Total Pageviews

Saturday, March 15, 2014

கீதை ஜாதிய ஏற்றதாழ்வுகளை ஆதரிக்கிறதா ??


கீதை 3:27 மூவகை(சத்துவ, ரஜோ &தாமச) குணங்களால் மயக்கமுற்றிருக்கும் ஆத்துமாக்கள் ; உலகிலே நால்வகை தொழிலிருந்து இயற்கையாக எழும்பும் செயல்பாடுகளை தாமே திட்டமிட்டு ; நிர்வகித்து செயல்படுவதாக நம்பிக்கொண்டுள்ளனர் !

கீதை 3:29 நால்வகை தொழிலின் இயல்புகளால் குழம்பிய ஆத்துமாக்கள் ; அறியாமையால் உலகியல் செயல்பாடுகளை சாசுவதம் என நம்பி அதற்கு பந்தப்பட்டு கொள்கிறார்கள் ! ஞானமின்மையால் கீழ்னிலையடைந்த அவர்களின் செயல்பாடுகளை ஞானமுள்ளோர் ஒருபோதும் தடைசெய்யலாகாது !!

கீதை 4:13 மூன்று வகையாகிய மனித குணங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புள்ள உலகியல் செயல்பாடுகள் செவ்வையுற நடக்க நால்வகை தொழில்பிரிவுகள் சமுதாயத்தில் கடவுளால் உண்டாக்க படுகின்றன ! இந்த நால்வகை தொழில்பிரிவுகளின் செயல்பாடுகளை யுகபுருஷனாகிய நான் நிர்வகித்து பரிபாலித்தாலும் இவைகளால் பாதிக்க படாதவனாகவும் செயலற்றவனாகவுமே இருக்கிறேன் !


கீதை ஒரு சமுதாயத்தில் தொழிலின் அடிபடையில் நான்கு வர்ணங்கள் உண்டாகிக்கொண்டே இருக்கின்றன என்பதை சுட்டுகிறது ! அதை பிறப்பின் அடைப்படையில் என மனிதர்கள் மாற்றிக்கொண்ட போதுதான் சிக்கல் வந்தது !

இன்றைக்கும் எல்லா ஜாதிகளிலிருந்தும் பிரம்மத்தை உணரத்தொடங்கி ஏதாவது ஒரு வழியில் ஆன்மீக நாட்டம் பயிற்சி செய்கிறவர்கள் பிராமணர்களே !

எல்லா ஜாதிகளிலிருந்தும் ஐ ஏ ஸ் ஐ பி ஸ் அதிகாரிகள் , தற்போதைய மந்திரிகள் அல்லது பரம்பரை அரசியல்வாதிகள் ; அதிகாரிகள் அனைவரும் சத்திரியர்களே !
அதிலும் இந்தியாவில் அரசியலை மட்டுமே தொழிலாக செய்யும் ஒரு கூட்டம் உருவாகிவிட்டது !

எல்லா ஜாதிகளிலும் வியாபாரம் செய்கிறவர்கள் வைசியரே !

எல்லா ஜாதிகளிலும் வாகணம் கொடுக்கப்படாத அரசு ஊழியர்கள் , தொழிலாலர்கள் , விவசாயிகள் கூலித்தொழிலாளர்கள் அனைவரும் சூத்திரர்களே !

சூத்திரன் என்றால் அடிப்படை வேலைகளை செய்கிறவர்கள் அவர்களை வைத்துதான் எல்லாமே இருக்கிறது என்ற பொருளில் கீதை சொல்லுகிறது ! அதை கேவலமானதாக மனிதர்கள் மாற்றி உபயோகப்படுத்தியது ; பிறப்பின் அடிப்படையில் என தற்பெருமை பாராட்டியது மனிதர்களின் தவறே தவிற கீதைக்கும் அதற்கும் சம்மந்தமில்லை !! ஒரே ஜாதிக்குள்ளும் நான்கு வர்ணங்களை சேர்ந்தவர்கள் அவரவர் வர்ணங்களுடன் நெருக்கமாக உறவு வைத்துக்கொள்கிறார்கள் ! ஜாதிய இயக்கங்கள் கூட்டம் சேர்ப்பதற்காக மட்டுமே ஜாதி ஏழைகளை பயன்படுத்தி ஜாதிய உணர்வை தூண்டுகிறார்கள் !! இது முழுமுழுக்க மனித தவறு !!

கீதை ஜாதிப்பாகுபாட்டை ஆரம்பித்து பரப்பிவிட்டதாகவும் ; மனித நேயமற்ற வர்ணாசிரம தர்மம் -- சனாதன தர்மம் உயர்த்திப்பிடிப்பதால் அது பகுத்தறிவுக்கு புறம்பான ஒன்று என்பதாகவும் மேலோட்டமாக பகுத்தறிவுவாதிகள் பரப்பி விட்டனர் !

சனாதன தர்மமோ ; கீதையோ ஒரு போதும் பிறப்பால் ஜாதிகளில் ஏற்றத்தாழ்வை ஆதரிக்கவில்லை ! அது முழுமுழுக்க மனிதர்கள் தங்கள் சுயத்தால் தவறாக வியாக்கியாணம் செய்தது ! அப்படி வேதத்தை தவறாக பொருள் கற்பித்து மனித நேயமற்ற அராஜகங்களை கீதையின் பெயரால் பரப்பியது அசுர ஆவிகளின் மாயையாகும் ! சாத்தான் வேதம் ஓதுகிறது என்பது இதுவே !

வேத வாக்கியயங்களை ஓதிவிட்டாலே அது கடவுள் சம்மந்தமானது என்பதாக மனிதர்கள் மேலோட்டமாக புரிந்து கொள்ளுகிறோம் !

வேத வாக்கியங்களையே ஓதி அதற்கு கடவுள் சொல்லாத ஒரு அனர்த்தமான அர்த்தத்தை கற்பிக்க அசுர ஆவிகளால் முடியும் என்பது எல்லா மதங்களிலும் இன்று நிரூபனமாகி வருகிறது !

``எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் -- அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ``

உண்மையில் ரிசணாதான் அந்த பச்சிளம் குழந்தையை கொன்றளா என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையிலும் ; அல்லாவின் பெயரால் தான் கொலை செய்யவில்லை என சத்தியம் செய்கிற ஒரு ஏழை வெளிநாட்டு முஸ்லீம் வெலைக்கார சிறுமி உயிப்பிச்சை கேட்ட போது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது அந்த எஜமானி மண்ணித்தால் நாங்கள் கொல்லாது விட்டு விடுகிறோம் ஏனென்றால் குரானில் இந்த வசணம் உள்ளது என மனிதாபிமானம் காட்டாமல் வாளால் வெட்டி கொன்ற சவுதி அரசு ; அதே சவுதியை சேர்ந்த ஒரு மதபோதகர் தனது ஐந்து வயது பெண்குழந்தையை கற்பழித்து கையை காலை மண்டையை உடைத்ததால் ஐந்து மாதம் மருத்துவமனையில் போராடி குழந்தை உயிரை விட்ட பிறகும் குற்றம் நிரூபிக்கபட்டபிறகும் மிருகத்தனமான காமக்கொடூரனை தனது குழந்தையை கொல்ல தகப்பனுக்கு உரிமை உள்ளது ரத்தப்பணத்தை மட்டும் அம்மாவிற்கு கொடுத்தால் போதும் என விடுதலை செய்துவிட்டது ! அதற்கு குரானிலிருந்தும் வசணம் காட்டுகிறது !

நேர்வழியில் நடக்கிற ஒரு தகப்பன் கெட்ட வழியில் செல்லுகிற மகனை கொல்லலாம் என்கிற அர்த்தத்தில்தான் குரான் வசணம் உள்ளது ! அதை ஏறுக்கு மாறாக சவுதி அரசு பயன்படுத்துகிறது !

வேத வசணத்தை ஆதாரம் காட்டிவிட்டு நீதிக்கு மாறாக ஒருவர் நடந்தால் கடவுள் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதுபோல அவர்கள் கடவுளை தங்களுக்கு கைப்பாவை என்பதாக நினைத்துக்கொள்ளுகிறார்கள் ! சாத்தான் வேதம் ஓதி அதற்கு அனர்த்தமான விளக்கம் கொடுக்கும் என்பதும் வேதம் ஒதுகிறவர்கள் எல்லாம் கடவுள் சார்பானவர்கள் இல்லை என்பதும் நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று !!


Kumar Esan said...

மனு தர்மமும் மானிடமும் – பின்வரும் ஸ்லோகங்கள் மனுஸ்மிருதியில் இடம் பெற்றுள்ளன. ‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம் க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் ததைவது வித்யாத்வைச்யாத்ச’ அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. -- அதே மனு தர்மம்தான் அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகலாம் என்று சொல்கிறது.

இதை மற்றோர் விதமாய் சொல்ல வேண்டுமானால், வேதம் ஓத விருப்பம் தெரிவிப்பவன் பிராமணனாக மாறியே அவ்வாறு செய்ய இயலுமேயன்றி சூத்திரனாகவே இருந்து செய்ய இயலாது. இதில் யாரும் எந்த வகையிலும் தடுக்கப்படவோ ஒடுக்கப்படவோ இல்லை. "அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே அனுவ்ரஜா ச சுச்ரூஷா யாவத் அத்யயனம் குரோ: அதாவது, தவிர்க்க முடியாத காலங்களில் ஒரு பிராமண மாணவன் பிராமணன் அல்லாத குருவிடமிருந்து கல்வி கற்கலாம். அவ்வாறு செய்கையில் அம்மாணவன் அக்குருவிற்கு பணிவிடை செய்ய வேண்டும்.

பிற்போக்கு கண்ணோட்டத்துடன் மனுஸ்ம்ருதியை அணுகும் முற்போக்குவாதிக ளின் கண்களில் முன்னுக்குப்பின் முரணாக தென்படும் இந்த தர்மங்களுக்கு பின்னால் பிரகாசிக்கும் உண்மை – மனுஸ்ம்ருதி ஜாதி அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல என்பதே. ஒரு சமூகத்தின் அனைத்து அங்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே சமூக நலன் காக்க முடியும் என்ற கருத்தே இந்த தர்ம நூலின் அடிப்படை. From The Real Concept of MANU SURIT