Total Pageviews

Friday, March 27, 2015

ஒரு நெருக்கடி



நெருக்கடிகள் நிறைந்திருக்கும் போது அமைதியாய் வெறுமையடைவது ஒரு பயிற்சியா ?
Like · Comment · 

  • Padmashree Madhie Warathan Appeditahn irekku Sir....illehna muleiy varecchi 
  • ayiduthuveh...atherku inteh payirchi thevehlam...konjem payirchi irenthal then

  •  PALEGHIDUTHU AATHUVEH#

    (frm own Experience)
    ...See More
  • Prabha Karan இந்த நிமிடங்களில் வாழ்வது ஏற்று கொள்ளும் மன
  •  நிலையில் ஒரு சாட்சி போல பாவனை கவனித்தல் தான் விசயம் அது ஒரு
  • பயிற்சி தான்
  • Kirubanandan Palaniveluchamy ஆம் பிரச்சனைகளை தூக்கி சுமந்து
    4 hrs · Like · 1
  •  கொண்டு உணர்வு வயப்படுவதால் ஒன்றுமே நடப்பதில்லை

  • Kirubanandan Palaniveluchamy அது சுயத்தில் நாம் நிற்கும் வரை 
    3 hrs · Like · 1
  • இறைவன் செயல்பட நாம் வழிவிடுவதில்லை

  • Kirubanandan Palaniveluchamy நாமே நமக்கு அந்நியனைப்போல 
    3 hrs · Like · 1
  • பாவிக்கும் நிலை அடையவேண்டும்

  • எதனாலும் பாதிக்கப்படாத மனச்சமநிலை

  • Kirubanandan Palaniveluchamy மனச்சமநிலை யோக அப்பியாசத்தால்
    2 hrs · Like · 1
  •  மட்டும் வராது


  • இறைவனிடம் நம்பிக்கை அன்பு வைத்து முழு சரணாகதியும் அடைந்தால் 
  • மட்டுமே சாத்தியமாகும்

நெருக்கடியை நாம்  உணர்கிறோமேன்றால் நம்மைச்சுற்றிலும்  ஆவி 

 மண்டலத்தில்  நம்மை  பாதுகாக்கிற  ஆவிகளுக்கும்  (கடவுள் சார்பானவை)

 நமக்கு  விரோதமான  ஆவிகளுக்கும் போராட்டம்  நடக்கிறது  என்று  அர்த்தம்  

நமது  காரியங்கள்  தடைபட்டிருக்கின்றனவா  அது  சில  மனிதர்களால் அல்லது 

சூழ்நிலையால் என்று  மட்டுமே  கருதிக்கொள்கிறோம்


பிண்டத்தில் உள்ளது எதுவோ அது அண்டத்திலும் இருப்பதுதான் 


அண்டத்திலும் ஆவி மண்டலத்திலும் இரு தரப்பட்ட ஆவிகளுக்கும்  இடையில்

  போராட்டம் ஒன்று இருக்கும் 

முக்கியமாக  கடவுளால் நமக்கு ஏற்படுத்தப்பட்ட  குலதெய்வ சக்திகள் நம்மை 

மீட்க முயற்சி எடுக்கும்

இதில்  நமது  மனநிலை ; வேண்டுதல்  சூழ்நிலையை   முன்னேற்றவோ அல்லது

 பின்னேற்றவோ முக்கிய பங்கெடுக்கும் 

இந்த இடுகை நேற்று 26/03/15 மாலை  என்னை எதோ நெருக்குவதை  உணர்ந்த

 போது என்னால் முகநூலில் இடப்பட்டது 

உண்மையில் எனக்காக  வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளும் மன

 நிலையே எனக்கிருந்தது ஆனாலும் கால ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருந்தேன்

ஆனாலும் விடுவிக்கும் படியாக அவ்வப்போது நால்வரது  நாமத்தினாலும் 

கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தேன் 


இன்று பணிக்கு கிளம்பும்போது இரு சக்கர வாகணத்தை தவிர்த்து விட்டு 

பேருந்தில் கூடலுரில் இருந்து கம்பம் இறங்கி மாரியம்மன்கோவில் 

முச்சந்தியில் வண்டி மாறலாம் என இறங்கினேன் 


இரண்டு சாலைகளிலிருந்தும் பேருந்துகள் முன்றாவது சாலைக்குள் திரும்பும் 

இடம்  . பேருந்து  நிறுத்தமும் உண்டு  

ஒரு பேருந்து  வந்தது அதில்  போடி என எழுதப்பட்டதாக எனக்கு  தோன்றியதால்

  அதில்  ஏறாமல் சுணக்கம் காட்டினேன் . நான் சின்னமனூர் செல்லவேண்டும் .

 போடி மார்க்கத்தில்  அதிகம் பயணிகள் ஏறமாட்டார்கள் தேனி மார்க்கத்திலேயே

  நிறைய பேர் ஏறுவார்கள் . இப்பெருந்திலும்  நிறைய நபர்கள் சென்று ஏறியதால்

 எதோ சந்தேகம் அடைந்து அப்படியே பேருந்தின் பலகையை எட்டி  பார்க்க 

அப்படியே பக்கவாட்டில் நகர்ந்தேன் . சட்டென்று ஐயோ ஐயோ என 

கத்திக்கொண்டு யாரோ என்னை இழுத்து விட்டார்கள் . 

அந்த நொடியில் இன்னொரு புறமிருந்து பேருந்து ஒன்று என்னை கடந்து 

சென்றது . . அப்போதும் பலகை ஈரோடு என எழுதப்பட்டுள்ளதை கவணித்தேன் 

; என்னை யார் இழுத்து காத்தது என்பதையும் கவணிக்காமல் பேருந்தில் சென்று

 ஏறிவிட்டேன் . அப்படியே கோவிலுக்குள் பார்த்து அம்மா நன்றி என்று 

சொன்னேன் . அலைபேசியில் அழைப்பு வரவும் பேசிக்கொண்டு அடுத்த 

விசயத்திற்குள் கவணம் சென்று விட்டது 


சின்னமனூரில் இறங்கும் போது நண்பர் ஒருவரும் இறங்கினார் . என்ன சார் 

இப்படி பண்ணிட்டீங்க ; ஒரு நிமிஷம் தப்பிச்சீங்க . அந்த பஸ் உங்கள 

தூக்கியிருக்கும் என்றார் 


கடவுள்தான் காப்பாத்தினார் என்றேன் 
.

என்னைய இழுத்தது நீங்களா என்றேன் . 


பஸ்சுக்குள்ளார இருந்தேன் . திகிலடிச்சுப்போச்சு . கதை முடிஞ்சுச்சு நினைச்சேன்

 . ஒருத்தர் உங்கள இழுத்துட்டாறு  என்றார் 


நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன் 


நான் நம்பியிருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் அவர் சகலத்தையும்

 செய்யவல்லவர் என்று ஒரு மாபெரும் பக்தன் சொல்லியுள்ளது எனக்கு 

ஞாபகத்தில் வந்தது 


எதுக்கும் பதாராமல் இருப்பதே உங்க

வழக்கமாப்போச்சு என்று அந்த நண்பர் தலையில்

அடித்துக்கொண்டார் 



என் ஆத்மாவை படைத்தவர் அது அழிவற்றது

 என்பதையும் ; இன்றைக்கு இல்லாவிட்டாலும் ஒரு

 பிறவியில்  அது முழுமையடைந்து மரணமில்லா

 பெரு வாழ்வு பெறுவதையும் உறுதி செய்து விட்டார்



அந்த வாக்கை நான் உணர்ந்திருக்கிறேன்



இப்பிறவியில் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ

 ; அதற்காக ஓரளவு அவரோடு ஒத்திசைந்து வாழவும்

 முயற்சிக்கிறேன் என்பது அவருக்கும் எனக்கும் 

உள்ள உறவு 



மரணத்திலிருந்து காத்துக்கொள்ள எனக்கு எந்த

 வழிவகையும் இல்லை ; இப்பிறவியின் 

உலகக்கடமைகள் முடியுமட்டும் அவர்தான் என்னை 

காத்துக்கொள்ளவேண்டும் என்று கண்ணீரோடு பல

 முறை வேண்டிக்கொண்டதைத்தவிர

 என்னைக்காத்துக்கொள்ள நான் பெரிதாக எந்த 

முயற்சியும் எடுத்துக்கொள்வதுமில்லை 



மனச்சமநிலை மற்றும் சரணாகதி - இவைகளை 

அவரே எனக்கு அருளவேண்டும்