Total Pageviews

Tuesday, April 14, 2015

சித்திரைப்புத்தாண்டா ???





சித்திரையை புத்தாண்டாக கொண்டாடுவோருக்கு வாழ்த்துகள்

சூரியன் மேஷம் என்ற நட்சத்திரக்கூட்டத்தை சேர்ந்த நட்சத்திரம்

சித்திரை மாதத்தில்  மேஷ  நடசத்திர கூட்டங்களின் ஒளி சூரியன்  வழியாக  பூமியில் விழும்

எனவே சூரியன் தாய் வீட்டில் இருக்கிறது என்பதாகவும் அடுத்த மாதத்தில் சூரியன் ரிஷிப நட்சத்திர கூட்டத்திற்கு போய் விடுகிறது  எனவும் ஜோதிடர்கள் சொல்லி  சித்திரையை புத்தாண்டாக கூறுகிறார்கள்

அரைகுறை ஞானிகள் இந்த ஜோதிடர்கள் . சிலர் போட்டு கொடுத்த கணக்கை வைத்து எல்லாம் தெரிந்தவர்கள் போல அலட்டிக்கொள்ளும் மாயம் ஜோதிடர்களை எப்போதும் பிடித்திருக்கும்

சூரியன் கூட்டம் விட்டு இன்னொரு கூட்டம் போவதேயில்லை . அது எப்போதும் மேஷ கூட்டத்தில்தான் இருக்கிறது

பூமி சூரியனை சுற்றி வருவதால் பூமியிலிருந்து சூரியன் வழியாக ஒரு கோட்டை கற்பனையாக இழுத்தால் அந்தப்பக்கம் சித்திரையில் மேஷமும் வைகாசியில் ரிஷபமும் என வேறு வேறு கூட்டம் வரும் . இது பூமி சூரியனை சுற்றுவதால் உண்டாகிறது

ஆனால் சூரியன் ஒருபோதும் மேஷ கூட்டத்தை விட்டு இடம் மாறுவதேயில்லை

எனவே சித்திரை முதல் மாதம் என்பது ஒரு பொய்யின் அடிப்படையில் உருவானது

பூமி சூரியனை சுற்றி வருவதின் அடிப்படையில் உத்திராயணம் 6 மாதம் சூரியனுக்கு பூமி இடப்புறமாகவும் தட்சிணாயனம் 6 மாதம் சூரியனுக்கு பூமி வலப்புறமாகவும் சுற்றுகிறது என்பதில் உண்மை இருக்கிறது

பூமியின் வட துருவத்திலிருந்து சூரியன் தென் துருவத்தை நோக்கி 6 மாதம் பக்கவாட்டில் கொஞ்ச கொஞ்சமாக நகரும் . அப்படி தெற்கு செல்லும் சூரியன் அதை நிறுத்தி வடக்கு பக்கமாக தை மாதத்தில் திசை மாறும் .

இந்த நாள் தை மாதத்தில் நடக்கும் . அதனால் தைப்புத்தாண்டு ஆதியில் தமிழர்களாலும் உலகம் முழுவதும் ஜனவரி என்றும் கொண்டாடப்படுகிறது 

ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த போது அவர்கள் அங்கிருந்து ஏப்ரலில் தப்பி கிளம்பியதை வைத்து ஏப்ரல் புத்தாண்டு முதல் முதலில் உலகில் அவர்களால் கொண்டாடடப்பட்டது . அவர்கள் கத்தியின்றி ரத்தமின்றி எகிப்தியரை ஏமாற்றி தப்பி சென்றதால் எகிப்தியரை முட்டாளாக்கினோம் என ஏப்ரல் முட்டாள் தினத்தையும் கொண்டாடினார்கள் ஏப்ரல் பூல்

அந்த யூதர்களின் ரத்த உறவுகளான நம்மூர் பிராமணர்கள் அங்கிருந்து வந்து இந்தியாவில் பூசைத்தொழில் செய்ததால் இந்து வேதத்தை தங்கள் வேதம் போல கைப்பற்றிக்கொண்டு அதை மறந்து விட்ட திராவிடர்களை ஆழுமை செய்த போது சந்தடி சாக்கில் தங்களின் புத்தாண்டான யூத விடுதலை பண்டிகையை சித்திரைப்புத்தாண்டு என இந்தியாவில் திணித்து விட்டார்கள் . அதற்கு இடம் மாறாத சூரியன் வீடு விட்டு வீடு போகிறது என்ற பொய்யை சாக்காக சொல்லிக்கொண்டனர் . ஏப்ரல் பூல் . சூரியன் எப்போதும் அதன் வீட்டில்தான் உள்ளது . பூமிதான் இடம் மாறி ஓடிக்கொண்டுள்ளது .

இந்தியா முழுவதிலும் மார்கழி கடைசி நாளை போகி பண்டிகையாக கொண்டாடுகிறார்கள் . போகி என்றால் பழையதை கழித்தல் அல்லது போக்குதல் . அதாவது அந்த வருடம் முழுவதும் சேர்ந்த பொருட்களில் வேண்டாத குப்பைகளை கழித்து தீயிட்டு கொழுத்தி விட்டு வீட்டை சுத்தம் செய்து புது வருடத்தை தையில் துவங்குவார்கள்

இன்றும் நம் தமிழகத்திலும் இந்தியா முழுவதிலும் பழையன கழித்து வீட்டை வெள்ளையடித்து தையை ஏன் துவக்குகிறார்கள் ?

ஏனென்றால் அதுவே ஆதியிலிருந்து வரும் பூர்வீக பழக்கம் . அதை செய்கிறோம்

ஆனால் அடுத்தவர் திணித்த சித்திரையை புத்தாண்டு என்று வாயிலே சொல்லிக்கொண்டுள்ளோம்

இருந்தாலும் வாழ்த்துகிறேன்

தாங்களும் தங்கள் பங்குக்கு  ஏப்ரல் பூல் என்று சொல்லிவிட்டே புத்தாண்டை கொண்டாடுங்கள்

வியாபாரிகள் ஏப்ரலில் புதுக்கணக்கு புத்தாண்டு கொண்டாடலாம்

விவசாயிகளுக்கு ஏப்ரல் பூல் உற்பத்தியாளர்களுக்கு ஏப்ரல் பூல் வியாபாரிகளுக்கு லாபம் புதுக்கணக்கு துவங்கலாம்

உற்பத்தியாளர்களும் ஏப்ரலில் புதுக்கணக்கு புத்தாண்டு கொண்டாடலாம்

தொழிலாளர்களுக்கு ஏப்ரல் பூல்  நுகர்வோருக்கும் ஏப்ரல் பூல் உற்பத்தியாளர்களுக்கு லாபம் புதுக்கணக்கு துவங்கலாம்

ஜோதிடர்கள் ஏப்ரலில் புதுக்கணக்கு புத்தாண்டு கொண்டாடலாம்

பூமி சூரியனை சுற்றுவதை ஏமாற்றி சூரியன்தான் பூமியை சுற்றி ஒவ்வொரு மாதமும் ஒரு வீட்டுக்கு போகிறது என நம்ப வைக்கவேண்டும் ஏப்ரல் பூல்



ஆனால் விவசாயிகளுக்கு உலகம் முழுவதிலும் அறுவடைத்திருநாள் ; தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் நவம்பர் டிசம்பரில் வருகிறது ; ஆங்கில புத்தாண்டும் வருகிறது . எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு தைப்புத்தாண்டு என்ற பொங்கல் திருநாளை கொண்டாடலாம் 

அவரவர் அவரவர் தரத்திற்கு வாழ்த்து சொல்லியோ அல்லது பூல் சொல்லியோ புத்தாண்டை கொண்டாடுங்கள் 

இருந்தாலும் வாழ்த்துகிறேன்