இறைவன் ஒருவரே தலைமைக்குருவானவர்
அவரே அனைத்து ஆத்மாக்களையும் பல படித்தரங்களில் பல உபகுருமார்களை கொண்டு வளர்க்கிறார்
அவரே அனைத்து ஆத்மாக்களையும் பல படித்தரங்களில் பல உபகுருமார்களை கொண்டு வளர்க்கிறார்
இந்தப்பிறவியில் குறைந்தது ரெண்டு குருமார்களையாவது ஒருமாணாக்கன் கடந்துவரவேண்டும் கொஞ்சநாள் முன்பு எனக்கு தெரியாதது இவரிடம்இருந்தது நான் இவரை அண்டி இவருக்கு பணிந்து சிரத்தையோடு இவரிடம் கற்றுக்கொள்ள முயற்சித்தேன் அவரின் கிருபையால் பல விசயங்களிலும் தேரினேன் ஆனால் இப்போதோ எனக்குபுரிந்த சில விஷயம் இந்த குருவுக்கு தெரியவில்லை என்பதுபோல புலப்படுகிறது . அவருக்கு தெரிந்ததை நான் கற்றுக்கொண்டேன் ஆனால் எனக்கு தெரிந்தது அவருக்கு தெரியவில்லை . அதில் எனக்கு எழும் சந்தேகங்களை இவரால் தீர்க்க வழியில்லை ஆகவே அது யாரிடம்கிடைக்கும் என எந்த ஆத்மா தேடலிளுள்ளதோ அந்த ஆத்மாவிற்கு கடவுள் உரிய நபரை அனுப்பிவைப்பார் தேடலில் உள்ளவனுக்குத்தான் குரு தேடிவருவார்
தட்டுங்கள் திறக்கும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் சற்குருநாதர் இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார் சற்குருநாதர் இயேசு
நிறைய சாதகர்களிடம் உள்ள ஒருமாயை எதையாவது தெரிந்தவுடன் அதைப்பற்றி பெருமைப்படுவது திருப்தியடைவது அங்கேயே நின்றுகொண்டிருப்பது தேடலை மழுங்கடித்து கொண்டு பிரச்சாரம் செய்யத்தொடங்குவது அரைக்குருடன் முக்கா குருடனுக்கு நல்ல உபதேசம் செய்யமுடியும் ஆனால் அதில் திருப்தி அடைந்தால் அரைக்குருடன் வளரவே போவதில்லை
இன்னும் வேறு வார்த்தையில் சொன்னால் குருவிடம் தெரிந்து கொண்ட ஒன்றை தெரிந்து கொண்டோமே தவிர அதில் நாம் தெளிந்து தேரவில்லை . அப்படி தெளிந்து விட்டால் அடுத்ததை தேடத்தொடங்குவோம் .
நாம் தெரிந்துகொண்டதற்கே பெருமை பாராட்டுவதால் அதை தெளிவடைய முயற்சி செய்யாமலேயே இருந்தும் விடுகிறோம் . என் குரு இப்படி சொல்லியுள்ளார் அப்படி சொல்லியுள்ளார் அதனால் அவர் பெரியவர் ; அத்தோடு அவரின் சீடனாக இருக்கும் நானும் பெரியவன் என்ற அளவில் ஒரு மறைமுகமான பெருமை நம்மை மழுங்கடித்து விடுகிறது
நாம் பூமியில் சந்திக்கும் எந்த குருவும் உபகுரு மட்டுமே . இவரால் மட்டுமே நாம் முழுமை அடைய முடியாது என நாம் ஓயாமல் தேட வேண்டும் . அந்தத்தேடல் இறைவனை காணும் வரை உள்ள தேடலாக இருக்கவேண்டும்
இறைவனை காணும் வரையான தேடலுக்கு தடையாக இருப்பது இவர் மட்டுமே குரு என பெருமை பாராட்டுவதும் ஒன்று
மகாகுரு ராமகிருஷ்ணர் ஒரு வார்த்தை சொல்லியுள்ளார் நேதி நேதி இதுவுமல்ல இதுமல்ல ( தான் அறிந்ததில் திருப்தியடையாமல் ) யார் தேடுகிறானோ அவனே உண்மையை கண்டடைவான்
இப்படி சொன்னவுடன் குருவின் மேன்மையைப்பற்றி நான் குறைத்து மதிப்பிடுவதாக கருதலாகாது . குரு பக்தி மிகவும் அவசியமானது . அந்த உள்ளார்ந்த பக்தியோடு கடவுளை காணும் தாகத்தை விட்டுவிடலாகாது என்பதே முக்கியமானது
கடவுளை காணும் பல படிகளை கடர அந்தந்த படிநிலையில் உள்ள குருவையும் கடந்தாக வேண்டும்
மீண்டும் சொல்கிறேன் ஒரு விசயத்தில் நம்மை விட உயர்ந்த நிலையை எட்டியவர் எல்லா விசயங்களிலும் உயர்ந்த நிலையில் இருப்பவர் என்பதற்கு உத்தரவாதமில்லை
ஒரு குறிப்பிட்ட விசயத்தை உலகிற்கு உணர்த்த இறைவன் ஒருவரை கருவியாக தேர்ந்து கொண்டால் அவ்வாறு இறைபணியை செய்வதன் நிமித்தம் குரு என்ற அந்தஸ்து இறைவனால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் . அதற்குரிய மகிமையும் பெருமையும் கூட இருக்கும் . ஆனால் அடுத்த பிறவியில் அதே ஆத்மா வேறு பல விசயங்களில் தேரும்படியாக ரெம்ப சாதாரண வாழ்வு வாழும்படியாகவும் இருக்கும் .
ஆகவே இறைவனாலும் பயன்படுத்தப்பட்ட மனிதர்களும் முழுமையானவர்கள் அல்ல ; மனிதர்கள் யாரும் முழுமையானவர்கள் அல்ல ; முழுமையான குருவும் அல்ல
கண்டவர் விண்டதில்லை ; விண்டவர் கண்டவரில்லை என்பதான முதுமொழியை நாம் மறந்து விடலாகாது
யார் முழுமையை உணர்ந்தார்களோ அடுத்த நொடி அவர்கள் மரணமில்லா பெருவாழ்வு அல்லது ஒளி சரீரம் பெற்றுவிட்டால் அவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதால் ; அவர்கள் கண்ட முழுமையை இப்பூமியில் இருந்து கொண்டு விலாவாரியாக விளக்கம் கொடுக்க அவர்கள் பூமியில் இருப்பதில்லை
அப்படியானால் யார் இதுதான் முழுமை என்று சொல்லிக்கொண்டுள்ளார்களோ அவர்கள் இன்னும் முழுமையை காணாததால் மட்டுமே பூமியில் இருக்கிறார்கள் என்பதே உண்மை
ஆகவே ஒப்புநோக்கில் முழுமையை மிக நெருங்கியவர்கள் சொன்னவை உன்னதமானவையே ; ஆனாலும் அவைகள் முழுமையில்லை . கொஞ்சம் தொக்கம் உள்ளது
இந்த தொக்கத்தை நாம் முழுமையை நெருங்கும்போது மட்டுமே தெளிய முடியும்
கற்றது கையளவு ; கல்லாதது உலகளவு என்ற தெளிவோடு எதைக்குறித்தும் பெருமை அடையாது – திருப்தியும் அடையாது இறைவனை தேடவேண்டும்
அந்த இறைவனே குருவாக இருந்து நமக்கு புதிய புதிய விசயங்களை அதற்கான உபகுருக்கள் பலர் மூலமாக அனுப்பி வைப்பார் .
விசாரம் செய்யுங்கள் விசாரம் செய்யுங்கள் என்று பல ஞானிகள் சொல்லியுள்ளனரே அந்த விசாரம் என்பது உபகுருக்களின் வருகையால் துவக்கி முழுமையாக்கப்படும்
குருவின் மகிமையை குறைத்து மதிப்பிடவில்லை ; ஆனால் குருமார்களை கடராமல் நமக்கு வளர்ச்சியுமில்லை
ஒரே ஒரு குருவை அண்டிக்கொண்டு இருந்த வரை அது பெரிய விசயமாகவே தெரியும் . அது நாம் அந்த குருவிடம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பதின் வெளிப்பாடு
நீங்கள் இரண்டாம் வகுப்பில் தேரிவிட்டால் உங்களை மூன்றாம் வகுப்பிற்கு வேறு ஒரு ஆசிரியரிடம் தலைமையாசிரியர் அனுப்பி வைப்பார்
இரண்டாம் வகுப்பில் தேரவில்லையானால் இரண்டாம் வகுப்பிலேயே நீங்கள் இருந்தாக வேண்டும் . இதைப்போன்ற தேர்ச்சி அற்ற நிலையை குரு பெருமையால் நாம் மறக்க முயற்சித்துக்கொன்டிருக்கிறோம்
உண்மையில் குரு நாம் கண்டுபிடிக்கிறவர் அல்ல ; நம்மை தேடி வருபவரே ஆத்மார்த்த குரு
மனித முயற்சியால் – நண்பர்கள் அறிமுகத்தால் நாமாக கண்டுபிடித்துள்ள குரு எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அவரால் நமக்கு பெரிதாக எந்த முன்னேற்றமும் இருக்காது ; எதிர்பாராவிதமாக நாம் அறியா ஒரு நபராக நம்மை தேடி வந்து உபதேசிக்கும் நபர் நம்மை கிழித்து நமக்குள்ளாக ஞானத்தை திணித்து விட்டு போய் விடுவார் . அது அப்போது புரியாவிட்டாலும் நமக்குள்ளாக இருந்து ஞானமாக தெளிந்து சிலநாள் கழித்து அறிவாக வெளியே வரும் .
நமக்குள்ளாக இருந்து இது எப்படி வெளியே வருகிறது என்று நாமே ஆச்சரியப்படும் விதத்தில் அது வெளிவரும் போது அந்த மேன்மையை நமக்குள் விளயவைத்தவர் இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பது விளங்கும்
இறைவனிடம் கையேந்துங்கள் ; அவன் இல்லை என்று சொல்லுவதில்லை .
தேடல் விசாரம் என்பது இறைவனிடம் நமக்கு இருக்கவேண்டும் ; மனித குருமார்கள் அளவிலல்ல .
நம்மைத்தேடி வருகிற குரு என்கிற அனுபவத்தை நீங்கள் அடையவில்லை என்றால் இன்னும் போதிய பக்குவம் இல்லை என்றே அர்த்தம் ; போதிய தேடலும் இல்லை என்றே அர்த்தம்
ஒரு குறிப்பிட்ட அளவு தேறிய பிறகு
இறைவனையே குருவாக கொள்ளும் நிலைக்கு
முயற்சிக்க வேண்டும் .அப்போது மட்டுமே
நம்மைத்தேடி வருகிற குரு என்ற நிலையை
அடையமுடியும்
நாம் கண்டடைந்த குருமார்கள் என்ற
நிலையில்ருந்து நம்மை அவ்வப்போது தேடி
வருகிற குருமார்கள் ; மனிதனாஅல்லது
அமானுஸ்யமா என உணரவே தருனமில்லாத
நிலையில் நமக்கு உபதேசிக்கிரவர்கள் என்ற ஒரு
நிலைக்குள்ளாக நாம் வளரவேண்டும்
உதாரணமாக சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம்
வேண்டுமா என ஒருகுழந்தை அவ்வையை கேட்டு
விட்டு போய்விடுகிறது
ஆனால் அவ்வையை பொறுத்த அளவில்
அந்தஆன்மாவுக்கு இனி என்ன வேண்டுமோ அது
கிடைத்தது
ஆவி மண்டல குரு ஒரே ஒரு வார்த்தை
பேசினால்போதும் நம் ஆத்மாவிற்கு எது
தேவையோ அது கிடைக்கும்
ஒரு குறிப்பிட்ட அளவு தேறிய பிறகு
இறைவனையே குருவாக கொள்ளும் நிலைக்கு
முயற்சிக்க வேண்டும் .அப்போது மட்டுமே
நம்மைத்தேடி வருகிற குரு என்ற நிலையை
அடையமுடியும்
நாம் கண்டடைந்த குருமார்கள் என்ற
நிலையில்ருந்து நம்மை அவ்வப்போது தேடி
வருகிற குருமார்கள் ; மனிதனாஅல்லது
அமானுஸ்யமா என உணரவே தருனமில்லாத
நிலையில் நமக்கு உபதேசிக்கிரவர்கள் என்ற ஒரு
நிலைக்குள்ளாக நாம் வளரவேண்டும்
உதாரணமாக சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம்
வேண்டுமா என ஒருகுழந்தை அவ்வையை கேட்டு
விட்டு போய்விடுகிறது
ஆனால் அவ்வையை பொறுத்த அளவில்
அந்தஆன்மாவுக்கு இனி என்ன வேண்டுமோ அது
கிடைத்தது
ஆவி மண்டல குரு ஒரே ஒரு வார்த்தை
பேசினால்போதும் நம் ஆத்மாவிற்கு எது
தேவையோ அது கிடைக்கும்
நம்மைத்தேடி வருகிறவர் என்ற அனுபவத்தில் நுழைய நாம் இறைவனை
வேண்டுதலும் செய்யவேண்டும்
மேலும் இந்த பிளேயரிலும் கேட்கலாம்
https://ia802702.us.archive.org/32/items/amala_201504/ஓம்%20சற்குருநாதா.ogg
நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் காமாஷியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி