Total Pageviews

Monday, December 25, 2017

இயேசுவின் பிறப்பின் ரகசியங்கள்8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் .

9.அவ்வேளையில் கடவுளுடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான் , கடவுளுடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது ; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

10. தேவதூதன் அவர்களை நோக்கி : பயப்படாதிருங்கள் இதோ , எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

11. இன்று சற்குருவாகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் .

12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி , முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான் .

13. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி :

14. உன்னதத்திலிருக்கிற கடவுளுக்கு மகிமையும் , பூமியிலே சமாதானமும் , மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி கடவுளைத் துதித்தார்கள்.

இயேசு பிறந்தவுடன் சம்பவித்தவை இவை

பெத்லகேம் தற்செயலாக வந்திருந்த மரியாளும் அவரது கணவர் யோசேப்பும் சத்திரத்தில் தங்க இடம் கிடைக்காததால் முகப்பு பட்டாசாலையிலேயே தங்குகிறார்கள் . நிறைமாத கர்ப்பிணியான மரியாள் பிரசவிக்கிறாள் . அந்த குழந்தையை சத்திரத்தின் முன்னணையிலேயே துணிகளில் சுத்தி கிடத்துகிறார்கள்

இந்த சம்பவம் நடந்தபோது வயல்வெளியிலே ஆடுமாடுகளை தொழு போட்டு காவல்காத்திருக்கிரவர்களிடம் வானமண்டலத்து தேவதூதர்கள் தோன்றி நற்செய்தி அறிவிக்கிறார்கள்

கர்த்தர் என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் லார்ட் என்பதாகும் . அதாவது மாண்புமிகு மதிப்புமிகு என சற்குருவுக்கு கொடுக்கும் விழிப்பு சொல்லே ஆகும் . கீதையில் கூட கிரிஷ்னரை குறிப்பிடும் இடத்தில் பகவான் பகவான் என்றே வருகிறது . இந்த பகவானும் கடவுளை குறிக்கும் சொல் அல்ல . சற்குரு என்ற அர்த்தத்தில் கடவுளின் புறத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள் அல்லது இறைதூதர்கள் ; நபி என்பதெல்லாம் ஒரே அர்த்தம் உள்ளவை ஆகும்

இவ்வாறு பூமிக்கு கடவுளால் அனுப்பட்டவர்கள் தாங்கள் உயிரோடு பூமியில் இருந்த நாட்களில் தாங்கள் இருந்த சமுகத்திற்கு மாபெரும் நன்மைகள் ரட்சிப்புகள் செய்தார்கள் . அனேக மக்களை பக்திக்குள்ளாக்கி கடவுளோடு ஒப்புரவு ஆக்கி பலருக்கு முக்தி அளித்தார்கள்

பூமிக்கு ஒரே ஒரு ரட்சகரை மட்டும்தான் இறைவனால் அனுப்பமுடியும் என்பதுபோலும் தங்கள் நாட்டு இறை மனிதர் மட்டுமே உன்னதமானவர் என்பதுபோலும் மனிதர்கள் குழப்பிக்கொண்டு ஒருவரை ஒருவர் மதம் மாற்றுகிறார்களே அது மனிதர்கள் செய்யும் தவறு ஆகும்

இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் ராமர் என்ற ரட்சகர் தோன்றினார் . நல்ல சிவபக்தனாக இருந்தும் வரங்களை பெற்ற பிறகு தனது ஆணவ அக்கிரமங்களை மனித சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விட்ட ராவணன் என்ற பிராமண பூசாரி குலத்தை சேர்ந்த மன்னன் ஒருவனிடமிருந்து உலகை மீட்டார்

அதே போல பின்னொரு காலத்தில் கம்சன் என்ற கொடிய அசுரன் மன்னனாக இருந்த போது அவனை அழித்து உலகை ரட்சிக்கும் படியாக கிரிஷ்ணர் அவதரித்தார் .அவரும் பிரம்மாவின் ஆசி பெற்ற இந்திரனின் கொட்டத்தை அடக்கினார்

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இறைவன் புறத்திலிருந்து இறை மனிதர்கள் பூமிக்கு வந்த போதெல்லாம் அதற்கு முன்பு இறை பணியில் இருந்த மனித பூசாரிகளின் ஆணவத்தை அடக்காமல் இருந்ததில்லை . பிறப்பால் பூசை பணியில் இருக்கிறவர்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை . ஆனால் அவர்கள் தங்கள் தகுதியை மீறி கடவுளுக்குஏஜெண்டுகள் போல நடக்கத்தொடங்குவது மனித பலகீனமாகும் . அந்த தவறுகளை சரி செய்ய மனிதர்களால் முடியாமல் போகும் போது இறைவன் புறத்திலிருந்து ஒருவர் வந்தாகவேண்டும் என்கிற நிலைமை உண்டாகிவிடுகிறது . அப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே சற்குரு எனப்படும் பரமண்டலத்து நபர் ஒருவர் பூமிக்கு வருகிறார்கள்

அப்படித்தான் யூதர்கள் இருண்ட கண்டமான ஒரு சுழ்நிலையில் இருந்த போது இயேசு என்னும் ரட்சகர் சற்குரு பரமண்டலத்திலிருந்து பூமியில் வந்து அவதரித்தார்

இயேசு அகில உலகத்திற்கும் ரட்சகரா என கேட்டால் அது இல்லை என்பது சரியான பதிலாகும்

ஏனென்றால் அவதாரமே அதுவரை வராத யூத அரேபிய ஐரோப்பிய மக்களுக்குத்தான் அவர் வந்தாரே தவிர இந்தியர்களை பொறுத்து அவர் ஏற்கனவே ராமராகவும் கிரிஷ்ணராகவும் வந்து சென்ற அதே நபர் இயேசுவே ஆகும்

இம்மூவரின் பிறப்புகளின் ஒற்றுமைகளை நிதானித்தால் மூவரும் ஒருவரே என்பது விளங்கும்

1)ஆண் பெண் கலப்பால் பிறக்காதவர்கள் :

வயது முதிர்ந்து பிள்ளையே பிறக்காத தசரதன் புத்திரன் வேண்டி யாகம் செய்த போது தீயில் இருந்து வந்த அருள் பிரசாதத்தை உண்டதால் கர்ப்பமுற்று பிறந்தவர் ஸ்ரீராமர்

எட்டாவது குழந்தை தன்னை கொல்லும் என்பதை அறிந்த கம்சன் தன் தங்கை தேவகியையும் அவரது கணவர் வசுதேவரையும் தனிமை சிறையில் அடைத்திருந்தான் . அதனால் குழந்தை பிறக்கவா போகிறது என்ன என கவனக்குறைவாகவும் இருந்தான் . அவனுக்கு தேவகியிடம் ஒரு குழந்தை இருக்கிறது என்ற சேதி சொல்லப்பட்ட பிறகே நம்ப முடியாமல் ஓடி வந்தான் . ஆனால் அதற்கு முன்பே குழந்தை மாற்றப்பட்டும் இருந்தது

இயேசு பிறந்த போதும் அந்த ராஜா அப்படி ஒரு குழந்தை எங்கு பிறந்திருக்கிறது என கண்டறிய முடியாமல் அதே சமயத்தில் நாட்டில் பிறந்த அனேக குழந்தைகளை கொன்றான் . ஆனால் இறைவனால் எச்சரிக்கப்பட்டு அதற்கு முன்பே இயேசுவை எடுத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு தப்பிபோனார்கள் . கிரிஷ்ணர் எப்படி வெளிநாட்டில் வாழ்ந்து பின் திரும்ப வந்தாரோ அதைப்போலவே இயேசுவும் வெளிநாட்டில் வாழ்ந்து பின்பே இஸ்ரேல் வந்து சேர்ந்தார்

ஆணின் வித்தில் ஒருவர் வந்து ஜனித்தால் அந்த ஆணின் முன்னோர்களின் பாவபுண்ணியங்களுக்கு அந்த ஆத்மா பதில் சொல்லாமல் உலக ரட்சிப்புக்கு இறைவனால் பயன்படுத்த முடியாது . அதனாலேயே உலக ரட்சிப்புக்கு பூமிக்கு இறைவனால் அனுப்பட்ட ராமரும் கிரிஷ்ணரும் இயேசுவும் சரி ஆண் வித்தினால் பிறக்காமல் பெண்ணின் கர்ப்பபையை மட்டும் பயன்படுத்தி பூமியில் மனித சரீரத்தில் வந்தார்கள்

கன்னிமேரி மட்டுமே கடவுளின் பரிசுத்த ஆவியால் கர்ப்பமுற்றது போல கிறிஸ்தவர்கள் பெருமை பேசுவதும் அதை இந்துக்கள் உண்மை என்பதை புரியாமல் கேவலமாக பேசுவதும் இரண்டுமே தவறு . இறைவன் நாடினால் எதுவும் நடக்கும்

ராமரும் கிரிஷ்ணரும் ஆண் வித்தினால் பிறக்கவில்லை என்கிற தத்துவ தெளிவு இல்லாமலேயே எங்க ஆளும்தான் அப்படி பரிசுத்த வித்தாக பிறந்தார் என சொல்லத்தெரியாமல் இயேசுவையும் மேரியையும் கேவலமாக பேச தொடங்கி தேவ தூசனம் என்ற பாவத்துக்கு ஆளாகிறார்கள்

இறைவனது முழு அதிகாரம் உள்ளவராக பூமிக்கு யார் வருகிறாரோ அவர் ஆண் வித்தினால் பிறக்காமல் கடவுளின் பரிசுத்த ஆவியினால் பெண்ணின் கர்ப்பத்தில் உற்பவிக்கவேண்டும்

ராமர் கிரிஷ்ணர் இயேசு மூவர் மட்டுமே அப்படி முழு அதிகாரத்தோடு பூமியில் பிறந்தவர்கள்

திருப்புகழ் கூட நாதவிந்து கலாதீ நமோ நமோ என்கிறதே கலாதீ என்றால் கலக்காமல் இருப்பது ; நாதமும் விந்தும் கலக்காமல் பிரக்கிரவனே நமோ நமோ என்பதை நம்பியே ஆகவேண்டும்

2)அனேக அற்புத அடையாளங்கள் செய்திருப்பார்கள் . பல நியதிகள் இவர்களால் மாற்றப்பெறும் . முக்கியமாக ஆவி மண்டல அசுர சக்திகள் பலவும் இவர்களுக்கு முன்பு அடங்கி சாட்சி சொல்லிய நிகழ்வுகள் நடக்கும்

3)இவர்கள் மரணம் அவர்களாக ஏற்றுக்கொண்ட விதத்தில் இருக்கும்

ராமர் ஒரு தார நியதியின் நிமித்தமாக அவர்களது குடி மக்களாலேயே பலமுறை மனம் காயப்படுத்தப்பட்டார் . அதனால் அவரது சொந்த வாழ்வு அவருக்கு நிம்மதியானதாக இல்லை . முடிவில் ஜலத்திற்குள் இறங்கி தன்னை சமாதியாக்கிகொண்டார்

கிரிஷ்ணரும் காந்தாரியின் சாபத்தை ஏற்று வாலியின் சாபத்தையும் ஏற்று தன் குலம் தனக்கு முன்பே அழியவிட்டும் வாலியின் அடுத்த பிறவியாக இருந்த வேடன் ஒருவனின் தவறான அம்பை ஏற்றும் உயிர் நீத்தார்

ராமர் கிரிஷ்ணர் என்ற இரண்டு அவதாரங்களிலும் தர்ம யுத்தம் என்கிற பெயரில் அனேக மனிதர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தார்கள்

தர்ம யுத்தமே ஆனாலும் கடவுளின் சாயலில் இருக்கும் மனிதனை கொல்வதும் பிரம்மஹத்தி தோஷத்தை இருவருக்கும் கொடுத்து விட்டது என்பது உண்மை . அந்த தோஷத்தை போக்க என்னதான் வேள்விகள் தர்ப்பணங்கள் செய்தாலும் அவை முற்றுப்பெற வில்லை

அதிதேவர் நாராயனணே ஆனாலும் மனிதர்களை கொன்ற தோஷம் அதுவும் தர்ம யுத்தத்திற்காக மனிதர்களை கொன்ற பிரம்மஹத்தி தோஷத்திற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருந்தது

பிரம்மஹத்தி தோஷத்திற்கு பிரார்த்தனை தர்ப்பணங்கள் மட்டுமே சரி செய்யமுடியாது . பதிலுக்கு தானே கொல்லப்படுவதை கோர மரணத்தை பிராயச்சித்தமாக ஏற்றுக்கொள்ளவே அவர் யேசுவாகவும் வந்து சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்

இந்த மூவரும் நாராயண அவதாரங்களே என்பதற்கு இன்னொரு காரணம் வரப்போகிற சத்திய யுகத்தை ஆளப்போகிறவர் தாமே என மூவரும் சொல்லியதே

மூன்று வேறு வேறு நபர்களா வந்து சத்திய யுகத்திலும் நான்தான் ஆள்வேன் என சண்டை இடுவார்களா 

சத்திய யுகத்தை ஆள்கிறவர் மனித சரீரத்தில் பிறந்து வருகிரவறல்ல ; வானத்திலிருந்து தேவ தூதர்கள் புடை சூழ இறங்கிவரப்போகிறவர் என்று மூவரும் சொல்லியுள்ளனர்

இறைவன் புறத்திலிருந்து இறங்கி வருகிறவர் ; இறைவனின் பிரதிநிதியாக பூமியில் சத்திய யுகத்தை நடத்துபவர் நிச்சயமாக ஒருவரே என்றால் இந்த மூவரும் ஒருவரே என்பதில் சந்தேகமில்லை

அந்தந்த நாட்டினர் அந்தந்த அவதாரத்தை சற்குருவாக ஏற்றுக்கொண்டால் போதுமானது ; அவரவர்கள் அவரவர் நாட்டு சம்பிரதாயங்களை கைக்கொண்டால் போதுமானது அடுத்தவரை மதம் மாற்ற அவசியமில்லை

மதம் மாறாமலேயே மூவரும் ஒருவரே என்பதை நம்பினாலே போதும் ; மூன்று அவதாரங்களாலும் வருகிற அருள்கொடை மனிதர்களை முழுமையாக்கும்

பெண்ணாசை ; மண்ணாசை ; பொன்னாசை என்ற மாபெரும் பாவ ஆசைகளை மனிதர்கள் கடர இந்த ஒவ்வொரு அவதாரத்திலும் அந்த ஒரு நபரே பிராயச்சித்தம் செய்திருக்கிறார்

மூவரையும் விசுவாசித்தாலன்றி முழுமை அடையவே முடியாது

இந்த மனித சரீரம் என்பது சத்திரம் போல தற்காலிகமானது .

அந்த சரீரத்தின் முன்னணையாகிய நாசியிலே ஓடும் ஆவியாகிய உயிரில் ஒன்றி தியானித்தோ மென்றால் நமக்காக இறைவன் புறத்திலிருந்து பூமிக்கு வந்த நாராயணர்களை ரட்சகர்களாக நம்மால் அடையாளம் காணமுடியும்

அவர்கள் நாடு நாடுக்கு உள்ள பழம் பாராம்பரியம் என்னும் துணிகளால் சுற்றப்பட்டு மதபேதம் என்ற மாயைகளால் மறைக்கப்பட்டவர்களாக உள்ளனர்

அந்த மாயைகளை களைந்து உண்மையான ரட்சகர் சற்குருநாதர் நாராயணனே என்பதை உணரவேண்டும்

உன்னதத்திலிருக்கிற கடவுளுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாகும்

அதிதேவர்கள் நால்வர் நாமத்தால் இறைவன் தம் அருள்பேறுகளால் நம்மை நிரப்பட்டும்


Wednesday, July 12, 2017

வெளிநாட்டு வேதங்களில் பரமாத்மாஆப்ரகாமிய வேதங்களில் கடவுள் தேவுதூதர்கள் மனிதர்கள் மட்டுமே 

அறியப்படுகிறார்கள்

ஆனால் இந்திய வேதங்களில் பரமாத்மா என்ற ஒன்றைப்பற்றிய மெய்யறிவு உள்ளது

அருபமான கடவுளை அடுத்து அவரால் உண்டாக்கப்பட்ட அனைத்தையும் - பிரபஞ்சம் உயிரினங்கள் அனைத்தையும் முழுமையாக தன்னிலே அடக்கி கொண்டுள்ள அந்த ஒன்று


பரமாத்மா


அது உருவங்கள் அருப உருவங்கள் அனைத்தையும் தன்னுள்ளே
அடக்கியுள்ள அருஉஇருவம் .

பரமாத்மா கடவுளல்ல ; ஆனால் உண்டான அனைத்தும் அவர்
மூலமாகவே உண்டாக்கப்படுகிறது . அவர் மூலமாக இல்லாமல்
கடவுள் எதையும் உண்டாக்கவில்லை 


ஆகவே அந்த ஒன்று கடவுளுக்கு இணையானது . அதுவே
இயேசுவாக வந்தது . அதனால்தான் இயேசு கடவுளை பிதா என்றார்


காந்தியின் முந்தய பிறவியும் இயேசுவின் பிரியமான சீடனுமான
யோவான் மற்ற சீடர்களைக்காட்டிலும் இந்த நுட்பங்களை தெளிவாக
எழுதியுள்ளார்
யோவான் 1
1.      ஆதியிலே வார்த்தை தேவனிடத்திலிருந்தது, .
2.      அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3.       சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
              
14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
கடவுள் ஆகுக என்று பேசினார் . அந்த வார்த்தையால் சகலமும் உண்டாயிற்று . இவை தனித்தனியே ஆங்காங்கு உண்டாகவில்லை . சகல சிருஸ்டிகளையும் ஒன்றின் மூலமாக அந்த ஒன்றுக்குள்ளேயே உண்டாக்கியிருக்கிறார் . அந்த ஒன்றுதான் இந்திய வேதங்களின் படி பரமாத்மா . அந்த பரமாத்மாதான் நாராயணன் என அடையாளப்படுத்தப்பட்டு காலப்போக்கில் அவருக்கு ஒரு உருவமும் கற்பித்தார்கள் நரல் + ஆயணன் நர நர என பேசுவதால் உண்டாவது சத்தம் . சத்தமாக வெளிப்பட்டவன் என்பதே நாராயணன் என்பதின் அர்த்தம்
அந்த நாராயணனுக்கும் கடவுளுக்கு ஒப்பான மகிமை உள்ளது என்பதே அந்த 14 வசனத்தின் பொருள் (அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.) கடவுளிடமிருந்து வெளிப்படவைகள் எல்லாம் அவருக்குள்ளேயே இருப்பதால் அவரை பிதாவுக்கு ஒரே பேறானவர் என்று முக்கியப்படுத்தப்பட்டுள்ளது
குரானிலும் இயேசு கடவுளின் வார்த்தையனவர் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது .

4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (குன் ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
 
ஆனால் அதை புரிந்துகொள்ளும் பக்குவம் முகமது நபிக்கும் அருளப்படவில்லை . கடவுளுக்கு எதையும் இணை வைக்காதீர்கள் என்ற உபதேசத்தை உலகில் அழுத்தி சொல்ல அவர் பயன்படுத்தப்பட்டதால் அருவமான கடவுளின் முழு வெளிப்பாடும் அடங்கியுள்ள ஒருவரை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை . அவரும் ஒரு இறைதூதர் மட்டுமே என சாதாரண மனிதனாக கற்பிக்கிறார்கள் . அவர் இறைவனால் படைக்கப்பட்டவர் என்பதின் அர்த்தமே அவரும் தூதர்தான் என்பது . ஆனால் அவர் சாதாரண மனிதனல்ல . அல்லாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதே அடைமொழி அலை என்பது ஈசா அலை என்று கொடுக்கப்பட்டுள்ளது , ஆனால் முகமது நபிக்கு ஸல் என்ற பட்டம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது . ஆனாலும் அவர்கள் இந்த வித்தியாசத்தை புரிந்துகொள்ள பக்குவம் இல்லை 
66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இயேசு அல்லாவின் ஆத்மா . அதாவது பரமாத்மா .
மனிதர்களெல்லாம் பரமாத்மாவிலிருந்து உருவாக்கப்படும் ஜீவாத்மாக்கள் என்றால் இயேசு பரமாத்மா .
நாம் எல்லோரும் கடவுளால் படைப்பட்டது போல அவரிளிருந்தும் படைக்கப்பட்டுளோம் 
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
இயேசுவின் வார்த்தைகளை இப்போது புரிந்துகொள்ளுங்கள் :
யோவான் 10 
9. நானே வாசல்
30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்

யோவான் 14:6  நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
என்னால் மட்டுமே ஒருவன் கடவுளிடம் வரமுடியும் என்பதை இயேசுவால் மட்டுமே என அவரை மட்டுமே அறிந்த கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள் . ஆனால் அந்த இயேசு யார் என்றால் கடவுளின் வார்த்தையாகிய பரமாத்மா – நாராயணன் .
அந்த நாராயணன் முந்தய யுகங்களிலும் பூமியில் அவதரித்துள்ளார்
கீதை 4 :1 யுகபுருஷன் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !! 

கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!!

கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன்!!! ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்!!! 
கீதை 4 :4 அர்ச்சுனன் கேட்டான்: தாங்கள் பிறந்திருப்பது இப்போது! அப்படியிருக்க ஆதியிலே இந்த விஞ்ஞானத்தை எப்படி மனுவிற்கு உபதேசித்தீர்கள்?

கீதை 4 :5 கிரிஷ்ணர் கூறினார்: நீயும் நானும் பலபிறவிகள் இப்பூமியில் வந்துள்ளோம்!! ஆனால் அவை பற்றிய உணர்வு உனக்கு அருளபடவில்லை!! எனக்கு மறைக்க படவில்லை!!!

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆன்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்!!

கீதை 4:9 யார் பூமியில் வெளிப்படும் எனது சரீரத்தின் தோற்றத்தையும்; நித்தியஜீவனுள்ள எனது ஆத்துமாவையும் உணர்ந்து அதன் செயல்பாடுகளில் தன்னை இனைத்துக்கொண்டு ஒத்திசைவாய் வாழ்கிறானோ அவன் இந்த லவ்கீகவாழ்வில் மீண்டும்மீண்டும் அல்லலுறுவதில்லை;மாறாக எனது நித்தியத்தின் மனநிலையை எய்துவான்!! நித்திய ஜீவனை அடைந்து என்னோடுகூட வாசம் செய்வான்!!
இயேசுவும் நான் என்று பல இடங்களில் பேசியுள்ளார் . இந்த நானை பரமாத்மா என்று புரிந்துகொள்ளவேண்டும்
எந்த வேதங்களிலும் காலப்போக்கில் மனிதர்கள் தங்கள் வார்த்தைகளை கலக்கின்றனர் .
பகவத்கீதை என்பது பல ஆண்டுகள் பேச்சாக ; கிராமிய நாடகமாக இருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டது . அதனால் அதில் மனிதர்கள் தங்களுக்கிருந்த குறைந்த அறிவோடு சில வார்த்தைகளை அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் . அதனால்தான் அதை நாராயணன் கடவுளைக்குறித்து உபதேசித்ததாக சீர்படுத்தி அடியேன் மூலமாக தமிழ்பெயர்ப்பு செய்யப்பட்டுவருகிறது  
கீதை 9:25 யார் ஞானிகளையும் மஹான்களையும் வழிபடுகிறார்களோ அவர்கள் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் முன்னோர்களை வழிபடுகிறார்களோ அவர்களும் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் அசுரர்களை வழிபடுகிறார்களோ அவர்களும் அவர்களின் ஆதிக்கம் உள்ளோரிடத்தில் பிறப்பர் ! ஆனால் யார் என் மூலமாக கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் எனது நித்திய இடத்தை அடைந்து மரணமில்லா பெரு வாழ்வு  பெறுவர் !!

Sunday, June 4, 2017

வள்ளலாரின் ஞானம்
1)சிவமே பொருள்

பிரபஞ்சத்தில் ஜடப்பொருள்கள் பல உள்ளன

இந்த ஜடப்பொருளின் மொத்த வடிவம் மனித சரீரம்

பஞ்ச பூதங்களும் மனித சரீரத்தில் உள்ளன

பஞ்சேந்திரியங்களாக விரிந்துள்ளன

அவைகளின் இயல்பூக்கத்தால் பஞ்ச அறிவுகளும் அவை அனைத்தினதும் இணைப்பால் உண்டான ஆறாவது அறிவாகிய சிந்திக்கும் ஆற்றலும் மனமும் ஞானமும் மனித சரீரத்திற்குள் மட்டுமே உள்ளது

மனித பிறப்பு எடுக்காமல் ஞானம் விளையாது ஞானம் முழுமையடையும் வரை திரும்ப திரும்ப பிறவி எடுத்தே ஆகவேண்டும்

ஆக ஜடப்பொருள் எதுவோ அதுவும் சிவம்தான் அவைகள் அனைத்தினதும் முதிர்ச்சியால் விளைந்த மனித சரீரமும் சிவமே

ஆதி மனிதனாக வெளிப்பட்டவர் சிவனே

சரீரத்தின் அதிபதி சிவன்

ஸ்தூல சரீரமாக முதலில் வந்தவர் எப்படி சிவனோ அதுபோல முதல்முதலாக ஒளி சரீரம் உண்டாக்கி வைரவனாக மாறி பரலோகத்தில் நுழைந்தவரும் சிவனே

2) வித்தாக இருப்பது பரமாத்மா நாராயணன்

பிரபஞ்சத்தின் பொருள்கள் எல்லாம் ஏதாவது ஒன்றை வைத்துதானே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்

அந்த வித்து ஆத்மா

கண்ணால் காணவியலா சூக்கும சரீரம் அதுவே ஆத்மா

சகல ஆத்மாக்களையும் தன்னுள் அடக்கிய பேராத்மா ; அதுவே பரமாத்மா

இந்த பரமாத்மாவே நாராயணன்

இந்த நாராயணன் அருவ உருபி

சிவன் உருவி என்றால் நாராயணன் அருவ உருவி

இந்த வித்தாகிய நாராயணனை உணர்ந்தால் மட்டுமே சித்தெல்லாம் சித்திக்கப்பெரும்

அதாவது சிற்றம்பலமாகிய உன் சரீரத்தில் ஜீவாத்மாவாகிய உன் ஆத்மாவில் நிலைத்து நீ பரமாத்மாவின் அங்கம் என்பதை உணரவேண்டும்

அப்போதே பரந்த மனமும் உன் சரீரமும் சகல சரீரங்களும் சிவனே என பொதுஞானம் சமாச சத்தியம் உன்னுள் விளையும்

3)ஆறு முகமும் ஒரு முகமாகும்

இதுவரை வெளிப்பட்ட அனைத்து சமயங்களையும் வழிபாட்டு நெறிகளையும் ஆறு மார்க்கங்களுக்குள் அடக்கி விடலாம்

சொல்வந்த அந்தங்கள் ஆறும் அந்தங்கள் என்றால் முடிவானவைகள்

ஆறு அந்தங்களும் தனித்தனியே ஆறு மார்க்கங்களை வேறு வேறு வாக மாச்சரியத்துடன் காட்டி நிற்கின்றன

அவைகளை தன்னகத்தே உள்வாங்கி அடக்கி ஆளும் சமரச சன்மார்க்க சத்தியம் ஒரே ஒரு சொல்லின் சரியான அர்த்தத்தை புரிந்துகொள்வதால் உண்டாகும்

அந்த சொல் ஆம் என்ற ஓம் என்கிறார் வள்ளலார்

ஓம் என்ற சொல்லின் அத்தத்தை சிவன் மறந்து விட்டார் அதாவது மனிதர்கள் அனைவரும் மறந்து விட்டனர்

அதை சற்குருநாதன் முருகனால் மட்டுமே விளக்கி காட்டமுடியும்

அதுவும் தகுதி உள்ளோருக்கு மட்டுமே ரகசியமாக கூறினார்

ஓம் ஓர் இறைவனையே நமஸ்கரிக்கிறோம்

சகலத்தையும் படைத்தவன் ஓர் இறைவனே

அவனே பாமாத்வாகிய நாராயணனை படைத்து அதில் முழுமையாக தனது சாயலில் சிவனையும் படைத்தார்

தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர்

எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர்

எங்கள் மூலவர் மட்டுமே கடவுள் என ஒவ்வொரு சமயங்களும் சொல்கின்றன அது மாச்சரியத்தால் உண்டானது

கலியுகம் மாச்சரியம் இருந்தால் மட்டுமே நடக்கும்

கலியுக மாந்தர்கள் மாச்சரியத்திற்கு அடங்கியவர்கள்

ஆனால் கலியை கடந்தவர்களுக்கோ சமரச சன்மார்க்கம் விளங்கும்

அது மற்ற எல்லாமே தப்பு நாங்க சொல்வதுமட்டும்தான் சரி என சொல்வதல்ல நாமொரு புது மார்க்கத்தை உண்டாக்கி பத்தோடு பதினொன்றாக சண்டை போடுவதல்ல

சகல நெறிகளையும் உள்வாங்கி ஏற்றுக்கொள்ளும் சன்மார்க்கம்

எல்லா சமயங்களும் உண்மையே அவைகளை ஏக இறைவனில் கொண்டு வந்து இணைத்துக்காட்டும் சமரச சத்தியமே சன்மார்க்கம்

ஆறு மார்க்கத்தையும் இணைத்துக்காட்டுவதே சன்மார்க்கம்

சைவ முதலாக நாட்டும் - பல
சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
தெய்வம் இதுவந்து பாரீர்

வருவித்த வண்ணமும் நானே - இந்த
மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
தெரிவித் தருளிற்றுப் பாரீர்

ஆம் குருதேவா

வள்ளல்பிரானே சமரச சத்தியத்தை சன்மார்க்கமாக தெரிவிக்கவே பூமிக்கு அனுப்பபட்டீர்

அதற்கு ஒரு கருவியாக மட்டுமே ஜீவகாருண்யத்தை காட்டினீர்

அந்தோ உமது சீடர்கள் புளுகிராஸ் இயக்கமாக மாறிப்போனார்கள்

ஏற்கனவே சண்டை போட்டுக்கொண்டிருக்கும் பத்து மார்க்கங்களுடன் பதினொன்றாவது மார்க்கம் போல வள்ளலாரியத்தை விளக்கம் கொடுத்து மற்ற மார்க்கங்களெல்லாம் தப்பு என சண்டை போடுகிறவர்களாக மாறிப்போனார்கள்

சைவ இசுலாமியர்களாக வள்ளலாரியம் மாற்றம் அடைந்துவருகிறதுMonday, March 20, 2017

திருப்புகழ் 1328                                                       OR

https://ia601502.us.archive.org/22/items/Thiruppugazh1328/EruMayilEri.oggஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே


மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.


மயில் வானத்தில் மேகம் வருவதைக்கண்டு மகிழ்ந்து ஆடுமாம் . மேகத்தின் வழியாக இறங்கி வரப்போகிற கல்கியை எதிர்பார்க்கிற ஞான உணர்வாளர்கள் சத்திய யுகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்

அத்தகைய ஞான உணர்வாளர்களான பக்தர்கள் இறைவனை அடையும் தாகத்தில் நாளுக்கு நாள் தங்களை உள்ளுணர்ந்து பாவ சாபங்களிலிருந்து பரிசுத்தமாகி பரத்தை நோக்கி வளரும் இயல்புள்ளவர்கள்

ஆகவேதான் அருணையார் ஏறுமயில் என்கிறார்

எந்த ஆன்மீக இயக்கமோ அல்லது மதமோ மார்க்கமோ ஆறு மார்க்கங்கள் என்ற பிரிவுக்குள் அடங்கி விடும்

உடனே கிறிஸ்தவம் இசுலாமும் கூடவா என கேட்டீர்களானால் அவைகளெல்லாம் அருவ வழிபாடுகள் என்றளவில் சாக்கியம் என்ற மார்க்கமாக இந்தியாவில் உள்ள சமணம் பெளத்தம் வகையை சேர்ந்தவையே

இவ்வாறு சண்மார்க்கங்கள் என்ற வகைகளில் எந்த மார்க்கத்திலும் உள்ள ஆத்மாக்களில் யார் ஆன்மீக வாழ்வில் வளர்வார்கள் என்றால் யாரெல்லாம் ஆவிமண்டலத்தில் ஞானசற்குருவாம் முருகனால் ஆட்கொள்ளப்படுகிரவர்கள் மட்டுமே

நாளும் இறைவனுக்குள்ளும் பரிசுத்தத்திற்குள்ளும் யார் வளர்கிறார்களோ அந்த ஏறுமயில்களின் மீது ஏறி விளையாடுகிறவர் முருகனே ஆவார்


பிரணவ மந்திரத்தின் உட்பொருளை ஈசன் சிவன் மறந்து விட்டார் . அவருக்கு ஞானம் வழங்கியவர் முருகனே ஆவார் . அது சிவனுக்கு மட்டுமே என பலர் நினைத்துக்கொள்கிறார்கள்

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ஒருவர் எந்த மார்க்கத்தில் இருந்தாலும் அந்த மார்க்கத்தில் அவருக்கு தெளிவை உணர்வை இறை நெருக்கத்தை உண்டாக்குகிறவர் ஆவிமனடல குருநாதரனா முருகனே ஆவார்

ஆகவே மனு ஈசர்களான அனைவருக்கும் ஞானம் அருளுகிறவர் முருகனே ஆவார்

ஞானம் பயில்வோர் வாழ்வில் அவ்வப்போது மாயைகள் முன்வினைகள் தொடர்பாக வந்து தாக்கி குழப்பத்தை உண்டாக்கி முன்னேற விடாமல் வளைத்து பிடித்துக்கொள்ளும்

ஐயோ சாமி என்ன பாவம் செய்தோனோ இக்குழப்பத்தில் இருந்து கரையேற்றி விடுங்கள் என ஒரு பக்தன் பிரார்த்தித்தால் அவர்களின் முன்னை வினையின் முடிச்சை சரியாக அறிவுறித்தி அவிழ்க்க ஞானம் அளிப்பவர் முருகனே ஆவார்

நன்கு கவணிக்க வேண்டும் சடங்கு சம்பிரதாயம் என குபிட்டுக்கொண்டு மட்டும் இருந்தால் போதாது சகல பூஜை புனஸ்காரங்களை மட்டும் செய்துகொண்டிருந்தால் போதுமா வினைகளில் இருந்து தப்பிக்க முடியுமா என்றால் பதில் இல்லை

என்னை கைதுக்கி விடுங்கள் ; நான் தப்பிக்க உதவுங்கள் என கேட்பவர்களுக்கு மட்டுமே வினைகள் அவிழ்க்கப்படும்

கேளு கிடைக்கும் தட்டு திறக்கும்

இது சர்வதேச மொழி என்னமோ கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே ஸ்பெசாலிட்டி இருப்பதாக அவர்களே பீற்றிக்கொள்கிறார்கள்


நோய் நாடி நோய் முதல் நாடி என்பார்கள்

இன்று நம் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு காரணம் முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் என்ன என்பதை சரியாக கண்டறிந்து அதில் மனம் திரும்புதல் செய்வோமானால் விடுதலை நிச்சயம்

கசாப்பு கடைக்காரனைப்போல பதிலுக்கு பதில் வெட்டாமல் விடமாட்டேன் என கத்தியை தீட்டிக்கொண்டு இறைவன் இருப்பதாக நாம் கற்பனை செய்துகொள்கிறோம்

இறைவன் நம்மை சொட்டுவது நாம் திருந்தவேண்டும் என்பதற்காக மட்டுமே அழிப்பதற்காக அல்ல பதிலுக்கு பதில் வாங்குவதற்கு அல்ல

மனம் திரும்பினால் நாம் மன்னிக்கப்படுவது நிச்சயம்


இன்றைக்கு நிறைய கிறிஸ்தவர்கள் ஜெபக்கூட்டங்களுக்கு விடுதலை கேட்டு அலைகிறார்கள் இடுப்புவலி சுளுக்கு போச்சு அல்லேலுயா என வல்லமைக்காரர்களும் கத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்

பின்னும் ஏன் இடுப்புவலி சுளுக்கு நிரந்தரமாக தீருவதில்லை

இக்கரபலா சொக்கரபலா என் பாவங்களை இயேசு மன்னித்துவிட்டார் விசுவாசித்துவிட்டேன் என்று திரும்ப திரும்ப கத்துவதால் மட்டும் நிரந்தர விடுதலை உண்டாவதில்லை

எந்த பாவத்தை நீ உணர்ந்தாய் எதை மன்னிக்கும்படியாக கேட்கிறாய் என்ற உணர்தல் மனம்திரும்புதல் இல்லாமல் இக்கரபலா சொக்கரபலா பாடுவதால் பெரிய அளவில் முன்னேற்றம் வருவதில்லை

இந்திய தத்துவஞானம் தெளிவாக பதில் சொல்கிறது

தன்னை உணரும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்

பின்னை வினையை பிடித்து பிசைவர்

உன்னை உணர்வது என்பது உன் எந்தப்பாவம் உன்னை பிடித்து ஆட்டிக்கொண்டுள்ளது என்பதை கண்டுணர்வதே


ஆனால் துரதிஸ்ட்டவசமாக நம்மை எது அமிழ்த்துக்கொண்டுள்ளதோ அதை கண்டுணரமுடியாதபடி மாயை மறைக்கும் என்பதாகும்

அசுரர்கள் என்ன செய்கிறார்களாம் ; அவர்கள் எங்கே இருந்து தாக்குகிறார்கள் என்பதை மனிதர்கள் கண்டுபிடிக்க கூடாதபடி மாய மலைகளை உருவாக்கிகொள்கிரார்களாம்

சூரபத்மன் கிரேவுஞ்ச மாயமலைகளை உருவாக்கி ஒழிந்துகொண்டு அதிலிருந்து உலகை தாக்கிகொண்டிருந்தானாம் அப்போது அந்த பொக்கு பாறைகளை ஊடுருவும் படியாக வேலை செழுத்தி மாயமலையை உடைத்தாராம் முருகன்

ஒழிப்பிடம் தகர்க்கப்பட்ட பிறகே உலகிற்கும் மனிதர்களுக்கும் மாறு செய்கிற அசுரர்களை ஒழிக்கமுடியும்

அதுவும் ஒழிக்க ஒழிக்க புதிய ரூபம் எடுத்து வந்து தன் வல்லமை எல்லாம் ஒழிந்த பிறகே சூரன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தான்

அவ்வாறு சரணடைந்த அசுரனே உலகை விழிப்படைய செய்யும் சேவலாக மாறுகிறான்

நம் உள்ளத்திற்குள்ளிருந்து பலவகையான சாக்கு போக்குகளை சொல்லிக்கொண்டு திரும்ப திரும்ப பாவ வாழ்விலேயே நம்மை இருத்தும் நம் சொந்த மாயைகளே சூரர்கள்

மாய மயக்கங்களை உணராமல் அதை விடவேண்டுமே என போராடாமல் எனக்காக மரித்தார் அல்லேலுயா என்பதால் மட்டும் பாவமன்னிப்பு இல்லை விடுதலையும் இல்லை

உணர்ந்து விசுவாசித்தால் மன்னிக்கப்படுவாய் என்றுதான் நாராயண அவதாரமான இயேசு உபதேசித்தார்

இயேசுவை உணர்வதல்ல உன்னை உணர்வது

உன்னை உணர்ந்து சற்குரு மூலமாக கடவுளிடம் மன்னிப்பு வேண்டினால் விடுதலை நிச்சயம்

இயேசு இவ்வசனங்களை பேசும்போது தன்னை குரு என்கிற அளவிலேயே பேசியுள்ளார்


இன்றைய நாளில் யார் உங்களுக்கும் கடவுளுக்கும் இணைப்பு பாலமாக இருக்கிறாரோ அவரே குரு

உங்களை உணர்ந்து குருவின் மூலமாக கடவுளிடம் வேண்டினால் வெற்றி நிச்சயம்

யார் தன்னை உணர்கிறார்களோ அவர்களே சற்குருவாம் முருகனுக்கு வள்ளிக்குரத்திகள்

அவள் குற்றம் குறை உடையவளே குரத்திதான் ஆனால் தன்னை உணர்கிற இயல்பும் கடவுளுக்கான ஆன்ம தேடுதல் உள்ள எவரும் முருகனால் நேசிக்கப்படுவார்கள் அவரே நம்மை தேடி வந்து நம் மனதில் புகுந்து தெளிவுகள் உண்டாக்கி நம்மை உய்வடையச்செய்வார்

இவ்வளவும் ஆறு மார்க்கங்களுக்கு அடையாளமானவை

சண்முகனான முருகன் ஆறு செயல்பாடுகளையும் பக்தர்களில் செய்துகொண்டுதான் உள்ளார்

இவ்வளவு சொன்ன அருணையார் ஒரு முக்கியமான விசயத்தை அழுத்துகிறார்

மேற்கண்ட ஒவ்வொரு செயல்பாட்டிலும் முருகா நீ ஒரு முகத்தோடு தானே இருக்கிறாய்

பின்னை எதற்காக ஆறுமுகன் என்று உன்னை அழைக்கிறார்கள் ?

ஒரு மனிதனுக்கு உள்முக வளர்ச்சியில் ஆறு கூறுகள் எப்படி உள்ளதோ அப்படியே வெளிமுகமாக ஆறு மார்க்கங்கள் அந்தந்த நாட்டிற்கு இனத்திற்கென்று வேதமாக அருளப்பட்டுள்ளன

ஆறுமார்க்கங்களும் நாட்டிற்கு நாடு வேறுபாடுகள் உள்ளன

ஆனாலும் அவைகள் அனைத்தும் வரப்போகிற சமரச வேதத்தில் ஒரே மையத்தில் இணைக்கப்படும்

முருகனுக்கு ஆறு முகங்கள் உள்ளது என்றால் அதுவும் உண்மை ஒரே முகம் உள்ளது என்றால் அதுவும் உண்மை அதனால் அவனை தேசிகன் என்றார்கள்


இந்தியா ஒரு தேசம் ஆனால் அதற்குள் வேறுபாடான பல மொழி பேசும் மக்கள் மாநிலம் மாநிலமாக அரசுகளும் உண்டு

அதுபோல முருகனும் ஆறுமுகமான ஒரு முகன் தேசிகன்

வரப்போகிற சமரச வேதம் சகல வேறுபாடுகளிலும் ஒற்றுமையை உண்டாக்கும்


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Sunday, March 12, 2017

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 6

அல்லது இந்த லிங்கிலும் பாடல் கேட்கலாம்

https://ia800406.us.archive.org/10/items/KandakottamDeivaManiMaalaiVI/Kandakottam_Deiva_mani_maalai_VI.ogg
உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம் ஒத்தபல பொருள்ஈட்டிவீண் உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை ஒதிபோல் வளர்த்துநாளும் விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ் வெய்யஉடல் பொய்என்கிலேன் வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது விதிமயக் கோஅறிகிலேன் கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின் கருணையை விழைந்துகொண்டெம் களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு கண்ணேஎ னப்புகழ்கிலேன் தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.

வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர் வாழ்க்கைஅபி மானம்எங்கே மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ மன்னன்அர சாட்சிஎங்கே ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த நான்முகன் செய்கைஎங்கே நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை நவின்றிடும் ஒழுக்கம்எங்கே ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர இலக்கம்உறு சிங்கமுகனை எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை ஈந்துபணி கொண்டிலைஎனில் தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.சுழன்றும் எர்ப்பின்னது உலகம் என்றது வான்மறை

உலகம் தன்னைத்தானே நிலைநிறுத்திக்கொள்ள சூரியனை  சுற்றி ஓடியே ஆகவேண்டும் இல்லாவிட்டால் சூரியனுக்குள் போய் விழுந்து அழிந்துபோய்விடும்

அதுமட்டுமல்ல உலகிலுள்ளோர் சுழன்று சுழன்று பல வகையான தொழில்கள் வினைகளை செய்துகொண்டே இருக்கிறார்கள்

என்ன செய்தாலும் அவை அனைத்தும் எதை சார்ந்து உள்ளன என்றால் உணவளிக்கும் உழவுத்தொழிலை நம்பி .இந்த உணர்வை கொட்டி 9 வயது சிறுவன் வள்ளலார் சொல்கிறார் :

உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றி மாந்தர்கள் என்ன செய்கிரார்களாம் பல பொருள் ஈட்டுகிரார்களாம் ஆனால் அவை அனைத்தும் மலம் ஒத்த உலகப்பொருட்களே
பொருளீட்ட பாடுபடுகிறார்கள் பிறகோ வயிறுக்கு பாடு

உடலை இன்று நடத்த எவ்வளவு சக்தி செலவாகுமோ  அவ்வளவு சக்தியை உள்ளெடுக்க உண்டால் போதும்

அளவுக்கதிகமாக நாம் உண்ணும் உணவே சர்க்கரையாக இரத்தத்தில்  அதிகரித்து சர்வ ரோகங்களின் நண்பனான சர்க்கரை வியாதியாக மாறிவிடுகிறது

தேவையின் அளவு மனிதனுக்கு  தெரியாத அளவு அவனின் வயிறு இருக்கிறதே அது தகித்துக்கொண்டே இருக்கும் போடு போடு உள்ளே போடு என பசித்தீ எரிந்துகொண்டே இருக்கும்

வயிறு என்ற உலைக்களம் அடக்கத்தேராமல் ஆன்ம வாழ்வு இல்லை

போதிசத்வன் ஆலமரத்தடியில் வயிறை அடக்கி எலும்பும் தோலுமாக ஆன பிறகே ஞானம் கிடைத்தது

வயிறுக்கும் நாவுக்கும் மனிதன் அடிமையாகக்கூடாது நமக்கு அது அடிமையாக இருக்கவேண்டும் யோகியின் முதல் அடையாளம் வயிறும் நாவும் அவனுக்கு அடங்கியுள்ளதா என்பதே ஆகும்

கிடைத்தால் உண்பார்கள் உண்ணாமலும் இருப்பார்கள்

வயிறு எரியாமல் இருந்தால் மட்டும் போதாது ; நாவு சுவையை நாடலாகாது

வீண்

உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
ஒதிபோல் வளர்த்துநாளும்
விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
வெய்யஉடல் பொய்என்கிலேன்

வள்ளலார் நமக்காக புலம்பல் பாடுகிறார் ; அப்படியாவது கேட்கும் நமக்கு நான் உடலல்ல ; உடலல்ல ஆத்மபோதம் வராதா ?

வெளியுலகத்தின் மயக்கமா ;  விதவிதமாக வரும் மாயைகளின் விசமா ; முற்பிறவிகளின் தோஷத்தால் உண்டாகும் விதியின் விளைவா அறிகிலேன்

உழல் உற்ற உழவு உலகத்திற்கு அடிப்படை போல ஆன்ம வாழ்வின் மேன்மைக்கு அடிப்படை கழல் உற்ற கால் மலர்பாதம்

யாருடைய பாதம் என்றால் சற்குருக்களாகிய அதிதேவர்களின் பாதம்

அந்தப்பாதத்தில் என்ன இருக்கிறது கழல் சிலம்பு

சிலம்பில் வெளியே வளையம் மட்டுமே உலகிற்கு தெரியும் ஆனால் உள்ளே பரல் அதனை அணிந்துள்ளவருக்கு மகிமையை தருவது தாயத்து போல பேட்டரி போல அருள் நிலையின் அளவை உள்வாங்கி  ஆற்றல்களமாக மாறி அணிந்துள்ள மனிதனுக்கு மகிமை தருவது அது

உலகத்தில் வாழ தொழில் அவசியம் என்பதைபயன்படுத்தி உலகம் மனிநிதர்களை அடிமையாக்குவதுபோல கழல் உற்ற அதிதேவரின் பாதம் மனிதனை அருள்வெளிக்குள் ஆட்படுத்துகிறது

ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர இலக்கம்உறு சிங்கமுகனை எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை ஈந்துபணி கொண்டிலைஎனில்

மனித வாழ்வில் நாம் எவ்வளவுதான் கேடு செய்தாலும் அதிதேவர்களின் பாதம் என்றாவது ஒருநாள் கருணை புரிந்து அவனின் தவறுகளை மன்னித்து கருணை புரிவது நம்மைப்படைத்த இறைவனின் திட்டமாக உள்ளது . கடவுள் கிருபை செய்யவில்ல்லையானால் ஒருவரும் தேற முடியாது

மனமான ஒருசிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடிச்சீர் மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம மடுவினிடை வீழ்ந்துசுழல்வான் சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம் சிறுகுகையி னூடுபுகுவான் செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும் செய்குன்றில் ஏறிவிழுவான் இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும்அந்தோ என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற் கேழையேன் என்செய்குவேன் தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. 

ஆத்மா பல பிறவிகளாக நமது அனுபவங்களை பதிந்து வைத்துள்ள ஹார்ட் டிஸ்க் என்றால் இப்போது உலகில் காணும் பொருட்களுக்கேற்ப எண்ணமாக சிந்தனையாக வெளியே வருவது மனம் - ராம்

கம்ப்யூட்டர் போன் வாங்கும் போது ராம் எவ்வளவு என கேட்கிறோமல்லவா ராம் அதிகமாக இருந்தால் தடுமாறாமல் வேகமாக இயங்கும் இல்லாவிட்டால் குண்ணி குண்ணி இயங்கும் ஹெங் ஆகுது என்போம்

இந்த ராம் போன்றதுவே மனம் . நம் ஐந்து புலன்கள் உலகத்தில் உரசும்போது கவனிக்கும் எதைப்பற்றியும் நமக்கு முன்னே என்ன தெரியுமோ அதை வைத்துக்கொண்டு எண்ணமாக வெளியே வரும்

மனம் நம்மை கேட்கமலேயே கருத்து கந்தசாமி கருத்து கண்ணம்மாவாக வேலைசெய்துகொண்டிருக்கும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கும்

இந்த மனம் அலைந்துகொண்டே இருக்கிறதே இதற்குத்தான் நம் உடலின் நிறைய சக்தி செலவாகிக்கொண்டே இருக்கிறது

இந்த மனதை அலையவிடாமல் அடக்க கற்றுக்கொண்ட ஞானிகள் இளமை குன்றாமல் சாப்பிடாமல் இருக்கும் ரகசியம் அவர்களுக்கு சக்தி செலவாவதில்லை

மனம் அடங்கினால் தேஜஸ் மின்னும்

உலகத்தில் பல விசயங்கள் நம் முன் வந்துகொண்டேதான் இருக்கும் . அதைப்பற்றியெல்லாம் ஓயாமல் கடல் அலை போல எண்ணங்களை வெளிப்படுத்துவதே மனம்

அந்த எண்ணங்களால் நமக்கு என்ன லாபம்

ஒன்றுமே தெரியாத இருட்டறைக்குள் இருந்தாலும் அது அமைதியாக இருக்குமா எதையாவது சொல்லி குழப்பிக்கொண்டுதான் இருக்கும்

தியானம் என்ற பதம் மனம் அலைவுறா நிலையை அடைவதற்கான பயிற்சியேயாகும்

மனம் அலைவுறா நிலை சமாதி

ஒரு மணி நேர முயற்சியில் ஒரு வினாடி சமாதி சித்திக்காதா என்பதற்காகவே சித்தர்களும் ஞானிகளும் சாதகர்களும் தியானிக்கிறார்கள் ஏங்குகிறார்கள்

அந்த சமாதியை அணுபவித்தோர் ஒரே ஒரு வினாடியில் பல மணி நேரம் உறங்கியதற்குரிய புத்துணர்ச்சியை பலத்தை உணர்வார்கள்

மனம் தெளிந்து குழப்பங்கள் அடங்கி அறிவு விளித்துக்கொள்வதால் ஞானம் ஆளுமைக்கு வருகிறது

சமாதியின் நேரத்தை அதிகரிக்க முடிந்தவர்களே உலகில் பெரிய ஞானிகளாக அறியப்பட்டார்கள் பலருக்கு முன்னோடிகளாகவும் ஆனார்கள் உலகை புரட்டியும் போட்டார்கள்

மாகா குரு வள்ளல் பிரானும் அந்த மனம் என்னும் சிறுவனைப்பற்றி நொந்துகொள்கிறார்சிறிதும் அந்தோ 
என்சொல் கேளான் எனது கைப்படான் மற்றிதற்
கேழையேன் என்செய்குவேன்

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம்

மனம் ஏன் செம்மைப்பட மறுக்கிறது

அது அமைதியாக இல்லாமல் கண்டதையும் அலட்டிக்கொண்டே இருப்பதால்

வெற்றி பெற்றவர் சாதனையாளர் யோகத்தின் உச்சமாக ஒளி சரீரம் அடைந்தவர் 15௦ ஆண்டுகளுக்கும் அதிகமாக ஒருவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்னும் அணையாமல் அன்னதானம் நடந்துவருகிறதே அந்த உக்கம் யாரிடமிருந்து வந்ததோ அந்த வள்ளலார் சொல்கிறார் எனக்கு அடங்காத என் மனதிற்கு எதிராக ஏழை என்னால் என்ன செய்யமுடியும் ?

அந்த அடங்காப்பிடாரி மனம் என்னென்ன செய்கிறது என்பதே இப்பாடலின் பட்டியல்

பிறகு என்னதான் வழி ?

வள்ளலார் சொல்லிய ரகசியம் 
முழுசரணாகதி பக்தி மட்டுமே

பக்தி பக்தி அறியப்பட்ட சிவனையும் விட பெரியவரான அருவ இறைவனை சரணடைதல்

மனதை அடக்கு வாசியோகப்பயிற்சி செய் குண்டலினியை ஏற்று கண்ணைத்திற அது இது என்றெல்லாம் வள்ளலார் சொல்லவில்லை

நான் ஏழை இயலாதவன்

சர்வ வல்லவரான இறைவனை சரணடைவதால் மட்டுமே மனமது செம்மையாகும் பாவம் கழியும் ஆத்ம தூய்மை சித்திக்கும்

அரபு மொழியில் அல் என்றாலும் யூதமொழியில் எல் என்றாலும் அது நம் தமிழில்
நாம் பொதுப்படையாக குறிக்கும் இறைவன் என்ற பதத்தை குறிக்கிறது
இறைவன் என்று சொல்லும்போது மக்கள் அதை சிவன் என்றோ நாராயணன் என்றோ சொல்வதில்லை

இந்த உண்மையை புரிந்துகொண்ட வள்ளலார் அருட்பெருஞ்சோதி என அவரது இயல்பை வைத்து ஒரு பெயரை வைத்தார்

 
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என இறைவனை வழிபட வள்ளலார் வழிகாட்டினாரே அதுவும் முகமது நபியால் வழிகாட்டப்பட்ட கலிமாவும் ஒரே அர்த்தம் உள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை
 
அவன் அளவற்ற அருளாளன் என்பதே அருட்பெருஞ்சோதி
நிகரற்ற அன்புடையோன் என்பதே தனிப்பெருங்கருணை
அவன் அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்

வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை வாய்ந்துழலும் எனதுமனது 
பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு 
பித்துண்ட வன்குரங்கோ 
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ 
பேதைவிளை யாடுபந்தோ 
காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங் 
காற்றினாற் சுழல்கறங்கோ 
காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது 
கர்மவடி வோஅறிகிலேன் 
தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே 
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
சண்முகத் தெய்வமணியே.

ஞானிகள் தங்கள் ஆன்ம வாழ்வில் போராடி வளர்ந்த விதம் தனக்குத்தானே விசாரத்தால் வருந்திய விதம் இரத்தக்காயங்களும் சிராய்ப்புகளும் நிரந்தவையாகும் . அதை அவர்கள் ஏன் பதிவு செய்கிறார்கள் என்றால் தன்னை அடி ஒற்றி பின்பற்றும் ஒரு ஆத்மாவிற்கு அவ்வார்த்தைகள் தைரியமும் தெம்பும் உத்வேகமும் அறிவும் ஞானமும் உணர்த்தும் என்ற நப்பாசையே

ஆனால் குருவின் பெருமையை பேசிவிட்டாலே போதும் குருவைப்போல ஆகிவிடுவோம் என்ற அளவிலேயே சீடர்கள் இருக்கிறார்கள்

ஒருவேளை உள்ளார்ந்து போராடி ஆத்ம ஞானம் தேடுவோர் வாழ்வில் அடைகின்ற தடைகள் நோவுகள் போராட்டங்கள் தான் என்ன என்ன

அந்த நோவு அல்லது சாதனை விழைய காத்திருக்கும் நோவு ஒன்று இருக்கிறது

இருத்தல் துயரம் இருத்தல் துயரம் என்ற ஒரு வார்த்தையை வாலிப வயது காலம் முதல் நான் அடிக்கடி உச்சரித்திருக்கிறேன்

சீதை அசோகவனத்தில் காவல் அரக்கியர் மத்தியில் மரத்தடியில் இருந்த ஓவியம் எனக்கு பிம்பமாக தோன்றும்

வரும் ஆனா வராது என்பதுபோல காற்றில் வரும் கானத்தையே நம்பிக்கொண்டிருப்பது

இறைவன் நம்மை கண்பார்த்தருள்வார் என்பதில் அடி ஆழத்தில் உள்ள நம்பிக்கை அவரை கிட்டிச்சேர கிணறு வெட்ட கிணறு வெட்ட பூதமாக எனக்குள்ளிருந்தே கிளம்பும் மாயைகள் பிரமைகள் குழப்பங்கள் கடமைகள் உறவினர்கள் நண்பர்கள் அன்றாட வாழ்வின் ஊடாக மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன் என்ற அனுபவம் ஞானம் என்பதோடு இருக்கிற இருத்தல்துயரமும் இருக்கிறது . இன்றைக்கே உச்சத்தை அடைந்துவிட வேண்டும் என்ற துடிப்பு இளம்பிள்ளை கோளாறு நம் எல்லோரையும் ஆட்சி செய்துகொண்டிருப்பது ஒரு பெரும் தடை

ஒரு உண்மையை சொல்வேன் . ராமன் வந்து மீட்ட பிறகு அக்கினிப்பிரவேசம் பின்பு வனவாசம் என்றெல்லாம் அவஸ்தை பட்டதை விட ராமன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையோடு அசோகவனத்து சிறையிருப்பு இருத்தல் துயரம் ஒரு இன்ப மயமானது . உபத்திரவ காலத்தில் உபத்திரவப்படும் நபர்கள் மத்தியில் ஒரு நெருக்கம் அன்பு இழையோடுவதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்

துன்பத்திற்குள் உள்ளார்ந்த சுகம்

இனபத்தால் வரும் சுகம் அல்ல

துன்பத்தால் வரும் சுகம் அது நம் மனதின் ஒரு முளையை இறைவன் மீது நங்கூரமடித்து அவனின் இரட்சிப்புக்காக காத்திருப்பது


ஏசாயா 32:2 அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார். 
ஏசாயா 40:4. பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் 
29. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுவார். 30. இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.
31. கடவுளுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். 

இறைமனிதர்கள் அந்தகாரத்திலும் நம்பிக்கையோடுதானே காத்திருந்தார்கள் , நம்பிக்கை வீண் போனதில்லை
அந்த காத்திருப்பே பெரும் பலம் ,
இருந்தல்துயரமே சுகம்
வள்ளலாரும் துயருருகிறார் :

வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்

சேவடி மீது நம்பிக்கை வைக்காது உழலும் என் மனதைப்பற்றி என் சொல்வேன் என் சொல்வேன்

காட்டுக்கு வேட்டைக்கு செல்வோர் ஒரு குரங்கு சண்டை கூத்தை உருவாக்கி ரசிப்பார்களாம் . கேள்விப்பட்டிருக்கிறேன்

சாராயம் ஒரு சட்டி நிறைய வைத்துவிட்டு காரமான உணவையும் வைத்துவிட்டு நாலைந்து கம்புகளை அங்கு போட்டுவிட்டு போய் ஒழிந்து உட்கார்ந்துகொள்வார்கலாம்

பேதைக்குரங்குகள் கள்ளும் காரமும் உண்டுவிட்டு அங்கு கிடக்கும் கம்புகளை எடுத்து ஒன்றை ஒன்றை பலமாக தாக்கிக்கொண்டு சண்டையிடுமாம் ரத்தம் ஒழுக ஒழுக சண்டையை நிறுத்தவே நிறுத்தாதாம்

இகுதொப்ப நிலையே மனிதனின் மன நிலை

மிகவும் மோசமான ஒரு பிரகிருதி நமது மனமே

எந்த ஞானிகளும் சித்தர்களும் முத்தர்களும் இறைவனை கண்டு ஐக்கியமானவர்களும் மந்திரம் செய் தந்திரம் செய் என்று கூறவே இல்லை மதம் வளர்ப்போம் போராளிகளே என அறைகூவவில்லை

மனதை வெல்லுங்கள் மனதை வெல்லுங்கள் என்றுதான் சொன்னார்கள்

வள்ளலாரும் தன் மனதைப்பற்றியே இப்பாடல் முழுதும் புலம்புகிறார் 

காற்றினாற் சுழல்கறங்கோ 

காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது 
கர்மவடி வோஅறிகிலேன்

10. இதோ, கல்கியாகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

11. மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

வரப்போகிற சத்திய யுகமே நமக்கு நல் வாழ்வு அளிக்க வல்லது
  


அவரது வருகைக்கு பாதையை செப்பனிடுவோம்