Total Pageviews

Sunday, December 23, 2012

வாழும் வழி !!


--- யுகபுருஷன் - இறைதூதர் ராமரின் உபதேசங்கள் -
உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக்கொண்டு பக்தி சிரத்தையுடன் ; உன் மேல் வாய்க்கும் கடமைகள் யாவற்றையும் கடவுளுக்கு அர்ப்பணமாக ஒவ்வொரு நாளும் சேவை செய்து வா ! நல்ல காரியங்கள் செய்வதில் ஒரே ஒரு நாள் கூட அசிரத்தையாக இருக்காதே !!
சத்தியத்தை கைவிடாதே ! எப்போதும் உற்சாகத்துடன் இரு . பிறவியும் மூப்பும் மரணமும் உனக்கு இயல்பானவையே என்பதை நினைத்து எப்போதும் பணிவுடன் நடந்து கொள் . மனைவி மக்களிடம் அளவுக்கு மீறிய பற்றும் பாசமும் கொள்ளாதே !
அதிர்ஷ்ட்டம் வந்து சேர்ந்தால் பிரமாதமாக மகிழ்ந்து போகாதே ! அதிர்ஷ்ட்டம் போய் விட்டால் மன வருத்தமும் கொள்ளாதே ! மனதை சம நிலையில் வைத்திரு !
ராமனாகிய நான் எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறேன் ! என்னிடமே உன் மனம் நிலைத்திருக்கட்டும் !
முக்தியை பெறுவதற்கு என் மூலமாக கடவுளிடம் பக்தி கொள்ளுவது மிகவும் அவசியம் . கண் இருந்தாலும் இருளில் நடந்து போவதற்கு நமக்கு ஒரு விளக்கு தேவைப்படுகிறது அல்லவா ? அதுபோல உனக்கு போதிய ஞானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியான வழியில் முன்னேறுவதற்கு ராம குருபக்தி இருக்க வேண்டும் !
ராம குருபக்தியை பெற்றால் போதும் . வேறு எதுவுமே வேண்டியதில்லை . என் சீடனுக்கு ஞானமும் விஞ்ஞானமும் வைராக்கியமும் தாமாகவே வந்து சேரும் . இது கடவுளின் சித்தமாகும் !
இந்த உபதேசத்தை சிந்தித்தும் பின்பற்றியும் வாழ்ந்து வருபவன் உண்மையில் ஞானியே ஆவான் . அவன் எல்லாப்பாவங்களிலிருந்தும் விடுபடுவான் !
இந்த உலகம் முழுவதிலும் நான் - யுகபுருஷன் நிறைந்திருப்பதை ஒருவன் உணரவேண்டும் ! ஆழ்ந்த நம்பிக்கையுடன் என்னிடம் குருபக்தி கொள்ளவேண்டும் ! அவ்வாறு செய்தால் ஒருவன் பரிசுத்தம் அடைவான் ; மகிழ்சி அடைவான் ; பேரானந்தம் அனுபவிப்பான் ; நன்மை பெறுவான் !