Total Pageviews

Friday, October 2, 2015

திருப்பாவை 27





மார்கழி விரதத்தில் மிக முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி . அந்த நாள் பெருமாள் கோவிலில் இரவு முழுவதும் விழித்திருந்து பூசை புனஸ்காரங்கள் பஜனை செய்வார்கள் அதிகாலை சொர்க்கவாசல் என்றொரு வடக்கு வாசலை திறப்பார்கள் . இந்த வாசல் அந்த ஒருநாள் தவிர மற்ற நாட்களில் திறக்கப்படுவதில்லை

இந்த வாசல்வழியாக பிரவேசித்தால் நாம் சொர்க்கம் செல்வதற்கு அச்சாரம் கிடைப்பதாக நம்பிக்கொண்டு முண்டியடிப்பதால் நம் கவனம் அந்த வாசலிலேயே நின்றுவிட்டது

ஆனால் இந்நாளின் மிகமுக்கியமான சேதி வேறு

அது அசுரர்களை யாராலும் அடக்க முடியவில்லை என்பதாகும் அவர்களின் தொல்லை எல்லை மீறி விட்டது அக்கிரமம் அளவு கடந்துவிட்டது . தாங்க இயலாத தேவர்கள் நாராயணனிடம் மார்கழி விரதமிருந்து முறையிட்டார்கள் . அப்போது வைகுண்ட ஏகாதசி அன்று அவர் அழகான மோகினியாக அவதாரமெடுத்தார் . யாருக்கும் அடங்காத அசுரர்கள் மயங்கிப்போய் சிந்தை கலங்கி நின்றார்கள் . அப்போது நாராயணன் அவர்களை அழித்துவிட்டார் என்பதாகும்

இந்த முக்கியமான சேதி சொர்க்கவாசலால் ஏன் ஓரங்கட்டப்பட்டது

திருப்பாவை 27 ல் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்கிறார் மகாகுரு ஆண்டாள்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் 

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் 
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே 
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு 
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
27

 

கூடாரை  சேராக்கூடாதவர்களை  வெல்லக்கூடியவரான சீர் கோவிந்தர்

கோவிந்தர் பசுக்கூட்டத்தை  கை தூக்கி விடுபவர் . அக்கா ஆண்டாள் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் மெருகு ஏற்றிக்கொண்டே இருப்பார்

பசுவாகிய பக்தர்களை தரம் உயர்த்தி பரிசுத்தப்படுத்துவதால் சீர் கோவிந்தர் சீர் படுத்துகிறவர்

பக்தர்களிடம் எதை சீர்படுத்த வேண்டும் . அவர்களிடமுள்ள தவறுகளை சீர் படுத்தவேண்டும் . சீர் படுத்தவேண்டியது அசுர குணங்களை . அசுரர்கள் என்ற ஆவிமண்டல சக்திகள் தனியே இருந்தாலும் அந்த சக்திகளால் தூன்டப்பட்ட பக்தர்களின் சிந்தை இருக்கிறதே அதுவும் அசுர சிந்தையே . பக்தர்கள் அல்லாதவர்களிடமோ அசுர சிந்தையால் கடவுள் பயம் அற்றுப்போய் கொடுமை செய்து அதை ரசிக்கும் மனநிலை மனிதர்களை அரக்கர்களாக மாற்றி வைத்திருக்கிறது

அசுரர்கள் கூட இறைவனுக்கு அஞ்சுவார்கள் ஆனால் அசுரர்களுக்கு இடம் கொடுத்த அரக்கர்கள் இருக்கிறார்களே அவர்கள் யாருக்கும் அஞ்சவே மாட்டார்கள் அசுரர்களும் மனிதர்களும் கூட்டணி அமைத்துவிட்டால் பலமோ பலம் அடைந்து விடுவார்கள்

அப்படிப்பட்ட அசுரர்களையும் அரக்கர்களையும் சீர் படுத்துவாராம் கோவிந்தன்

அது எப்படி என்றால் அவர் மோகினியாக அன்னை நாராயணியாக வெளிப்பட்டு என்பதே வைகுண்ட ஏகாதசி நாள் செய்தி .
அவளின் அன்னை என்ற தாய்மைக்குள் அரவணைப்பிற்குள் அனைவரும் அடங்கி விடுவார்கள்

அசுரர்களையும் ஈர்த்து அவர்களை சிந்தை அற்றவர்களாக மாற்றி தன் முன்னால் மயங்கி நிற்கும்படியாக அன்னை நாராயணி செய்துவிடுகிறாள் . பிரப்பாடு அவர்களை சீர் படுத்தியும் விடுவாள்

இவை அனைத்துமே ஒரு நாளில் நடக்கும் காரியமில்லை . யுக முடிவு வரை தொடரும் ஒரு தொடரோட்டம்


கருப்புசாமியும் அன்னை நாராயணியும்

பாவத்தில் வீழ்ந்தவர்கள் மட்டுமே பாவத்தை உணர்ந்து திருந்தி ஞானம் அடையமுடியும்

ஒன்றுமே இல்லாமல் தூய்மையாக இருந்தால் அது ஞானமாகாது பாவத்தின் சகல ஆழத்தையும் உணர்ந்து அது அவசியமில்லை என இயல்பாலும் கடந்துவிட்ட நிலை வந்தால் மட்டுமே பட்டறிவு  ஞானம்

ஆக மனித ஆத்மாக்களை மாயையுள் விழ வைப்பதன் நோக்கம் அவர்கள் அப்படியே கெட்டு நேராக நரகத்தை நிரப்புவதற்கல்ல . அங்கிருந்து அவர்களை ரட்சித்து வெளியேற்றி பாவத்தை பரிகரித்து ஞானம் கொடுப்பதற்கு

இந்த வேலையை யார் செய்கிறார்கள் என்றால் அதிதேவர் நாராயணியே

தேவர்களாக இருந்தவர்களே அசுரர்களாக மாறினார்கள் . எதன் நிமித்தம் என்றால் தங்களுக்கு பிறகு மனிதனாக படைக்கப்பட்ட சிவனை கடவுள் தனக்கு இணையாக்கி தனக்குள்ள எல்லா மரியாதையையும் வழங்கும்படி சொன்னாரே அதாவது சிவனுக்கு அதிதேவர் அந்தஸ்து கொடுத்ததை ஏற்றுக்கொள்ளாமலேயே அவர்கள் அசுரர்கள் ஆனார்கள்

சிவனுக்கு முன்பே இருந்த அதிதேவர்களான  நாராயணன் ஆதிசேஷன் நாராயணி ஆகியோரை அசுரர்கள் எதிர்ப்பதில்லை . ஆனால் சிவனை அவர்கள் அங்கீகரிப்பதில்லை

கூடாரை சிவனோடு கூடாத அசுரர்களை வென்று சீர் படுத்தும் கோவிந்தா என்பதுதான் அக்காவின் வார்த்தை


இது வீரபாண்டி மாரியப்பன் கோவில் சுயம்பு












இங்கு சிவலிங்கத்தை மறைத்துக்கொண்டு கருப்புசாமி அம்மனுக்கு காவல் தெய்வமாக நிற்கிறார்


எல்லோரும் கருப்பசாமியை வழிபாடுகிறார்கள் பின்னால் இருக்கும் லிங்கத்தை கவனிப்பதில்லை


மிகவும் புகழ் பெற்ற புரதான கோவில் இது .மிகுந்த சக்தி கொண்ட அம்மன் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட கோவில்


இங்கு லிங்கத்தை மறைத்துக்கொண்டு நிற்கும் கருப்புசாமிக்கு வழிபாடு நடக்கிறது

நான் பலமுறை இக்கோவிலுக்கு சென்றிருக்கிறேன்

இங்கு லிங்கம் இருப்பதை கவணித்ததில்லை

அம்மன் கோவில்களில் மட்டுமே கோவிலுக்கு வெளியே கருப்புசாமி என்கிற காவல்தெய்வம் இருக்கும்

சிவன் கோவிலிலோ பெருமாள் கோவிலிலோ முருகன் கோவிலிலோ கருப்புசாமி காவல் தெய்வமாக இருக்காது

ஆகம வழிபாடு உள்ள அம்மன்கோவில்களிலும் வெளியே உள்ள கருப்புசாமிக்கு சைவப்பலியாக பூசணியை உடைக்கிறார்கள்

ஆனால் கிராமகோவில்களில் கருப்புசாமிக்கு ஆட்டை கோழியை பலிசெலுத்தி அதை உண்டுவிட்டு கோவிலுக்குள் வருவதால் கோவில் அசுயை படுகிறது என்கிற கருத்து பரவலாகி வருகிறது

ஆகவே இப்போது அம்மனை வழிபட்டுவிட்டு பிறகு கறியை சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குள் வராமல் வீடு சென்றுவிடுங்கள் என்று சொல்லத்தொடங்கி விட்டார்கள் எங்கள் கோவிலில் எழுதியே போட்டுவிட்டோம்

எல்லா தெய்வங்களுக்கும் பூஜை செய்வார்கள் ஆனால் பலிகொடுக்கமாட்டார்கள்

ஆனால்கருப்புசாமிக்கு பலிகொடுப்பார்கள் அது ஏனென்றால் அவன்கெட்டவன் ஆனால் அம்மாவிடம் மட்டும் அவன்காவல்காரனாக அடங்கி நிற்கிறான் அவனை சாந்தப்படுத்த பலிகொடுக்கிறோம் என்பார்கள்

இந்த கருப்புசாமி என்பவர் அசுர சக்தியாகும் இவர்கள் சிவனை ஓரங்கட்டிவிட்டு தங்களை அம்மனை காவல்காக்கிரவர்கள் போல காட்டிக்கொண்டுள்ளனர்

அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார் வெள்ளி கிரகம் இந்த கிரகத்தின் அதிதேவதை நாராயணி

பரலோகத்தில் நாராயணனோ சிவனோ முருகனோ அசுரர்களை ஒடுக்குகிறவர்கள் என்றால் அவர்களை தனது தாய்மையால் கொஞ்சம் ஆதரிக்கிறவள் நாராயணி

அதனால்தான் அசுர சக்திகள் அம்மன் கோவிலில் மட்டும் காவல்காரன் என்கிற போர்வையில் வந்து நிற்கிறார்கள்

இந்த அசுரர்கள் மனித குலத்தை இச்சைகள் ஆணவங்கள் அக்கிரமங்களை தூண்டி ஒருவர்க்கொருவர் கெடுதல்கள் பாவம்செய்ய வைக்கிறவர்கள் ஆதலால் இந்த அசுரர்கள் செய்கிற பாவத்தை மன்னிக்கும்படியாக அவர்களை நல்வழிப்படுத்தும்படியாக இறைவனிடம் பூசணியை உடைத்தும் எலுமிச்சையை அறுத்தும் பலி செலுத்தும் வழக்கம் ஆதியில் இருந்தது . அதை காலப்போக்கில் கருப்புசாமியை ஆடுகோழிசெலுத்தி வழிபடுவதாக மனிதர்கள் மாற்றிக்கொண்டு தங்கள் வயிறை நிரப்புவதாக மாற்றிக்கொண்டனர்

சிறுதெய்வ வழிபாடு செய்யாதே எனவள்ளலார் அறிவுறுத்தியதன் பின்னணி இதுவே

சிறுதெய்வங்களை வழிபடக்கூடாது மாறாக அவர்களை மன்னிக்கும்படியாக இறைவனிடம் சைவப்பலியை சமாதான பலியாக செலுத்தவேண்டும்
யுக முடிவு காலம் வரை அசுரர்கள் அனைவரையும் நல்வழிப்படுத்த இயலாது . ஏனென்றால் கலியுகத்தின் இயக்கமே அசுரர்களின் செயல்பாட்டால் வருகிறது . தீமை நன்மை இருந்தால் மட்டுமே இயக்கம் இருக்கும்

ஆகவே அன்னை நாராயணி அசுரர்களையும் தாங்குகிரவளாகவே இருக்கிறாள் . இந்த மென்மையை அசுரர்களும் பயன்படுத்தி அன்னையை காளி என்ற தீய சக்தியாகவே மாற்றியும் வைத்திருக்கிறார்கள்

இச்சைகள் ஆக்ரோஷம் போன்ற ரஜோகுணம் உலகம் இயங்குவதற்கு ஓரளவு உதவியும் செய்கிறது . ஆனால் அளவுக்கதிகமாகி பாவங்கள் துன்பங்கள் வரவும் காரணமாகி விடுகிறது

காளியை மாகாமாயை என்றும் சொல்வார்கள் . இந்த காளி வழிபடுவோர் பலர் தீமைகள் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள் மந்திரவாதிகள் தங்கள் ஏவல் பில்லி சூனியங்களுக்கு இவளை பயன்படுத்துகிறார்கள்

இவள் உலகத்தை விருத்தியாக்குகிறாள் அப்படி இப்படி பாவத்தில் வீழ்த்துவதும் இவளே அந்த பாவத்திலிருந்து வெளியேற்றி விடுவதும் இவளே என்றும் சொல்வார்கள் அது எவ்வளவு உண்மையோ அதை விட உண்மை நாராயணி அசுரர்களுக்கு இடம் கொடுத்தவளாக சிவனை மிதிக்கிறாள் என்பதாகும் . காளி என்ற மாயாசக்தியாக அவள் எப்போதும் சிவனை மிதிப்பதாகத்தான் ஞானிகள் சித்தரித்துள்ளனர்







அசுரர்களின் ரகசியம் அவர்கள் சிவனை வெறுத்து சிவனுக்கு மாற்று சக்தியாக தங்களை காட்டிக்கொள்வதில் இருக்கிறது . சிவனைப்போன்ற மனிதர்களை இச்சை ரஜோகுணத்தில் இழுத்து விட்டு அவர்களை மிதித்து அழுத்த தயாராக உள்ளதில் உள்ளது

சமரச வேதாந்தியான அன்னை நாராயணியிடம் அசுரர்கள் சிவனை அதிதேவராக ஏற்றுக்கொள்ள வழிகாட்டுவாயாக என்ற வேண்டுதலை ஏறேடுத்தால் அசுரர்கள் நல் இணக்கமாகி நல்ல சக்தியாகும் மாறுவார்கள் .

காளி பாவத்தை பரிகரிக்கிரவளாக மாறுவாள் . அந்த நிலையை பவதாரிணி என்பார்கள் . பவதாரிணியாக மகாகுரு ராமகிருஷ்ண பரமஹம்சர் காளியை வழிபட்டார் . பவதாரிணி சிவனை மிதிக்கமாட்டாள் மாறாக சிவனை அபிஷேகித்து வழிபடுவாள் .




காளி சிவனை மிதித்தால் அவள் துர்த்தேவதை ; ஆனால் சிவனை வழிபட்டால் ராஜாகாளி பவதாரிணி சாந்த சொருபிணி நல்சக்தியாக மாறிவிடுகிறாள் . இப்போது அவள் சிவகாமி .

அன்னை நாராயணியை உணரத்தொடங்கியவுடன் எனது செயல்பாடுகள் யாவும் முடங்கத்தொடங்கின . பிரச்சினைகள் மேல் பிரச்சினைகள் வந்து குவிந்துவிட்டன . விட்டுவிடலாமா என்கிற அளவுக்கு வந்துவிட்டது

பிற்பாடுதான் கடவுள் இந்த கருப்புசாமிக்காக சைவப்பலி செலுத்தி அவர்கள் சிவனை அதிதேவராக ஏற்றுக்கொள்ளும் மனநிலை உண்டாகட்டும் என்று வேண்டுதல் செய்ய வழிகாட்டினார் . கட்டுகள் விலகத்தொடங்கின .

சிவகாமியிடமும் தாங்களே சிவனை நேசித்திருக்க தங்களால் பாதுகாக்கப்படும் அசுரர்களும் சிவனை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை உண்டாக்குவீராக என்று மன்றாடுவது அவசியமாகும்

இதுவே சமரச வேதத்தின் ஒரு வெளிப்பாடுமாகும் . சமாதானம் தழைத்து அசுரர்களும் தேவர்களாக மாறும் வழி பிரார்த்தனை இதுவே

இப்பிரார்த்தனையே கலியுகம் முடிந்து சத்திய யுகம் தோன்றுவதற்கு திறவுகோலுமாகும்

அசுரர்களும் தேவர்களும் கூடி இருந்து குளிர்வார்கள்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய   

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி


தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி