Total Pageviews

Friday, February 21, 2020

நிர்வாண ஸஷ்டகம்



ஆதி சங்கரர் 8 வயதில் துறவுக்கு அனுமதி தன் தாயிடம் பெறுகிறார்

தன் குருவை தேடி கால்நடையாக வட இந்தியாவில் பயணிக்கிறார்

உஜ்ஜையினியில் அவருக்கு முன் குறிக்கப்பட்ட குருவானவர் தென்படுகிறார்

சீடனின் தகுதியை அறிந்துகொள்ள நீ யார் என வினாவுகிறார்

9 வயது குழந்தை தன்னைப்பற்றி சொன்னவையே இவ்வார்த்தைகள்

1)மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

2)ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

3)ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

4)ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே ஜாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

5)அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

இந்தப்பாடலுக்கு அர்த்தம் உணரும் முன்பு முருகன் தன்னைப்பற்றி அருணகிரி நாதரிடம் யார் என சொன்னதாக கந்தரலங்காரத்தில் பாடல் ஒன்று உள்ளது

தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி கோன்
றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே

நீ யார் தெரியுமா ? நீ மண்ணா இல்லை நீ நீரா இல்லை நீ காற்றா இல்லை நீ நெருப்பா இல்லை ஆகாயமா அதுவும் இல்லை

எல்லாம் தானான கடவுளா அதுவும் இல்லை . ஆதியிலே வெளிப்பட்ட சத்தம் அசரீரியா என்றால் அதுவுமில்லை ஏனென்றால் அது சகலவற்றையும் தன்னுள் தாங்கும் பரமாத்மா

அப்ப யார்தான் நான் ?

நீ சரீரி .

என்ன முருகன் குழப்புகிறார் ?

நீ பஞ்சபூதமோ அதனால் ஆன உடல் அல்ல .

அல்லது காற்றைப்போன்ற உயிருமல்ல

அல்லது கடவுளா அதுவுமில்லை பரமாத்மாவா அதுவும் இல்லை

பிறகு யாராம் ?

தனித்துவமான ஜீவாத்மா . அதற்கென்று ஒரு சூக்கும சரீரம் இருக்கிறது

அது அழிவற்றது .

கீதை 2:20 ஆத்துமாவை பொறுத்தளவில் அதற்கு பிறப்போ இறப்போ எப்போதுமில்லை ! புதிதாய் வருவது அல்லது இல்லாமல் போவது என்பதும் அதற்கு இல்லை ! ஆத்துமா பிறப்பு இறப்பை கடந்தது ; நித்தியமானது ;எப்போதும் இருப்பது ஏற்கனவே இருந்தது ! உடல் அழிந்தாலும் ஆத்துமா அழிவதேயில்லை !!

அதிதேவர் சிவனுக்கு அடுத்த நிலையில் சிவனின் அம்சமான நான்கு சிவகுமாரர்கள் இருக்கிறார்கள்

1)அருள்நந்தி சிவம்
2)பரஞான சிவம்
3)மெய்கண்ட சிவம்
4)உமாபதி சிவம்

இந்த நால்வரே சனகாதி முனிவர்களாக தட்சினாமூர்த்தியாக சிவன் உபதேசித்த போது உபதேசமும் பெற்றவர்கள்

சமயக்குரவர்களாக பூமிக்கு வந்தவர்களும் இந்த நால்வரே

பரத்திலே ருத்ரனான உள்ள அதிதேவர் சிவன் இனி பூமிக்கு நேரடியாக வருவதில்லை

இந்த நால்வரே சிவனின் பிரதிநிதியாக பலமுறை பூமிக்கு வந்தும் போய்க்கொண்டும் உள்ளனர்

பூமியில் இவர்கள் யாரேனும் அவதரித்து இருந்தால் பூமியைப்பொறுத்து அவரே சிவனைப்போன்றவர்

சிவனின் பிரதிநிதி ; ஆனாலும் சிவன் அல்ல

மற்ற எல்லா மனிதர்கள் ; ஞானிகள் ; யோகிகளைக் காட்டிலும் சிவனுக்கு இணையானவர்

சிவனோடு கூடி இருப்பவர்

சிவ + யோகம் = சிவோகம்

ஆதிசங்கரர் அந்த மெய்கண்ட சிவனே ஆவார்

ஆகவே சிவனோடு கூடியிருப்பவர் என்ற முறையில் சிவோகம் சிவோகம் என்றார்

சிவோகம் என்ற சமஸ்கிரதம் சொல்லாக மட்டும் பார்க்கிற அஞ்ஞானிகள் சிவோகம் என்றால் நான் சிவம் நான் சிவம் என ஆதிசங்கர்ர் சொன்னதாக தரிக்கித்திரிகிறார்கள்

அவர்களின் ஞான மாயை அவர்களை படுகுழியில் தள்ளிவிடுகிறது

ஆதி சங்கரரே நான் சிவன் என சொல்லிவிட்டார் ; அதைப்போல நானும் சிவனாகி விட்டேன் என துருத்தி அஹம்பாவத்தின் பிள்ளைகள் ஆகி விடுகிறார்கள்

சமஸ்கிரதம் என்பது தமிழின் அடிப்படையில் நின்று பல மொழிக்காரர்களையும் ஈர்க்கும் வண்ணம் சிவன் உருவாக்கிய மொழி

அதை சரியாக புரியவேண்டுமானால் தமிழ் படுத்தி பார்க்கவேண்டும்

சிவோகம் = சிவ + யோகம்

யோகம் என்றால் கூடியிருத்தல் ; இயைந்து இருத்தல் ; ஒன்றாக இருத்தல் என அர்த்தம்

சிவ + யோகம் என்றால் சிவனும் நானும் கூடியிருக்கிறோம் என்பதாகும்

பூமியிலே வந்த சிவகுமாரர்களில் ஒருவரான இயேசுவும் இதே வார்த்தையை சொன்னார்

நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் = சிவோகம்

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்

அதுபோல மெய்கண்ட சிவமானவர் பூமியில் ஆதிசங்கரராக அவதரித்து வந்திருப்பதனால் தான் சிவகுமாரன் என்றார்

1)நான் மனமா அதின் புத்தியா அதின் அகம்பாவமா அதின் ஞானமா என்றால் நிச்சயமாக இல்லை

அல்லது உடலின் ஐம் புலன்களா என்றால் அவைகளுக்கும் அப்பாற் பட்டவன்

அல்லது ஆகாயம் ; காற்று ; நீர் ; நிலம் ; நெருப்பா என்றால் பஞ்ச பூதங்களையும் கடந்தவன் நான்

ஆனந்த ரூபன் சிவன்

அடியேன் சின்ன சிவன்

சிவனோடு ஒன்றி இருப்பவன்

2) நான் உயிர் இல்லை அல்லது தச வாயுக்களும் இல்லை அல்லது ஏழு தாதுக்களும் இல்லை

ஐம் புலன்களின் நுகர்ச்சிகளும் இல்லை
மனதை மூடியுள்ள ஐவகை கோசமுமல்ல

அடியேன் சின்ன சிவன்

சிவனோடு ஒன்றி இருப்பவன்

3)என்னிடம் மறுப்பும் வெறுப்பும் இல்லை ; விருப்பமோ ஆர்வமோ இல்லை

என்னிடம் பேராசையும் பெருநஷ்டமும் இல்லை ; கர்வமும் குரோதமும் இல்லை ; இன்பமோ துன்பமோ இல்லை

என்னை கட்டுப்படுத்தும் நியதிகளும் இல்லை ; பலன் விளைவுகளும் இல்லை ; தேவைகளும் இல்லை ; தேவையற்றவைகளும் இல்லை

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்

4)நான் பாவ புண்ணியங்களை கடந்தவன் ; இன்பமோ துன்பமோ என்னை பாதிப்பதில்லை ;

வேதமோ வேள்வியோ ; மந்திரமோ தீர்த்தமோ அவசியமற்றவன்

அறிதல் உணர்தல் புரிதல் இம்மூன்றிர்க்கும் அப்பாற்பட்டவன்

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்

5)நண்பர்களைம் பகைவர்களைம் பேதம் பிரிப்பதில்லை
ஜன்ம ஜன்மாங்களில் குறிப்பிட்ட தந்தையோ தாயோ எனக்கு இல்லை
உறவிணர்கள் நண்பர்கள் குரு சீடன் என்ற பந்தபாசமும் இல்லை

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்

6)மல மாச்சர்யங்கள் விருப்பு வெறுப்புகளை கடந்தவன் ; தன்னில் தானே லயித்து உலகத்தோடு ஒட்டாதிருப்பவன் ; இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவன்

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்







ஜெகஜனனி



இன்று ஒரு கிராமத்து கோவிலை பார்த்தேன்

சின்னச்சாமி தடாதகை பிராட்டியார் கோவில் என எழுதியிருந்தது

சின்னச்சாமி என்றால் சின்ன சிவன் அதாவது நான்கு சிவகுமாரர்களில் ஒருவர்

குறிப்பாக அர்ச்சுனரை குறிக்கும் என்றறிவேன்

யார் இந்த தடாதகை என்று யோசித்துக்கொண்டிருந்தால் கடைசியில் அது மீணாட்சியாம்

ரெம்ப நாளாக இந்த மீணாட்சி சின்னகாளி என்ற சந்தேகம் இருந்தது

சிவனுக்கு மனைவி காளீஸ்வரி என்றால் சின்ன சிவனுக்கு மனைவி சின்ன காளி மருதகாளி ராஜகாளி திரேவ்பதி ஒரே நபரே

இன்று தெளிவாயிற்று

இந்தப்பாடலும் கூட ஜெகஜனனி ஜெகத்திலே ஜனித்தவளே என்கிறது

காளியின் அம்சம் அதாவது சின்ன காளி திரெவ்பதியாக துவாபர யுகத்திலே பூமியிலே ஜனித்தாள்

போகரின் மனைவியாக தெத்துப்பட.டி ராஜகாளியாக வாழ்ந்தாள்

கலியுக ஆன்மீக தலைநகராம் மதுரையின் அரசியாக கோலோச்சினாள்

கலியுகத்தில் பூமி அசுர்ர்களுக்கு ஒப்புக்கொடப்பட வேண்டுமே

அதற்காக கண்ணகியை வைத்து மதுரை தீக்கிரையாக்கப்பட்டு சாபத்தீட்டானது

அதனால் மனம் வெதும்பி மதுரையை விட்டு திருவாச்சூருக்கு இடம் பெயர்ந்து மருதகாளியாக தனிமைப்பட்டு உள்ளாள்

கலியுகத்தை முடித்து வைக்க சமரச வேதாந்தியாக என்ற அல்மஹதியாக வெளிப்பட உள்ள அர்ச்சுணன் என்ற போகர் என்ற சொக்கன் இவளை மீண்டும் மதுரை அழைத்து வந்து அரியணையில் அமரச்செய்யும் நாளில் சத்தியயுகம் பிரகடனப்படுத்தப்படும்






முருகா எனும் நாமங்கள்



அருணகிரிநாதரின் கந்தரலங்கார பாடல் விருத்தமாக பாடப்பட்டுள்ளது

Bombay Jayashri Ramnath மிக உருக்கமாக பாடியுள்ளார்

விளிக்கு துணை திருமென்மலர் பாதங்கள்
மேன்மை குன்றா மொழிக்கு துணை
முருகா எனும் நாமங்கள்
முன்பு செய்த பழிக்கு துணை பண்ணிருதோளும் பயந்த
தனிவழிக்கு துணை
செங்கோடமும் மயூரமுமே

முருகா எனும் நாமங்கள்

குமரன் சிவகுமாரன் என்பது பரத்திலே தேவராக உள்ள ஒரு நபர் பூமியிலே மனிதனாக அவதரித்து வருவதை குறிக்கிறது

முக்கியமாக நர நாராயணர்கள் பூமிக்கு மும்முறை வந்துள்ளனர்

திரேதா யுகத்தில் ராமராகவும் லஷ்மணராகவும்

துவாபர யுகத்தில் கிறிஸ்ணராகவும் அர்ச்சுணராகவும்

கலியுகத்தில் இயேசுவாகவும் முகமதுநபியாகவும்

இந்த ஆறு நாமங்களே முருகா எனும் நாமங்கள் & பண்ணிரு தோள்கள்

இந்த ஆறு நாமங்களும் பாவங்களை மன்னிக்க அதிகாரம் பெற்றவை

மத்தேயு 9:6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.






நம்பி கெட்டவர் எவரையா ?


நம்பிக்கெட்டவர் எவரையா ?

பாபநாசம் சிவன் அவர்களின் பாடல்

பல ஆன்மீகர்கள் வாழ்வில் ஒரு பாபம் சாபம் வந்து உறுத்தும்போது அறிவு ஞானம் எல்லாம் வீண் என்பது போல உணர்வுக்கு அடிமையாகி முடங்கி விடுகிறார்கள்

அறிவைக்கொண்டு அவரவர் மனதிற்கு விளக்கம் சொல்ல முடியாது

அப்படிப்பட்ட நிலையில் எளிமையாக மனிதர்களை உயர்த்துவது ; மனதை வசப்படுத்துவது பக்தியோகிகளின் இசையே ஆகும்

நாலு நல்ல பாட்டுகளை உணர்ந்து பாடுபவர்களின் குரலில் கேட்டால் மனது ஆசுவாசப்படும்

சங்கீதக்காரர்கள் என சகல மதங்களிலும் ஆத்மாக்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள்

Dr. Shobana Vignesh அவர்கள் மிக எளியவர்களுக்கும் பலனளிக்கட்டும் என்ற அக்கறையோடு சங்கீத உலகில் சாதனைகள் செய்து வருகிறார்

அதுவும் வள்ளல்பெருமானின் பாடல்களை விருத்தமாக பாடி பிரபலப்படுத்தியும் வருகிறார்

வாழ்க வாழ்க

மயிலாப்பூர் என்று கேள்விப்பட்டதால் அதன் முக்கியத்துவம் உணராதவர்களில் ஒருவனாகத்தான் இருந்தேன்

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் சென்று அமர்ந்து நல்ல தியானமும் சித்தித்தது

தலை வெப்பமேறி கண்கள் எரிச்சல் பட்டதால் அங்கிருந்த கலையரங்கத்தில் தூணில் சாய்ந்தவாறு ஆசுவாசப் படித்திக்கொண்டிருந்தேன்

அப்போது பிராகாரத்தில் மயில் போல அசைந்தாடி எட்டு வைத்து ஆங்காங்கே நின்று ஒருவர் வணக்கம் செய்து கொண்டிருந்தார்

உண்மையிலேயே அப்படி ஒருவர் அங்கிருக்கலாம் அல்லது எனக்கு மட்டுமே கண்ணில் தெறிபவராகவும் பல நிகழ்வுகள் உண்டு

ஸ்தல வரலாறு கல்வெட்டுகளில் உண்டா என தேடியபோது அன்னை மயிலாக மாறி சிவனை சேவித்து வழிபட்ட ஸ்தலம் அதனால் மயிலை என்பது புரிந்தது

நம்பிக்கெட்டவர் எவரையா
உமை நாயகனை
திருமயிலையின் இறைவனை

சிவனும் உமையும் சாதாரண மனிதர்களாக மாறி ஆதம் அவ்வாவாக உலகம் முழுவதிலும் மனித இனங்களை உற்பத்தி செய்தார்கள்

பெண்களை மயிலின் ஒயிலுக்கு ஒப்பிடுவார்கள்

அன்னையோ மயிலாகவே மாறி சிவனை மனம் மகிழ செய்துமுள்ளார்

சிவநாமத்தால் அருட்பெருஞ்ஜோதி

சிவநாமத்தால் அருட்பெருஞ்ஜோதி