Total Pageviews

Monday, December 16, 2019

திருப்பாவை 1






சீதாபிராட்டியாரே கோதை அக்காவாக பூமாதேவியாரால் வெளிப்படுத்தப்பட்டார்

ஏனெனில் சீதை நோவுகள் தாளாமலேயே தன்னை ஏற்றுக்கொள்ளும்படியாக மன்றாடி பூமி பிளந்து அவரை ஏற்றுக்கொண்டது

மனிதகுலம் பூமியில் செய்துவரும் அக்கிரம்ங்களுக்கு படைப்புகள் அனைத்தையும் தனக்குள்ளிருந்து வெளிப்படுத்தும் பரமாத்மாவும் பொறுப்பேற்றாக வேண்டும்

சகலமும் அவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு அவருக்குள்ளேயே கிரியை செய்தும் வருகின்றன

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.--யோவான் 1

2:117. அல்லாஹ் வானங்களையும், பூமியையும் இல்லாமையிலிருந்தே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது

36:82. எப்பொருளையேனும் அவன் படைக்க நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது

ஒன்றுமே இல்லாத வெட்ட வெளியே சகல பிரபஞ்சத்திற்கும் வெளியே இருக்கிறது என விஞ்ஞானத்தால் அறிகிறோம்

உலகில் வந்த சகல வேதங்களும் வெட்டவெளியே ஆதி இறைவன் என அறிவிக்கின்றன

சிவவாக்கியர் 534:

கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்ட வெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.

சிவபோகசாரம் ; உபநிஷத்துககள் இன்னபிறவைகளிலும் உள்ளன

சிவாலயங்களில் லிங்கம் என்பதே அருவமும் உருவமும் இணைந்த ஒன்றாகும்

அருஉருவம் என்பார்கள்

சிவலிங்கம் என்றால் சிவனின் நாமத்தால் அருவத்தை வழிபடுகிறேன் என்பதே அர்த்தம்

அருவமான இறைவன் உருவமான படைப்புகளை படைத்த போது அவர் செய்ததெல்லாம் உண்டாகட்டும் என்று பேசினார்

அருவத்தில் இருந்து முதலில் வந்தது சத்தம் ; பிரணவம்

அதாவது வார்த்தை ; அந்த வார்த்தையே நாராயணன் ; படைப்புகளாக விரிந்தவன் ; பரமாத்மா ; பிரபஞ்சம்

இந்த பிரபஞ்சத்தில் ஜடமும் இயங்கும் பொருட்களும் கலந்தே இருக்கின்றன என்பதால் நாராயணனை அறிதுயில் கொள்ளுகிறவனாக ; பள்ளிகொண்டவனாக உருவம் சமைத்தார்கள்

ஆகவேதான் சகல பாவங்களுக்கும் தானும் பொறுப்பேற்று ஒவ்வொரு அவதாரத்திலும் துன்பத்தை சுமந்தே தீர்த்தும் வருகிறார்

ராமாவதாரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பூமியில் அவர் தர்மத்தை நிலைநிறுத்தினார்

அவரது சொந்த வாழ்க்கையோ இன்பம் என்பது அறவே இல்லை

மனைவியை மக்களை பிரிந்தே வாழ்ந்தார்

சீதை துன்பத்தை தவிர எதையுமே அனுபவித்ததில்லை

ஆனாலும் அவள் மனித பிறவி எடுத்த நிலையிலிருந்து மீண்டும் தேவராக மாற ஸ்ரீவில்லி யில்  கோதையாக தன்னை வெளிப்படுத்தி தமிழால் பாடி மகிழ்ந்து ஸ்ரீரெங்கத்தில் ஒளிசரீரம் பெற்றாள்

கோதை அக்கா தமிழுக்கு கிடைத்த வரம்

வைணவத்தில் மனிதனாக பிறந்த யாருக்கும் கருவறையில் இடம் இல்லை

ஆனால் வைணவம் கோதையே சீதை என்றறிந்து கோவிலில் வைத்தார்கள்

அந்த முதல் கோவில் மதுரை கூடல் அழகிய பெருமாள் கோவிலில் உள்ளது

ஸ்ரீவில்லியில் இருந்து ஸ்ரீரெங்கம் செல்ல பல்லக்கு பரிவாரம் தந்தவன் பாண்டிய மன்னன்

அழகர் மலையில் ஒரு மண்டலம் தங்கி தன் கைப்பட அழகனுக்கு சேவை செய்தாள் கோதை அக்கா

மதுரைக்கு அருகிலுள்ள சோழவந்தான் என்ற ஊர் வைகை என்ற வேகவதி கரையில் உள்ளது . அங்கு உள்ள தெய்வங்களுக்கு ஜனகை ஜனகை என முன் இணைப்பு இருக்கும்

ஜனகை பெருமாள் ; ஜனகை மாரியம்மன்  என இருக்கும்

இரண்டாம் யுகத்தில் மிதிலை என்பது வேகவதி கரையில் இருந்த சோழவந்தனாகத்தான் இருந்தது ; சீதையை மனம் முடிக்க சோழ வம்ஸத்து ராமன் வந்ததால் இவ்வூரின் பெயர் சோழவந்தான் என ஆனது

இலங்கையில் படகில் வைத்து கடலில் விடப்பட்ட பேழை கங்கைக்கு செல்ல வாய்ப்பே இல்லை

ஆனால் அருகில் கடலில் கலக்கும் வைகை வழியாக சோழவந்தானில் கரையேறவே வாய்ப்பு உள்ளது

ஆகவேதான் அவள் தமிழச்சியாகவே வந்தாள்

தமிழ் வார்த்தைகள் அவளிடம் கொஞ்சி விளையாடுவதை திருப்பாவை முழுவதும் காணலாம்

துன்பம் தீர நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிட்டு எழுதோம் என்ற விரதத்தை மார்கழியில் கடைபிடிக்க பெண்களுக்கு வழிகாட்டினாள்

அவளுக்கு தெரிந்த இன்னொரு ரகசியத்தை இப்பாடலில் வெளிப்படுத்தியுமுள்ளாள்

ராமரை காட்டுக்கு அனுப்பியதால் கைகேயியை பலரும் அறுவறுத்தார்கள் ; ஆனால் அன்பால் வளர்த்தவளை ராமன் மதிக்காமலில்லை

ஆகவேதான் கிறிஷ்ணாவதாரத்தில் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும் வளர்ப்பு தாயான யசோதைக்குத்தான் மரியாதை

என்ன தவம் செய்தனை யசோதா ; எங்கும் நிறைந்த பர பிரம்மம் அம்மா என்றழைக்க

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் என்கிறாள் கோதை அக்கா

ஓம் நமோ நாராயணாய

நாராயணனாக வெளிப்பட்ட அந்த ஓர் இறைவனையே நமஸ்கரிக்கிறோம்