Total Pageviews

Sunday, December 25, 2016

குசேலர்





மார்கழி முதல் புதன்கிழமை குசேலர் தினம் என அறிவித்தார்கள்

குசேலர் தினம் ஒன்றிருக்குமானால் அதனை நண்பர்கள் தினமாக கொண்டாட அதைவிட சிறந்த தினம் வேறு இருக்காது

துவாபர யுகத்தில் இரண்டு ஜோடி பால்ய சிநேகிதர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்



கிரிஷ்ணர்  குசேலர் ஒரு ஜோடி இதில் கிரிஷ்ணர் பரவான் . அதனால் அது நன்மைக்கு ஏதுவானது

மற்றொரு ஜோடி துருபதன் துரோணர் மண்ணிலிருந்து உண்டானவர்கள் அதனால் இந்த நட்பு மனக்கசப்புக்கும் பகைக்கும் பழிவாங்குதலுக்கும் ஆளானது

எவ்வளவு உயர்ந்த ஞானமாக இருந்தாலும் மண்ணிலிருந்து உண்டாகும் ஞானம் தாழ்மையானது முழுமைக்கு வழிகாட்டாது சித்தர்கள் வேதாத்திரி இன்னும் இன்றைய நவீன நாத்திகவாதிகளான நான் கடவுள் கோஸ்ட்டியினரின் ஞானம்  முழுமை அடையாது ஆனால்  பரவான் ஒருவரின் மூலமாக  கிடைக்கும் ஞானம் நிச்சயமாக நம்மை  வீடு பேறு அடைய  உதவிசெய்யும் சமுதாயத்தையும் முன்னோக்கி நகர்த்திவிடும்

அதுபோலத்தான் நட்பிலும் மண்ணிலிருந்து உண்டான பிறவிகளான  துருபதன் என்ற ராஜகுமாரனும் அவரது  குருவான பரத்வாஜரின் மகனுமான துரோணரும் கல்வி பயிலும்போது நண்பர்களாக பால்ய சிநேகிதர்களாக படிக்கும் காலத்தில் ஆடிப்பாடி மகிழ்திருந்தார்கள்

அதே காலத்தில் கிரிஷ்ணர் என்ற ராஜகுமாரனும் குசேலன் என்ற ஏழைச்சிறுவனும் சாந்திவினி முனிவரின் ஆசிரமத்தில் கல்விபயின்றார்கள் ஆடிபாடி மகிழ்திருந்தார்கள்

படிப்பு முடிந்து அவரவர் வாழ்க்கையில் பதவிகளில் அமர்ந்து அந்தஸ்தில் வித்தியாசத்தில் இருந்தார்கள்

இந்த இரண்டு ஜோடிகளிலும் ஒருவர் அந்த காலத்து புரோகிதர் பூசாரி ஆரிய இனத்திலிருந்து இந்தியா வந்தவர்கள்

கிரிஷ்ணர் அரச பதவியில் மட்டுமல்ல தனது பல்வகை சாதனைகளால் அவரை பெரிய மாயாவி ராஜதந்திரி பராக்கிரமசாலி என்கிற அளவில் உலகம்  ஏற்றுக்கொண்டிருந்தது ஆனால் ஒரு சிலருக்கு  மட்டுமே அவர் அதிதேவர் நாராயணனின் அவதாரம் என்கிற உண்மை தெரிந்திருந்தது .

குசேலரைப்பொருத்து தன் பால்ய சிநேகிதன் தோழன் அன்புக்கு பாத்திரமானவன் என்கிற உறவு இருந்ததே  தவிர அதிதேவர் என்கிற புரிதல் இல்லை

குசேலரும் சரி துரோணரும் சரி புரோகித தொழிலில் அல்லது கற்பிக்கும் தொழிலில் போதிய வருமாணம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள்

ஆரியப்பூசாரிகள் வருமாணம்  இல்லாத பல கோவில்களில் இன்றும் வறுமையில் வாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அன்றைய காலகட்டத்தில் குறைவான கோவில்களே இருந்ததாலும் கல்வி கற்போர் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாலும் மகத்தான தனுர் வேதத்தை கரைகண்ட துரோணாச்சாரியார் போன்றவர்களும் வறுமையில்தான் இருந்தனர் . தன் மகன் அசுவாத்தமன் பாலுக்கு அழும்போது அதைக்கூட நிறைவு செய்யமுடியாத அறிவும் திறமையும் இருந்து என்ன பயன் ?

இந்த நிலையில் தன் தகப்பனிடம் கல்வி கற்றவன் குருவின் குடும்பத்தை மதிக்க கடமைப்பட்டவன் என்றில்லாவிட்டாலும் பால்ய சிநேகிதன் ஒன்றாக கல்வி கற்றவன் என்ற நட்பால் தனக்கு ஒரு கவுரவமான வேலையையும் வாழ்க்கைக்கு ஆதாரமும் தேடித்தான் துரோணர் துருபத மன்னனை காண சென்றார் அது தவறே அல்ல . முடிந்தால் உதவி செய்யலாம் அல்லது ஆறுதலான வார்த்தையாவது சொல்ல வேண்டியது பால்ய சிநேகிதனுக்கு அவசியம்

உலக மாந்தர்கள் பலர் இவ்விசயத்தில் ஞானமாக நடப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்

பால்ய சிநேகிதனுக்கு தராதரம் எல்லாம் தெரியாது . எங்காவது பார்த்துவிட்டால் டே என்று ஓடி வருவார்கள் தராதரம் எதிர்பார்ப்பு தேவை எதுவுமே இல்லாத காலத்தில் எழுந்த உறவு அது . உதவியே செய்யாவிட்டாலும் ஆறுதலாக நின்று பேசினாலே அவர்கள் மனம் குளிர்ந்துவிடும் . பெருமையாக பேசி தொண்டுழியம் செய்ய தயங்க மாட்டார்கள் நாலு பேர் மத்தியில் நம்மை விட்டுகொடுக்கமாட்டார்கள்


இவர்களை மதிக்க தவறியதால் கேடுகளை அனுபவித்தவர்கள் அதிகம் . சானக்கியரால் நந்த ராஜ்ஜியம் அழிந்ததும் இப்படியே அதுபோலத்தான் துருபதன் ஆறுதலாக பேசாமல் என்ன என்னை லேசாக பேசுகிறாய் நான் யார் தெரியுமா ராஜா என துரோணரை அவமானப்படுத்தினான் .இது மண்ணிலிருந்து உண்டான ஆணவம் . அந்த ஆணவத்தால் பழிவாங்கும் வெறுப்பை துரோணர் வளர்த்துக்கொண்டதும் மண்ணிலிருந்து உண்டான வஞ்சம் .

துருபதன் அவமானப்படுத்தினால் என்ன கடவுளின் கிருபையால் மகத்தான குரு வம்சத்திற்கே கல்வி கற்பிக்க தகுதியான ஆள் என பீஷ்மர் போன்ற மகத்தான நபர்கள் துரோணரை மதித்து குருவாக்கியபோது துருபதனை போனால் போகட்டும் என மன்னித்து விட்டிருக்கலாம்

குருகாணிக்கையாக தனது மகனுக்கு ஒரு சிற்றரசு பதவியை கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள் ஆனால் கேவலமாக துருபதை சிறைபிடித்து வாருங்கள் என்றார் . பின்பு சிறைபிடிக்கப்பட்ட அரசனை ஏசி விடுதலை கொடுத்தார் . அதனால் துரோணருக்கு ஒரு லாபமுமில்லை .அதைக்காட்டிலும் அதன் பின்பும் வாழ்க்கைக்கு ஆதாரமில்லை  என்ற நிலையால் அசுவாத்தமன் துரியோதனனின் சூழ்ச்சிக்கு ஆளாக நேர்ந்து பழிபாவம் செய்து சபிக்கப்பட்டவனாக இப்போதும் உள்ளான்

ஏதென்றாலும் வஞ்சம் தீர்க்கலாகாது அது அசுர குணம் . நியாயத்தீர்ப்பு இறைவனுக்கு மட்டுமே உரியது அரசர்கள் நாட்டுக்காக கொஞ்சம் செய்யலாம்  தனிப்பட்ட முறையில் எந்த மனிதனையும் தண்டிக்க எந்த மனிதனுக்கும் அதிகாரமில்லை .கரணம் ஒன்றே ஒன்றுதான் மனிதன் கடவுளின் சாயலில் உள்ளவன் அவனை கொன்றால் நிச்சயம் பிரம்மஹத்தி தோஷம் தப்பிக்கவே முடியாது  

ராமர் போன்ற அவதார புருஷர்களும் ராவணன் முதலான அசுரர்களைக்கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார்கள் கிரிஷ்ணர் ஆளானார் ; அதனால் இயேசுவாக வந்து பதிலுக்கு மரணம் என்ற சிலுவைப்பாடுகளை அனுபவித்தார்



லக்ஷ்மணனும் அர்ச்சுனரும் முகமதுநபியும் பிரம்மஹத்தி தோஷத்திற்கு பதில் சொல்லிக்கொண்டுதான் உள்ளனர்

இப்படியிருக்க மனிதனை நியாந்தீர்க்க எந்த மனிதனுக்கும் உரிமையில்லை இறைவனிடம் அவனை நல்வழிப்படுத்துங்கள் என வேண்டலாம் விலகி செல்லலாம் பழி தீர்க்க எந்த உரிமையும் இல்லை ஒரு நாள் இறைவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்

தன் குடும்பத்தின் நன்மைக்கு யோசிக்காமல் பழிதீர்க்க நினைத்த துரோனரால் துருபதணும் பழிதீர்க்க யாகம் செய்து இப்படி பழிமேல் பழியாக தீமைகளே விளைந்தன

ஆனால் அதே போல ஒரு ஆரிய புரோகிதன் குசேலர் . முடிந்தளவு புரோகிதத்தால் வறுமையில் வாடினாரே தவிர தன் மனைவியால் உங்கள் நண்பரிடம் உதவி கேளுங்கள் என வற்புறுத்தப்பட்ட போதும் தன் நண்பனை எண்ணி பெருமைப்பட்டாரே தவிர உதவி கேட்டு தொந்தரவு செய்ய மனம் வரவில்லை

பலநாள் மனைவியின் பேச்சை தட்டினாலும் வற்புறுத்தலுக்கு இணங்க கண்ணனுக்கு ஏதாவது கொண்டுபோகவேண்டும் என அன்புதான் அவரிடம் விளைந்ததே ஒழிய மனதார அவனை தொந்தரவு செய்யவில்லை

கந்தலும் கசங்கலும் அவல் முடிச்சுமாக கிரிஷ்ணரின் அரண்மனை வாயிலை அடைந்து காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு நண்பனை காண முடியவில்லையே என ஏங்கி வருந்தி நின்றபோது அந்த அன்பின் உணர்வால் கண்ணனே ஓடி வந்து ஆரத்தழுவி அழைத்து சென்றார்

ஆதிதியை மதி



அதிதி தேவோ பவ



முகமதுநபி கூட உன்னைத்தேடி வரும் அதிதிக்கு உதவி செய் ; ஒருவேளை அது தேவதூதன் ஒருவன் உன்னை சந்திக்கும்படி இறைவனால் அனுப்பப்பட்டவனாக இருக்கலாம் என அறிவுருத்துகிறார்

பரவானாகிய கிரிஷ்ணர் அப்படித்தான் நடந்துகொண்டார் அதிதியை தேவன் என்கிற அளவில் குசேலரின் காலை கழுவி புத்தாடை உடுத்தி தன் மனைவியையும் மரியாதை செய்யவைத்து அவருக்கு உணவளித்தார்

அதோடு நண்பன் தன்னிடம் உதவி கேட்க உள்ளம் கூசியவனாக தனக்கு வழங்க தன் வறுமையிலும் அவல் வாங்கி வந்தானே அதை கேட்டு வாங்கி உள்ளன்பை உணர்ந்து உணர்ந்து உண்டார்

அந்த சிநேகிதமே நட்பின் அடையாளம் . அந்த ஒவ்வொரு கவளத்திற்கும் ஒரு கூடை  தங்கம் குசேலரின் வீட்டில் கொட்டியது

கடைசி வரை உதவி என எதையும் கேட்காமாலேயே குசேலர் அந்த அன்பில் மகிழ்ந்தவராக பிரியா விடை பெற்று வீட்டிற்கு வந்தார் ; வந்த பிறகுதான் கிரிஷ்ணரின் மகிமையை உணர்ந்தார்

இந்த நட்பு உன்னதமான அன்பின் வெளிப்பாடு இரு புறத்தும் தரமான அணுகுமுறை அன்பு மரியாதை உள்ளது

ஆனால் குசேலர் ஆரிய பூசாரி என்பதால் கிரிஷ்ணரே விழுந்து விழுந்து கவணித்தார் என்பதாக அதை திரிக்க முயலுகிறார்கள் . நிச்சயமாக இல்லை எதிர்பார்ப்பற்ற உன்னத அன்பு சிநேகிதம் குசேலர் உள்ளத்தில் வழிந்ததையே பரந்தாமன் கெளரவப்படுத்தினார்

அதே கிரிஷ்ணர் துரோணரின் மரண காலத்தில் இந்த பழிவாங்கும் உணர்வால் சீரழிந்தீரே என இடித்துரைத்து மரணத்தை ஏற்றுக்கொள்க என அறிவுறுத்தியதை மறக்கலாகாது . பழிவாங்கலின் உச்சத்திற்கு சென்ற அசுவாத்தமனை மிக கடுமையான சாபமும் கிரிஷ்ணர் கொடுத்து ஆரிய பூசாரிகளின் ஆணவத்தை எச்சரிக்கையும் செய்துள்ளார்

ஆக குசேலரின் உன்னதமான அன்பு பரவானால் மதிக்கப்பட்டது ; ஆனால் மண்ணிலிருந்து உண்டான மனிதர்களின் நட்போ கசப்பாகவே முடிகிறது  

மனிதர்களை நேசிப்பதை விட இறைவனையும் அவனது அதிதேவர்களையும் தேவர்களையும் நேசிப்பது ஆயிரம் மடங்கு மேலானது

நாம் மனிதர்களுக்கு எதை செய்தாலும் முக்கியமாக ஆன்மீக பணிகளை இறைவனுக்கு அற்பனமாகவே செய்யவேண்டும் மனிதர்களிடமிருந்து கூலி பெறுவது குருகாணிக்கை பெறுவது தவறானது என்றே ஸ்ரீகிரிஷ்ணர்  துரோணரை இடித்துரைத்தார்


குரான் 10:72. ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று முகமது நபி கூறினார்).

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் 



அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
 









Friday, December 2, 2016

சாலை ஆண்டவர்


வள்ளலார் தனக்கு பின்வருபவரான தனித்தலைமைப்பதி @ சமரசவேதாந்தி பார்வதிபுரம் சபைக்கு வந்து செத்தவரை உயிரோடு எழுப்புவார் ; அவர் காலத்தில் சமரச சன்மார்க்கம் உலகெங்கும் தழைத்து ஓங்கும் என கூறியுள்ளார்

அவர் வந்து எழுப்ப வள்ளலாரின் அனுக்கசீடர் கல்பட்டு ஐயாவை வடலூர் பார்வதிபுரத்தில் அடக்கம் செய்துள்ளனர்

சாலை ஆண்டவரும் மெய்வழிச்சலையில் சமாதியில் அடங்கியதொடு தன் சீடர்கள் அநேகருக்கு பரிசுத்த அடக்கம் செய்துவருகிறார்கள்

இது பரிசுத்த அடக்கமே தவிர நித்திய ஜீவன் அல்ல . நித்திய ஜீவன் என்பது ஒளிசரீரம் அடைவது சரீரம் எஞ்சாது

வள்ளலார் ஆண்டாள் மாணிக்கவாசகர் போல

ஆண்டாள் ராமானுஜர் உட்பட பலர் கூட இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே அரங்கனிடம் சென்று ஒளியாகி மறைந்தார்

மாணிக்கவாசகரும் பலர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சிதம்பரத்தில் ஒளியில் கரைந்தார்

ஏன் சுந்தரர் திருமணத்தில் கலந்துகொண்ட ஒரு பெரிய கூட்டமே ஒளியாகி மறைந்துவிட்டனர்

இவர்கள் யாருக்கும் சரீரம் எஞ்சவில்லை


யாருக்கெல்லாம் சரீரம் எஞ்சியதோ அவர்கள் இன்னும் முழுமை அடையவில்லை ; ஒன்று மறுபிறவி எடுத்து முன்னேற வேண்டும் அல்லது ஜீவசமாதி அடைந்து வரப்போகிறவர் வந்து சரீரத்தோடு உயிரடையச்செய்து மீண்டும் எழுப்பும்வரை பூமியில் மண்ணறையில் காத்திருக்கவேண்டும்
இன்னொரு பிறவி எடுத்து உழலாமல் அவர் வரும்வரை காத்திருப்போம் என்பதைத்தவிர இதில் பெரிய லாபம் ஏதுமில்லை

இப்படிப்பட்ட ஒன்றை தன் அடியவருக்கு மெய் வழியில் சாலை ஆண்டவர் பரிசுத்த அடக்கம் என்னும் பெயரில் கொடுக்கிறார்கள்

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் இந்த நம்பிக்கையில்தான் கல்லறை கட்டுகிறார்கள்
இதில் பெரிய லாபம் ஏதுமில்லை

ஆனால் இவர்கள் அனைவரும் வள்ளலாருக்கு பின்வருகிறவரான தனித்தலைமைப்பதி வரும் போது உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதே இதில் உள்ளசெய்தி

வடலூர் ஞானசபையில் வந்துயார் கல்பட்டு ஐயாவை கல்லறையை விட்டு எழுப்புவாரோ அவரே வள்ளலாரால் முன்குறிக்கப்பட்ட சமரச வேதாந்தி

இவரால் சாலை ஆண்டவரும் எழுப்பிகொண்டுவருப்படுவார் அதுவரை சாலைஆண்டவரின் சீடர்கள் தங்களை பரிசுத்த அடக்கம் செய்துகொள்ளட்டும்

சமரசவேதாந்தி வந்து சரீரத்தோடு எழுப்ப பலரை பரிசுத்த அடக்கம் செய்யும் பணியை மட்டுமே சாலைஆண்டவர் செய்கிறார்

சமரசவேதாந்திக்கு சாலை அமைக்கும் பணி இது

சாலை அமைக்கும் பணிக்கு வந்ததால் அவர்பேர்  சாலை ஆண்டவர் எனப்பட்டது

எப்போது  ஒருவர் அடங்கினாரோ அவர்  கல்கியுமல்ல ; தனித்தலைமைப்பதியுமல்ல  அல்மகதியும் அல்ல

ஏனென்றால் யார்  உயிரோடு  இருக்கும்போதே  வானத்திலிருந்து  கல்கி  இறங்கி  வருவாரோ  அவரே  அல்மகதி வள்ளலார்  குறிப்பிட்ட தனித்தலைமைபதி

சாலை  ஆண்டவர் அடங்கிவிட்டார்  என்பது  எவ்வளவு  உண்மையோ  அவ்வளவு  உண்மை  அவரை  எழுப்புபவர்  ஒருவர்  வரும்போது மட்டுமே  அவரால்  ஆவிக்குரிய  சரீரத்தில்  நித்திய ஜீவனோடு  எழும்ப  முடியும்

சாலை  ஆண்டவர்  தாம்  என்ன கொடுக்கிறாரோ  அதை பரிசுத்த  அடக்கம்  என்றுதானே  சொல்லியுள்ளார்

அடக்கம் என்றாலே அவர்  இறந்ததுபோல  ஒரு தன்மையை  அடைந்துவிட்டார் என்றுதான் அர்த்தம்

ஆகவே  அடக்கம்  ஆவதே  குறிக்கோள்  என்பவர் தாராளமாக  அடக்கம் ஆகிக்கொள்ளட்டும்

ஆனால் அது தற்காலிக  நிம்மதியே  தவிர  நித்திய ஜீவனல்ல  முழுமையை  கொடுப்பதல்ல  என்பதை உணர்ந்துகொள்ளட்டும்



நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின்
நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் 
குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்



அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி