Total Pageviews

Sunday, March 8, 2020

திருஞானசம்மந்தர் தேவாரம் - தருமபுரம்



பெண்கள் தின வாழ்த்தாகவே திருஞானசம்மந்தர் தருமபுரம் தேவாரம் இருக்கிறது

தருமபுரம் வருகிறார் திருஞான சம்மந்தர்

அங்கு சிவனை தரிசிக்கிறார் ; அவர் உணர்ந்தது எதுவோ அதனை பதிகமாக பாடுகிறார்

இந்த பாடலில் நான்கு கருத்துக்கள் உள்ளன .

அந்த நான்குமே அன்னையைப்பற்றியதாகவே இருக்கிறது என்பதாலேயே பெண்கள் தின வாழ்த்தாகவே இப்பாடலை பதிகிறேன்

பெண்கள் இயல்பாகவே தன் கணவனுக்கு அடிமையாகவே பற்று உறுதியாக இருப்பார்கள்

அன்னம் போன்ற அழகுடையவளே ஆனாலும் மட அன்னமாம்
பெண்களுக்கே உரிய கணவனுக்குரிய அடிமைத்தனம் ; பற்றுதி உள்ளவளாம்


ஆதியாகமம் 3 ;16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
அப்படிபட்ட மலைமகளின் நடை அழகையும் உடை அழகையுமே துணை ; மனதுக்கு ரசனை என மகிழ்ந்து இருப்பவராம் சிவன்

பூத கணங்கள் இசை பாடி மகிழ்விக்கும் போது சிவனார் ஆடுவாராம் ; அப்போது கூட அவரோடு இசைந்தாடும் அவரின் படர்ந்த சடையாக இருப்பவளும் கங்கா அன்னைதானே

இசைக்கப்படும் ஏழிசையிலும் வேதங்கள் கலந்து வருகின்றனவாம் ; அது எது போல என்றால் பூமியை விம்மி விம்மி தழுவி பூமிக்கு சத்தளிக்கும் கடலைப்போன்ற அன்னையானவள் சிவனை தழுவி தழுவி அவருக்கு தெம்பும் பலமும் தருகிறாளாம் அன்னை

ஆழ்கடல் அசைவற்று இருக்கும் . தேங்கிய நீர் சாக்கடை ஆகி உயிரற்று கெட்டுப்போய் விடும் . ஓடும் நீரே பிராணவாயுவுடன் கலந்து உயிர்ப்புள்ளது

ஆழ்கடலில் கடலின் மேற்பரப்பில் காற்றால் அலையோடும் ; அதில் வெண்திரை உருவாகும் . இந்த வெண் திரையே திடமாகி கடலுக்கடியில் கடல் பாசி என்ற செடி கொடிகளாக மாறுகின்றனவாம் . அதில் மீன்கள் உருவாகி அதனை உண்டு வளர்க்கின்றனவாம் ; இரை - உணவும் சத்துமாகும்

கடல்கரையில் நுரையாக அந்த வெண் திரையே பொங்கி நின்று விம்மி விம்மி கரையை பொருது பலமளிக்கிறதாம் ; அப்படி சிவநாரை விம்மி விம்மி பொருதிக்கொண்டே இருக்கிற தனங்களை உடையவள் அன்னை

புன்னை மரம் கொடுமையான வெயிலில் குளிர்ச்சியான நிழலை கொடுத்து சத்தான எண்ணையும் கொடுப்பது போல அன்னை தாதுக்களை சேகரித்துள்ள வயிற்றை உடையவளாம்

வண்டுகள் மயங்கிக்கிடக்கிற மலர்களைப்போல எழிலும் பொழிலும் குயில் போன்ற குரலையும் உடைய அன்னை நடைபயில்கிற தருமபுரத்தின் பதி - அரசனாக சிவன் இருக்கிறாராம்

இந்தப்பதிகம் முழுவதும் அன்னையைப்பற்றிய புகழ் வருகிறதே தவிர சிவனைப்பற்றி புகழ் இல்லை