !இம்மூவரும் ஒருவரே !``அதர்மம் பெருகும் போது நான் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறேன் ``என்பது நிறைவேறியுள்ளது !இந்த நபரே கல்கி யுகத்தில் கல்கியாக வரபோகிறவர் !

கடவுள் எதையும் ஜோடுஜோடாகவே படைக்கிறவர்!அப்படி இந்த யுக புருஷனுக்கு நண்பனான ஒருவர் உள்ளார் !அவர் ராமருக்கு லக்ஷ்மணன் ;கிரிஷ்ணருக்கு அர்ச்சுனன் ;இயேசுவுக்கு முகமது நபி !இயேசு பரமேறுமுன் எனக்கு பின் வருகிற சத்திய ஆவியானவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் என முன்னறிவித்தார் !அந்த சத்திய ஆவியானவராகிய ``ஜிப்ரீல் ``என்கிற தேவதூதன் முகமதுவை ஆட்கொண்டு இறக்கிய வேதம் தான் குரான் !முகமது ஒரு சாதாரண படிப்பறிவு இல்லாத இடையன் ! ஜிப்ரீல் என்ற ஆவியே முகமதுவை ஒரு கருவியாக பயன்படித்தி ஆப்ராமின் சந்ததியினருக்கு வாழ்க்கை நெறிமுறைகளும்  ஆட்சி நெறிமுறையும் குரானாக வழங்கப்பட்டது!லக்ஷ்மணன், அர்ச்சுனன், முகமது மூவரும் யுத்த வீரர்கள் --ஒருவரே!!! கீதையில் கிரிஷ்னர் அர்ச்சுனனிடம் இதற்கு முன்பும் நாம் இருவரும் இருந்திருக்கிறோம்;ஆனால் நான் முந்தய பிறவி ஞானத்துடன் இருக்கிறேன்;நீ அந்த ஞாபக சக்தி அருளப்படாதவனாக இருக்கிறாய் என்று சொன்னது இந்த யுகபுருஷ ஜோடி திரும்ப வரும் என்பதையே!ஒருவர் கடவுளை நெருங்கியவர்;உடன் அவருக்கு உதவியான சத்திரியன்!

உலகம் முழுவதிலும் கடவுளை மனித முயற்சியால் நெருங்கியவர்களும் கடவுளை பற்றிய வெளிப்பாட்டை கொடுத்துள்ளனர் !நம் இந்திய ஞானிகளை போல! ஆனால் கடவுளே தமது தூதர்களாக சிலரை தேர்ந்தெடுத்து தம்மை பற்றி வெளிப்படுத்தியுள்ளது எதுவோ அதுவே சிறந்தது!அப்படி வந்தது கீதையும் பைபிளில் பழைய ஏற்பாடும் குரானும் மட்டுமே!இவைகளில் அருள்நிலையில் கடவுளே பேசுவதாக வார்த்தைகள் இறங்கியுள்ளன !நான் என அதிகாரத்துடன் சொல்லப்படும் வார்த்தைகளை கடவுள் இறைத்தூதர்களான கிருஷ்ணர் ,இயேசு ,முகமது மூலமாக கடவுள் பேசியதாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர கிருஷ்ணர் இயேசு முகமது சொன்னதாக எடுத்துக்கொள்ள கூடாது !குர்ஆனில் இதைப்பற்றி தெளிவாக வசனம் இறங்கியுள்ளது !இறைதூதர்கள் கடவுளின் வாயே தவிர கடவுளல்ல !இவர்களையும் வணங்கக்கூடாது !வழிபாடு கடவுளுக்கு மட்டுமே!எல்லா புகழும் கடவுளுக்கே என்ற குரானின் முத்தாய்ப்பான வாசகத்தை மனதில் வைக்கவேண்டும்!!!

இயேசு ``நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் ;என்னையன்றி ஒருவனும் கடவுளிடத்து வாரான் ``என்றார்!நான் கடவுளை அடைய பாதை --குரு என்றுதான் சொன்னார்!நான்தான் கடவுள் என்று சொன்னதாக கிறிஸ்தவர்கள் தவறாக திரித்து அப்பியாசிக்கின்றனர்!அதுபோலவே அவரது முந்தய அவதாரமான ராமரையும் கிரிஷ்ணரையும் குரு என்பதை மாற்றி கடவுளுக்கு இணையாக்கி நாம் அப்பியாசிக்கிறோம் !இது தவறு என குரான் சுட்டுகிறது!

இம்மூன்று வெளிப்பாடுகளையும் தொகுத்து பார்த்தால் ஒரே அடிப்படையில் செழுமையாக்க பட்டவை என்பது புரியும்!ஆனால் வேறுவேறானதாக அர்த்தப்படுத்தி சண்டை போடுகிறவையாக மனிதர்கள் மாற்றி கொண்டோம்! இறைதூதர்கள் சென்ற பிறகு அவர்களின் சீடர்கள் மூலமாக தங்களது விசத்தை சிறுகசிறுக கலந்து அவற்றை திரித்து தவறாக வியாக்கியானம் செய்வது அசுர ஆவிகளின் வாடிக்கை என குரான் சுட்டுகிறது! அதுதான் தற்போது நடந்து கொண்டுள்ளது!

எல்லா மதங்களும் இறைதூதர்களால் அடித்தளம் இடப்பட்டு வளர்க்கப்பட்டு பின்னாளில் அசுரர்களால் சீரழிக்க பட்டவையாய் இருக்கின்றன என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்!உண்மைகளை மட்டும் உள்வாங்கி முன்னேற கடவுள் அருள் வேண்டும்!பூமியில் மனிதர்கள் மூலமாக தேவ அசுர யுத்தம் நடந்து கொண்டேதான் இருக்கிறது!

இந்த யுத்த களத்தை புரிந்து கொள்ள பக்குவத்தை உண்டாக்கும் ஒரு சாதனம் தான் தியானம் யோகம் என்பது!அன்ன மயகோஷம் மனோமய கோஷம் இவற்றை விட்டு முன்னேறாமல் தியானம் யோகம் என்று கத்தியை மட்டும் தீட்டிக்கொண்டே இருப்பதால் பலன் என்ன ?கத்தியை தீட்டுவது விஞ்ஞான மய கோஷத்திர்க்குள் நுழைந்து தேவ அசுர யுத்த களத்தில் நுழைவதற்காக!அந்த நிலையில் ஒன்று கடவுள் சார்பாக கடவுளை உயர்த்தி பிடித்து அவரிடம் பிரார்திக்கிற பக்தனாக மாறி ஆகவேண்டும் !அல்லது கடவுளை மறைமுகமாக புறந்தள்ளி --அவரை ஒரு நபர் என்பதற்கு பதிலாக ஒரு பொருளாக்கி--இயற்கையாக சுட்டி மனித அறிவை கொண்டே சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவிடலாம் என அசுர குருவின் அணியில் நிற்க வேண்டும்!

அசுரர்கள்  தேவதூதன் என்ற நிலையில் இருந்து அசுரனாக மாறியது நாங்களும்  கடவுளுக்கு இணையாகி விட்டோம் என்றதாலேயே!ஆதி மனிதனான ஆதாமை நீயும் கடவுளாகலாம் என உபதேசித்து கெடுத்தான்!இறந்து போன அனேக மனிதர்கள் பெயரை சொல்லி பல அற்புதங்களை தேவைகளை மனிதர்களுக்கு செய்து கொடுத்து மனிதர்களும் தெய்வமாகி விட்டதாக மாயம் செய்வதும் அசுர ஆவிகளே!

இயேசு அசுரனைப்ப்ற்றி ``அவன் ஒரு பொய்யன்;பொய்களுக்கு பிதாவாய் இருக்கிறவன்`` என்றார்!நான் அசுரன் கடவுளுக்கு விரோதி;கடவுளை போல ஆற்றல் உள்ளவன் என்னை வழிபட்டால் உங்களுக்கு எல்லாம் செய்வேன் என உண்மையை சொன்னால் மனிதர்கள் அவனை எற்றுகொள்ளமாட்டார்கள்!அதனால் அவன் எப்போதும் இறந்த மனிதர்கள் பெயரால்தான் பூமியில் செயல்பட்டு தன்னை வழிபடுகிற ஒரு கூட்டத்தை உண்டாக்குகிறான்!``ஆட்டின் தோலை போர்த்துக்கொண்டு ஓநாய்கள் உங்களிடத்து வரும்`` என இயேசு எச்சரித்ததும் இதுவே!சென்று பொன இறைதூதர்கள்,ஞானிகள்,மஹான்களின் பெயரை கடவுளுக்கு இணைவைத்து அவர்களை வழிபடுவது,அவர்களின் உபதேசத்தை திரித்து வியாக்கியாணம் செய்வது,மனிதர்களை கடவுளை வழிபடுவதிலிருந்து திசைதிருப்புவது,நான் பெரிசு நீ பெருசு என குழு உணர்வை தூண்டி சண்டை போட வைப்பது எல்லாமே அசுரர்களின் வேலையாகும்!

கடவுளை தேடு என்று சொல்லாமல் மனிதனும் தெய்வமாகிவிடலாம் என்கிற உபதேசம் அசப்பில் ஞானம் போல தெரிந்தாலும் ஞானமல்ல!அசுர குருவின் உபதேசம்!எல்லா ஞானத்தையும் பேசி முடிவில் கடவுள் என்ற நபரை புறந்தள்ளும்!தீயவர்களுக்கு துன்மார்க்கத்தை   உபதேசிக்கிற அசுரர்கள் நல்ல ஆத்துமாக்களை ஏமாற்ற வைத்திருக்கும் உபதேசம் ஞானம் போல தெரிகிற மாயாவாதம்-அல்லது சூனிய வாதம் !வள்ளலார் கடவுள் சார்பானவர்!அவர் ஏழு மாயத்திரைகளை நீக்கி அருட்பெரும் ஜோதியாய் விளங்கும் கடவுளை வழிபடு என்றார்!யுக முடிவில் கல்கி வருவார் என்றார்!ஆனால் வேதாத்திரி மாயாவாதி!அறிவுதான் கடவுள் என்று அசுர உபதேசம் செய்தவர் !!!கடவுளை வழிபடுவதிலிருந்து மனிதர்களை திசைதிருப்புகிறவர்!!!

`அருள்` x `மருள்`

ஆவி மண்டல சக்திகள் ஆட்கொள்ளும் போது எல்லா மனிதர்களிடமும் அருள் வழிவதும் அதை கடவுள் என மனிதர்கள் நம்புவதும் உண்டு! எல்லா ஆவிகளும் கடவுள் சார்பானவையல்ல! !ஆனால் மனிதனை விட உயர்ந்த சக்திகள்!இவைகளால் பூமிக்குரிய சில நன்மைகளை செய்து தறமுடியும்!நடந்த சம்பவங்களை சொல்ல முடியும்!சில நடக்க போவதை பற்றியும் சொல்ல முடியும்!அதனை உபாசிக்கிறவர்களுக்கு பணம் சம்பாதிக்க ``ஏவல்`` செய்து செய்விணை செய்து கெடுதல் செய்ய முடியும்!எதிர்தரப்பு நபர்கள் வந்து பணம் கொடுத்தால் வைத்த செய்விணையை எடுக்கவும் முடியும்!இவையெல்லாம் `அருள்` அல்ல `மருள்` என்றார் வள்ளலார்!

கடவுளிடமிருந்து வருவது `அருள்` என்றால் அசுர ஆவிகளிடமிருந்து வருவது `மருள்`!அசுர மாயங்களை இனம் காண தெளிவு உண்டானாலேயே கடவுளை நோக்கி முன்னேற முடியும்நம்மை சகலவற்றையும் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் !இந்த ஒருவரை மறைக்கும் முயற்சியில் அசுர ஆவிகள் செயல்படுகின்றன !உடலின் இச்சைகளை தூண்டி உலக மாயைகளில் மனிதனை வீழ்த்துவது; அதனை அடைவதற்கு அக்கிரமத்தையும் துணிவையும் தன்முனைப்பையும் தூண்டி விடுவது!அதற்கு சாக்கு கற்பிப்பது!அந்த தவறுக்குள் மனிதன் ஊறியவுடன் அவனை குற்றவாளி என குற்றம் சொல்லி பாவ சுரணை அற்றவனாக முழுக்க நனைந்து விட்டாய் இனி உனக்கும் கடவுளுக்கும் சம்மந்தம் இல்லை எனவே கல் நெஞ்சக்காரனாய் ஆகிவிடு என கற்பிக்கும் அதே அசுர ஆவிகள் நல்லவர்களுக்கு வைத்திருக்கிற உபதேசம் உனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் என்பது !மனிதனும் கடவுளாகலாம் என்பது மனிதனின் தன்முனைப்பை தூண்டுவது !நீயம் கடவுளாகலாம் நாங்களும் கடவுளாக ஆகிவிட்டோம் அதனால் கடவுள் என்று ஒருவர் அவசியமில்லை என்பது! இறைபேரரசை கலகம் செய்து சுயராஜ்ஜியம் செய்வது!கடவுளின் ஆளுமையை மறுக்கிற எல்லாமே அசுர பின்னணி !ஞானம் போல தோற்றமளிக்கிற மாயாவாதம் அசுர உபதேசம் !இந்த மாயையில் நிறைய நல்லவர்கள் மாட்டிக்கொண்டு உள்ளனர் !கடவுள் தான் வழிகாட்ட வேண்டும் !அசுரர்களின் மாய்மாலங்களை அழிக்கவே இறைதூதர்கள் பூமிக்கு வருவார்கள் என்பது கீதையில் கிரிஷ்ணரின் வெளிப்பாடாகும் !!!


I யோவான் 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசின் ஆதிக்கத்தில் இருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே இயேசு  வெளிப்பட்டார்.

 ராமரோ கிரிஷ்ணரோ இயேசுவோ; அசுரர்களோடும் மாயைகளோடும்; மாயைகளை பின்பற்றுபவர்களோடும் ;மனிதர்கள் உருவாக்கி கொண்ட நிறுவனங்களில் பதவியில் போய் ஒட்டிக்கொண்டு தத்துவங்களை திரித்து உபதேசித்து தங்களை கடவுளுக்கு ஏஜென்ட்டுகளாக காட்டி கொள்கிரவர்களோடும் யுத்தம் செய்தார்கள் !பழைய சடங்காச்சாரங்களை பொய்களை உடைத்தெறிந்தார்கள்! அவர்கள் காலத்தில் சாதாரண மனிதர்களும் கடவுளோடு ஒப்புரவு ஆனார்கள் !ஆனால் அவையும் காலப்போக்கில் சீரழிந்து போய் விட்டது !இதனை சீர் செய்ய மறுபடி இறைதூதர்கள் வருவார்கள் என்றே இம்மூவரும் சொல்லியுள்ளனர்!

Wednesday, January 18, 2012

`கடமையைச்செய் பலனில் பற்றுவைக்காதே! `----கர்ம யோகம் (கீதையின் சுடரொளிகள்)

 கீதை 3:9 கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாக வேலை செய்யப்படவேண்டும்;இல்லாவிட்டால் வேலைகள் இந்த லவ்கீக உலகில் மனனோவு உள்ளவைகளாக மாறிவிடும்!ஆகவே குந்தியின் மகனே!உனக்கு விதிக்கபட்ட வேலைகளை கடவுளின் திருப்திக்காக என ஈடுபாடோடு செய்வாயாக;இதனால் எப்பொதும் விடுதலை பெற்றவனாக இருப்பாய்!

பொதுவாக ஒரு வேலையை நாம் பிறருக்காக செய்ய வேண்டிய சூழ் நிலை வரும்போது அதனால் நமக்கு என்ன ஆதாயம் என்று சிந்தித்து அதில் ஈடுபாடில்லாமல் ஏனோதானோ என சொதப்புவது உலக வழக்காக இருக்கிறது அரசுத்துறைகளில் ஆதாயம் வந்தால் அதற்க்கு ஒரு வேலை இல்லாவிட்டால் அதை ஒலட்டோஒலட்டு என்று ஒலட்டுவது ஒரு கலையாக கற்றுக்கொண்டு கடைபிடிக்கப்படுகிறது!

அது தற்காலிக வெற்றியே தவிற நீடித்த நோக்கில் நமக்கு நாமே நம் சந்ததிகளுக்கு வரவேண்டிய நன்மைகளின் அளவை குறைத்துகொள்ளுகிறோம்! பல வேலைகளில் நாம் உழைத்தும் பலனில்லாமல் போவது நம் முன்னோர்கள் இப்படி சொதப்பியதன் விளைவு   என்பது உண்மை!
ஒரு வேலையில் நமது சூழ் நிலையின் காரனமாக ஈடுபடாமலேயே இருந்து விடலாம் அல்லது அவர்களுக்காக பிரார்த்தனை செய்து விட்டு சும்மா இருந்து விடலாம்! ஆனால் செய்யத்தொடங்கி அதனை சொதப்ப கூடாது! செயலுக்காக செயலை ஈடுபாடுடன் செய்ய வேண்டும்! முடிந்த அளவு நேர்த்தியாகவும் முழுமையாகவும் செய்வது `கர்ம யோகம்` ஆகும்! செயல் செயலுக்காக செய்யப்படுவது கர்ம யோகம்! அதில் ஒரு ஆத்மதிருப்தி என்பது உள்ளே விழைவது! நம்மால் செய்யப்பட்ட செயலுக்கு உடனடி பலனை எதிர்பார்க்க வேண்டியதில்லை! நம்மால் பலனடைந்தவர்கள் நமக்கு பதில் செய்வார்கள் என்றோ  ;குறைந்தது உணர்ந்தவர்களாக இறுப்பர்கள் என்றும்  எதிர்பார்க்க வேண்டியதில்லை!


கீதை 3:19 எனவே விளைவுகளின் பலன்களில் பற்றுவைக்காமல் ஒருவர் கடமையை கைக்கொள்ளவேண்டும்! யார் பற்றற்று கடமை செய்கிறார்களோ அவர்கள் கடவுளை அடைவர்!


கடவுளுக்காக எதையும் செய்வதாக நினைக்கிற கர்மயோக மனநிலையை அடைந்தவர்க்கு கடவுள் எல்லாவற்றிர்க்கும் ஏற்ற காலத்தில் பலனளிப்பவர்; அவர் கடனாளியல்ல என்பது நன்கு தெறியும்!

குரான் 11:51. "என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? --முகமது நபி!
6:160. எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
4:173. ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்.
நிறை பக்தன்; தான் செய்கிற செயலை ஆத்ம திருப்தியோடு நிறைவேற்றுகிறான்! இன்றைய வாழ்வு,சூழ்நிலை,முன்னேற்றம் இவற்றிர்க்கு கடவுளை நம்பியிரூக்கிரான்--தனது அறிவையும் திறமையையும் ஆழமாக அவன் நம்புவதில்லை! தனக்கு வருகிற வளர்ச்சிக்கு அவன் நன்றி செலுத்துகிறவனே தவிற குதுகலம் அவனை நிறப்புவதில்லை! தன் தோல்விகளுக்கோ ,தடங்கள்கலுக்கோ அவன் மனம் கலங்குவதுமில்லை! ஒரு குழந்தையைப்போல் அவன் மனம் கடவுளிடத்து நிலைத்திறுக்கிறது!

கீதை 2:150 மனிதர்களில் சிறந்தவனே!யாரொருவன் இன்பத்திலும் துன்பத்திலும் பாதிப்படையாதவனோ;இரண்டிலும் சமநிலை அடைந்தவனோ அவனே விடுதலை பெற தகுதி உள்ளவன்!

 அணுபவத்தில்; ஒரு விசயத்தில் ஆவலும் எதிர்பார்ப்பும் நமக்கு  இருக்கும் வரை அதில் நாம்தான் ஒளப்பிக்கொண்டு இருப்பதாக இருக்கும்!ஆனால் எதிர்பார்ப்பு இல்லாத மனச்சம நிலையை அடைந்து விட்ட விசயத்தில் விரைவில் வெற்றி வந்து சேரும்!ஏனெனில் அதில் கடவுள் செயல்பட தொடங்கி விடுகிறார்!எங்கே நம் சுயம் அடங்குகிறதோ கர்மயோகம் ஆகுதியாக --வேள்வியாக --பிரார்த்தனையோடு செய்யப்படுகிறதோ அதில் கடவுளே விளைவுக்கு நிர்பந்தப்படுத்தப்படுகிறார்!
கீதை 18:6 எல்லா செயல்களும் பற்றற்று செய்வாயாக!விளைவுகளில் எந்த எதிர்பார்ப்பும் கூடாது!செயலுக்காக செயலை செய்!இதுவே என் முடிவான கருத்து!

Saturday, January 14, 2012

விவேகானந்தரது ஆசை நிறைவேர பிரார்திப்போம்!

                             உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை இந்தியாவிலிருந்தே புறப்படும் என்பது விவேகானந்தரது முன்னறிவிப்பு !அதற்காகவும் அவர் இந்தியாவின் அடியில் இருந்த தீவிற்கு (விவேகானந்தர் பாறை )நீந்தி சென்று ஒரு நாள் முழுவதும் கடவுளை தியானித்தார் !அவரது ஆசை நிறைவேற நாமும் கடவுளை வேண்டவேண்டும் !
                            உலகை முழுவதும் அரவணைக்க என்றால் உலகம் முழுவதும் கடவுளால் இறைதூதர்கள் மூலம் ஆங்காங்கே வெளிப்படுத்த பட்ட எல்லா கொள்கைகளையும் அரவணைத்த ---எல்லாவற்றையும் ஏற்று அதனை அடுத்த வளர்சியை நோக்கி அழைக்கிற கொள்கையாக மட்டுமே இருக்க முடியும்! நான்தான் சரி மற்றவர்கள் தங்கள் கொள்கையை விட்டு விட்டு வாருங்கள் என்றால் சண்டை தான் மிஞ்சும்!                                      
                             இந்து -கிறிஸ்தவ -முஸ்லீம் கொள்கைகளின் உண்மைகளை உள்வாங்கிய ஒரு கொள்கையால் மட்டுமே அதனை சாதிக்க முடியும்! காந்தி அரசியல் பணி முடிந்து தனது ஆன்மீக பணியை நிலைநாட்டும் முன் கொல்லப்பட்டது --உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை அவர் மூலமாக வெளிப்பட இருந்த ஒரு வாய்ப்பு பறிபோனது!
நாமும் விவேகானந்தரின் ஆசையை கடவுளிடம் பிரார்திப்போம்!
எல்லாம் வல்ல ஏக இறைவன் தனது இறைதூதரை இந்தியாவிற்கு அணுப்புவாராக!!!

``தை பிறந்தால் வழிபிறக்கும்``!!!!!

                                                தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி !தட்சிணாயனம் --அதாவது சூரியனை விட்டு விலகி செல்லுகிற பூமி தை மாதத்தில் உத்திராயணம் திரும்பி சூரியனை நோக்கி செல்லிகிறது !இந்த திருப்பத்தை ஒட்டியே ஆண்டு கணக்கை ஆதி இந்துக்களான தமிழர்கள் அமைத்தார்கள் !

லெமூரியாக்கண்டத்திலிருந்து பல கண்டங்களுக்கும் மனித இனம் பரவி பல இனங்களாக பரிணமித்தபோதும் தையை ஒட்டியே வருடப்பிறப்பு அமைக்க பட்டது  !அதை சரியாக நிதானிக்காமல் கிறிஸ்தவர்கள் ஜனவரியை புத்தாண்டு ஆக்கினார்கள் !தை புத்தாண்டே சரியான புத்தாண்டு
                                                  உலகின் முதல் மனிதன் என பைபிள் ,குரான் சொல்லும் ஆதாம் வாழ்ந்தது இந்தியாவிற்கு தெற்கே கடல் கொண்ட லெமூரியா கண்டம் !எல்லா மனிதர்களுக்கும் மூலமான ஒரே ஆண்டு கணக்கு தை புத்தாண்டு ஆகும் !முதல் நாள் ஆண்டு பிறப்பு தைப்பொங்கல் !பூமிக்கு ஆதாரமான சூரியனை முக்கியப்படுத்துவது! இரண்டாம் நாள் கால்நடைகளை முக்கியப்படுத்தும் மாட்டு பொங்கல் !மூன்றாம் நாள் தனது முன்னோர்களுக்கு மொத்தமாக கடவுளிடம் பிரார்திக்கிற விரத நாள் !அது மனிதர்களை சந்தித்து அளாவுகிற காணும் பொங்கலாக மாற்றம் செய்ய பட்டு விட்டது!அது சரியல்ல!நண்பர்களோடு அளாவ அணேக பண்டிகைகள் உள்ளன!நமது தாய் தகப்பன் இறந்த பிறகு சில நாள் ஞாபகம் வைத்திருக்கும் மனிதர்கள் காலப்போக்கில் மறந்து விடுவோம்!தனிதனியே ஒவ்வொருவரையும் ஞாபகம் வைப்பதும் கடிணம்! எனவே எல்லா முன்னோர்களுக்கும் சேர்த்து ஒரே நாள் மனிதனுக்கான நாள்!அனேகமாக ஆதாம் படைக்க பட்ட நாளாக கூட இருக்கலாம்!
                                                 
முதல் நாள் பூமிக்கு ஆதாரமாக உள்ள சூரியனுக்காக கடவுளை வேண்டி ;இரண்டாம் நாள் தனது உலவுக்கு துணையாக உள்ள கால்நடைகளுக்காக வேண்டி மூன்றாம் நாள் தனது முன்னோர்களின் ஆத்துமாக்களின் நலனுக்காக விரதமிருந்து கடவுளை வேண்டி தனது புதிய ஆண்டை ஆதி மனிதராகிய தமிழர்கள் இரைதூதனாகிய ஆதாம் அல்லது மனு வின் மூலமாக கடவுளிடம் கற்றுக்கொண்ட நியதி இது !
                                                  ஆனால் பின்னாளில் இனங்கள் பெருகி விரிந்த போது அவரவர்களும் தங்களை பிரித்து அடையாள படுத்த ஒரு ஆண்டு கணக்கை போட்டார்கள் !தைப்புத்தாண்டில் உள்ள மாதிரியான மூன்று நினைவு கூறுதல் இல்லை !ஏனென்றால் ஆதி மனிதனின் புத்தாண்டு தைப்புத்தாண்டு !
                                                  முன்தோன்றி மூத்த குடிகளாகிய தமிழர்களாகிய நாம் அரசியல்,பொருளாதார, ஆண்மீக ஆளுமை குறைந்தவர்களாய் இருப்பதால் மற்றவர்களின் பழக்கவழக்கங்களுக்கு இடம் கொடுத்தவர்களாய் இருந்தாலும் நமது உண்மையை நாம் தான் உலகிற்கு வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும்!

ஆதி மனிதனின் புத்தாண்டு தைப்புத்தாண்டு!விஞ்ஞானத்தின் படி சூரியனோடு பூமியின் சுழற்சியின் படி சகலருக்கும் புத்தாண்டு தைப்புத்தாண்டு!

Monday, January 9, 2012

கடவுள் வேறு மதங்கள் வேறு!

                        மதங்களின் வழியாக கடவுளை பார்த்தே பழகிவிட்டோம் !மதங்கள் எல்லாம் அந்த அந்த காலகட்டத்தில் ஒரு இறை தூதரால் கொடுக்கப்பட்டு அவரின் சீடர்கலால் கெடுத்து குட்டிய சுவர்கள் ஆனவை !மதங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தவறு அப்படியே எதிர்ப்பதும் தவறு !

                      கெட்டுப்போன மதங்களின் உடாக உண்மையை கடவுளை தேடி கண்டு பிடிக்கவேண்டும் !கடவுள் உங்களை வெளிச்சமாக்க வேண்டுகிறேன் !கடவுள் இருக்கிறார் என நம்புவதும் செய்கிற செயலுக்கு விளைவை அவர் கொடுப்பார் என நம்புவதும் தீய செயல்களிடமிருந்து மனிதனை காப்பாற்றும் !

                       மனித நேயமற்ற பக்தி எப்படி மோசடியோ அதுபோல இறை அச்சமற்ற மனித நேயமும் மோசடியில் தான் முடியும் !வாயிலே சமுக சீர்திருத்தம் பேசினாலும் செய்கையிலே ஈவு இரக்கமற்ற சுயநலவாதிகளாகவே பலர் இருக்கின்றனர் !மதங்களின் கேடுகளை எதிர்க்கிற சாக்கில் இறை அச்சமற்ற கேட்டுக்குள் போய் முடிகிறார்கள் !மதங்களின் கேடுகளை எதிர்க்கவேண்டும் !உள்மனதில் இறை அச்சமுடன் இருக்க வேண்டும் !

                       ஒரு வேலை பெரியார் அப்படி இருந்திருக்கலாம்!சமுதாய கேடுகள் மதங்களோடு பின்னி பிணைந்து இருந்ததால் ஒரே அடியாக கடவுளை மற என்ற எதிர்மறை முடிவுக்கு வந்திருக்கலாம் !அவர் தன் கொள்கைக்கு நேர்மையானவராக சமூக சீர்திருத்தம் செய்வதற்கு தன்னை தியாகம் செய்தார்!ஆனால் அவரின் பாசறையில் வந்தவர்கள் எல்லாரும் இறை அச்சமற்ற சுயநலவாத கூட்டங்களாக கேடுகளை தைரியமாக  செய்கிரவார்கலாக மாறிவிட்டனர்!எவ்வித கொள்கையும் இல்லாமல் அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள் -கழக கூட்டங்களுக்கு பெரியார் தான் மூலமாகும் !எப்படி மதங்களெல்லாம் கெட்டு விட்டதோ அப்படி பெரியாரியமும் கெட்டு விட்டது !காரணம் இறை அச்சமற்றதுதான்!!இறை அச்சத்தை பெரியாரியத்துடன் கூட்டினால் அது நல்ல கொள்கையாக பரிணமிக்கும் !!!!

புத்தர் கடவுளா ?குருவா ?

                   புத்தரை குருவாக வைத்து கடவுளை வணங்கிய வரையில் அது நல்ல மார்க்கமாகவே இருந்தது !கடவுளை வணங்குவதற்கு அன்பு மனித நேயம் தான் ஊடகம் என்பது புத்தரின் உபதேசம் !புத்தருக்கு பிறகு 2000 வருடம் வரை புத்தர் இறை தூதராக குருவாகவே மட்டுமே இருந்தார் (ஹீனயானம் )!
                 அதன் பிறகு புத்த துறவிகள் மாநாட்டில் ஒரு உண்மையை கண்டுபிடுத்தி விட்டதாக அறிவித்தார்கள் !அது கடவுள் தான் புத்தராக வந்தார் அல்லது புத்தரும் கடவுளாகிவிட்டார் ;எனவே புத்தரையே வழிபடுவது என முடிவெடுத்தார்கள் (மகாயானம் )அங்கு தான் கலி பிடித்து புத்த மதம் கெட்டு குட்டிய சுவராகி விட்டது !
                  புத்தர் மூலமாக கடவுளை வழிபட்ட வரை அது நல்ல மார்க்கம் !இறை தூதர் புத்தரையே கடவுளாக்கிய பிறகு அது துன் மார்க்கம் !பார்ப்பதற்கு புத்தர் மீது உள்ள பேரன்பால் குரு பக்தியால் இது நடந்தது போல் தோன்றினாலும் கடவுளை வழிபடு என்கிற புத்தரின் உபதேசத்தை குழிதோண்டி புதைத்து விட்டு புத்தரையே கடவுளாக்கிய அசுரர்களின் விஷம் இது !
                   எல்லா இறை தூதர்களும் சென்ற பிறகு அசுரர்கள் மிக நுட்பமாக சீடர்களின் மூலமாக தங்கள் விசத்தை கலந்து மதத்தை கெடுக்கிறார்கள் !கடவுளை விட்டு விட்டு கடவுளின் தூதர்களை வழிபட செய்து விடுகிறார்கள் !கண்பூசயுஸ் தன் முதல் எதிரிகளே சீடர்கள் தான் என்று சொன்னார் !ஆவி மண்டல தேவ அசுர யுத்தம் பூமியில் மனிதர்கள் மூலமாக நடந்து வருகிறது !அசுரர்கள் கடவுளை விட்டு விட்டு கடவுளின் தூதர்களை வழிபடுகிரவர்கலாக மனிதர்களை மாற்றி எல்லா மதங்களையும் கெடுத்து விடுகிறார்கள் !
                 மனிதனுக்கும் தன் இனத்தில் ஒருவன் கடவுளாகிவிட்டான் என்றவுடன் மாயை எளிதில் பிடித்து விடுகிறது !கொள்கையை கடைபிடிப்பதை விடஒரு கும்பிடு போடுவது எளிது ! ஒரு கும்பிடு போட்டு நிறைய பலன்களை அடைந்து விடலாம் என்கிற சுயநல பக்தி அவனை ஆட்கொண்டு விடுகிறது !
                உள்ளார்ந்த இறை அச்சமும் மனித நேயமும் தான் உண்மையான பக்தி ஆகும் !சாரமற்ற சரக்குகள் அசுரர்களின் விசமாகும் !இறை தூதர்கள் ராமன் ,கிருஷ்ணர் ,புத்தர் ,ஏசு ,-வின் சீடர்களை கெடுத்து அவர்களின் கொள்கைகளை விட்டுவிட்டு அவர்களை வழிபடுகிரவர்கலாக அசுரர்கள் மாற்றிவிட்டார்கள் !இறை தூதர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்களை கொடுமைபடுத்த மனிதர்களை தூண்டி விடுகிற அசுரர்கள் அவர்கள் சென்ற பிறகு அவர்களை வழிபட தூண்டி விட்டு அவர்களின் கொள்கைகளை குழி தோண்டி புதைப்பதில் வெற்றி பெறுகிறார்கள் !

துன்பத்தின் மூலம் கடவுள் இடை படுகிறார் கற்றுக்கொண்டால் மேன்மை அடையலாம்

       துன்பம் வரும்பொழுது தான் இறைவனை தேடும் நிலை இயல்பாகவே மனிதனுக்கு வருகிறது.அப்போது ஏதோ ஒரு வகையில் கடவுளோடு இடை பட தொடங்குகிறான் .தேவை கருதிய பக்தி சிறுக சிறுக இறை அன்பாக இறை தேடலாக இறை அச்சமாக இறை கீல்படிதலாக பரிணமிக்கிறது!                                                                                                                                                                     உன்னதமான பக்தியை நோக்கி எல்லா ஆத்மாக்களையும் இறைவனே வழிநடத்துகிறான்! .அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து என்கிறார் திருநாவுக்கரசர்! .தான் நாடியோர்க்கு நல்வழிகாட்டுகிறான் தான் நாடியோரை வழிகேட்டிலும் இறைவன் விட்டுவிடுகிறான் என்கிறது   திருக்குர்ஆன்!                                                         துன்பத்தை தரும் பொழுது அதை தாங்குகிற சக்தியையும்  இறைவனே கொடுக்கிறார் ! எண்ணிப்பாருங்கள் நாம் கடந்து வந்த துன்பம் இப்போது வந்தால் நம்மால் தாங்கி விடமுடியுமா ?அதை எப்படியோ  தாங்கி வரவில்லை கடவுள்   தான் நமக்கு சக்தியை கொடுத்திருந்தார் .அவருடைய  நோக்கமெல்லாம்  நாம் கற்றுக்கொள்வது தான்!
                                       இந்த  துன்பத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள அவர்   விரும்புகிறார் என  சிந்திப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம்மை  உபத்திரவ படுதுகிரவர்களைப்போல் நாம் இருக்க கூடாது அவர்களும்   மனம் திரும்பட்டும் என பொறுமையை கைக்கொள்வதும் அவர்களை விட்டு விலகி நம்மை காத்துக்கொள்ள மட்டும் முயற்சிப்பதுமாக  இருக்கும் பொது இந்த துன்பம் விலகிவிடும்!
                                       கடவுள் இருக்கிறார் கேட்கிறார்  என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து பிரார்த்தித்தால் அவர் பதிலளிப்பது  சில  நாளில்  நமக்கு புரிய  தொடங்கிவிடும்  ஒரு மனிதன் தன மகன் மீனை கேட்டால் பாம்பை கொடுப்பானா ?உணவைக்கேட்டால் கல்லை கொடுப்பானா ?பொல்லாத மனிதர்களாகிய நீங்களே நல்ல ஈவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க அறிந்திருக்கும் பொழுது பரம பிதாவானவர் தம்மை நோக்கி வேண்டுகிரவர்கலூகு நல்ல ஈவுகளை கொடுப்பது அதிகம் நிச்ச்சயமில்லையா ? என்கிறார் இறை தூதர் இயேசு!
ஆகவே வேண்டுதலும் கடவுளிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் எந்த துன்பம் ,வியாதிகளிடமிருந்து நம்மை நிச்சயம் விடுவிக்கும்
துன்பம் வரும்பொழுது தான் இறைவனை தேடும் நிலை இயல்பாகவே மனிதனுக்கு வருகிறது.அப்போது ஏதோ ஒரு வகையில் கடவுளோடு இடை பட தொடங்குகிறான் .தேவை கருதிய பக்தி சிறுக சிறுக இறை அன்பாக இறை தேடலாக இறை அச்சமாக இறை கீல்படிதலாக பரிணமிக்கிறது!                                                                                                                                         உன்னதமான பக்தியை நோக்கி எல்லா ஆத்மாக்களையும் இறைவனே வழிநடத்துகிறான்! .அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து என்கிறார் திருநாவுக்கரசர்! .தான் நாடியோர்க்கு நல்வழிகாட்டுகிறான் தான் நாடியோரை வழிகேட்டிலும் இறைவன் விட்டுவிடுகிறான் என்கிறது   திருக்குர்ஆன்!                                                         துன்பத்தை தரும் பொழுது அதை தாங்குகிற சக்தியையும்  இறைவனே கொடுக்கிறார் ! எண்ணிப்பாருங்கள் நாம் கடந்து வந்த துன்பம் இப்போது வந்தால் நம்மால் தாங்கி விடமுடியுமா ?அதை எப்படியோ  தாங்கி வரவில்லை கடவுள்   தான் நமக்கு சக்தியை கொடுத்திருந்தார் .அவருடைய  நோக்கமெல்லாம்  நாம் கற்றுக்கொள்வது தான்!
                                       இந்த  துன்பத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள அவர்   விரும்புகிறார் என  சிந்திப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம்மை  உபத்திரவ படுதுகிரவர்களைப்போல் நாம் இருக்க கூடாது அவர்களும்   மனம் திரும்பட்டும் என பொறுமையை கைக்கொள்வதும் அவர்களை விட்டு விலகி நம்மை காத்துக்கொள்ள மட்டும் முயற்சிப்பதுமாக  இருக்கும் பொது இந்த துன்பம் விலகிவிடும்!
                                       கடவுள் இருக்கிறார் கேட்கிறார்  என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து பிரார்த்தித்தால் அவர் பதிலளிப்பது  சில  நாளில்  நமக்கு புரிய  தொடங்கிவிடும்  ஒரு மனிதன் தன மகன் மீனை கேட்டால் பாம்பை கொடுப்பானா ?உணவைக்கேட்டால் கல்லை கொடுப்பானா ?பொல்லாத மனிதர்களாகிய நீங்களே நல்ல ஈவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க அறிந்திருக்கும் பொழுது பரம பிதாவானவர் தம்மை நோக்கி வேண்டுகிரவர்கலூகு நல்ல ஈவுகளை கொடுப்பது அதிகம் நிச்ச்சயமில்லையா ? என்கிறார் இறை தூதர் இயேசு!
ஆகவே வேண்டுதலும் கடவுளிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் எந்த துன்பம் ,வியாதிகளிடமிருந்து நம்மை நிச்சயம் விடுவிக்கும்
துன்பம் வரும்பொழுது தான் இறைவனை தேடும் நிலை இயல்பாகவே மனிதனுக்கு வருகிறது.அப்போது ஏதோ ஒரு வகையில் கடவுளோடு இடை பட தொடங்குகிறான் .தேவை கருதிய பக்தி சிறுக சிறுக இறை அன்பாக இறை தேடலாக இறை அச்சமாக இறை கீல்படிதலாக பரிணமிக்கிறது!                                                                                                                                         உன்னதமான பக்தியை நோக்கி எல்லா ஆத்மாக்களையும் இறைவனே வழிநடத்துகிறான்! .அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து என்கிறார் திருநாவுக்கரசர்! .தான் நாடியோர்க்கு நல்வழிகாட்டுகிறான் தான் நாடியோரை வழிகேட்டிலும் இறைவன் விட்டுவிடுகிறான் என்கிறது   திருக்குர்ஆன்!                                                         துன்பத்தை தரும் பொழுது அதை தாங்குகிற சக்தியையும்  இறைவனே கொடுக்கிறார் ! எண்ணிப்பாருங்கள் நாம் கடந்து வந்த துன்பம் இப்போது வந்தால் நம்மால் தாங்கி விடமுடியுமா ?அதை எப்படியோ  தாங்கி வரவில்லை கடவுள்   தான் நமக்கு சக்தியை கொடுத்திருந்தார் .அவருடைய  நோக்கமெல்லாம்  நாம் கற்றுக்கொள்வது தான்!
                                       இந்த  துன்பத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள அவர்   விரும்புகிறார் என  சிந்திப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம்மை  உபத்திரவ படுதுகிரவர்களைப்போல் நாம் இருக்க கூடாது அவர்களும்   மனம் திரும்பட்டும் என பொறுமையை கைக்கொள்வதும் அவர்களை விட்டு விலகி நம்மை காத்துக்கொள்ள மட்டும் முயற்சிப்பதுமாக  இருக்கும் பொது இந்த துன்பம் விலகிவிடும்!
                                       கடவுள் இருக்கிறார் கேட்கிறார்  என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து பிரார்த்தித்தால் அவர் பதிலளிப்பது  சில  நாளில்  நமக்கு புரிய  தொடங்கிவிடும்  ஒரு மனிதன் தன மகன் மீனை கேட்டால் பாம்பை கொடுப்பானா ?உணவைக்கேட்டால் கல்லை கொடுப்பானா ?பொல்லாத மனிதர்களாகிய நீங்களே நல்ல ஈவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க அறிந்திருக்கும் பொழுது பரம பிதாவானவர் தம்மை நோக்கி வேண்டுகிரவர்கலூகு நல்ல ஈவுகளை கொடுப்பது அதிகம் நிச்ச்சயமில்லையா ? என்கிறார் இறை தூதர் இயேசு!
ஆகவே வேண்டுதலும் கடவுளிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் எந்த துன்பம் ,வியாதிகளிடமிருந்து நம்மை நிச்சயம் விடுவிக்கும்
 கடவுள்  எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; தீயவரான  கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
(திருக்குர்ஆன் 2:286)


                                   

மனிதர்கள் தெய்வமாக முடியுமா ?

                           மனிதர்கள் தெய்வமாகவே முடியாது கடவுளுக்கு அடியவர்களாக இருக்க கற்றுக்கொண்டால் வாக்களிக்கப்பட்ட பரலோகத்திற்குள் நித்தியஜுவனுடன் பிரவேசிக்க முடியும்
                          மனிதனும் தெய்வமாகலாம் என வாக்களித்து கடவுளுக்கு இனையானவர்களாக தன்முனைப்பை மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்து கடவுளுக்கு அந்நியமாகும்படி அசுரர்கள் மாயம் செய்கிறார்கள்! மணிதர்களுக்கு இச்சைகளை அழகாக்கி காட்டி ஒருவர்க்கு ஒருவர் தீமைகள் செய்து பாவம் சம்பாதிக்கவும் கடவுளிடமிருந்து அன்னியமாகவும் அசுரர்களே பின்னணியிலிருந்து செயல்படுகிறார்கள்!
                             தீமை செய்கிறவர்களுக்கு பக்க பலமாக உள்ள அதே அசுரர்கள்  நற்குனம் உள்ள அநேகரை நீங்களும் தெய்வமாகலாம் என்கிற மாய வலைக்குள் தள்ளி நரகததீர்ப்பிற்கு தகுதியுள்ளவர்களாக்குகிறார்கள்! .தேவ தூதர்களில் யார் கடவுளை மட்டும் பிரதானபடுத்தாமல் நாங்களும் கடவுளுக்கு இனை ஆகிவிட்டோம் நாங்களும் தனித்து செயல்படுவோம் என ஆணவம் கொண்டார்களோ அவர்களே தள்ளப்பட்டு அசுரர்களாய் ஆனவர்கள்!
                            இறுதி தீர்ப்பு நாளில் தாங்கள் நரகத்தில் தள்ள பட்டு அழிவுக்கு உட்படுவோம் என்பது அசுரர்களுக்கு நன்கு தெரியும் அந்நாளில் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களில் அநேகர் தேவ தூதர்களாக  தகுதி அற்றவர்கள் தங்களோடு அழிவதற்கு தான் தகுதி உள்ளவர்கள் என கடவுளை நிர்பந்தபடுத்துவதும் மனிதர்களை அழிவுக்கு உள்ளாக்குவதும் அசுரர்களின் லட்சியமாகும்! தகுதியுள்ள மனிதர்கள் தேறினால் இறுதிதீர்ப்பு நாள் வந்துவிடும் என்பதால் தீயவர்களுக்கு தீய வழியிலும் நல்லவர்களுக்கு நயவஞ்சகமாகவும் உபதேசம் செய்து கொண்டே உள்ளனர்!
                            இறை அச்சமற்றவர்களுக்கு அக்கிரமத்தையும் இறை அச்சமுள்ளவர்களுக்கு நாங்களும் தெய்வமாகிவிட்டோம் நீங்களும் தெய்வமாகலாம் என வஞ்ச புகழையும் வழங்குகின்றனர்! இறந்து போன புகழ்பெற்ற நபர்கலெல்லாம் தெய்வமாகி விட்டதாக ஜாலம்செய்கிறார்கள் !எளிதில் மனிதர்களை மயக்கும்வழி இது .கடவுள் தான் பெரியவர் என்கிற பக்தியின் உச்சத்தை அடைந்து விட்டால் இந்த மாயதிலிருந்து தப்பலாம் கடவுளே கதி என இருக்கிற மனதாழ்ச்சி மிக உன்னத குணமாகும்

Sunday, January 8, 2012

வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!

http://www.facebook.com/photo.php?fbid=295507903832907&set=a.156372927746406.40900.100001211005910&type=1


அய்யா!உண்மையை நெருங்குகிறீர்கள் !சில நுட்பமான தவறுகளில் உள்ளீர்கள்! சுட்டி காட்டுகிறேன்!!
1 )ஆன்மாக்கள் எல்லாம் இறைவன் படைப்பு உயிரும் உடம்பும் மாயையின் படைப்பு ////
உயிர் என்பது கடவுளின் ஆவியில் ஒரு துளி !அகண்ட ஆவியே எல்லாவற்றிக்கும் மூலமாகும் !அதை அவர் அருளுகிறார் !எடுத்து கொள்ளுகிறார் !அது இருக்கும் வரை ஒரு ஆத்துமா ஜீவாத்துமா அது எடுக்க பட்டால் மரித்த ஆத்துமா !உடலும் ஆதியில் கடவுளால் உருவாக்க பட்டதுதான் !ஆனால் புற உலகோடு தொடர்பு கொண்டு ஆத்துமாவை மயக்குவதாக உள்ளது !அசுரர்கள் இந்த உடம்பின் இச்சைகளை துண்டி ஆத்துமாவின் மீது ஆதிக்கம் செய்கிறார்கள் !உயிர் மீது ஆதிக்கம் செய்ய இயலாது ஏனென்றால் கடவுளின் ஆவி அது !ஆத்துமா உடலை தான் என எண்ணி உயிரை மதிக்காது விடுகிறது !அதனால் அசுரர்களின் ஆளுகைக்கு தானாக ஒப்பு கொடுக்கிறது !அப்படியில்லாமல் தான் உடலல்ல ஆத்துமா என்பதை உணர்வது தான் ஆன்மீகம்!அந்த ஆன்மா உயிரின் மீது சார்ந்து முற்ருயிராகிய கடவுளோடு பிரார்த்தனை மூலமாக தொடர்பு கொண்டால் உடலையும் அதன் இச்சைகள் மூலமாக தன்னை ஆள முயற்சி செய்கிற அசுரர்களையும் வெல்ல முடியும் !இதுவே குருசேத்திர யுத்தம் !எல்லா மதங்களையும் தோற்றுவித்த இறைதூதர்கள் ஒரே கடவுளை தான் சொன்னார்கள் !அவர்கள் சென்று போனதும் சீடர்கள் இறைதூதர்களை கடவுளுக்கு இணை வைத்தனர் !--நீங்கள் வள்ளலாரை மட்டும் தூக்கி வைப்பதை போல !
2 )மேலே கண்டபடி வாழ்பவர்களுக்கு ஆன்மாவில் உள்ள அருள் அமுதம் சுரக்கும் .அந்த அருளை உண்பவர்களுக்கு எக்காலத்திலும் அழியாத,{ ஊன}உடம்பு ஒளி உடம்பாக மாறும்.அதற்கு ஒளி தேகம் என்று பெயராகும் .அந்த தேகம் படைத்தவர்களை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது ,நெருங்கவும் முடியாது .பார்க்கவும் முடியாது.அவர்கள் எங்கு வேண்டு மானாலும், நினைத்த மாத்திரத்தில் .செல்வார்கள் அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு உள்ள அனைத்து சத்திகளும் அவருக்கு உண்டு .இதுவே அருளின் தன்மையாகும் இதை அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான் வள்ளலார் என்பவராகும்.///////////
மனிதன் சுயமாக கடவுளின் சக்தியை அடைந்து விடலாம் என்பதும் அடிப்படையில் அசுர மாயையாகும் !நாங்களும் கடவுளாகி விட்டோம் என்பது அசுரர்களின் குரல் !தேவதூதர்கள் கடவுளின் முதல் படைப்பு !இவர்கள் ஆவி ரூபத்தினர் --ஒளியுடம்பு தேகத்தினர் !இவர்களில் யார் கடவுளின் ஏக அதிகாரத்தை ஏற்றுகொள்ளாமல் கலகம் செய்து பிரிந்தார்களோ அவர்களே அசுரர்கள் --மனிதனை விட மேலான சக்திகள் ஆனாலும் கடவுளை எதிர்ப்பவர்கள் !இவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே பூமியில் மனித படைப்பு !மனிதர்களில் தேறுபவர்கள் ஒளியுடம்பு பெற்று தேவதூதராக ஆகலாமே தவிர கடவுளை போல ஆக முடியாது !தேவதூதர்கள் எவ்வளவு சக்தி இருந்தாலும் கடவுள் சொல்லாமல் அதை பயன்படுத்த மாட்டார்கள் அழைத்தாலும் வர மாட்டார்கள் !அதனால் தான் ஒளியுடம்பு பெற்ற வள்ளலார் வருவதில்லை !!! ஆனால் அசுரர்கள் தம்மை சிலருக்கு வெளிப்படுத்தி அழைத்தவுடன் வந்து பல காரியங்களை செய்து கொடுக்கும் போது தம்மை விட மேலான சக்திகளான அசுரர்களை கடவுள் என நம்புவது மனிதர்களின் வாடிக்கை !அவைகளையும் மனிதர்கள் வணங்க தொடங்குகின்றனர்!அசுர சக்திகள் தமக்கென பூமியில் ஒரு கூட்டத்தை சேர்த்துகாட்டி கடவுளுக்கு சவால் விடுகின்றன! இவை உலக வாழ்க்கையில் பல நன்மைகளை செய்து கொடுத்தாலும் ஏக இறைவனின் ராஜ்ஜியத்தை தேடுவது பற்றி முக்கிய படுத்தாது !எல்லா இறைதூதர்களின் சீடர்களிடம் நுட்பமாக கலந்து இறைதூதர்களையும் கடவுளுக்கு இணை ஆக்கியது இவர்களே !இறைதூதர்கள் அருளிய வேதங்களில் நுட்பமாக தங்கள் வார்த்தையை கலந்து அவற்றின் அர்த்தத்தை திரித்து உபதேசம் செய்ய தொடங்கும் !ஏக இறைவனை தேடாது ! அவரது அதிகாரத்தை ஏற்று அவருக்கு கீழ்படிவதான சரணாகதி தத்துவத்தை முக்கியபடுத்தாது! மற்ற விசயங்களில் கவனத்தை திருப்பி விடும் !இப்படி தான் எல்லா மதங்களையும் அதன் ஜீவனை விட்டு திருப்பி சடங்காச்சாரங்களாக; சண்டை போடுகிரவையாக மாற்றி விட்டனர் ! இந்த மாயை வள்ளலாரின் சீடர்களையும் பற்றி விட்டது !அருட்பெரும் ஜோதி ஆகிய கடவுளை தேடுவது அவருக்கு கீழ்படிவது என்பதை கொஞ்சம் ஓரங்கட்டி ஒளியுடம்பு பெறவது --சாகாகல்வி பெறுவது என அசுர மாயை நுட்பமாக திசை திருப்பும் வேலையை செய்து கொண்டுள்ளது !கடவுள் அருளினாலொளிய ஒளியுடம்பு பெறவே முடியாது !ஒளியுடம்பு பெற்றாலும் கடவுளுக்கு இணை ஆக முடியாது!கடவுள் நினத்தால் ஒளியுடம்பு உள்ளவர்களையும் அழித்து விடமுடியும்! அவரின் சித்தம் செய்கிற தேவதூதன் என்கிற அடியவன் என்கிற நிலை மட்டுமே அடைய முடியும் !அதற்க்கு அருட்பெரும் சோதியாகிய ஏக இறைவனின் மீது வழிபாட்டை பெருக்குவதும் பக்தியோக பெரு நிலையாகிய சரணாகதியை ஊக்கிவிப்பதும் சரியானது !
ஒளியுடம்பு பெறுவது மட்டும் இலக்கு  அல்ல !ஒளியுடம்பு பெற்று எந்த கூட்டத்தில்  கலக்க போகிறோம் என்பது அதை விட முக்கியம் !!!நாம் கடவுளுக்கு அடியவரான தேவதூதராக மாறுவதா ? அல்லது கடவுளை அவமதிக்கிற அசுரர்களாக மாறுவதா ? இந்த எச்சரிக்கையுடன் கடவுளை தேடுவது நல்லது !!!

Saturday, January 7, 2012

இல்லறம் என்ற நல்லறம் !!!

               அன்பினால் குடும்பம் ஒன்றாக கட்டப்படவேண்டும் இக்கருத்தை மனித ஞானத்தில் ஈருயிரும் ஓருயிராய் என்றார்கள்!                                                                  ஆனால் தேவஞானம் வெளிப்படுத்துவது: உயிர் மீது மனிதனுக்கு ஆளுமையில்லை அது கடவுள் மனிதனுக்கு அருளுவது மீண்டும் கடவுளால் எடுத்து கொள்ளபடுவது!ஒரு மனிதன் மரித்த பிறகு இது இவரிவர் உயிர் என்று தனியாக பாதுகாக்க படுவதில்லை!ஆத்துமாவே மனிதன் அது ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை இந்த பூமிக்குரிய உடலில் இருப்பதால் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ கருதிக்கொள்ளுகிறது மறுமையில் குடும்பமோ குட்டிகளோ பந்தங்களோ இல்லை கடவுள் ஒருவரே நமக்கு உறவு எஜமான் எல்லாம்!
                இப்பூமியில் ஒரே சரீரத்திலிருந்தே --அதாவது ஆணிலிருந்தே பெண் சரீரம் கடவுள் உண்டாக்கினார்! ஒரே தன்மை இல்லாத ஒரு ஆணோ பெண்ணோ திருமண உறவுக்குள் பிணைக்கபட முடியாது! கடவுள் இணைக்காத ஒன்று ஜோடி சேரவே முடியாது!திருமண மேடையில் ஜோடிகள் மாறிபோவதை நாம் காண்பதில்லையா? கடவுளாக இணைத்து வைக்கிற ஒன்றை உள்ளது உள்ளபடியாக ஏற்றுக்கொள்ளவும் வாழ்ந்தேயாகவேண்டும் என்கிற மனநிலையில் இருவரும் அனுசரித்து போவதில் போட்டி போடுவதால் ஏற்படுகிற காதலே அறிவுப்பூர்வமானது நடைமுறை பூர்வமானதும் கூட!
இயேசு சொன்னார் இவர்கள் இருவரும் ஈருடல் அல்ல ஓர் உடல்! கடவுள் இணைத்ததை மனிதன் பிறிக்காதிருக்கட்டும்!!
                வேறொங்கோ பிறந்திருந்தாலும் நம் உடலின் தன்மை அதாவது நமது உடல் உள்ள ஒருவர்தான் நம்மோடு இணைகிறார்கள்! நுனுக்கமாக ஆணின் நிறை பெண்ணின் குறையாகவும்;குறை நிறையாகவும் மாறி இருக்கும்! இதில் சரியான புரிதல் வந்தால் எதில் யார் நிறையோ அவர்களை அந்த விசயத்தை கவணிக்கிறவராக வேலை பகிர்வு செய்து கொள்வது நல்லது இம்மாதியான புரிதல் ஆணுக்கு அதிகமாக இருந்துவிட்டால் குடும்பம் சிறப்பாக அன்பால் அமைதியால் கட்டப்பட்டதாக இருக்கும் கடவுளைத்தேடுகிற சரணடைந்த நிறைபக்தர்களே முன்னுதாரணமாய் விளங்கமுடியும்! உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசிப்பாயாக என்பதில் முதலாவது மனைவியை நேசிப்பதும் அடங்கும் கடவுள் மீது உள்ளார்ந்த அன்பும் அது போல அவராலும் நாம் நேசிக்கப்படுகிறோம் வழிநடத்தப்படுகிறோம் என்பதை அனுபவப்பட்ட ஒரு நபருக்கே இத்தகைய தெய்வீக அன்பு ஊற்றெடுத்து குடும்பத்திலும் சமுதாயத்திலும் பரவும்! கடவுளின் அடியவர்களை குறித்த நற்சான்று சுற்றிலும் இருக்கும்!!!
                    எனவே ஈருடலும் ஓருடலாய் கடவுளால் இணைக்கப்பட்ட வேறுவேறு ஆத்துமாக்களே கணவன் மனைவி என்பதை உணர்ந்தவர்களாய் பூமிக்குறிய வாழ்வில்கடமையை செய்கிறவர்களாய் இல்லறத்தில் துறவறம் பேணுகிற வாழ்வே சிறந்தது!!!ஒரு நிறைபக்தன் இரூமைகளை கடந்தவனாக இருப்பான் என்பதை கீதை,பைபிள், குரான் சுட்டியுள்ளது!இல்லறத்தில் தன்னொடு பந்தமில்லாத சுதந்திர ஆத்துமாக்கள் ; தற்காலிகமாக கணவன்,மனைவி,குழந்தைகள் என்ற பந்தத்தில் உள்ளது என்பதை உணர்ந்தவனாய் கடமைகளை செய்கிற நேரத்திலும் அவனின் மனம் தன் கடமைகள் சிறப்புற நிறைவேறவும் பந்தமுள்ள ஒன்றான கடவுள் மீதே நிலைத்திருக்கும்!பேரிண்பத்தில் மூழ்கியவனாய் அளவோடு சிற்றின்பத்திலும் கடவுளுக்கு நன்றி செலுத்தியவனாய் நுகர்வான்!!!