Total Pageviews

Sunday, August 21, 2011

மனிதர்கள் தெய்வமாக முடியுமா ?

by Kirubanandan Palaniveluchamy on Sunday, August 21, 2011 at 12:42am

மனிதர்கள் தெய்வமாகவே முடியாது கடவுளுக்கு அடியவர்களாக இருக்க கற்றுக்கொண்டால் வாக்களிக்கப்பட்ட பரலோகத்திற்குள் நித்தியஜுவனுடன் பிரவேசிக்க முடியும் மனிதனும் தெய்வமாகலாம் என வாக்களித்து கடவுளுக்கு இனையானவர்களாக தன்முனைப்பை மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்து கடவுளுக்கு அந்நியமாகும்படி அசுரர்கள் மாயம் செய்கிறார்கள் மணிதர்களுக்கு இச்சைகளை அழகாக்கி காட்டி ஒருவர்க்கு ஒருவர் தீமைகள் செய்து பாவம் சம்பாதிக்கவும் கடவுளிடமிருந்து அன்னியமாகவும் அசுரர்களே பின்னணியிலிருந்து செயல்படுகிறார்கள் தீமை செய்கிறவர்களுக்கு பக்க பலமாக உள்ள அதே அசுரர்கள்  நற்குனம் உள்ள அநேகரை நீங்களும் தெய்வமாகலாம் என்கிற மாய வலைக்குள் தள்ளி நரகததீர்ப்பிற்கு தகுதியுள்ளவர்களாக்குகிறார்கள் .தேவ தூதர்களில் யார் கடவுளை மட்டும் பிரதானபடுத்தாமல் நாங்களும் கடவுளுக்கு இனை ஆகிவிட்டோம் நாங்களும் தனித்து செயல்படுவோம் என ஆணவம் கொண்டார்களோ அவர்களே தள்ளப்பட்டு அசுரர்களாய் ஆனவர்கள் இறுதி தீர்ப்பு நாளில் தாங்கள் நரகத்தில் தள்ள பட்டு அழிவுக்கு உட்படுவோம் என்பது அசுரர்களுக்கு நன்கு தெரியும் அந்நாளில் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களில் அநேகர் தேவ தூதர்களாக  தகுதி அற்றவர்கள் தங்களோடு அழிவதற்கு தான் தகுதி உள்ளவர்கள் என கடவுளை நிர்பந்தபடுத்துவதும் மனிதர்களை அழிவுக்கு உள்ளாக்குவதும் அசுரர்களின் லட்சியமாகும் தகுதியுள்ள மனிதர்கள் தேறினால் இறுதிதீர்ப்பு நாள் வந்துவிடும் என்பதால் தீயவர்களுக்கு தீய வழியிலும் நல்லவர்களுக்கு நயவஞ்சகமாகவும் உபதேசம் செய்து கொண்டே உள்ளனர் இறை அச்சமற்றவர்களுக்கு அக்கிரமத்தையும் இறை அச்சமுள்ளவர்களுக்கு நாங்களும் தெய்வமாகிவிட்டோம் நீங்களும் தெய்வமாகலாம் என வஞ்ச புகழையும் வழங்குகின்றனர் இறந்து போன புகழ்பெற்ற நபர்கலெல்லாம் தெய்வமாகி விட்டதாக ஜாலம்செய்கிறார்கள் எளிதில் மனிதர்களை மயக்கும்வழி இது .கடவுள் தான் பெரியவர் என்கிற பக்தியின் உச்சத்தை அடைந்து விட்டால் இந்த மாயதிலிருந்து தப்பலாம் கடவுளே கதி என இருக்கிற மனதாழ்ச்சி மிக உன்னத குணமாகும்

Monday, August 15, 2011

துன்பத்தின் மூலம் கடவுள் இடை படுகிறார் கற்றுக்கொண்டால் மேன்மை அடையலாம்

துன்பம் வரும்பொழுது தான் இறைவனை தேடும் நிலை இயல்பாகவே மனிதனுக்கு வருகிறது.அப்போது ஏதோ ஒரு வகையில் கடவுளோடு இடை பட தொடங்குகிறான் .தேவை கருதிய பக்தி சிறுக சிறுக இறை அன்பாக இறை தேடலாக இறை அச்சமாக இறை கீல்படிதலாக பரிணமிக்கிறது உன்னதமான பக்தியை நோக்கி எல்லா ஆத்மாக்களையும் இறைவனே வழிநடத்துகிறான் .அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து என்கிறார் திருநாவுக்கரசர் .தான் நாடியோர்க்கு நல்வழிகாட்டுகிறான் தான் நாடியோரை வழிகேட்டிலும் இறைவன் விட்டுவிடுகிறான் என்கிறது   திருக்குர்ஆன்  .துன்பத்தை தரும் பொழுது அதை தாங்குகிற சக்தியையும்  இறைவனே கொடுக்கிறார் ! எண்ணிப்பாருங்கள் நாம் கடந்து வந்த துன்பம் இப்போது வந்தால் நம்மால் தாங்கி விடமுடியுமா ?அதை எப்படியோ  தாங்கி வரவில்லை கடவுள்   தான் நமக்கு சக்தியை கொடுத்திருந்தார் .அவருடைய  நோக்கமெல்லாம்  நாம் கற்றுக்கொள்வது தான்  இந்த  துன்பத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள அவர்   விரும்புகிறார் என  சிந்திப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம்மை  உபத்திரவ படுதுகிரவர்களைப்போல் நாம் இருக்க கூடாது அவர்களும்   மனம் திரும்பட்டும் என பொறுமையை கைக்கொள்வதும் அவர்களை விட்டு விலகி நம்மை காத்துக்கொள்ள மட்டும் முயற்சிப்பதுமாக  இருக்கும் பொது இந்த துன்பம் விலகிவிடும் கடவுள் இருக்கிறார் கேட்கிறார்  என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து பிரார்த்தித்தால் அவர் பதிலளிப்பது  சில  நாளில்  நமக்கு புரிய  தொடங்கிவிடும்  ஒரு மனிதன் தன மகன் மீனை கேட்டால் பாம்பை கொடுப்பானா ?உணவைக்கேட்டால் கல்லை கொடுப்பானா ?பொல்லாத மனிதர்களாகிய நீங்களே நல்ல ஈவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க அறிந்திருக்கும் பொழுது பரம பிதாவானவர் தம்மை நோக்கி வேண்டுகிரவர்கலூகு நல்ல ஈவுகளை கொடுப்பது அதிகம் நிச்ச்சயமில்லையா ? என்கிறார் இறை தூதர் இயேசு !ஆகவே வேண்டுதலும் கடவுளிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் எந்த துன்பம் ,வியாதிகளிடமிருந்து நம்மை நிச்சயம் விடுவிக்கும்

கடவுள் வேறு மதங்கள் வேறு!

மதங்களின் வழியாக கடவுளை பார்த்தே பழகிவிட்டோம் !மதங்கள் எல்லாம் அந்த அந்த காலகட்டத்தில் ஒரு இறை தூதரால் கொடுக்கப்பட்டு அவரின் சீடர்கலால் கெடுத்து குட்டிய சுவர்கள் ஆனவை !மதங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தவறு அப்படியே எதிர்ப்பதும் தவறு !கெட்டுப்போன மதங்களின் உடாக உண்மையை கடவுளை தேடி கண்டு பிடிக்கவேண்டும் !கடவுள் உங்களை வெளிச்சமாக்க வேண்டுகிறேன் !கடவுள் இருக்கிறார் என நம்புவதும் செய்கிற செயலுக்கு விளைவை அவர் கொடுப்பார் என நம்புவதும் தீய செயல்களிடமிருந்து மனிதனை காப்பாற்றும் !மனித நேயமற்ற பக்தி எப்படி மோசடியோ அதுபோல இறை அச்சமற்ற மனித நேயமும் மோசடியில் தான் முடியும் !வாயிலே சமுக சீர்திருத்தம் பேசினாலும் செய்கையிலே ஈவு இரக்கமற்ற சுயநலவாதிகளாகவே பலர் இருக்கின்றனர் !மதங்களின் கேடுகளை எதிர்க்கிற சாக்கில் இறை அச்சமற்ற கேட்டுக்குள் போய் முடிகிறார்கள் !மதங்களின் கேடுகளை எதிர்க்கவேண்டும் !உள்மனதில் இறை அச்சமுடன் இருக்க வேண்டும் !ஒரு வேலை பெரியார் அப்படி இருந்திருக்கலாம் !அவரும் ஒரு வகையில் இறை தூதரே !அவர் தன் கொள்கைக்கு நேர்மையானவராக சமூக சீர்திருத்தம் செய்வதற்கு தன்னை தியாகம் செய்தார் !அவரின் பாசறையில் வந்தவர்கள் எல்லாரும் இறை அச்சமற்ற சுயநலவாத கூடங்களாக கேடுகளை செய்கிரவார்கலாகவே இருக்கின்றனர் !எவ்வித கொள்கையும் இல்லாமல் அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள் -கழக கூடங்களுக்கு பெரியார் தான் மூலமாகும் !எப்படி மதங்களெல்லாம் கெட்டு விட்டதோ அப்படி பெரியாரியமும் கெட்டு விட்டது !காரணம் இறை அச்சமற்றதுதான்

Sunday, August 14, 2011

புத்தர் கடவுளா ?குருவா ?

புத்தரை குருவாக வைத்து கடவுளை வணங்கிய வரையில் அது நல்ல மார்க்கமாகவே இருந்தது !கடவுளை வணங்குவதற்கு அன்பு மனித நேயம் தான் ஊடகம் என்பது புத்தரின் உபதேசம் !புத்தருக்கு பிறகு 2000 வருடம் வரை புத்தர் இறை தூதராக குருவாகவே மட்டுமே இருந்தார் (ஹீனயானம் )!அதன் பிறகு புத்த துறவிகள் மாநாட்டில் ஒரு உண்மையை கண்டுபிடுத்தி விட்டதாக அறிவித்தார்கள் !அது கடவுள் தான் புத்தராக வந்தார் அல்லது புத்தரும் கடவுளாகிவிட்டார் ;எனவே புத்தரையே வழிபடுவது என முடிவெடுத்தார்கள் (மகாயானம் )அங்கு தான் கலி பிடித்து புத்த மதம் கெட்டு குட்டிய சுவராகி விட்டது !புத்தர் மூலமாக கடவுளை வழிபட்ட வரை அது நல்ல மார்க்கம் !இறை தூதர் புத்தரையே கடவுளாக்கிய பிறகு அது துன் மார்க்கம் !பார்ப்பதற்கு புத்தர் மீது உள்ள பேரன்பால் குரு பக்தியால் இது நடந்தது போல் தோன்றினாலும் கடவுளை வழிபடு என்கிற புத்தரின் உபதேசத்தை குழிதோண்டி புதைத்து விட்டு புத்தரையே கடவுளாக்கிய அசுரர்களின் விஷம் இது !எல்லா இறை தூதர்களும் சென்ற பிறகு அசுரர்கள் மிக நுட்பமாக சீடர்களின் மூலமாக தங்கள் விசத்தை கலந்து மதத்தை கெடுக்கிறார்கள் !கடவுளை விட்டு விட்டு கடவுளின் தூதர்களை வழிபட செய்து விடுகிறார்கள் !கண்பூசயுஸ் தன் முதல் எதிரிகளே சீடர்கள் தான் என்று சொன்னார் !ஆவி மண்டல தேவ அசுர யுத்தம் பூமியில் மனிதர்கள் மூலமாக நடந்து வருகிறது !அசுரர்கள் கடவுளை விட்டு விட்டு கடவுளின் தூதர்களை வளிபடுகிரவர்கலாக மனிதர்களை மாற்றி எல்லா மதங்களையும் கெடுத்து விடுகிறார்கள் !மனிதனுக்கும் தன் இனத்தில் ஒருவன் கடவுளாகிவிட்டான் என்றவுடன் மாயை எளிதில் பிடித்து விடுகிறது !கொள்கையை கடைபிடிப்பதை விடஒரு கும்பிடு போடுவது எளிது ! ஒரு கும்பிடு போட்டு நிறைய பலன்களை அடைந்து விடலாம் என்கிற சுயநல பக்தி அவனை ஆட்கொண்டு விடுகிறது !உள்ளார்ந்த இறை அச்சமும் மனித நேயமும் தான் உண்மையான பக்தி ஆகும் !சாரமற்ற சரக்குகள் அசுரர்களின் விசமாகும் !இறை தூதர்கள் ராமன் ,கிருஷ்ணர் ,புத்தர் ,ஏசு ,-வின் சீடர்களை கெடுத்து அவர்களின் கொள்கைகளை விட்டுவிட்டு அவர்களை வளிபடுகிரவர்கலாக அசுரர்கள் மாற்றிவிட்டார்கள் !இறை தூதர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்களை கொடுமைபடுத்த மனிதர்களை தூண்டி விடுகிற அசுரர்கள் அவர்கள் சென்ற பிறகு அவர்களை வழிபட தூண்டி விட்டு அவர்களின் கொள்கைகளை குழி தோண்டி புதைப்பதில் வெற்றி பெறுகிறார்கள் !