Total Pageviews

Sunday, December 25, 2016

குசேலர்





மார்கழி முதல் புதன்கிழமை குசேலர் தினம் என அறிவித்தார்கள்

குசேலர் தினம் ஒன்றிருக்குமானால் அதனை நண்பர்கள் தினமாக கொண்டாட அதைவிட சிறந்த தினம் வேறு இருக்காது

துவாபர யுகத்தில் இரண்டு ஜோடி பால்ய சிநேகிதர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்



கிரிஷ்ணர்  குசேலர் ஒரு ஜோடி இதில் கிரிஷ்ணர் பரவான் . அதனால் அது நன்மைக்கு ஏதுவானது

மற்றொரு ஜோடி துருபதன் துரோணர் மண்ணிலிருந்து உண்டானவர்கள் அதனால் இந்த நட்பு மனக்கசப்புக்கும் பகைக்கும் பழிவாங்குதலுக்கும் ஆளானது

எவ்வளவு உயர்ந்த ஞானமாக இருந்தாலும் மண்ணிலிருந்து உண்டாகும் ஞானம் தாழ்மையானது முழுமைக்கு வழிகாட்டாது சித்தர்கள் வேதாத்திரி இன்னும் இன்றைய நவீன நாத்திகவாதிகளான நான் கடவுள் கோஸ்ட்டியினரின் ஞானம்  முழுமை அடையாது ஆனால்  பரவான் ஒருவரின் மூலமாக  கிடைக்கும் ஞானம் நிச்சயமாக நம்மை  வீடு பேறு அடைய  உதவிசெய்யும் சமுதாயத்தையும் முன்னோக்கி நகர்த்திவிடும்

அதுபோலத்தான் நட்பிலும் மண்ணிலிருந்து உண்டான பிறவிகளான  துருபதன் என்ற ராஜகுமாரனும் அவரது  குருவான பரத்வாஜரின் மகனுமான துரோணரும் கல்வி பயிலும்போது நண்பர்களாக பால்ய சிநேகிதர்களாக படிக்கும் காலத்தில் ஆடிப்பாடி மகிழ்திருந்தார்கள்

அதே காலத்தில் கிரிஷ்ணர் என்ற ராஜகுமாரனும் குசேலன் என்ற ஏழைச்சிறுவனும் சாந்திவினி முனிவரின் ஆசிரமத்தில் கல்விபயின்றார்கள் ஆடிபாடி மகிழ்திருந்தார்கள்

படிப்பு முடிந்து அவரவர் வாழ்க்கையில் பதவிகளில் அமர்ந்து அந்தஸ்தில் வித்தியாசத்தில் இருந்தார்கள்

இந்த இரண்டு ஜோடிகளிலும் ஒருவர் அந்த காலத்து புரோகிதர் பூசாரி ஆரிய இனத்திலிருந்து இந்தியா வந்தவர்கள்

கிரிஷ்ணர் அரச பதவியில் மட்டுமல்ல தனது பல்வகை சாதனைகளால் அவரை பெரிய மாயாவி ராஜதந்திரி பராக்கிரமசாலி என்கிற அளவில் உலகம்  ஏற்றுக்கொண்டிருந்தது ஆனால் ஒரு சிலருக்கு  மட்டுமே அவர் அதிதேவர் நாராயணனின் அவதாரம் என்கிற உண்மை தெரிந்திருந்தது .

குசேலரைப்பொருத்து தன் பால்ய சிநேகிதன் தோழன் அன்புக்கு பாத்திரமானவன் என்கிற உறவு இருந்ததே  தவிர அதிதேவர் என்கிற புரிதல் இல்லை

குசேலரும் சரி துரோணரும் சரி புரோகித தொழிலில் அல்லது கற்பிக்கும் தொழிலில் போதிய வருமாணம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள்

ஆரியப்பூசாரிகள் வருமாணம்  இல்லாத பல கோவில்களில் இன்றும் வறுமையில் வாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அன்றைய காலகட்டத்தில் குறைவான கோவில்களே இருந்ததாலும் கல்வி கற்போர் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாலும் மகத்தான தனுர் வேதத்தை கரைகண்ட துரோணாச்சாரியார் போன்றவர்களும் வறுமையில்தான் இருந்தனர் . தன் மகன் அசுவாத்தமன் பாலுக்கு அழும்போது அதைக்கூட நிறைவு செய்யமுடியாத அறிவும் திறமையும் இருந்து என்ன பயன் ?

இந்த நிலையில் தன் தகப்பனிடம் கல்வி கற்றவன் குருவின் குடும்பத்தை மதிக்க கடமைப்பட்டவன் என்றில்லாவிட்டாலும் பால்ய சிநேகிதன் ஒன்றாக கல்வி கற்றவன் என்ற நட்பால் தனக்கு ஒரு கவுரவமான வேலையையும் வாழ்க்கைக்கு ஆதாரமும் தேடித்தான் துரோணர் துருபத மன்னனை காண சென்றார் அது தவறே அல்ல . முடிந்தால் உதவி செய்யலாம் அல்லது ஆறுதலான வார்த்தையாவது சொல்ல வேண்டியது பால்ய சிநேகிதனுக்கு அவசியம்

உலக மாந்தர்கள் பலர் இவ்விசயத்தில் ஞானமாக நடப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்

பால்ய சிநேகிதனுக்கு தராதரம் எல்லாம் தெரியாது . எங்காவது பார்த்துவிட்டால் டே என்று ஓடி வருவார்கள் தராதரம் எதிர்பார்ப்பு தேவை எதுவுமே இல்லாத காலத்தில் எழுந்த உறவு அது . உதவியே செய்யாவிட்டாலும் ஆறுதலாக நின்று பேசினாலே அவர்கள் மனம் குளிர்ந்துவிடும் . பெருமையாக பேசி தொண்டுழியம் செய்ய தயங்க மாட்டார்கள் நாலு பேர் மத்தியில் நம்மை விட்டுகொடுக்கமாட்டார்கள்


இவர்களை மதிக்க தவறியதால் கேடுகளை அனுபவித்தவர்கள் அதிகம் . சானக்கியரால் நந்த ராஜ்ஜியம் அழிந்ததும் இப்படியே அதுபோலத்தான் துருபதன் ஆறுதலாக பேசாமல் என்ன என்னை லேசாக பேசுகிறாய் நான் யார் தெரியுமா ராஜா என துரோணரை அவமானப்படுத்தினான் .இது மண்ணிலிருந்து உண்டான ஆணவம் . அந்த ஆணவத்தால் பழிவாங்கும் வெறுப்பை துரோணர் வளர்த்துக்கொண்டதும் மண்ணிலிருந்து உண்டான வஞ்சம் .

துருபதன் அவமானப்படுத்தினால் என்ன கடவுளின் கிருபையால் மகத்தான குரு வம்சத்திற்கே கல்வி கற்பிக்க தகுதியான ஆள் என பீஷ்மர் போன்ற மகத்தான நபர்கள் துரோணரை மதித்து குருவாக்கியபோது துருபதனை போனால் போகட்டும் என மன்னித்து விட்டிருக்கலாம்

குருகாணிக்கையாக தனது மகனுக்கு ஒரு சிற்றரசு பதவியை கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள் ஆனால் கேவலமாக துருபதை சிறைபிடித்து வாருங்கள் என்றார் . பின்பு சிறைபிடிக்கப்பட்ட அரசனை ஏசி விடுதலை கொடுத்தார் . அதனால் துரோணருக்கு ஒரு லாபமுமில்லை .அதைக்காட்டிலும் அதன் பின்பும் வாழ்க்கைக்கு ஆதாரமில்லை  என்ற நிலையால் அசுவாத்தமன் துரியோதனனின் சூழ்ச்சிக்கு ஆளாக நேர்ந்து பழிபாவம் செய்து சபிக்கப்பட்டவனாக இப்போதும் உள்ளான்

ஏதென்றாலும் வஞ்சம் தீர்க்கலாகாது அது அசுர குணம் . நியாயத்தீர்ப்பு இறைவனுக்கு மட்டுமே உரியது அரசர்கள் நாட்டுக்காக கொஞ்சம் செய்யலாம்  தனிப்பட்ட முறையில் எந்த மனிதனையும் தண்டிக்க எந்த மனிதனுக்கும் அதிகாரமில்லை .கரணம் ஒன்றே ஒன்றுதான் மனிதன் கடவுளின் சாயலில் உள்ளவன் அவனை கொன்றால் நிச்சயம் பிரம்மஹத்தி தோஷம் தப்பிக்கவே முடியாது  

ராமர் போன்ற அவதார புருஷர்களும் ராவணன் முதலான அசுரர்களைக்கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார்கள் கிரிஷ்ணர் ஆளானார் ; அதனால் இயேசுவாக வந்து பதிலுக்கு மரணம் என்ற சிலுவைப்பாடுகளை அனுபவித்தார்



லக்ஷ்மணனும் அர்ச்சுனரும் முகமதுநபியும் பிரம்மஹத்தி தோஷத்திற்கு பதில் சொல்லிக்கொண்டுதான் உள்ளனர்

இப்படியிருக்க மனிதனை நியாந்தீர்க்க எந்த மனிதனுக்கும் உரிமையில்லை இறைவனிடம் அவனை நல்வழிப்படுத்துங்கள் என வேண்டலாம் விலகி செல்லலாம் பழி தீர்க்க எந்த உரிமையும் இல்லை ஒரு நாள் இறைவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்

தன் குடும்பத்தின் நன்மைக்கு யோசிக்காமல் பழிதீர்க்க நினைத்த துரோனரால் துருபதணும் பழிதீர்க்க யாகம் செய்து இப்படி பழிமேல் பழியாக தீமைகளே விளைந்தன

ஆனால் அதே போல ஒரு ஆரிய புரோகிதன் குசேலர் . முடிந்தளவு புரோகிதத்தால் வறுமையில் வாடினாரே தவிர தன் மனைவியால் உங்கள் நண்பரிடம் உதவி கேளுங்கள் என வற்புறுத்தப்பட்ட போதும் தன் நண்பனை எண்ணி பெருமைப்பட்டாரே தவிர உதவி கேட்டு தொந்தரவு செய்ய மனம் வரவில்லை

பலநாள் மனைவியின் பேச்சை தட்டினாலும் வற்புறுத்தலுக்கு இணங்க கண்ணனுக்கு ஏதாவது கொண்டுபோகவேண்டும் என அன்புதான் அவரிடம் விளைந்ததே ஒழிய மனதார அவனை தொந்தரவு செய்யவில்லை

கந்தலும் கசங்கலும் அவல் முடிச்சுமாக கிரிஷ்ணரின் அரண்மனை வாயிலை அடைந்து காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு நண்பனை காண முடியவில்லையே என ஏங்கி வருந்தி நின்றபோது அந்த அன்பின் உணர்வால் கண்ணனே ஓடி வந்து ஆரத்தழுவி அழைத்து சென்றார்

ஆதிதியை மதி



அதிதி தேவோ பவ



முகமதுநபி கூட உன்னைத்தேடி வரும் அதிதிக்கு உதவி செய் ; ஒருவேளை அது தேவதூதன் ஒருவன் உன்னை சந்திக்கும்படி இறைவனால் அனுப்பப்பட்டவனாக இருக்கலாம் என அறிவுருத்துகிறார்

பரவானாகிய கிரிஷ்ணர் அப்படித்தான் நடந்துகொண்டார் அதிதியை தேவன் என்கிற அளவில் குசேலரின் காலை கழுவி புத்தாடை உடுத்தி தன் மனைவியையும் மரியாதை செய்யவைத்து அவருக்கு உணவளித்தார்

அதோடு நண்பன் தன்னிடம் உதவி கேட்க உள்ளம் கூசியவனாக தனக்கு வழங்க தன் வறுமையிலும் அவல் வாங்கி வந்தானே அதை கேட்டு வாங்கி உள்ளன்பை உணர்ந்து உணர்ந்து உண்டார்

அந்த சிநேகிதமே நட்பின் அடையாளம் . அந்த ஒவ்வொரு கவளத்திற்கும் ஒரு கூடை  தங்கம் குசேலரின் வீட்டில் கொட்டியது

கடைசி வரை உதவி என எதையும் கேட்காமாலேயே குசேலர் அந்த அன்பில் மகிழ்ந்தவராக பிரியா விடை பெற்று வீட்டிற்கு வந்தார் ; வந்த பிறகுதான் கிரிஷ்ணரின் மகிமையை உணர்ந்தார்

இந்த நட்பு உன்னதமான அன்பின் வெளிப்பாடு இரு புறத்தும் தரமான அணுகுமுறை அன்பு மரியாதை உள்ளது

ஆனால் குசேலர் ஆரிய பூசாரி என்பதால் கிரிஷ்ணரே விழுந்து விழுந்து கவணித்தார் என்பதாக அதை திரிக்க முயலுகிறார்கள் . நிச்சயமாக இல்லை எதிர்பார்ப்பற்ற உன்னத அன்பு சிநேகிதம் குசேலர் உள்ளத்தில் வழிந்ததையே பரந்தாமன் கெளரவப்படுத்தினார்

அதே கிரிஷ்ணர் துரோணரின் மரண காலத்தில் இந்த பழிவாங்கும் உணர்வால் சீரழிந்தீரே என இடித்துரைத்து மரணத்தை ஏற்றுக்கொள்க என அறிவுறுத்தியதை மறக்கலாகாது . பழிவாங்கலின் உச்சத்திற்கு சென்ற அசுவாத்தமனை மிக கடுமையான சாபமும் கிரிஷ்ணர் கொடுத்து ஆரிய பூசாரிகளின் ஆணவத்தை எச்சரிக்கையும் செய்துள்ளார்

ஆக குசேலரின் உன்னதமான அன்பு பரவானால் மதிக்கப்பட்டது ; ஆனால் மண்ணிலிருந்து உண்டான மனிதர்களின் நட்போ கசப்பாகவே முடிகிறது  

மனிதர்களை நேசிப்பதை விட இறைவனையும் அவனது அதிதேவர்களையும் தேவர்களையும் நேசிப்பது ஆயிரம் மடங்கு மேலானது

நாம் மனிதர்களுக்கு எதை செய்தாலும் முக்கியமாக ஆன்மீக பணிகளை இறைவனுக்கு அற்பனமாகவே செய்யவேண்டும் மனிதர்களிடமிருந்து கூலி பெறுவது குருகாணிக்கை பெறுவது தவறானது என்றே ஸ்ரீகிரிஷ்ணர்  துரோணரை இடித்துரைத்தார்


குரான் 10:72. ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று முகமது நபி கூறினார்).

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் 



அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
 









Friday, December 2, 2016

சாலை ஆண்டவர்


வள்ளலார் தனக்கு பின்வருபவரான தனித்தலைமைப்பதி @ சமரசவேதாந்தி பார்வதிபுரம் சபைக்கு வந்து செத்தவரை உயிரோடு எழுப்புவார் ; அவர் காலத்தில் சமரச சன்மார்க்கம் உலகெங்கும் தழைத்து ஓங்கும் என கூறியுள்ளார்

அவர் வந்து எழுப்ப வள்ளலாரின் அனுக்கசீடர் கல்பட்டு ஐயாவை வடலூர் பார்வதிபுரத்தில் அடக்கம் செய்துள்ளனர்

சாலை ஆண்டவரும் மெய்வழிச்சலையில் சமாதியில் அடங்கியதொடு தன் சீடர்கள் அநேகருக்கு பரிசுத்த அடக்கம் செய்துவருகிறார்கள்

இது பரிசுத்த அடக்கமே தவிர நித்திய ஜீவன் அல்ல . நித்திய ஜீவன் என்பது ஒளிசரீரம் அடைவது சரீரம் எஞ்சாது

வள்ளலார் ஆண்டாள் மாணிக்கவாசகர் போல

ஆண்டாள் ராமானுஜர் உட்பட பலர் கூட இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே அரங்கனிடம் சென்று ஒளியாகி மறைந்தார்

மாணிக்கவாசகரும் பலர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சிதம்பரத்தில் ஒளியில் கரைந்தார்

ஏன் சுந்தரர் திருமணத்தில் கலந்துகொண்ட ஒரு பெரிய கூட்டமே ஒளியாகி மறைந்துவிட்டனர்

இவர்கள் யாருக்கும் சரீரம் எஞ்சவில்லை


யாருக்கெல்லாம் சரீரம் எஞ்சியதோ அவர்கள் இன்னும் முழுமை அடையவில்லை ; ஒன்று மறுபிறவி எடுத்து முன்னேற வேண்டும் அல்லது ஜீவசமாதி அடைந்து வரப்போகிறவர் வந்து சரீரத்தோடு உயிரடையச்செய்து மீண்டும் எழுப்பும்வரை பூமியில் மண்ணறையில் காத்திருக்கவேண்டும்
இன்னொரு பிறவி எடுத்து உழலாமல் அவர் வரும்வரை காத்திருப்போம் என்பதைத்தவிர இதில் பெரிய லாபம் ஏதுமில்லை

இப்படிப்பட்ட ஒன்றை தன் அடியவருக்கு மெய் வழியில் சாலை ஆண்டவர் பரிசுத்த அடக்கம் என்னும் பெயரில் கொடுக்கிறார்கள்

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் இந்த நம்பிக்கையில்தான் கல்லறை கட்டுகிறார்கள்
இதில் பெரிய லாபம் ஏதுமில்லை

ஆனால் இவர்கள் அனைவரும் வள்ளலாருக்கு பின்வருகிறவரான தனித்தலைமைப்பதி வரும் போது உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதே இதில் உள்ளசெய்தி

வடலூர் ஞானசபையில் வந்துயார் கல்பட்டு ஐயாவை கல்லறையை விட்டு எழுப்புவாரோ அவரே வள்ளலாரால் முன்குறிக்கப்பட்ட சமரச வேதாந்தி

இவரால் சாலை ஆண்டவரும் எழுப்பிகொண்டுவருப்படுவார் அதுவரை சாலைஆண்டவரின் சீடர்கள் தங்களை பரிசுத்த அடக்கம் செய்துகொள்ளட்டும்

சமரசவேதாந்தி வந்து சரீரத்தோடு எழுப்ப பலரை பரிசுத்த அடக்கம் செய்யும் பணியை மட்டுமே சாலைஆண்டவர் செய்கிறார்

சமரசவேதாந்திக்கு சாலை அமைக்கும் பணி இது

சாலை அமைக்கும் பணிக்கு வந்ததால் அவர்பேர்  சாலை ஆண்டவர் எனப்பட்டது

எப்போது  ஒருவர் அடங்கினாரோ அவர்  கல்கியுமல்ல ; தனித்தலைமைப்பதியுமல்ல  அல்மகதியும் அல்ல

ஏனென்றால் யார்  உயிரோடு  இருக்கும்போதே  வானத்திலிருந்து  கல்கி  இறங்கி  வருவாரோ  அவரே  அல்மகதி வள்ளலார்  குறிப்பிட்ட தனித்தலைமைபதி

சாலை  ஆண்டவர் அடங்கிவிட்டார்  என்பது  எவ்வளவு  உண்மையோ  அவ்வளவு  உண்மை  அவரை  எழுப்புபவர்  ஒருவர்  வரும்போது மட்டுமே  அவரால்  ஆவிக்குரிய  சரீரத்தில்  நித்திய ஜீவனோடு  எழும்ப  முடியும்

சாலை  ஆண்டவர்  தாம்  என்ன கொடுக்கிறாரோ  அதை பரிசுத்த  அடக்கம்  என்றுதானே  சொல்லியுள்ளார்

அடக்கம் என்றாலே அவர்  இறந்ததுபோல  ஒரு தன்மையை  அடைந்துவிட்டார் என்றுதான் அர்த்தம்

ஆகவே  அடக்கம்  ஆவதே  குறிக்கோள்  என்பவர் தாராளமாக  அடக்கம் ஆகிக்கொள்ளட்டும்

ஆனால் அது தற்காலிக  நிம்மதியே  தவிர  நித்திய ஜீவனல்ல  முழுமையை  கொடுப்பதல்ல  என்பதை உணர்ந்துகொள்ளட்டும்



நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின்
நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் 
குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்



அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி






Saturday, November 26, 2016

திருப்பாவை 13



          
 

சுபத்ரையை எழுப்புவதற்கான முயற்சியில் கோதை அக்கா பாட பாட அவளுக்கு சுபத்ரை மீது அன்பும் பொங்கி வழிகிறது 

ஆயிரம் இருந்தாலும் அவளது மைத்துனி அல்லவா ?
அவளை குழந்தையாகவே பாவித்து அவளுக்கு ஆலோசனை சொல்லத்தொடங்குகிறாள்

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் 

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் 

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால் 

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பறவை இனங்களுக்கும் உணவு அளிப்பவன் பரந்தாமன் ; ஏனெனில் படைக்கப்பட்ட அனைத்தும் அவனுக்குள்ளேயே படைக்கப்பட்டது

அதே நேரத்தில் அவனுக்குள்ளேயே படைக்கப்பட்டிருந்தாலும் பொல்லாதவர்களாகிய அரக்கர்களின் தலையை கிள்ளி எரிய அவன் தயங்கியதில்லை

அப்படிப்பட்ட பரந்தாமனுக்கு முழு சரணாகதி அடைந்த பக்தர்கள் பரலோக ராஜ்ஜியத்தின் பிள்ளைகளாவார்கள் ; அவர்கள் பூமியில் இருந்தாலும் உலகத்தால் பகைக்கப்பட்டே இருப்பார்கள் ஆகவே அவர்கள் இடைவிடாது பரந்தாமன் மூலமாக இறைவனை வேண்டிக்கொண்டே வாழும் நிர்ப்பந்தத்தில் இருப்பார்கள்

ஆகவே அவர்கள் வாழ்வு எப்போதும் நோன்பு நோற்பதைப்போலவே இவ்வுலகில் இருக்கும்

இடறலும் நோவும் வருவதும் அதை பிரார்த்தித்தே கடந்து செல்லுவதுமான பயிற்சியால் அவர்கள் எப்போதும் இறைவனின் புகழை துதித்தவர்களாகவே இருப்பார்கள்

இது பாவைக்கூத்து போல

ஒரு நாடகம் என்றாலே அதில் இடறல் தரும் வில்லனும் அவனை வெல்லும் ஒரு கதாநாயகனும் அவசியம்

அந்தப்போர்க்களத்தில் பிள்ளைகளின் பலம் எதுவென்றால் இறைவனையும் சற்குருவையும் புகழ் பாடிக்கொண்டிருப்பது மட்டுமே

வேதங்கள் அனைத்தும் பக்தர்களை மணவாட்டிகளாகவே சித்தரிக்கின்றன

யாருக்கு மணவாட்டிகள் என்றால் வரப்போகிற சத்திய யுகத்தை ஆளப்போகிற யுகபுருஷன் கல்கிக்கு மணவாட்டிகள் அல்லது முருகனுக்கு மணவாட்டிகள் வள்ளிக்குறத்திகள்

வள்ளிக்குறத்திகளுக்கு இறைபக்தி ஆபரணமாக இருக்கிறது ; ஆனால் ஒரு பெரிய குறை இருக்கிறது ; அது ஏதென்றால் சுய பெருமையில் விழுந்து விடுவார்கள்

அக்கா சொல்கிறார்கள் ; குள்ளக்குளிர குடைந்து உனக்குள்ளாக மூழ்கி சுய பெருமையில் வீழ்ந்து நீராடிக்கொண்டிராதே
ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு பக்தன் அசுரர்களோடு போராட வேண்டும் ; அதில் கொஞ்சம் வெற்றி பெற்றவுடன் அவனை மயக்கும் சுய பெருமையோடு போராடவேண்டும்

ஆன்மீக வாழ்வில் சமுதாயத்தில் அசுரர்கள் எவ்வளவோ இடரலோ அவ்வளவு இடரல் பூசாரிமார்களாலும் வருகிறது

அவர்கள் தங்கள் தொழிலின் நிமித்தம் இறைசக்திகளுக்கு குத்தகைதாரர்கள் போல தங்களை கருதிக்கொண்டு ஜீவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறவர்கள் ஆகி விடுகிறார்கள்

நல்ல ஒலிபெருக்கிகளாக இருப்பது பெரிய விசயமல்ல அது வெறும் மைக்செட்

ஆனால் மைக்செட்கள் தங்களை ஞானவான்களாக கருதிக்கொள்ளும் ஆபத்து நேர்ந்துவிடுகிறது

இறைதூதர்கள் பூமிக்கு வரும்போதெல்லாம் அசுர ஆவிகளால் பீடிக்கப்பட்ட தீயவர்கள் கெடுதல் செய்ததை விட இறைவனுக்கு பூஜை செய்யும் தொழிலை செய்யும் பூசாரிமார்கள் செய்யும் கெடுதல் அதிகமாகவே இருந்திருக்கிறது

பூசாரிமார்களுக்கு யார் பலம் கொடுப்பது என்றால் ஆவிமண்டலத்தில் பிரஹஸ்பதி என்னும் குரு வியாழன் கிரகத்தின் அதிதேவர்

கோதை அக்கா ஒரு முக்கியமான ரகசியத்தை இங்கு சொல்கிறார் இதை சொல்லும் தகுதி மற்ற குருமார்களைக்காட்டிலும் கோதை அக்காவிற்கு உண்டு

அது ஏதென்றால் குருமார்கள் பலர் இன்னும் ஒளிசரீரம் பெற்று பரலோகம் போகாமல் பூமியில் பிறந்துகொண்டே இருக்க கோதை அக்கா ஒளிசரீரம் பெற்று பரலோகம் போனவர் வள்ளலாரைப்போல

அவர் சொல்கிறார் எனக்குள்ளாக மூழ்கி நான் பிரம்மம் என கண்டுகொண்டேன் நான் புனிதன் பரிசுத்தன் ஞானி நானே கடவுள் நான் குரு என்றெல்லாம் பகட்டிக்கொண்டிராதே பாவை நோன்பு நோற்ற கற்றுக்கொள்

நெய்யுன்ணாதே மையிட்டு எழுதாதே மலரிட்டு முடியாதே

பெருமையை பகட்டாதே சரணாகதியை தாழ்மையை கற்றுக்கொள்

ஆன்மீக பெருமை ஆன்மீக பகட்டுக்கு பின்னணி வியாழன் பிரஹஸ்பதி

சாகாக்கலை மரணமில்லா பெருவாழ்வு கற்றவர் யாரென்றால் சுக்ரன் வெள்ளி கிரகத்தின் அதிபதி

ஆன்மீக பகட்டாகிய வியாழம் மறைந்து வெள்ளி உதிக்கவேண்டும் பூசாரிகள் மதவாதிகளை கடந்து சென்றால் ஒழிய சாகாக்கலை கற்க முடியாது

இறைவனை தரிசிக்க முடியாது

சற்குரு இயேசு யூத குருமார்களை நோக்கி குற்றம் சாட்டினார் :

மத்தேயு 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

இறைவனுக்காக குருவே தவிர குருவுக்காக இறைவன் கிடையாது

பலர் குருபக்தியும் இறைபக்தியும் ஒன்றென பகட்டி குருவையே இறைவனாக ஆக்கி இணைவைக்கும் பாவத்தில் விழுந்து போகிறார்கள்


இந்த குற்றச்சாட்டு காலம் காலமாக பூசாரிகளைப்பற்றியது குருகிரகத்தின் ஆதிக்கத்தை கடர தெரிந்தால் ஒழிய சாகாக்கலை சித்திக்காது

ராஜராஜேஸ்வரியாய் அதிதேவர் நாராயணி யாரை அடக்கினார் மகிசாசுரனை அல்லவா

சுயமும் சுய பெருமையுமே ஆன்மீக செருக்குமே அந்த மகிசாசுரன்

பலர் ஏன் குருவையே இறைவன் என இட்டுக்கட்டுகிரார்கள் என்றால் குருவைப்போன்ற மனிதனையே அவர்கள் மகிமைப்படுத்த விரும்புகிறார்கள் அதில் மனிதனான தனக்கும் ஒருநாள் மகிமை கிடைக்கும் என்ற ஆசை ஒழிந்துகிடக்கிறது

இறைவனைக்காட்டிலும் தன்னைப்போல ஒரு மனிதனையே மகிமைப்படுத்தும் கள்ளம் அவர்கள் உள்ளங்களில் ஒழிந்து கிடக்கிறது . ஆனால் இறைவனுக்காகாத்தான் குருவை மகிமைப்படுத்துகிறோம் என பூசி மெழுகிக்கொள்கிறார்கள்

கள்ளம் தவிர்த்து இறைவனை மகிமைப்படுத்து என்பதே கோதை அக்காவின் அறிவுரை 





நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



Friday, November 25, 2016

திருப்பாவை 20






முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று 
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு    மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்


முப்பத்து  முக்கோடி தேவர்களைஅசுரர்கள் தங்கள் மாயைகளால் மயக்கி அடிமைப்படித்தி விட்டார்களாம் ஒரு  குறிப்பிட்ட  காலம் வரை இறை நேசம் கொள்வோருக்கும் எதற்கெடுத்தாலும்  சோதனைகளும் தடைகளும் முட்டுக்கட்டைகளும்  வந்து  குவியும் 

பட்டறிவில்லாத உபதேசங்கள்  பெரிய  பலன் கொடுக்காது

உழைக்களத்தில்  இரும்பு மேருகேற்றப்படுவது போல  வாழ்வில் அன்றாட சனத்தில் அசுர மாயைகளோடும்  தடைகளோடும் போராடி போராடி உரமும் பொறுமையும் நம்பிக்கையும் அடையாத  ஆத்மா ஞானமடையாது

முழு சரணாகதியை கற்றுக்கொள்ளாது 

அல்லாமலும் முற்பிறவிகளில் நாமும் செய்த அழிச்சாட்டியங்களுக்கு பதிலும் அனுபவித்தாகவேண்டும்

ஆகவே அசுரர்கள்  தேவர்களை அடக்குவது ஒரு குறிப்பட்ட காலம் வரை  தொடரவே செய்யும் 


ஆனாலும் அடிமைகளாக அல்லாடும் தேவர்களை விடுவிக்க  என்றே ஒரு அம்சம்  இருக்கிறது

அவர்  முருகன் தேவ சேனாதிபதி

பரமண்டலத்தில் ஆதியில் தேவர்களை ஆட்டிப்படைத்த அசுரர்களை அடக்கி விடுதலை கொடுத்தவர் முருகன்

ஆனால் கோதை நாச்சியாரோ தேவர்களுக்கு  முன் சென்று கப்பம்  தவிர்ப்பவர் நாராயணன் என்கிறார்

முருகன் பரலோகத்தில் நாராயணனே என ஆதி தமிழ் வேதங்கள் பல  இடங்களில் சொல்கின்றன . ஆனால் அவன் பூமிக்கு அவதாரமாக வந்தாலோ ஆதி மனிதனான சிவனின் பிள்ளை

ஹரிஹரன்


ஹரி = நாராயணன் + ஹரன் = சிவன்

நாராயணன் மனிதனாக அவதாரமெடுத்து வந்தால் அவன் ஹரிஹரன் ; முருகன்

அவதாரங்கள் அனைவரும் ஹரிஹரர்களே


ஹரிகரா   ஹரிகரா ஹரிகரா   என  கோசம் போட்டதே காலப்போக்கில் அரோகரா அரோகரா என மாறிவிட்டது 

சரி விசயத்துக்கு வருவோம்

கோதை அக்கா தமிழச்சி ஆயிற்றே ; அவளின் நேர்த்தியான அணுகுமுறை இப்பாடலிலும் வெளிப்படுகிறது

இந்த பாடலில் அவள் நாராயணனையும் அவளின் மனைவியையும்  துயில்

எழுப்புகிறாள்

ரெண்டு போரையும் சேர்த்தே  அழைக்கிறாள்

ஒருவன் மாணாளன் இன்னொருத்தியோ சக்களத்தி ; மதிக்க மாட்டாளே 


சக்களத்திக்கு என்னைய அடிமையாக்கதடா சாமி என்பதை பக்குவமாக சொல்கிறாள் ; முப்பத்து மூன்று  கோடி தேவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவனல்லவா நீ என்கிறாள் 

செம்மையானவனே திறமையானவனே 

உன்னோடு ஒத்துப்போகிறவ்ர்களுக்கு  ஞான அக்கினியால் இருளை களைகிறவன்  நீ 

அப்புறம் சக்களத்திக்கே ஐஸ் ஐஸ்

நப்பினையின் அழகை வர்ணித்து ஐஸ் வைத்து உன் மணவாளனுக்கு ஊக்கமும் ஆக்கமும்  கொடுத்து  என்னை  அருளால் அபிஷேகிக்கும் படியாக  செய்வாயாக என்கிறாள்


அழகான நப்பினையின் மணவாளனே என்கிறாள்

தாயீ கோபப்பட்டிராத அவரு ஓம் புருஷன்தா உன் தயவு எனக்கு என்னைக்கும் வேணும் தாயீ

கில்லாடி அக்கா அணுகுமுறையில்கில்லாடியே





நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் 
நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி






Thursday, September 29, 2016

கண்ணகியும் காரைக்கால் அம்மையும்






கண்ணகியாக இருக்கும்போது பளிச்சென்று உருவம் இல்லை என்பதால் அழகுக்கும் ஒயிலுக்கும் வேறொருத்திக்கு அடிமையானான் கணவன் அவனோடு கண்ணகி மல்லுக்கட்டவில்லை வம்பிழுக்கவில்லை கண்ணீர் விட்டு கெஞ்சி மன்றாடவில்லை

தன் அன்பை என்றாவது உணர்ந்து வந்து சேரமாட்டானா என ஏங்கிக்கொண்டு மட்டும் இருந்தாள் பிரார்த்தனை மட்டும் செய்துகொண்டிருந்தாள்

மனதில் ஏக்க பெருமூச்சு மட்டுமே அவள் வாழ்வாக பல ஆண்டுகள் ஓடியது

பெற்றோர்கள் உற்றார் அவனை கட்டிவைத்தார்களே தவிர கோவலன் கண்ணகியை கொஞ்சம் கூட உணரவும் இல்லை மதிக்கவும் இல்லை அவளும் பெண் அவளின் ஏக்க தாபங்களை பற்றி அறிந்தவன் இல்லை

வீட்டுக்கு வருவான் காசுபணத்தை எடுத்துக்கொண்டு மாதவி வீட்டில் போய் புகுந்துகொள்வான் திரும்பவும் பணத்தேவைக்கு மட்டுமே வருவான்

சொத்து பத்துகள் அனைத்தும் தீர்ந்து மாதவியின் வீட்டில் நுழைய முடியாமல் விரட்டி விடப்பட்டபிறகுதான் நிதானத்துக்கு வந்தான்

இவ்வளவு சொத்து போனபிறகு இந்த ஊரில் சாதாரண தொழில் செய்யமாட்டேன் என சுய கெளரவத்துக்கு இழுக்கு என உடனே கிழம்பு என்றான்

கண்ணகியை ஏதாவது உணர்ந்தானா மதித்தானா தவறு செய்துவிட்டேன் என தேற்றினானா இது ஏதும் இருந்தது போல தெரியவில்லை

தன்னை கட்டிய மணாளனுக்கு அடிமை என்கிற முழு சமர்ப்பணம் என்ற உயர்ந்த நெறி ஒருவகையில் பக்தியோகத்தின் லட்சனத்திற்குள் வருகிறது

அந்தப்பொறுமையும் பிரார்த்தனையும் சரணாகதி தத்துவத்திற்கு ஒத்து வருகிறது

யாரை நோக்கிய பிரார்த்தனை எவ்வளவு முக்கியமோ அதுபோல பிரார்த்தனை என்பதன் தரமும் முக்கியமானது

பொறுமையான எதிர்பார்ப்பை சிறந்த வேள்வியாகவே இறைவன் கருதுகிறார்

இவைகள் கண்ணகியை இறைவனோடு நெருக்கத்துக்குள் உள்ளாக்கினால் கோவலனோ காமகசடனாக தன் மனைவியை மதிக்காதவனாக இறைவனை விட்டு விலகி சென்றுவிட்டான்

ஒரு பிறவியில் பத்து படி இறைவனை நோக்கி முன்னேறிய ஒரு நபர் அடுத்த பிறவியில் இறைவனை விட்டு இருபது படி கீழே விழக்கூடும்

கண்ணகி தனது சுயதர்மத்தில் கணவனுக்கு சரணாகதியோடு மேன்மையடைந்தாலே தவிர கோவலன் காமகசடன் ஆகி இயல்பில் வீழ்ந்துபோனான்

உடனே கிளம்பு என்ற போது இதுவரை தன்னை பேணி வந்த முன்னோர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை

எங்கே கோளாறு நேர்ந்தது எதை நேர் செய்யவேண்டும்

எந்த மறுபரிசீலனையும் இல்லை படிப்பினையும் இல்லை

மதுரைக்கு வந்து விதியின் சோதனை கோவலன் கொல்லப்பட்டான்

தன்னை இதுவரை மதித்தானா இப்போதாவது தனது அருமையை உணர்ந்தானா என தெரியாத ஒரு கணவன் நடைபிணம் போல தன்னை வைத்திருந்த போது வெகுண்டெளாத கண்ணகி அவன் கொல்லப்பட்டபோது வெகுண்டாள்

தவறை உணர்ந்தவுடன் உயிர் விட்டான் ஒரு மன்னன் அவனும் நீதிமானல்லவா ? அவனோடு உடனே உயிர் விட்டாளே கோப்பெருந்தேவி அவளும் உத்தமியல்லவா ?

தவறுக்கு பரிகாரமாக அம் மன்னன் உயிர் நீத்த பின்பும் கண்ணகிக்கு பழி வாங்கும் கோபம் ? இது வெறியல்லவா ?

மதுரையில் எத்தனை பேரை எரித்தாள் ? இது பாவமல்லவா ?

மதுரையை அறிந்தவர்களுக்கு ஒன்று தெரியும்

அறியாமையால் அவசரப்பட்டு கோவலனை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்ட பாண்டியனே  அடுத்த பிறவியில் தவயோகியாக வாழ்ந்து மதுரை கருப்பாயூரிணியில் தேகசமாதி ஆனார் . இன்னொரு பிறவியில் மேலக்காலில்  வசித்த கோப்பெருந்தேவிக்கு கனவில் தன் தேகசித்தி உள்ள இடத்தை  தோண்டி சிலை கிடைக்குமென்றும் முனியாண்டியாக  தவக்கோலம் உள்ளவராக உள்ள அந்த சிலையை பிரதிஸ்டை செய்து புசைத்தொழில் செய்து பிழைக்கும்படியும் வழிகாட்டினார் இன்றளவும் தீய சக்திகளில் கொடுரமானவைகளிடமிருந்து தன்னை அன்டுவோரை காத்தும் வருகிறார்

முனியாண்டியின் பூசாரிகள் அருள்நிலையில் நீ மதுரையை ஆண்டது உண்மையானால் இதை செய் என வேண்டுவதை பலர் அறிவார்கள்


ஆவிமண்டலத்தில் பேய் பிசாசு கட்டுகளை முனீஸ்வரரிடம் முறையிட்டு மக்கள் பரிகாரம் பெறுகிறார்கள்

ஆனால் கண்ணகியின் கோபம் பலர் கொல்லப்பட்டனர் அவளுக்கும் லாபமில்லை சமூகத்துக்கும் நன்மையில்லை பலர் கொல்லப்பட்டதால் தோஷம் பிடித்துக்கொண்டது 

ஆன்ம வாழ்வில் சில சித்துக்கள் கிடைக்கும்போது பிரயோஜனமில்லா வழியிலும் உலகுக்கு கெடுதலாகவும் அந்த சித்தை செலவிடுகிறார்கள்

தன்னை மதிக்காத கணவனுக்காக தவ வாழ்வு வாழ்ந்தவள் தன் சித்தியை பலரை அழிக்க பிரயோகித்தாள்

இப்போது கண்ணகியின் அடுத்த பிறவியை பாருங்கள் :

காரைக்காலில் செல்வந்தனனின் மகள் புனிதவதியாக பிறந்தார் வீட்டோடு மாப்பிள்ளையை திருமணம் முடித்து அவன் வியாபாரம் செய்கிறான்

கண்ணகிக்கும் பிள்ளையில்லையில்லாதது போல புணிதவதிக்கும் பிள்ளையில்லை








ஆனால் எதோ சித்துக்கள் இருப்பதை கணவன் உணர்கிறான்

மாம்பழத்தை கொண்டுவந்து நாடகத்தை ஆரம்பிக்கிறார்கள்

புணிதவதி பிராத்தித்தால் மாம்பழம் வருகிறது

கணவன் புணிதவதியை விட்டு ஓடி விட தீர்மானிக்கிறான்அவனே கோவலன்

வெளிநாட்டுக்கு வியாபாரம் செய்ய செல்வதாக கூறி மதுரையில் போய் செட்டிலாகி புதிய மனைவியோடு குடும்பம் நடத்தி பிள்ளையும் பெற்றுக்கொள்கிறான்

மாதவி கணிகையர் குடும்பத்தில் பிறந்து தனது தாயாரின் நிர்வாகத்தில் கோவலனின் வைப்பாட்டியாக வாழ்ந்தாலும் மனதில் கோவலனைத்தவிர அடுத்தவருக்கு இடம் கொடாதவள்

மாதவியின் தாயாரால் கோவலன் விரட்டி விடப்பட்டதும் அவன் ஊரை விட்டு போய் விட்டதும் தெரிந்ததும் சமண மதத்தில் தன்னை அர்ப்பணிித்துக்கொள்கிறாள்

மாதவியும் தவநெறிக்குள் சென்று பாவங்களை குறைத்து இறைவனை நெருங்குகிறாள்

மறுபிறவியில் கோவலனே கண்ணகியின் தெய்வீக இயல்பை கண்டு அஞ்சி ஓடி மதுரையில் பிறவி எடுத்திருந்த மாதவியோடு நிம்மதியாக வாழத்துவங்குகிறான்

தன்னை தேடி வந்த கண்ணகியிடம் காலில் விழுந்து விவாகரத்து பெற்றுக்கொள்கிறான்

இப்போது கண்ணகியின் தவம் கேள்விக்குள்ளாகி விட்டது

கண்ணகியின் அன்பு எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகிவிட்டது

மனித அன்பு நிரந்தரமானதல்ல

மனிதர்கள் மீது வைக்கிற பிரேமை மாயமானது அர்த்தமும் அற்றது வீண்

கடவுளுக்கு மனித ஆத்மாவுக்கும் இடைப்பட்ட உறவே அன்பே பக்தியே நிரந்தரமானதும் நீடித்து வருவதும்

அதே மதுரையில் கோவலனே கண்ணகியின் காலில் விழுந்து விவாகரத்து பெற்றுக்கொள்ள எதற்காக அவள் மதுரையை எரித்தாள் என்பதை இறைவன் கேள்விக்குள்ளாக்கி விட்டார்

அப்போது அவள் சுய வெறுப்பில் தன்னை பேயுறுவாகும் படி தன் சித்தியை தன் மீதே பிரயோகித்துக்கொண்டாள் மேலும் இறைவனை நாடி ஊரூராக  சேத்ராடனம் செல்லஅழகிய பெண் உரு பேரிடர் விளைவிக்கும்என்பதாலும் விரும்பியே  பேயுரு ஏற்றுக்கொண்டார் 

தன்னை எப்போதும் கைவிடாதவரான அதிதேவர் சிவனின் மீது ஈடுபாடு பிரேமையை வளர்த்துக்கொள்கிறாள்

நிரந்தரமற்ற மனித உறவுக்காக ஏங்கி நாளை வீணாக்குவதை விட இறைவன் மற்றும் அதிதேவர்கள் மீது வைக்கும் அன்பே நீடித்தது நிரந்தரமானது

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



Saturday, September 24, 2016

எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?




சீடர்கள் செய்யும் தவறு எங்க குருவாக கடவுள்தான் வந்தார் என்பதாகும்

ஒரு குரு இருக்கும்போது அவருக்கு இடைஞ்சல் கொடுக்கும் அசுர ஆவிகள் அவர் சென்றுபோனபின்பு சீடர்களை உணர்ச்சிவயப்படுத்துவதில் சூது செய்கின்றன

ஆஹா ஒஹோ அவரைப்போல உண்டுமா பெரியவா பெரியவா ஜெயகுருராயா இவர்தான் எல்லாம் என மெதுவாக புளகாங்கிதம் உண்டாக்கி கடவுளை இருட்டடிப்பு செய்துவிடுகின்றன

கொஞ்சநாளில் கடவுளே இவர்தான் காட்டிக்கிராம போய்ட்டார்

நாங்க திறமையா கண்டுபிடிச்சோம் என்கிறார்கள்

இப்படித்தான் இந்துமதத்தில் கணக்கற்ற கடவுள்களை உருவாக்குகின்றனர்

இவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பெரியவர்களே

இவர்களே கடவுள் என நின்று கொள்ளாமல் இவர் மூலமாக கடவுளை வணங்குகிறோம் என வழிபாடுசெய்தால் எந்த தவறும் வராது

அவர்தான் கடவுள் என்றாலும் தவறு வராது அவர் கடவுளல்ல குரு என்றாலும் தவறு வராது

யார் மூலமாக கடவுளை வணங்கினாலும் என் மூலமாகவே கடவுளை வணங்குகிறீர்கள் ஏனெனில் நானே ஆதியஜ்னா விராட்புருசன் என்கிறார் கிரிஸ்ணர்

படைப்புகள் அனைத்தும் அவருக்குள் அவர் மூலமாகவே படைக்கப்பட்டுள்ளன

பரமாத்மா சகல படைப்புகளையும் தன்னகத்தே கொண்டிருப்பது

பரமாத்மாவே  நாராயணன்

பிதாவிடம் என் மூலமாக அன்றி ஒருவனும் வாரான் என்கிறார் இயேசு

நாராயணனுக்குள் படைக்கப்பட்ட அனைத்தும் தேவர்கள் உட்பட யாரும் கடவுளுக்கு இணையானவராக படைக்கப்படவில்லை

நாராயணனுக்கும் இணையாக படைக்கப்படவில்லை நாராயணனை விட தாழ்ந்த அம்சத்தோடே படைப்புகள் அனைத்தும் இருந்தன

அதில் நாராயணனை விட பெரியவரான இறைவனின் சாயலில் இறைவனுக்கு இணையானவராக ஒருவர் படைக்கப்பட்டார் அவரே ஆதம் என பைபிளிலும் குரானிலும் வர்ணிக்கப்படும் சிவன்

நாராயணனுக்குள் படைக்கப்பட்டாலும் சிவன் நாராயணனை விட தாழ்ந்தவரல்ல இணையானவர்


இந்த உண்மை புரியாமல் சைவர்களும் வைணவர்களும் கிரிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சண்டையிட்டு மண்டையை உடைக்கின்றனர்

சைவர்கள் என்ன சொல்கிறார்கள் சிவனே கடவுள் அதனால் நாராயணன் அவரைவிட சின்ன ஆள்

வைணவர்களோ நாராயணன் கடவுள் சிவன் சின்ன ஆள் என்கிறார்கள்

இன்னும் கொஞ்சம் தெரிந்தவர்கள் சிவனை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் அவரும் சிவனே ஏன்கிறார்கள்

நாராயணனை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் அவரும் நாராயணன் என்கிறார்கள்

கொஞ்சம் நிதானமாக சிவனையும் விட பெரியவரும் நாராயணனை விட பெரியவருமான ஒருவர் இருக்கிறார் அவரே அரூபமான கடவுள் அவர் சிவனாகவும் நாராயணன் ஆகவும் வெளிப்பட்டுள்ளார் என சிந்தித்துவிட்டால் உண்மை புரிந்துவிடும்

மும்மூர்த்திகள் மூவரும் மூன்று கடவுள் என விளக்கம் சொல்லாமல் மும்மூர்த்திகள் மூவரும் அதிதேவர்கள் இறைவன் இவர்களை படைத்தவர் அரூபி அல்லா என புரிந்துகொண்டால் சண்டை முடிந்தது

மூன்று மூர்த்திகளில் சிவனும் நாராயணனும் நிரந்தரமானவர்கள் பிரம்மா கல்பத்துக்கு கல்பம் பொறுப்பு மாறும் தற்காலிகமானவர்

ஆக இரண்டு அதிதேவர்கள் சிவனும் நாராயணனும் அறியப்படாத கடவுளின் அறியப்பட்ட வெளிப்பாடுகள்

அல்லாவைப்போன்றவர்கள் அல்லா காப்ரியேல் மைக்கேல் என்ற இரண்டு அதிதேவர்கள் மூலமாகத்தான் சகலவற்றையும் நிர்வாகம் செய்கிறார் என்கின்றன பைபிலும் குரானும்

அல்லா மைக்கேல் என்ற சிவனின் மூலமாகவும் காப்ரியேல் என்ற நாராயணன் மூலமாகவும் சகலவற்றையும் இயக்குகிறார்

ஆதியும் அந்தமும் இல்லாதவர் யார் மூலமாக பிரபஞ்சத்தை இயக்குகிறரோ அந்த மூலங்கள் மூலமாகவே வழிபடு என்பதே நாமம்

ஆதி மூலம் தெரியுமா உணக்கு என தர்க்கம் செய்வார்கள்

அது ஒரு பிரகிருதி அல்ல

ஆதி ஒரு பிரகிருதி மூலம் ஒரு பிரகிருதி

ஓம் நம சிவாய

சிவனாக ஆன. ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ நாராயணாய

நாராயணனாக ஆன ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஆதி மூலம் என்பது இரண்டு காரணிகளை  உடையது

ஆதி அல்லா என்றால் ஒரு மூலம் நாராயணன்

ஆதி அல்லா என்றால் இன்னொரு மூலம் சிவன்

ஆதியும்  அந்த மூலமும் சேர்ந்ததே ஆதிமூலம்


எட்டுமா எட்டாதா கேள்வி எட்டாத காரியத்தில் தலையிடாதே என உபதேசமும் உண்டு

உயரமான உண்ணதமான கடவுள் விசயத்தில் அவர் இவர் என தலையிடாதே அவரை கடவுள் என மட்டும் வைத்துக்கொள் எட்டாத காரியத்தில் தலையிடாதே

அவர் எட்டுவரா எட்டுவார் எட்டும் எப்போ ?

சித்தர்கள் சொன்னார்கள் :

இரண்டும் பற்றடா

இரண்டையும் பற்றினால் எட்டும்

எட்டும் இரண்டும் பற்றடா சித்தர‍கள் பாடியது

ஆதியையும் மூலத்தையும் பற்றினால் எட்டும்

அல்லாவையும் சிவனையும் பற்று ஓம் நம சிவாய

அல்லாவையும் நாராயணனையும் பற்று ஓம் நமோ நாராயணாய

நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் அல்லாவை வழிபடு

அல்லாவை எட்டும் வழி சித்திக்கும்

எட்டும் ரெண்டும் தெரியுமா எட்டும் இரண்டும் அறியாமல் இறைவனை உணரமுடியாது

சித்தசிகாமணிகள் ஓயாது எட்டும் இரண்டும் என்பார்கள்

அர்த்தம் என‍னவென கேட்டால் அவர் பாடியிருக்கிறார் இவர் பாடியிருக்கிறார் என்பார்களே தவிர அர்த்தம் சொல்லாமல் எட்டும் ரெண்டும் தெரியுமா தெரியுமா என மிரட்டிக்கொண்டே இருப்பார்கள்

அஸ்டாங்கம் பஞ்சாட்சரம் என்கிற அளவில் கொஞ்சம் வருவார்கள் முழுமையாக தெளிவு அவர்களிடத்து  இல்லை

முழுமை சமரசவேதத்தில் உள்ளது

இரண்டு மூலங்களின் மூலமாகவும் ஆதியாகிய அல்லாவை வழிபடு

ஓம் நமோ நாராயணாய. என்பது அஸ்ட்டாங்க மந்திரம்

ஓம் நம சிவாய. என்பது பஞ்சாட்சர மந்திரம்

இந்த  இரண்டையும்  சேர்த்தே  பாராயணம் ஜபம் தியானம் செய்தால் அல்லாவாகிய இறைவன்  நமக்கு  வெளிப்பட்டு  தன்னை  உணர்த்துவார்


நமக்கு  அருள்பேறுகளையும்  ஞானத்தையும் கரைதிரைகள் நீக்கி மரணமில்லா பெருவாழ்வு பெரும் நிலையையும் அருளுவார்

எங்கும் செல்லுங்கள் எந்தக்கோவிலிலும் வழிபடுங்கள் அங்கிருக்கும் சக்தியை தேவர்களை குருவினர்  மூலமாக  இறைவா  என  வழிபடுங்கள்

குருவின் மூலமாக  இறைவனை  வழிபடு
குருவையே  கடவுள்  என  வழிபடாதே



நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்                 
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி






Thursday, July 7, 2016

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 5








அல்லது இந்தப்பிலேயரிலும் கேட்கலாம்
https://ia801505.us.archive.org/20/items/KandakottamDeivaManiMaalaiV_201607/Kandakottam_Deiva_mani_maalai%20V.ogg



சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
சஞ்சலா காரமாகிச்
சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
தன்மைபெறு செல்வம்ந்தோ
விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
வேனில்உறு மேகம்ஆகிக்
கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
காலோடும் நீராகியே
கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
கருதாத வகைஅருளுவாய்
தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
உற்றசும் பொழுகும்உடலை
உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
உற்றிழியும் அருவிஎன்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
மின்என்றும் வீசுகாற்றின்
மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
கைவிடேன் என்செய்குவேன்
தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
இகழ்விற கெடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
கலநீர் சொரிந்தஅழுகண்
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
பகீர்என நடுங்கும்நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
பலிஏற்க நீள்கொடுங்கை
சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
அழுதுண் டுவந்ததிருவாய்
அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
அணிந்தோங்கி வாழுந்தலை
மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
மிக்கஒளி மேவுகண்கள்
வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
விழாச்சுபம் கேட்கும்செவி
துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
சுகரூப மானநெஞ்சம்
தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோர்கைகன்
சுவர்ன்னமிடு கின்றகைகள்
சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

செல்வம் அதை  சேர்க்க அலைபவர்களுக்கு முகுந்த சஞ்சலத்தை கொடுக்கும் அப்படி சஞ்சலப்பட்டு சேர்க்கிரவர்களிடத்து ஜடமாக புதைக்கப்பட்டு கிடக்கும் கருப்புப்பணம் என ஸ்விஸ் பேங்கில் கிடக்கும் அதற்கு வட்டியும் கட்டுவார்கள் . ஆனால் அது எப்போதும் வீடு வந்து சேராது கணக்கில்  எழுதி எழுதி பார்த்துக்கொள்ளுவார்கள் அவ்வளவுதான் .

இன்னும் சில அமைச்சர் பெருமக்கள் அல்லக்கை பினாமிகளின் பேரால் சொத்தாக வாங்கிபோட்டு அவர்களை எப்போதும் கூட வைத்து சாப்பாடு சோறு போட்டுக்கொண்டிருப்பார்கள் ; ரெண்டு மூன்று தலைமுறைக்கு பின்பு அது கைவிட்டு போய்விடும்

பிறகெதுக்கு அளவுக்கு அதிகமாக காசாக சேர்க்கிறார்கள் .இருந்தால் சடமாக இருக்கும் போனால் ஆறாக போய்க்கொண்டிருக்கும் அந்த செல்வத்தை கருதாத வகை அருளுவாய்

இல்லை என்று ஏங்காத அளவு செல்வம் வந்துகொண்டிருந்தால் போதும் ; அருளை நாடுவோருக்கு பொருளை தேவைக்கு இறைவன் கொடுக்க அறிந்தவர் . இல்லை என ஏங்க விடமாட்டார் ரெம்பவும் வந்து இருப்பிலும் இருக்காது

7. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

8.
ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

9.
உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?

10.
மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?

11.
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? -  சற்குரு இயேசு

இறைவன் நம் தேவையை இல்லை எனாது சந்திப்பார் என்ற நம்பிக்கை உள்ள மனிதனே பணத்தாசை என்னும் பேயிடமிருந்து தப்பமுடியும்

அடுத்த பாடல் பெண்ணாசை பற்றியது மனிதனுக்கு கவிதை எழுதி அதை நான்கு பேர் படித்து ஆகா ஓகோ என பாராட்டவேண்டும் என்றொரு நப்பாசை உள்ளது . ஆனா உணா என்றால் மானே தேனே குயிலே என்று கவிதைபாட ஆரம்பித்துவிடுகிறார்கள் . அதாகப்பட்டது என்னெவென்றால் எல்லா ஆணுக்குள்ளும் பெண்மை இருப்பதை அறியாமல் உணர்ந்து திருப்தியடையாமல் தன்னை விட்டுப்போன ஒன்றை தேடி அலையும் தாகம் இந்த மையல்

ஆதியில் சிவன் ஒருவரே படைக்கப்பட்டார் பின்பு அவரில் பாதி பார்வதியாக பெண்ணாக பிரிக்கப்பட்டார் . கருப்புசாமியால் ஏமாற்றப்பட்டு காமம் உண்டாகும்வரை நல்ல இணையாக அன்பும் ஆதரவுமாகவே இதமும் நேயமுமாகவே இருந்தார்கள் இன்றும் கூட பாருங்கள் ஆண்பெண் பேதமில்லாத சிறுவயதில் அனுபவங்கள் இதமாகவே இருக்கும் . வயது வந்தபிறகுதான் எல்லா பிரச்சினைகளும் . ஏக்கம் தாகம் மோகம் பித்து என்பதெல்லாம் எப்போதும் திருப்தி அடையாதது காரணம் தனுக்குள் மூழ்கி தன் முழுமையை உணராதவரை தனக்குள்ளேயே கரைந்துள்ள பெண்மையை உணராதவரை அதற்கு ஒருபோதும் ஈடாகாத பெண்களை நாடி நாடி திருப்தியில்லாமலேயே வாழ்வு ஓடிக்கொண்டிருக்கும்

உன் ஆத்மா முழுமையானது உனக்கு நல்ல இணை நீ மட்டுமே நல்ல நண்பன் நீ மட்டுமே உனக்குள்ளாகவே எல்லாமும் இருக்கிறது வெளியே கடவுளைத்தவிர யாரும் உனக்கு நிம்மதி கொடுக்கமாட்டார்கள் உதவியும் செய்யமாட்டார்கள் வீணாக ஏங்கி சுற்றி திரியாதே

உனக்குள்ளேயே மூழ்கி ஆனந்தத்தை உணர்க . இறைவனை உணர்ந்து அவனில் நிலைத்தால் தெய்வீக பேரானந்தம் ; என்றும் மங்காத என்றும் திகட்டாத பேரானந்தம் இறைவனின் சமூகம்

உன்னிடமிருந்து அரைகுறைகளுக்கு நிம்மதி பேரானந்தம் பாயவேண்டுமே தவிர அடுத்தவரிடம் யாசகம் கேட்காதே . இறைவனிடம் கையேந்து மனிதர்களிடம் எதையும் எதிர்பாராதே

பெண்மையை மதி போற்று எதையும் எதிர்பார்க்காதே

அடுத்த பாடலில் இறைவனை போற்றாத மனிதனின் உறுப்புகள் ஒவ்வொன்றும் கேவலமானது என்கிறார் வள்ளலார்

அடுத்த பாடலிலோ இறைவனை போற்றுகிற மனிதனின் உறுப்புகள் ஒவ்வொன்றும் போற்றுதலுக்குரியது என்கிறார்
இவைகள் நம்மை உணர்த்துவிக்கட்டும்

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்  

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி