Total Pageviews

Saturday, January 14, 2012

விவேகானந்தரது ஆசை நிறைவேர பிரார்திப்போம்!

                             உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை இந்தியாவிலிருந்தே புறப்படும் என்பது விவேகானந்தரது முன்னறிவிப்பு !அதற்காகவும் அவர் இந்தியாவின் அடியில் இருந்த தீவிற்கு (விவேகானந்தர் பாறை )நீந்தி சென்று ஒரு நாள் முழுவதும் கடவுளை தியானித்தார் !அவரது ஆசை நிறைவேற நாமும் கடவுளை வேண்டவேண்டும் !
                            உலகை முழுவதும் அரவணைக்க என்றால் உலகம் முழுவதும் கடவுளால் இறைதூதர்கள் மூலம் ஆங்காங்கே வெளிப்படுத்த பட்ட எல்லா கொள்கைகளையும் அரவணைத்த ---எல்லாவற்றையும் ஏற்று அதனை அடுத்த வளர்சியை நோக்கி அழைக்கிற கொள்கையாக மட்டுமே இருக்க முடியும்! நான்தான் சரி மற்றவர்கள் தங்கள் கொள்கையை விட்டு விட்டு வாருங்கள் என்றால் சண்டை தான் மிஞ்சும்!                                      
                             இந்து -கிறிஸ்தவ -முஸ்லீம் கொள்கைகளின் உண்மைகளை உள்வாங்கிய ஒரு கொள்கையால் மட்டுமே அதனை சாதிக்க முடியும்! காந்தி அரசியல் பணி முடிந்து தனது ஆன்மீக பணியை நிலைநாட்டும் முன் கொல்லப்பட்டது --உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை அவர் மூலமாக வெளிப்பட இருந்த ஒரு வாய்ப்பு பறிபோனது!
நாமும் விவேகானந்தரின் ஆசையை கடவுளிடம் பிரார்திப்போம்!
எல்லாம் வல்ல ஏக இறைவன் தனது இறைதூதரை இந்தியாவிற்கு அணுப்புவாராக!!!

``தை பிறந்தால் வழிபிறக்கும்``!!!!!

                                                தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி !தட்சிணாயனம் --அதாவது சூரியனை விட்டு விலகி செல்லுகிற பூமி தை மாதத்தில் உத்திராயணம் திரும்பி சூரியனை நோக்கி செல்லிகிறது !இந்த திருப்பத்தை ஒட்டியே ஆண்டு கணக்கை ஆதி இந்துக்களான தமிழர்கள் அமைத்தார்கள் !

லெமூரியாக்கண்டத்திலிருந்து பல கண்டங்களுக்கும் மனித இனம் பரவி பல இனங்களாக பரிணமித்தபோதும் தையை ஒட்டியே வருடப்பிறப்பு அமைக்க பட்டது  !அதை சரியாக நிதானிக்காமல் கிறிஸ்தவர்கள் ஜனவரியை புத்தாண்டு ஆக்கினார்கள் !தை புத்தாண்டே சரியான புத்தாண்டு
                                                  உலகின் முதல் மனிதன் என பைபிள் ,குரான் சொல்லும் ஆதாம் வாழ்ந்தது இந்தியாவிற்கு தெற்கே கடல் கொண்ட லெமூரியா கண்டம் !எல்லா மனிதர்களுக்கும் மூலமான ஒரே ஆண்டு கணக்கு தை புத்தாண்டு ஆகும் !முதல் நாள் ஆண்டு பிறப்பு தைப்பொங்கல் !பூமிக்கு ஆதாரமான சூரியனை முக்கியப்படுத்துவது! இரண்டாம் நாள் கால்நடைகளை முக்கியப்படுத்தும் மாட்டு பொங்கல் !மூன்றாம் நாள் தனது முன்னோர்களுக்கு மொத்தமாக கடவுளிடம் பிரார்திக்கிற விரத நாள் !அது மனிதர்களை சந்தித்து அளாவுகிற காணும் பொங்கலாக மாற்றம் செய்ய பட்டு விட்டது!அது சரியல்ல!நண்பர்களோடு அளாவ அணேக பண்டிகைகள் உள்ளன!நமது தாய் தகப்பன் இறந்த பிறகு சில நாள் ஞாபகம் வைத்திருக்கும் மனிதர்கள் காலப்போக்கில் மறந்து விடுவோம்!தனிதனியே ஒவ்வொருவரையும் ஞாபகம் வைப்பதும் கடிணம்! எனவே எல்லா முன்னோர்களுக்கும் சேர்த்து ஒரே நாள் மனிதனுக்கான நாள்!அனேகமாக ஆதாம் படைக்க பட்ட நாளாக கூட இருக்கலாம்!
                                                 
முதல் நாள் பூமிக்கு ஆதாரமாக உள்ள சூரியனுக்காக கடவுளை வேண்டி ;இரண்டாம் நாள் தனது உலவுக்கு துணையாக உள்ள கால்நடைகளுக்காக வேண்டி மூன்றாம் நாள் தனது முன்னோர்களின் ஆத்துமாக்களின் நலனுக்காக விரதமிருந்து கடவுளை வேண்டி தனது புதிய ஆண்டை ஆதி மனிதராகிய தமிழர்கள் இரைதூதனாகிய ஆதாம் அல்லது மனு வின் மூலமாக கடவுளிடம் கற்றுக்கொண்ட நியதி இது !
                                                  ஆனால் பின்னாளில் இனங்கள் பெருகி விரிந்த போது அவரவர்களும் தங்களை பிரித்து அடையாள படுத்த ஒரு ஆண்டு கணக்கை போட்டார்கள் !தைப்புத்தாண்டில் உள்ள மாதிரியான மூன்று நினைவு கூறுதல் இல்லை !ஏனென்றால் ஆதி மனிதனின் புத்தாண்டு தைப்புத்தாண்டு !
                                                  முன்தோன்றி மூத்த குடிகளாகிய தமிழர்களாகிய நாம் அரசியல்,பொருளாதார, ஆண்மீக ஆளுமை குறைந்தவர்களாய் இருப்பதால் மற்றவர்களின் பழக்கவழக்கங்களுக்கு இடம் கொடுத்தவர்களாய் இருந்தாலும் நமது உண்மையை நாம் தான் உலகிற்கு வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும்!

ஆதி மனிதனின் புத்தாண்டு தைப்புத்தாண்டு!விஞ்ஞானத்தின் படி சூரியனோடு பூமியின் சுழற்சியின் படி சகலருக்கும் புத்தாண்டு தைப்புத்தாண்டு!