Total Pageviews

Friday, January 1, 2016

திருவெம்பாவை பாடல் எண் 5




மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளி கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்


மால் என்றால் எல்லை என்றே அர்த்தம் . வெற்றுவெளி யில் பிரபஞ்சம் என்ற வெளிப்பட்டவைகள் நாள் தோறும் வளர்ந்துகொண்டே உள்ளதாம் , வெளிப்பட்டவைகள் என்ற பிரபஞ்சம் உருவம் மற்றும் அருவம் கலந்த அருவஉருவம்

இந்த அருவுருவம் என்ற பிரபஞ்சம் அனைத்தும் பரமாத்மா எனப்படுகிறது . அந்த பரமாத்மாவே நாராயணன் . நாளும் விரிகிற பிரபஞ்சம் அனைத்திற்கும் மாலாக அவர் இருப்பதால் திருமால் என்றனர்

இந்த பரமாத்மாவில் கடவுளின் முழுத்தன்மை போன்ற சாயலில் முழுமையாக மட்டுமல்ல கடவுளைப்போலவே ஓரளவு படைக்கும் ஆற்றலும் உள்ளவனாக மனிதன் என்ற ஜீவாத்மா படைக்கப்படுகிறான் ஆனால் மாயையால் பீடிக்கப்பட்டு தான் ஆத்மா என்றறியாமல் சரீரம் என நினைத்துக்கொண்டுள்ளான்

அவ்வாறு நாராயணனுக்குள் படைப்பட்டவற்றுள் அனைத்தும் நாராயணனுக்கு அடங்கி இருக்க அவருக்குள் படைக்கப்பட்ட சிவன் என்ற முதல் மனிதன் மட்டும் நாராயணனை விட பெரியவரான அருவ இறைவனைப்போலவே படைக்கப்பட்டார் . அதுதான் மனிதப்படைப்பின் மாண்பாக இந்து கிறிஸ்தவ முஸ்லீம் வேதங்கள் யாவும் ஒப்புக்கொள்கின்றன

முதல் மனிதனான சிவன் இறைவனுக்கு இணையாக படைக்கப்பட்டாலும் அவரும் ஆதியில் மாயைக்கு இடம் கொடுத்தாலும் தனது இடைவிடாத தவ வாழ்வால் தன்னை ஆத்மசொருபமாக அருவுருவமாக உணர்ந்து முழுமையடைந்தார் . இதுவே லிங்கமாக அடையாளப்படுத்தப்படுகிறது . சிவன் கோவிலின் கர்ப்பகிரகத்தின் மேற்குப்பக்கம் லிங்கோத்பவர் – லிங்கம் என்ற அருவுருவத்தில் முழுமையானவராக முதன்முதலில் சிவன் ஆனார் என்பதே லிங்கத்தில் சிவன் வெளிப்பட்டார் எனப்படுகிறது . அந்த லிங்கோத்பவருக்கு மேலே விமானத்தை நிமிர்ந்து பலர் பார்ப்பதில்லை ; பார்த்தால் சிவன் கோவில்கள் அனைத்திலும் அங்கு நாராயணன் இருப்பார் . ஆகமவிதிப்படி கோவிலை கட்டும் ஸ்தபதிகள் வழிவழியாக நாராயணனை அங்கு உருவமாக செய்துவிடுவார்கள் . காரணம் அவர்களுக்கு தெரியாது . காரணம் லிங்கம் என்ற பரமாத்மாவுக்குள் சிவன் முழுமையடைந்தார் என்பதே . அவ்வாறு அவர் முழுமையடைந்த போது நாராயணனுக்கு இணையானவராக அதிதேவர் என்ற அந்தஸ்து அடைந்தார் . அப்போது அவருக்கு நாராயணனே துர்க்கையாக மாறி துயர் துடைப்பவளாக இணைந்தாள் – வடக்கு பிரகாரத்தில் துர்க்கை இருப்பாள் இந்த துர்க்கைக்கு மேலே பிரம்மா இருப்பார்

பிரம்மா அதிதேவர் இல்லை ; அவர் நிரந்தரமானவரும் இல்லை ; அவர் சகலவற்றையும் படிப்பவரும் இல்லை . அவர் உயிரிணங்களை மட்டும் படைக்கும் வேலையை நிர்வகிக்க நாராயணனால் பொறுப்பு ஒப்படைக்கப்படுவர் அதுவும் யுகத்திற்கு யுகம் அந்த நபரும் மாற்றம் செய்யப்படுகிறார்

இவர் உயிரிணங்கள் விரித்தியாக காமம் என்ற இனவிருத்தி ஆயுதத்தை பயன்படுத்துகிறார் அது பிரம்மாவின் ஒரு தலை . உயிரிணங்களில் மனிதனுக்கு மட்டும் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று தீய குணங்களை கொடுத்து அவனை ஆட்டம் ஆடுகிறவனாக பிரம்மா படைக்கிறார் . அது அவரின் மற்ற மூன்று தலைகள் உயிரிணங்களை படைக்கும் பிரம்மாவும் இந்த நான்கு பிரகிரிதிகளுக்கு தப்பியவர் இல்லை . ஆகவேதான் அவன் நான்முகன்

நான்முகனால் படைக்கப்படுகிற எல்லா மனிதர்களும் இந்த நான்கால் பீடிக்கப்படாமல் இருக்கமுடியாது .

அப்படித்தான் படைக்கப்பட்ட போது சிவனும் பீடிக்கப்பட்டார் . ஆனால் அவர் அதிதேவர் ஆனபோதோ முதலாவது காமத்தை கடந்தார் அவர் ஞானம் என்ற முக்கண்ணால் மன்மதனை எரித்துவிட்டார் என்கிறது புராணம் அதே நிகழ்வை வேறுவிதமாக ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று தீயகுணங்களை விதவிதமாக வளர்த்து பட்டணங்களாக கோட்டை கொத்தளங்களை உருவாக்கியுள்ள முப்புரங்களை எரித்தார் என்றும் சொல்லப்படுகிறது

அபிராமி அந்தாதி :
39: ஆளுகைக்குஉன்தன் அடித்தாமரைகள் உண்டுஅந்தகன்பால்
மீளுகைக்குஉன்தன் விழியின் கடை உண்டுமேல் இவற்றின்
மூளுகைக்குஎன் குறைநின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்குஅம்பு தொடுத்த வில்லான்பங்கில் வாணுதலே.

அசுரர்களின் மாயக்கோட்டையான முப்புரங்களை அளிக்கும்போது சிவன் என்ன செய்தாரம் பிரம்மாவின் தலை ஒன்றையும் கிள்ளிஎறிந்தார் என்பார்கள்

அபிராமி அந்தாதி :
88: பரம் என்று உனை அடைந்தேன்தமியேனும்உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கியபோதில் அயன்
சிரம் ஒன்று செற்றகையான் இடப் பாகம் சிறந்தவளே.



சிவனைப்பிடித்து அடக்க முயற்சித்த அசுர மாயங்களை ஞானத்தால் எரித்து அவர் கடந்து சென்றார் . அப்போது பிரம்மாவின் நான்காவது தலையை கிள்ளிவிட்டார் என்பதும் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் என்பதும் ஒரே விசயத்தை குறிப்பதே . அதாவது அவர் காமம் என்ற மாயத்தை கடந்துவிட்டார்

பரலோகத்தில் ஆண் என்றுமில்லை பெண் என்றுமில்லை என யுகபுருஷன் இயேசு தெளிவாக சொல்லியுள்ளார் ஆண் பெண் பேதங்கள் சரீரத்தில் உள்ளதே தவிர ஆத்மா ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை . ஒரு பிறவியில் ஆணாக பிறந்து பெண்ணை கொடுமைப்படுத்திய அதே ஆத்மா அடுத்த பிறவியில் பெண்ணாக பிறந்து ஆண்களிடம் அல்லோகலப்படுகிறது

ஆத்மசொருபத்தை எட்டிய மனிதன் மட்டுமே ஆண்பெண் பேதத்தை கடரமுடியும் .சிவன் அதிதேவர் என்ற அந்தஸ்து அடைந்த போது நாராயணி என்ற அதிதேவர் அவருக்கு மணைவியாக வந்தார் . சாதாரண மனிதர்களை காமத்தால் வாட்டுவதுபோல சிவனை பீடிக்க முயற்சித்தபோது அவர் மன்மதனை எரித்தார் ; பிரம்மாவின் தலை ஒன்றை கிள்ளிவிட்டார்

ஆனால் நம்மைப்போன்ற முன்னேறாத மனிதர்கள் இந்த நான்கால் பீடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம் . என்று ஆத்மசொருபியாக மாறுகிறோமோ அன்றே காமத்தை கடரமுடியும் . அதன்பின்பே முப்புரங்களை நம்மாலும் எரிக்க முடியும் . ஒளி சரீரம் அடைந்து பரலோகத்தில் நுழைய முடியும் சபரிமலையில் ஐயப்பன் அடைந்த நிலையும் இதுவே

விசயத்திற்கு வருவோம் . சிவன் அதிதேவர் ஆகி கடவுளுக்கு இணை ஆனபோது அவரின் நிலை நாராயணனுக்கு அப்பாற்பட்ட நிலையாகிவிட்டது . நாராயணனோ அவரை ஏற்றுக்கொண்டு தன்னில் ஒரு வியாபகத்தை நாராயணி ஆக்கி அவரை இணையாக ஆக்கிகொண்டார் . படைக்கப்பட்ட பிரம்மாவோ இதை உணரமுடியாமல் அவரை பீடிக்கநினைத்து தலை கிள்ளப்பட்டார்

இந்த நிலையையே மாலறியா நான்முகனும் தானறியா மலை சிவன் என்கிறார் மாணிக்கவாசகர்

சிவனின் நிலை என்பதை என்னவென்றே உணராத அற்ப மானிடர்கள் நாங்கள் காணாததை கண்டுபிடித்துவிட்டோம் சிவனே கடவுள் என கண்டுகொள்ளுமளவு ஞானமே வடிவானவர்கள் நாங்கள் என்று பொக்கம் பேசுகிறார்களாம்

பட்டையும் கொட்டையும் போட்டு பழுத்த ஞானப்பழங்கள் போல என் அய்யன் கூத்தன் அப்படி இப்படி என்று ஸ்டைலாக சிலர் பேசி அலப்பிக்கொண்டே இருப்பார்கள்

பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ ஏலக் குழலி

சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

பாலைப்போல தேனைப்போல இனிக்க இனிக்க பேசும் ஏலம் போடுபவர்களே சிவனின் பெருமையை பாடி சிவனே சிவனே என்று ஓலம் போட்டாலும் உங்களால் உணரமுடியாது யாரை ?

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளி கோதாட்டும் பரிசலை எல் ஓர் எம்பாவாய்

இந்த பூமியிலுல்ளோரும் விண்ணிலுளோரும் பாதாளத்தில் உள்ளோரும் அறிய முடியாத அருவ இறைவன் ; நம்மை ஆட்கொண்டால் அருளும் புகழும் வழங்கி பரிசலாக சுமந்து பிறவிக்கடலை கடக்க வைப்பான் அருவ இறைவன் ; அவரையே  கடவுள் என உணர்வாயாக .

எல் என்றால் யூத பாஷையில் அருவ இறைவனை குறிக்கிறது . இந்து தர்மத்தில் அதிதேவர்கள் மூலமாக மனிதர்களுக்கு அருளை வாரிவழங்கிய கடவுள் யூதர்கள் அரபியர்கள் என்ற ஆப்ரகாமின் வாரிசுகளிடம் தன்னை உருவங்களை கடந்த அருவ இறைவனாக வழிபடுங்கள் என வழிகாட்டினார் அந்த மார்க்கங்களும் இன்று உலகில் முக்கியத்துவம் உள்ளவையாக மாறிவிட்டன இறைவனால் உலகில் வந்த எந்த மார்க்கத்திலும் உண்மை இல்லாமல் இல்லை

எல் ஓர் எம்பாவாய் என்று முடிவதாகவே ஒவ்வொரு பாடலும் உள்ள திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடிய ஆண்டாளும் மாணிக்கவாசகரும் ஒளி சரீரம் அடைந்தவர்கள் என்பதில் ஒரு முக்கியமான விவரம் உள்ளது . நாராயணனை மட்டும் வழிபட்ட ஆண்டாளும் சிவனை மட்டும் வழிபட்ட மாணிக்கவாசகரும் அவர்களை விட பெரியவரான ஏக அருவ இறைவனை உணர்ந்து எல் ஓர் எம்பாவாய் என ஞானமடைந்த பிறகே ஒளி சரீரம் அடைந்தனர் . சிவபக்தரான வள்ளலாரும் சிவனை விட பெரியவரான அருவ இறைவனை அருட்பெருஞ்சோதி என வழிபட தொடங்கிய பிறகே ஒளி சரீரம் அடைந்தார்

அண்ணாமலையில் அருட்பெருஞ்சோதியாக காட்சிப்படுத்தப்படுபவர் ஏக அருவ இறைவனே

அதிதேவரான சிவனின் மூலமாக அருட்பெருஞ்சோதியையே வழிபடுவாயாக என்பதே இப்பாடலின் விளக்கமாகும்
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத,
சீரகத்தை தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே

இப்பாடலும் சிவனை பரிவர்த்தனை செய்யும் இடைப்பட்டவர் வைசியன் என்றே சொல்கிறது

உற்பத்தியாளனுக்கும் அதை நுகர்வோனுக்கும் இடையில் ஊடகமாக இருப்பவனே வைசியன் செட்டியார் . சிவன் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஊடகமாக செட்டியாராக அதிதேவராக உள்ளார் .அதுவும் ஏரகம் மேலே உயர்த்திவிடும் செட்டியார் அவர் . அவரிடம் கவிஞர் வேண்டுகிறார்

மாசு மறு நீங்கினால் துய்மையாகும் ஆத்மா அடைகிற மங்காத ஒளி சரீரத்தை  அருள்புரிவீரானால் இந்த ஸ்துல சரீரம் அவசியம் இல்லாத நிலையை அடைந்துவிடுவேன்  .

ஆனால் அதற்கு தடையாக இருப்பது சிவனை மட்டுமே கடவுள் என்றும் அவரைத்தவிர வேறு அதிதேவர்களையும் அருவ இறைவனையும் மதிக்கமாட்டேன் என நான் அலட்டும் நாடகமே என்பதே இப்பாடலின் பொருளுமாகும்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி