Total Pageviews

Monday, August 15, 2011

துன்பத்தின் மூலம் கடவுள் இடை படுகிறார் கற்றுக்கொண்டால் மேன்மை அடையலாம்

துன்பம் வரும்பொழுது தான் இறைவனை தேடும் நிலை இயல்பாகவே மனிதனுக்கு வருகிறது.அப்போது ஏதோ ஒரு வகையில் கடவுளோடு இடை பட தொடங்குகிறான் .தேவை கருதிய பக்தி சிறுக சிறுக இறை அன்பாக இறை தேடலாக இறை அச்சமாக இறை கீல்படிதலாக பரிணமிக்கிறது உன்னதமான பக்தியை நோக்கி எல்லா ஆத்மாக்களையும் இறைவனே வழிநடத்துகிறான் .அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து என்கிறார் திருநாவுக்கரசர் .தான் நாடியோர்க்கு நல்வழிகாட்டுகிறான் தான் நாடியோரை வழிகேட்டிலும் இறைவன் விட்டுவிடுகிறான் என்கிறது   திருக்குர்ஆன்  .துன்பத்தை தரும் பொழுது அதை தாங்குகிற சக்தியையும்  இறைவனே கொடுக்கிறார் ! எண்ணிப்பாருங்கள் நாம் கடந்து வந்த துன்பம் இப்போது வந்தால் நம்மால் தாங்கி விடமுடியுமா ?அதை எப்படியோ  தாங்கி வரவில்லை கடவுள்   தான் நமக்கு சக்தியை கொடுத்திருந்தார் .அவருடைய  நோக்கமெல்லாம்  நாம் கற்றுக்கொள்வது தான்  இந்த  துன்பத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள அவர்   விரும்புகிறார் என  சிந்திப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம்மை  உபத்திரவ படுதுகிரவர்களைப்போல் நாம் இருக்க கூடாது அவர்களும்   மனம் திரும்பட்டும் என பொறுமையை கைக்கொள்வதும் அவர்களை விட்டு விலகி நம்மை காத்துக்கொள்ள மட்டும் முயற்சிப்பதுமாக  இருக்கும் பொது இந்த துன்பம் விலகிவிடும் கடவுள் இருக்கிறார் கேட்கிறார்  என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து பிரார்த்தித்தால் அவர் பதிலளிப்பது  சில  நாளில்  நமக்கு புரிய  தொடங்கிவிடும்  ஒரு மனிதன் தன மகன் மீனை கேட்டால் பாம்பை கொடுப்பானா ?உணவைக்கேட்டால் கல்லை கொடுப்பானா ?பொல்லாத மனிதர்களாகிய நீங்களே நல்ல ஈவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க அறிந்திருக்கும் பொழுது பரம பிதாவானவர் தம்மை நோக்கி வேண்டுகிரவர்கலூகு நல்ல ஈவுகளை கொடுப்பது அதிகம் நிச்ச்சயமில்லையா ? என்கிறார் இறை தூதர் இயேசு !ஆகவே வேண்டுதலும் கடவுளிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் எந்த துன்பம் ,வியாதிகளிடமிருந்து நம்மை நிச்சயம் விடுவிக்கும்

கடவுள் வேறு மதங்கள் வேறு!

மதங்களின் வழியாக கடவுளை பார்த்தே பழகிவிட்டோம் !மதங்கள் எல்லாம் அந்த அந்த காலகட்டத்தில் ஒரு இறை தூதரால் கொடுக்கப்பட்டு அவரின் சீடர்கலால் கெடுத்து குட்டிய சுவர்கள் ஆனவை !மதங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தவறு அப்படியே எதிர்ப்பதும் தவறு !கெட்டுப்போன மதங்களின் உடாக உண்மையை கடவுளை தேடி கண்டு பிடிக்கவேண்டும் !கடவுள் உங்களை வெளிச்சமாக்க வேண்டுகிறேன் !கடவுள் இருக்கிறார் என நம்புவதும் செய்கிற செயலுக்கு விளைவை அவர் கொடுப்பார் என நம்புவதும் தீய செயல்களிடமிருந்து மனிதனை காப்பாற்றும் !மனித நேயமற்ற பக்தி எப்படி மோசடியோ அதுபோல இறை அச்சமற்ற மனித நேயமும் மோசடியில் தான் முடியும் !வாயிலே சமுக சீர்திருத்தம் பேசினாலும் செய்கையிலே ஈவு இரக்கமற்ற சுயநலவாதிகளாகவே பலர் இருக்கின்றனர் !மதங்களின் கேடுகளை எதிர்க்கிற சாக்கில் இறை அச்சமற்ற கேட்டுக்குள் போய் முடிகிறார்கள் !மதங்களின் கேடுகளை எதிர்க்கவேண்டும் !உள்மனதில் இறை அச்சமுடன் இருக்க வேண்டும் !ஒரு வேலை பெரியார் அப்படி இருந்திருக்கலாம் !அவரும் ஒரு வகையில் இறை தூதரே !அவர் தன் கொள்கைக்கு நேர்மையானவராக சமூக சீர்திருத்தம் செய்வதற்கு தன்னை தியாகம் செய்தார் !அவரின் பாசறையில் வந்தவர்கள் எல்லாரும் இறை அச்சமற்ற சுயநலவாத கூடங்களாக கேடுகளை செய்கிரவார்கலாகவே இருக்கின்றனர் !எவ்வித கொள்கையும் இல்லாமல் அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள் -கழக கூடங்களுக்கு பெரியார் தான் மூலமாகும் !எப்படி மதங்களெல்லாம் கெட்டு விட்டதோ அப்படி பெரியாரியமும் கெட்டு விட்டது !காரணம் இறை அச்சமற்றதுதான்