Total Pageviews

Saturday, August 25, 2012

ரமலான் என்பது பிரியாணி சாப்பாடு மட்டுமல்ல !



ரமலான் --ஈகைத்திருநாள் வாழ்த்துகள் !! 

ரமலான் என்பது பிரியாணி சாப்பாடு மட்டுமல்ல ! 

எல்லா மனிதர்களும் தங்களது வருமாணத்தில் 2 சதவீதம் தங்களை விட ஏழைகளுக்கு செலவழிக்க வேண்டும் என்பது கடவுள் குரான் மூலம் வெளிப்படுத்தியது ! அதை எல்லா நாளும் செயல்படுத்த முடியாதவர்கள் இந்த நாளிலாவது கொஞ்சமாவது கடைபிடிக்க இந்த சம்பிரதாயம் உருவாக்கபட்டது ! இதனை மாற்று மத சகோதரர்களுடன் ஒரு நல்லிணக்கமாகவும் நிறைய பேர் கடைபிடிக்கிறார்கள் ! 

தாவூது என்ற இறைதூதர் மூலமாக ஒரு வார்த்தை வெளிப்படுத்தப்பட்டது ! 

`` சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான் `` 

இவ்வார்த்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று !
இன்றைய பரபரப்பான உலகில் சிறுமைப்பட்டவர்களுக்கு நின்று நேரத்தை ஒதுக்கி செலவு பண்ண வாய்ப்பும் வசதியும் இல்லாமல் போகலாம் ! வாழ்வு அந்தளவு நெருக்கடி மிக்கதாகவே ஒவ்வொருவருக்கும் இருக்கிறது ! ஆனால் போகிற போக்கில் எளிதாக செய்யக்கூடிய விசயம் ! அவர்கள் மீது மனதில் இரக்கம் கொள்ளுவதும் கடவுளே உதவிசெய்யுங்கள் எனவேண்டிக்கொள்ளுவதும் ! சிறுமைப்பட்டவர்கள் மீது சிந்தை கொள்ளுவதும் அவருக்காக கடவுளை நினைப்பதுமான ஒருஒரு நிமிட வேலை !
 அது முதலாவது நம்மை அடிக்கடி கடவுளோடு உறவாடுகிற சகஜ பிரார்த்தனை அல்லது சகஜ யோகா என்ற நிலைக்குள் அழைத்து செல்லுகிறது ! அடுத்து நமது வேண்டுதலால் அந்த ஆத்துமாவுக்கு முடிந்தளவு செயல்பூர்வமான உதவி யார் மூலமாகவேனும் கடவுளால் உண்டாகிறது ! அந்த உதவி அந்த ஆத்துமாவின் தகுதியையும் பொறுத்தது . ஆகவே உதவி அவர்களுக்கு கிடைக்கிறதோ இல்லையோ நாம் கடவுளின் அருளாகிய குளத்தில் மூழ்கி மூழ்கி எழுவதால் அவரின் பரிபூரணத்தை நம்மில் நிறப்புகிரது ; அத்தோடு நமக்கு உதவி தேவைப்படும் சமயம் கடவுளே என நாம் அழைத்து கொண்டிருக்கும் போதே எங்கிருந்தேனும் யார் மூலமாகவேனும் உதவியும் ஆலோசனையும் வந்து நிற்கிறது ! 

இதை கடைபிடிக்க நான் முயற்சி செய்துகொண்டிருப்பதால் நடைமுறை பூர்வமான அனுபவங்களையும் கடவுளின் பேரன்பையும் சிலாகித்து சிலாகித்து பலமுறை உணர்ந்திருக்கிறேன் ! 

``வாடிய பயிறை கண்டபோதெல்லாம் வாடினேன் `` என்ற வள்ளல் பெருமானின் போதனை --அனுபூதி அதுவே !!