Total Pageviews

Sunday, March 29, 2020

லலித சகஸ்ரநாமம் பாடல் 112 -Lalita Sahasranamam (Verse 112)





VimarshaRupini : விமர்ச ரூபிணி - விமர்சிக்கப்படும் ரூபம் உள்ளவள் – ஈர்ப்பதால் கணக்கிடப்பட்டுக்கொண்டே இருக்கப்படுபவளாம்

அன்னையின் அம்சமான பெண்கள் அனைவருமே ; அவர்கள் உலாவும் போது காண்போர் அனைவராலும் ஏதாவது கணக்கீடு செய்யப்பட்டுக்கொண்டுதானே உள்ளார்கள்
சாதாரண பெண்களுக்கே அப்படி என்றால் சர்வ அழகுள்ள அன்னை ஆராதிக்கப்படாமல் இருப்பாளா ?

Vidya : வித்யா – வித்தைகளின் உறைவிடமானவள் – அறிவின் ஞானத்தின் பிறப்பிடமானவள்

நாம் பார்க்கிற ஒன்றை கணக்கீடு செய்யாமல் – விபரங்களை சேகரிக்காமல் அதைப்பற்றிய அறிதல் – அறிவு வராது

ஒன்றை பற்றிய பல பல விபரங்களே அறிவு ; அதைப்பற்றிய ஆழமான அனுபவமே ஞானம்

அன்னையின் அழகு ஈர்ப்பு மட்டுமல்ல ; அவளைப்பற்றிய பல பல பரிமாணங்களை அவள் உணர்த்திக்கொண்டே இருப்பதால் பக்தனுக்கு ஞானம் பயிற்சியாகிறது

அறிவின் பாதையில் ஞானத்தின் பாதையில் அவள் நம்மை பயிற்சி கொடுக்கிறாள்

ஆகவே அவளே வித்யை

VIydAdi JagatprasUh : வியாதி ஜகத் பிரசூஹ் – உலக வாழ்வின் மீதும் அதன் ஆடம்பரங்கள் மீதும் மோகத்தை கொடுக்கிறவளும் ; அதனால் பாவங்களை செய்ய வைத்து துன்பத்தை ; நோயை வரவழைத்துக்கொள்ள வைக்கிறவளூம் அவளே

Sarva vyAdhi prashamani : சர்வ வியாதி பிராசாமணி – அப்படி நோவுகளில் உலழும் போது அதில் படிப்பினையை கொடுத்து ஞானத்தை கற்றுக்கொடுக்கிறவளூம் இவளே

அந்தந்த நோவுகளுக்கு ஏற்ற படிப்பினை என சர்வ நோவுகளுக்கும் சர்வ படிப்பினையை நமக்கு கற்பிக்கிறவள்
Sarvamrutyu nivArini : சர்வ மிருத்யோ நிவாரணி _ சர்வ நோவுகளாலும் நாம் அழிந்து விடாதபடி நம்மை தற்காத்து விடுவிக்கிறவளூம் இவளே ; தற்காத்து ஞானத்தை நல்கி பாவங்களிலிருந்து ஒவ்வொன்றாக நம்மை விடுவித்து விடுவாள்

பாவத்திலே நம்மை மூழ்க வைக்கும் போது அவள் காளி

சிவனையும் அவரால் உண்டான மனுக்குலத்தையும் மிதித்து இச்சைகளுக்கு ஆட்படுத்துகிறவளாக நாக்கை தொங்கிட்டவளாக சித்தரிக்கப்படுபவள்

அவளே பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கும் போது பவதாரிணி

அவளின் ஒரு கரம் சிவலிங்கத்தை ஆராதிக்கிறவளாக சித்தரிக்கப்படுபவள்






திருவெம்பாவை பாடல் எண் : 3




முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்


முத்தை போல புன்னைகையை சிந்தி கலகலப்பாக பேசுகிறவளே !

நல்லடியார்களை கண்டால் சிவன் மீது பற்று கொண்டவள் போல என் அத்தன் ; ஆனந்தம் நல்குகிறவன் ; அமுதம் போன்றவன் என்றெல்லாம் சிலாகித்து தித்திக்க தித்திக்க நீ பேசுவதெல்லாம் பசப்பு தானோ ?

இன்னும் நீ வாசல் திறக்கவில்லையே ?

பந்த பாசம் என உலக பற்றும் ; இறைவன் மீது பழசாகிப்போன பற்றும் என ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக அல்லாடுகிற இயல்புடையவளே

நம் மீதும் குடும்பத்தின் மீதும் புற்று போல வளர்க்கிற புன்மை கர்மங்களை தீர்த்து ஆட்கொள்ள வல்லவர் நாம் சிவனல்லவோ ?

பழவினைகள் எத்தனை பொல்லாப்பு செய்துவிடும் ; எல்லாம் நாம் அறிவோமோ

அறிவுள்ளவர்கள் கர்மங்களை களைய சிவ சற்குருநாதன் மீது பக்தி கொண்டு புகழ்கிறார்களே ; இறைவனை தேடுகிறார்களே ?

அவனை நாடினால் உலக வாழ்விற்கும் அத்தனையும் அருள்வான் என்று அறியீரோ

வெளிநாட்டு மக்களை நல்வழிப்படித்த இயேசுவாக அவதரித்து வந்த ஸ்ரீகிறிஷ்ணர் உலக வாழ்விற்கும் ஆன்ம வாழ்விற்கும் இடையில் அல்லாடீதீர்கள் என கூறியுள்ள அறிவுரையை கேளுங்கள் :

24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் முடியாது.

25. ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

28. உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;

29. என்றாலும் சாலொமோன் ராஜா முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

30. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் இறைவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?

31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

33. முதலாவது இறைவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

34. ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத்தேயு : 6)






Saturday, March 28, 2020

ராமன் என்றால் குமாரன்





ராமா ராமா

ராமன் என்றால் குமாரன்

பிரதிநிதி


பரத்திலுள்ள இறைவனுக்கு பூமியில் வந்துள்ள பிரதிநிதி ராமன்

குரானின் வாசகப்படி இறைதூதன்

பூமியில் இதுவரை 33000 இறைதூதர்களை இறைவன் அனுப்பியிருப்பதாக குரானில் உள்ளது . அவர்களில் சில பத்து நபர்களைத்தவிர மற்றவர்கள் அரபியர்களுக்கு - இசுலாமியர்களுக்கு தெரியாதவர்கள் என்றுமுள்ளது

அசுரர்களை அடக்க நர நாராயணர்களாக முதல் இறைதூத ஜோடி வந்த்து

அதே ஜோடியே ராமனாகவும் லஷ்மணனாகவும் வந்த்து

கிரிஸ்ணராகவும் அர்ச்சுணராகவும் வந்த்து

வெளிநாட்டில் இயேசுவாகவும் முகமதுநபியாகவும் வந்த்து


எப்படியாகிலும் ராமநாமம் என்பது பூமிக்கு வந்த - வரப்போகிற இறைதூதர்களின் நாமங்களே

விஷ்னு சகஸ்ரநாமத்தில் சிவன் உரைத்ததாவது

சகஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே


ராம நாமத்தால் அதாவது இறைதூதன் என்ற அந்தஸ்தோடு பூமிக்கு வந்தவர்களின் - வருகிறவர்களின் பெயரே சகஸ்ரநாமம் என்பதாகும்

ராமா ராமா என உருகி முக்தியடைந்த தியாகராஜரின் கீர்த்தனையை @Dr. Shobana Vignesh மூழ்கி திளைத்தே பாடுகிறார்






Sunday, March 8, 2020

திருஞானசம்மந்தர் தேவாரம் - தருமபுரம்



பெண்கள் தின வாழ்த்தாகவே திருஞானசம்மந்தர் தருமபுரம் தேவாரம் இருக்கிறது

தருமபுரம் வருகிறார் திருஞான சம்மந்தர்

அங்கு சிவனை தரிசிக்கிறார் ; அவர் உணர்ந்தது எதுவோ அதனை பதிகமாக பாடுகிறார்

இந்த பாடலில் நான்கு கருத்துக்கள் உள்ளன .

அந்த நான்குமே அன்னையைப்பற்றியதாகவே இருக்கிறது என்பதாலேயே பெண்கள் தின வாழ்த்தாகவே இப்பாடலை பதிகிறேன்

பெண்கள் இயல்பாகவே தன் கணவனுக்கு அடிமையாகவே பற்று உறுதியாக இருப்பார்கள்

அன்னம் போன்ற அழகுடையவளே ஆனாலும் மட அன்னமாம்
பெண்களுக்கே உரிய கணவனுக்குரிய அடிமைத்தனம் ; பற்றுதி உள்ளவளாம்


ஆதியாகமம் 3 ;16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
அப்படிபட்ட மலைமகளின் நடை அழகையும் உடை அழகையுமே துணை ; மனதுக்கு ரசனை என மகிழ்ந்து இருப்பவராம் சிவன்

பூத கணங்கள் இசை பாடி மகிழ்விக்கும் போது சிவனார் ஆடுவாராம் ; அப்போது கூட அவரோடு இசைந்தாடும் அவரின் படர்ந்த சடையாக இருப்பவளும் கங்கா அன்னைதானே

இசைக்கப்படும் ஏழிசையிலும் வேதங்கள் கலந்து வருகின்றனவாம் ; அது எது போல என்றால் பூமியை விம்மி விம்மி தழுவி பூமிக்கு சத்தளிக்கும் கடலைப்போன்ற அன்னையானவள் சிவனை தழுவி தழுவி அவருக்கு தெம்பும் பலமும் தருகிறாளாம் அன்னை

ஆழ்கடல் அசைவற்று இருக்கும் . தேங்கிய நீர் சாக்கடை ஆகி உயிரற்று கெட்டுப்போய் விடும் . ஓடும் நீரே பிராணவாயுவுடன் கலந்து உயிர்ப்புள்ளது

ஆழ்கடலில் கடலின் மேற்பரப்பில் காற்றால் அலையோடும் ; அதில் வெண்திரை உருவாகும் . இந்த வெண் திரையே திடமாகி கடலுக்கடியில் கடல் பாசி என்ற செடி கொடிகளாக மாறுகின்றனவாம் . அதில் மீன்கள் உருவாகி அதனை உண்டு வளர்க்கின்றனவாம் ; இரை - உணவும் சத்துமாகும்

கடல்கரையில் நுரையாக அந்த வெண் திரையே பொங்கி நின்று விம்மி விம்மி கரையை பொருது பலமளிக்கிறதாம் ; அப்படி சிவநாரை விம்மி விம்மி பொருதிக்கொண்டே இருக்கிற தனங்களை உடையவள் அன்னை

புன்னை மரம் கொடுமையான வெயிலில் குளிர்ச்சியான நிழலை கொடுத்து சத்தான எண்ணையும் கொடுப்பது போல அன்னை தாதுக்களை சேகரித்துள்ள வயிற்றை உடையவளாம்

வண்டுகள் மயங்கிக்கிடக்கிற மலர்களைப்போல எழிலும் பொழிலும் குயில் போன்ற குரலையும் உடைய அன்னை நடைபயில்கிற தருமபுரத்தின் பதி - அரசனாக சிவன் இருக்கிறாராம்

இந்தப்பதிகம் முழுவதும் அன்னையைப்பற்றிய புகழ் வருகிறதே தவிர சிவனைப்பற்றி புகழ் இல்லை






Tuesday, March 3, 2020

திருவெம்பாவை 2




பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

நான் இறைவன் மீது பாசம் ; அன்பு ; பக்தி வைத்துள்ளேன் என பரபரப்பாக அடுத்தவர் முன்பு பகட்டு காட்டி விட்டு உலகப்பொருட்களின் மீதும் ; சுக போகங்களின் மீதும் பித்து வைக்கிறவர்களே

சீ சீ ; விளையாட்டு போக்காகும் வாழ்வு இதுவோ ?

15. கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.

16. இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப்பார்த்து:

17. உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.

உலக வாழ்க்கை விளையாட்டும் வீணும் வியத்தமுமானது என்ற உள்ளுணர்வோடு கடமைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு உள்ளார்ந்து இறைவனை நாடுகிற இதயம் ; காலகட்டம் ஒவ்வொரு நபரின் வாழ்விலும் ஒரு பிறவியில் உண்டாகும்

அதுவரை அருவமான இறைவனை வாயிலே சொல்லவும் காதிலே கேள்விப்படவும் மட்டுமே முடியும்

உள்ளார்ந்த உறவோ ; அன்போ உண்டாகாது

ஆனாலும் இறைவனின் அம்ஸத்தோடு ரூபத்தில் வெளிப்பட்ட அதிதேவர்கள் ; நமக்கும் இறைவனுக்கும் இணைப்பு பாலம் போன்றவர்கள்

யோவான் 6:46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.

நமது குற்றம் குறைகளினால் நாம் இறைவனின் பரிசுத்தத்திற்கு ஒப்புரவு ஆகாதவர்களாக இருந்தாலும் ; தங்களது சற்குரு ஸ்தானத்தால் நம் கோரிக்கைகளுக்கு இறைவன் செவி சாய்க்க செய்கிறவர்கள்

யோவான் 16:26 அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.

சிவனார் வைரவனாகி பூமியை விட்டு பரமேறிய பின்பு ; ராவணாதி அரக்கர்களின் ஆட்டம் பூமியில் அதிகரித்தது

அப்போது பூமிக்கு வந்த முதல் தேவ தூதரான ஸ்ரீராமர் ; ராம நாமத்தால் வழிபடுங்கள் என்ற செயல்முறையை முதல் முதலில் அறிவித்தார்

ராமர் பெரியவரா ? ராம நாமம் பெரியதா ? என அந்தக்காலத்தில் கோவில் கோவிலாக உபன்யாசம் நடக்கும்

அதன் தாத்பர்யம் என்ன என தெரியாத மானிடர்கள் ; ஆளாளுக்கு ராமரும் அவர்தான் ராம நாமமும் அவர்தான் ; ஆனால் ராமா என்று சொல்லாமல் ராம நாமம் என சொல்லவேண்டும் என அறிவை காட்டிக்கொண்டிருப்பார்கள்

ராமரும் ராம நாமமும் ஒன்று என்றால் எதற்காக ராம நாமம் என்று சொல்ல வேண்டும்

விளக்கம் எதுவென்றால் அதை அதே ராமர் ; இயேசுவாக பூமிக்கு வந்த போது விளக்கமாக சொன்னார்

ராமர் என்றால் அர்த்தம் குமாரன்

இந்த குமாரன் என்பது அரூபமான இறைவன் ரூபமுள்ள அதிதேவர்கள் நால்வரை வெளிப்படுத்தி ; அவர்களுக்கு கீழே 33 கோடி தேவர்களை வைத்து இந்த முழு பிரபஞ்ச இயக்கத்தையும் நிர்வகித்து வருகிறார்களால்லவா ?

இந்த நால்வரே குமாரர்கள்

இந்த நால்வர்கள் யாரென்றால் நாராயணன் ; சிவன் ; ஆதிசேஷன் & ஆதிசக்தி என்பவர்களாம்

யோவான் 3:35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

யோவான் 5:20 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.


உலகில் ஆங்காங்கு அந்தந்த பகுதி மக்களுக்காக வெளிப்பட்ட வேதங்களை வரட்டுத்தனமான சடங்குகளாக மதங்களாக மாற்றம் செய்துகொண்டு மததுவேசங்களை அசுரர்கள் பரப்பிவிட்ட்னர்

ஒருவரை ஒருவர் மதமாற்றம் செய்யாமல் ஒரு வேத வசனங்களை கொண்டு மற்றொரு வேதத்தை செழுமைப்படுத்திக்கொண்டால் மட்டுமே முழுமையான இறை நிலையை உணரமுடியும்

பரத்திலே குமாரன் எனப்படும் நாராயணன் ; சிவன் ; ஆதிசேஷன் & ஆதிசக்தி என்பவர்களை ஆப்ரகாமிய வேதங்களில் ஆர்க் ஏஞ்சல் காப்ரியேல் ; மிகாயேல் ; உரியேல் ; ராபேல் என்கிறார்கள்

இந்த நால்வரும் அல்லாஹ்வுக்கு அடுத்தவர்கள் ; அல்லாஹ்வின் ரூப வெளிப்பாடுகள் ; அல்லாஹ்வுக்கு இணையானவர்களும் கூட

யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்

யோவான் 5:23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.

யோவான் 5:26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.


யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

இந்த குமாரன் என்ற ஏற்பாடு ; திரேதா யுகத்தில் ராமர்  லக்ஷ்மணன் ; துவாபர யுகத்தில் கிறிஷ்ணன் அர்ச்சுணர் கலியுகத்தில் இயேசு முகமதுநபி என்ற நர நாராயண ஜோடிகளின் செயல்பாடாகும்

இது கலியுகம் என்பதால் வெவ்வேறு பகுதி மக்களுக்காக பூமிக்கு அவதார தூதர்களாக அனுப்பபட்ட் அதாவது குரானின் படி மலக்கு தூதர்களை அதாவது குமாரர்களை ஒரே ஜோடி என புரிந்துகொள்ள முடியாமல் மதவாதிகளும் ; மததுவேசிகளும் ஒருவரை ஒருவர் காரி துப்பிக்கொண்டு மதம் மாற்றிக்கொண்டு மண்டைகளை உடைத்துக்கொள்ளும் வழிகேட்டில் இறைவன் விட்டுவிட்டார்

ஆனால் வரப்போகிற அல்மஹ்தி என்ற சமரச வேதாந்தி இவைகளை இறைவனின் வல்லமையோடு அத்தாட்சியோடும் நிலைநாட்டுவார்


குரான் 2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதங்களின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல் ஆகும்

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

ஜிப்ரீலுக்கும் (நாராயணனுக்கும்), மீக்காயிலுக்கும் (சிவனுக்கும்) பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
இந்த உண்மை புரியாமலேயே மதவாதிகள் ஒருவர் மண்டைகளை ஒருவர் உடைத்து வருகிறார்கள்

அதிதேவர்கள் அல்லாஹ்வின் ரூபமும் வெளிப்பாடும் ஆனதால் குமார்கள் என்ற அந்தஸ்து உள்ளவர்கள்

இவர்களை பார்த்து வானவர்களும் பயப்படுவார்கள் என்கிறார் மாணிக்கவாசகர்

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

பரலோகம் ஐந்து அடுக்குகளால் ஆனது என்பார்கள்

அதில் உன்னதமான பரத்திற்கு முன்பு சிவலோகம் உள்ளது . சிவனின் குருகுலத்தில் வளர்க்கிறவர்களை வளர்த்து ஆளாக்கி சித்தி தருகிறவர் சிவன்

அதுபோல அந்தந்த லோகத்தில் அவரவர் குரு வழி நாம் சென்று அங்கிருந்து தான் உண்மையான இறைவனை தரிசித்து நாம் சித்தி அடையமுடியும்

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

பரலோகத்தில் அந்தந்த குநாதர்களுக்குரிய லோகத்தை அந்தந்த குவழியில் வந்தவர்கள் அடைவார்கள்

கீதை 12 : 1 அர்ச்சுணன் கேட்டான் : புலன்களுக்கு அப்பாற்பட்ட கண்ணால்
காண இயலாத கடவுளை வழிபடுபவர்கள் ; இதோடு கூட உம்மை சற்குருவாக பின்பற்றி முறையாக கடவுளை வழிபடுபவர்கள் இவர்களில் யார் விரைவில் பக்குவமடைவார்கள் ?

கீதை 12 : 2 அவதூதர் கிரிஸ்ணர் கூறினார் : என் மீது பற்று கொண்டு மனதை எப்போதும் என்னிடம் ஈடுபடுத்தி என் மூலமாக கடவுளை நம்பிக்கையுடன் யார் வழிபடுகிறார்களோ ; அவர்களுக்கு பரலோக வாழ்வுக்கான திவ்யமான விஷயங்கள் என்னால் அளிக்கப்பட்டு பக்குவமடைகிறார்கள்

கீதை 12 : 3 & 4 : ஆனால் தோற்றமில்லாததும் , புலன்களுக்கு அப்பாற்பட்டதும் எங்கும் விரவி நிற்பதும் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டதும் மேலும் மாற்றமில்லாததும் அசைவுகள் அற்றதும் பூரணமானதும் ஆன கடவுளின் அருவத்தன்மையில் புலன்களை கட்டுப்படுத்தி நிலைப்படுத்துகிற யோகிகள் மன சமநிலை அடைய தனக்குள் போராடி எங்கும் எதிலும் சமநோக்கு உண்டாகவும் சகல உயிர்களுக்கும் நன்மை பயக்கும் கர்மங்களை செய்யவும் பெரும் பிரயத்தனம் செய்தும் இயலாமல் பலகீனத்தை உணர்ந்து தாழ்மையடைந்து இறுதியில் என் குருத்துவத்தை சரணடைவார்கள் !

கீதை 12 : 5 ஏனெனில் உடலை அடக்கும் அப்பியாசத்தால் கடவுளின் அரூபத்தில் மனதை நிலைபடுத்துவது , பக்குவம் எய்துவது – முன்னேற்றம் காண்பது மிகமிக கடினம் ! உடலை உடையோருக்கு அவ்வழி சிரமம் !

கீதை 12 : 6 & 7 ஆனால் எவர் என்னை ஏற்றுக்கொண்டு ( குருபக்தி ) எல்லா செயல்களையும் கடவுளுக்காக அர்ப்பணித்து எனது குருத்துவத்தில் பிறழாது பக்தி தொண்டாற்றுகிறார்களோ ; என்னை பின்பற்றுகிறார்களோ அவர்களை பிறப்பு இறப்பு என்னும் சாகரத்திலும் ஜடஉலகின் பந்தத்தால் நீளும் பிறவிகளிலும் உழலாமல் விரைவில் விடுவிகிறவன் ஆகிறேன் !!

கீதை 12 : 8 என் மீது மனதை பற்றவைத்து என் உபதேசங்களுக்கு உன் புத்தியை கீழ்ப்படுத்துவாயானால் என்னில் நிச்சயமாக நீ வாழ்வாய் என்பதில் சந்தேகமில்லை !!

கீதை 12 : 9 செல்வத்தை சம்பாதிக்கும் ஆற்றலுள்ளோனே ! உன் மனதை என்னிலே சமப்படுத்து ! முடியாவிட்டாலும் பக்தி யோகத்தின் நெறிகளை விடாது பின்பற்றுவாயாக ! அது என்னிலே நீ நிலைபெறுவதற்கான பயிற்சியை உண்டாக்கி என்னைப்போலாகும் ஆசையை பூர்த்தி செய்யும் !!

கீதை 12 : 10 பக்தி யோகத்தின் நெறிகளை பயிற்சி செய்ய இயலாவிடின் எனது குருத்துவத்தின் ஏவுதல்களை செயலாக்க முயல்வாயாக ! அவ்வாறு உனது கர்மங்கள் கடவுளுக்கு அர்ப்பணமாக நீ செய்வதால் விரைவில் பக்குவ நிலையை வந்தடைவாய் !

கீதை 12 : 11 இருப்பினும் இதைக்கூட செய்ய உன்னால் முடியாவிட்டாலும் ; குருவாகிய என்னிடம் அடைக்கலம் பூண்டு பக்தித்தொண்டாக எல்லா செயல்களின் பலன்களையும் தியாகம் செய்து விடுவாயாக ! இருக்கிறோம் என்ற இருப்பைத்தவிர உனது எல்லா செயல்களின் விளைவுகளையும்
கடவுளுக்கே அர்ப்பணித்து விடுவதால் ஆத்மாவிலே நிலை பெற முடியும் !

கீதை 12 : 12 நிச்சயமாக ஞானமே சிறந்தது ! ஞானத்துடன் தியானத்தையும் அப்பியாசிப்பாயாக ! முக்கியமாக உனது கர்மங்களின் விளைவுகளை கடவுளுக்கே அர்ப்பணித்து விடுவாயாக ! அர்ப்பணிப்பே மன சாந்தியை அருளும் !

கீதை 12 : 13 எல்லா உயிர்களிடத்தும் அன்புடனும் ; போட்டி பொறாமையற்ற நட்புடனும் ; நான் என்ற அலட்டல் அற்றும் ; முதிர்ந்த மனதால் சகலரின் தீயகுணங்களையும் சகித்தும் ; இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவித்தும் :

கீதை 12 : 14 எப்போதும் திருப்தியுடன் தன்னில் தானே லயித்திருப்பவனே ஆத்மா ஞானியாவான் ! மனதாலும் புத்தியாலும் குருவாகிய என்னையே பற்றியவனாய் கடவுளுக்கு பக்தி தொண்டில் யாரொருவன் உறுதியாய் நிலைத்துள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 15 உலக மக்கள் யாருக்கும் நெருக்கடி உண்டாக்காமலும் ; உலக மக்கள் யாராலும் யாரிடமிருந்தும் சஞ்சலம் அடையாமலும் ; இன்பம் துன்பம் பயம் மற்றும் ஏக்கம் கடந்தும் சம நிலையோடு யாரொருவன் உள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 16 எல்லா செயல்பாடுகளிலும் கவலையிலிருந்து விடுபட்டும் ; துன்பங்கள் அனைத்தையும் உதாசீனப்படுத்தியும் ; உளத்துய்மையோடும் ; முரண்பாடுகள் அனைத்திலும் நடுநிலைமை – சமரசத்தில் நிபுணத்துவமும் உள்ளவன் எவனோ அத்தகு பக்தனே எனக்கு மிகவும் பிரியமானவன் !!

கீதை 12 : 17 அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பதில்லை ; துக்கத்தில் ஆழ்ந்து முடங்கிப்போவதில்லை ! கடந்ததை நினைத்து புலம்புவதுமில்லை ;
வரவேண்டியதை எதிர்பார்த்து தவிப்பதுமில்லை ! மங்களம் அமங்களம் இரண்டையும் கடந்தவன் எவனோ அத்தகு பக்தனே எனக்கு மிகவும் பிரியமானவன் !!

கீதை 12 : 18 & 19 நண்பர்களையும் எதிரிகளையும் சமமாக பாவிப்பவனும் ; புகழ்ச்சி இகழ்ச்சி ; மான அவமானம் ; இன்பம் துன்பம் ; தீ மற்றும் பணி ஆகிய இருமைகளை கடந்து சமமாக பாவிப்பவனும் ; களங்கங்களை கொண்டுவரும் சகல அசுரமாயைகளிளிருந்தும் விடுபடத்தெரிந்தும் ; இருப்பதில் திருப்தியுற்றும் ; இருப்பிடத்திற்கும் கூட கவலையற்றும் ; மெய்ஞானத்தில் நிலைத்து பக்தி தொண்டில் யாரொருவன் உறுதியாய் நிலைத்துள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 20 பக்தி யோகம் என்ற இந்த அமிர்தத்தை நம்பிக்கையோடு ஏற்று உபதேசிக்கப்பட்டபடி பரமாத்மாவான என்னை சற்குருவாக ஏற்று முழுமையாக பின்பற்றுபவர்கள் எவர்களோ அவர்களே எனக்கு மிக மிக பிரியமானவர்கள் !!

ஏல் ஓர் என்பாயாக

இறைவன் ஒருவனே என்பாயாக