Total Pageviews

Sunday, January 17, 2016

ஆண்பெண் பேதம் கடர



அண்டமா முனிவரெல்லாம் அடங்கினாரே பெண்ணுக்குளே என்றொரு பழமொழி உண்டு . ஆண்பெண் பேதம் பெண்ணிச்சை அவ்வளவு எளிதாக கடரமுடியாதது

அபிராமி அந்தாதியின் இந்த பாடல்களில் ஆண்பெண் பேதம் கடர வழிகாட்டுதல் உள்ளது

81:அணங்கே.-அணங்குகள்நின்பரிவாரங்கள்ஆகயினால்,வணங்கேன்ஒருவரை,வாழ்த்துகிலேன்நெஞ்சில்,வஞ்சகரோடுஇணங்கேன்,எனதுஉனதுஎன்றிருப்பார்சிலர்யாவரொடும்பிணங்கேனஅறிவுஒன்றுஇலேன்,என்கண்நீவைத்தபேர்அளியே.

82:
அளிஆர்கமலத்தில்ஆரணங்கே.அகிலாண்டமும்நின்ஒளியாகநின்ற
ஒளிர்திருமேனியைஉள்ளுந்தொறும்,களிஆகி,அந்தக்கரணங்கள்விம்மி,கரைபுரண்டுவெளியாய்விடின்,எங்ஙனேமறப்பேன்,நின்விரகினையே

அணங்கு என்றால் சர்வலட்சணம் பொருந்திய பெண் அவர் தாயை அணங்கு ஏன்கிறார் மற்றபடி நான் காணும் பெண்கள் யாரையும் நினது பரிவாரங்களாக சேடிகளாக பார்க்கும் புண்ணியத்தை என் கண்ணில் நீ வைத்தாய்

புண்ணியம் நிரம்பிய தாமரையில் குடியிருக்கும் பேரழகே நினது அகண்டகோடி பிரகாசத்தை தரிசித்து அருள் பெற்ற நான் உன் கால் தூசிக்கு கூட தகுதியில்லாத பெண்களைப்பார்த்தா மயங்குவேன்

70:கண்களிக்கும்படிகண்டுகொண்டேன்,கடம்பாடவியில்பண்களிக்கும்குரல்வீணையும்,கையும்பயோதரமும்,மண்களிக்கும்பச்சைவண்ணமும்ஆகி,மதங்கர்க்குலப்பெண்களில்தோன்றியஎம்பெருமாட்டிதன்பேரழகே.

71:அழகுக்குஒருவரும்ஒவ்வாதவல்லி,அருமறைகள்பழகிச்சிவந்தபதாம்புயத்தாள்,பனிமாமதியின்குழவித்திருமுடிக்கோமளயாமளைக்கொம்புஇருக்க
இழவுற்றுநின்றநெஞ்சே.-இரங்கேல்,உனக்குஎன்குறையே?

72:எங்குறைதீரநின்றுஏற்றுகின்றேன்,இனியான்பிறக்கில்,நின்குறையேஅன்றியார்குறைகாண்?-இருநீள்விசும்பின் மின்குறைகாட்டி மெலிகின்றநேர்இடைமெல்லியலாய்.தன்குறை தீர எங்கோண் தலைமேல் வைத்த தாமரையே

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அண்ணையின் அழகை தரிசித்தால் ஒழிய பார்க்கும் பெண்களை ஆ அழகா என வெறிக்கும் கண்கள் மாறாது

மாசுமருவில்லாத அழகான கோமளயாமளை யின் அன்பையும் அருளையும் உள்வாங்கி விட்டாலோ பார்க்கிற பெண்களிடமெல்லாம் அது குறை இது குறை என்பது போல குறை தெரிய ஆரம்பிக்கும் நாம் பார்க்கிற பெண்களிடமெல்லாம் அன்னையின் எதோ சில அம்சங்கள் இருக்குமே தவிர முழு நிறைவு இருக்காது பல குறைகள் தெரிய ஆரம்பிக்கும்

நானும் கூட சிறுவயதில் இருந்தே இவ்விசயத்தில் எவ்வளவோ மல்லுக்கட்டிக்கொண்டேதான் இருந்திருக்கிறேன் . அறிவும் அறிவுறுத்தலும் வைராக்கியமும் கொஞ்ச நாள் நிலைக்கும் , பிறகு எதோ ஒரு சாக்கில் பிட்டுக்கொள்ளும் .

999 பாடல்களை பக்தி மனம் கமழ அம்பிகாவதி பாடினாரே அது அவ்வளவு எளிதான காரியமா ? அவ்வளவு மனதை வசப்படுத்தி பாடிய அவரால் அமராவதியை பார்த்த உடன் காதல் பாடல் பொத்துக்கொண்டு வந்துவிட்டது காமம் அவ்வளவு வலியது 

வழுக்கி வழுக்கி விழுந்துகொண்டும் பிரார்தித்துக்கொண்டும் இவ்விசயம் ஓடிக்கொண்டு இருந்தது . இறைவனின் கிருபை அருளால் அன்றி இம்மாயையை வெல்வது இயலாத காரியம் என மனதை தேற்றிக்கொள்வேன்

ஆனால் அதிதேவர் நாராயணியின் மீது பக்தி அதிகரித்ததும் அவரை அறிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் தொடங்கிய பிறகு அவரில் தியானிக்க தொடங்கிய பிறகும் என்னை அறியாமல் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் இது குறை அது குறை என்பதுபோல எண்ணம் வர ஆரம்பித்தது

பெண்கள் வாழ்வில் படும் அல்லல்கள் குடும்பம் உய்ய அவர்கள் செய்யும் தியாகங்கள் ; தன் குடும்பத்தின் கெளரவம் கருதியே அவர்கள் தங்களை அழகு படுத்திக்கொண்டு வெளியே நடமாடுகிறார்களே தவிர அந்த அழகால் எந்த பயனும் அவர்களுக்கு கிடைப்பதுமில்லை . என்பதாக எண்ணம் வரத்தொடங்கியது .

எத்தனை பிறவிகள் நானே பெண்ணாக இருந்திருப்பேன் . ஆணாக பிறந்து பெண்ணை இச்சித்து இச்சித்து வாழ்வதும் பதிலுக்கு பெண்ணாக பிறந்து ஆண்களிடம் காத்துக்கொள்ள அனுதினமும் பயந்து பயந்து வாழ்வதுமாக ஆத்மா அல்லாடிக்கொண்டுள்ளது

ஆணும் பெண்ணும் எனக்குள்ளேயே அடக்கம் . நானே என்னை ஏமாற்றிக்கொண்டே அலைகிறேன்

எனக்குள் அடக்கம் என்ற நிறைவு உணரப்படாதபோதே ஆண்பெண் பேதங்கள் இச்சையை தூண்டுகிறது

பலமுறை பூமியில் ஆணாகவும் பெண்ணாகவும் நானே பிறந்திருக்கிறேன் என்பதை உணராமல் பெண்ணிச்சையை கடர முடியாது

தனக்குள்ளேயே ஆணும்பெண்ணும் அடக்கம் என்ற ஞானத்தால் சிவன் காமத்தை சுட்டெரித்தார் ஆகவே சிவனை பெம்மான் என்பார்கள்

அந்த சிவனே அன்றலர்ந்த தாமரை போன்ற அன்னை நாராயணியை தன் தலையில் வைத்தபிறகுதான் அவரது குறையே தீர்ந்ததாம்

அபிராமி பட்டர் அன்னையின் அழகை எப்படி உள்வாங்குகிறார் பாருங்கள் :

73: தாமம் கடம்புபடை பஞ்ச பாணம்தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதுஎமக்கு என்று வைத்த
சேமம் திருவடிசெங்கைகள் நான்குஒளி செம்மைஅம்மை
நாமம் திரிபுரைஒன்றோடு இரண்டு நயனங்களே.

சகல செளபாக்கியங்களையும் அலங்கரித்தவளாக அன்னை அமர்ந்திருக்கிறாள் அவரை வைரவரே போற்றி புகழ்ந்துகொண்டுருக்கிறார் ; ஆனாலும் அன்னை தன் பிள்ளைகளுக்கென்று சேமம் தர தனது திருவடியை செம்மையான கைகள் நான்கை ஒதுக்கிவைத்துள்ளாராம்

அவரின் சரீரம் ஒளியாக பிரகாசிக்கிறது . மூன்று மாயைகளையும் அழிப்பேன் என்பதாக அவளது நாமம் திரிபுரை எனப்படுகிறது ஞானக்கண்ணோடு பிரகாசிக்கிறாள்

75: தங்குவர்கற்பக தாருவின் நீழலில்தாயர் இன்றி
மங்குவர்மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
பொங்கு உவர் ஆழியும்ஈரேழ் புவனமும்பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.


76: 
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம்நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழிவண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றைமெய்யில்
பறித்தேகுடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.

ஆம் அண்ணையின் அருளையும் அழகையும் ருசி பார்த்தால் ஒழிய ஆண்பெண் பேதம் என்ற குறை நம்மை மயக்கத்தான் செய்யும் .

அவளின் திருமேனியை மனதில் குறித்துக்கொண்டாலோ எமன் வருகின்ற வழியான மாயைகளை பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை என்ற முப்புரத்தை நாமும் சிவன் போல எரித்து விடமுடியும்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி