Total Pageviews

Tuesday, November 15, 2011

இறைஅச்சமும்,தன் பலகீனத்தை உணர்வதும்,மனத்தாழ்ச்சியும் கடவுளுக்கு பிரியமானவை!

கடவுள் மனிதர்களைப்போல் குற்றம் பிடிப்பதில்லை நமது எல்லா பலகீனங்களிலும் நாம் இறைஅச்சமுள்ளவர்களாய் நமக்குள் போராடினாலே போதுமானது நம் மீது பிரியமுள்ளவராய் இருப்பார்!
அதை வெல்லுகிற வலிமையையும் தறுவார்!

இறைதூதர் இயேசு சொன்ன ஒரு குட்டிக்கதை:
10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

                                                  **********
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கடவுள் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
நீதிமான்கள் கூப்பிடும்போது கடவுள் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.