Total Pageviews

Monday, August 15, 2011

துன்பத்தின் மூலம் கடவுள் இடை படுகிறார் கற்றுக்கொண்டால் மேன்மை அடையலாம்

துன்பம் வரும்பொழுது தான் இறைவனை தேடும் நிலை இயல்பாகவே மனிதனுக்கு வருகிறது.அப்போது ஏதோ ஒரு வகையில் கடவுளோடு இடை பட தொடங்குகிறான் .தேவை கருதிய பக்தி சிறுக சிறுக இறை அன்பாக இறை தேடலாக இறை அச்சமாக இறை கீல்படிதலாக பரிணமிக்கிறது உன்னதமான பக்தியை நோக்கி எல்லா ஆத்மாக்களையும் இறைவனே வழிநடத்துகிறான் .அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து என்கிறார் திருநாவுக்கரசர் .தான் நாடியோர்க்கு நல்வழிகாட்டுகிறான் தான் நாடியோரை வழிகேட்டிலும் இறைவன் விட்டுவிடுகிறான் என்கிறது   திருக்குர்ஆன்  .துன்பத்தை தரும் பொழுது அதை தாங்குகிற சக்தியையும்  இறைவனே கொடுக்கிறார் ! எண்ணிப்பாருங்கள் நாம் கடந்து வந்த துன்பம் இப்போது வந்தால் நம்மால் தாங்கி விடமுடியுமா ?அதை எப்படியோ  தாங்கி வரவில்லை கடவுள்   தான் நமக்கு சக்தியை கொடுத்திருந்தார் .அவருடைய  நோக்கமெல்லாம்  நாம் கற்றுக்கொள்வது தான்  இந்த  துன்பத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள அவர்   விரும்புகிறார் என  சிந்திப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம்மை  உபத்திரவ படுதுகிரவர்களைப்போல் நாம் இருக்க கூடாது அவர்களும்   மனம் திரும்பட்டும் என பொறுமையை கைக்கொள்வதும் அவர்களை விட்டு விலகி நம்மை காத்துக்கொள்ள மட்டும் முயற்சிப்பதுமாக  இருக்கும் பொது இந்த துன்பம் விலகிவிடும் கடவுள் இருக்கிறார் கேட்கிறார்  என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து பிரார்த்தித்தால் அவர் பதிலளிப்பது  சில  நாளில்  நமக்கு புரிய  தொடங்கிவிடும்  ஒரு மனிதன் தன மகன் மீனை கேட்டால் பாம்பை கொடுப்பானா ?உணவைக்கேட்டால் கல்லை கொடுப்பானா ?பொல்லாத மனிதர்களாகிய நீங்களே நல்ல ஈவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க அறிந்திருக்கும் பொழுது பரம பிதாவானவர் தம்மை நோக்கி வேண்டுகிரவர்கலூகு நல்ல ஈவுகளை கொடுப்பது அதிகம் நிச்ச்சயமில்லையா ? என்கிறார் இறை தூதர் இயேசு !ஆகவே வேண்டுதலும் கடவுளிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் எந்த துன்பம் ,வியாதிகளிடமிருந்து நம்மை நிச்சயம் விடுவிக்கும்

No comments:

Post a Comment