Total Pageviews

67,705

Sunday, December 25, 2011

எளிய பிரார்த்தனை!!!! நல்ல பிரார்த்தனை!!! சிறந்த பிரார்த்தனை !!!!!!

கடவுளை கடவுள் என்று மட்டும் அழைத்து வழிபடுவது மிகவும் நல்லது!வீணான பிரச்சினைகளுக்குள் மாட்டிகொள்ளாமல் நமது பிரார்த்தனை கடவுளை சென்று சேர்வதை நாம் உருதி படித்துகொள்ள வேண்டியிருக்கிறது!கடவுள் என்று அழைக்கும் போது யார் கடவுளாக இருக்கிறார் என்கிற பெரிய குழம்பிய குட்டையை விட்டு வெளியேறி விடுகிறோம்!யார் கடவுளாக இருந்தாலும் அவருக்கு நமது பிரார்த்தனை சென்று சேர்கிறது!

கடவுளிடம் தொடர்பு கொள்ளுவதும் அவரிடம் நம் தேவைகளை வேண்டுவதும் கடவுள் பிரியப்படாத ஒன்று அல்ல!

கடவுளிடம் தொடர்பு கொள்ள யாரேனும் இடைத்தறகர்கள் வேண்டும் என்பது போல ஒரு தாழ்வு மனப்பாண்மைக்குள் நாம் இருக்கிறோம்!அல்லது அவரைப்பற்றிய ஏதாவது படிமானங்கள் வேண்டும் என நினைக்கிறோம்!

அவர் மீது நாம் ஏதேனும் கருத்துகளை ஏற்றாமல் நிர்விகல்பமான --அல்லது தூய மனப்பாண்மையுடன் கடவுளே என்று மட்டும் அழைப்பதே ஒரு பரிசுத்தம்
என்பதை உணரவேண்டும்!


இது மிகவும் எளிமையானது!நம்பகமானது!அனுபவத்தில் வெற்றிகரமானது என்பதை நாமே உணரலாம்!இறைஅச்சமும்;இறைஅன்புமே உண்மையான பக்தியின் அடிப்படையாகும்!இந்த உள்ளத்தின் அளவு கடவுளுக்கு நன்றாக தெறியும்!அந்த அளவு நம்மை அவரும் நேசிப்பார்!நம்மோடு உறவாடுவார்!நமது பலகீணங்கள் யாவற்றிலும் நல்ல வழிகாட்டுவார்!இறைதூதர்கள் மூலம் அருளப்பட்ட வாசகங்களில் எப்படி பிரார்த்தனை செய்வது என்பதும் வெளிப்படுத்த பட்டுள்ளது!இந்த பொதுவான பிரார்த்தனையை காலையில் ;நேரம் வாய்க்கும் போதெல்லாம் ஏறெடுக்கலாம்!இதனால் கடவுளை நம்மிடம் கவணத்தை ஈர்த்து நமது சொந்த வேண்டுதலை கூட வைத்து விடலாம்!முயற்சித்து பாருங்கள்!கடவுள் உங்களை வழி நடத்துவாராக!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  

நாரயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் 
கடவுளே உம்மைத்துதிக்கிறேன் உமது அருளால் என்னை நிரப்புவீராக சாந்தி உண்டாக்குவீராக 

எல்லா புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து காத்து வளர்க்கும் கடவுளுக்கே ஆகும் ! நீர் அளவற்ற அருளாளன் ;நிகரற்ற அன்புடையோன் ! நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதியும் நேரே  ! உம்மையே நாங்கள் வணங்குகிறோம் உம்மிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் எங்களை நேர் வழியில் நடத்துவீராக!எவர்களுக்கு அருள் புரிந்தீரோ அவ்வழி !நெறி தவறியோர் வழியுமல்ல ! உம் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல!!

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பரம பிதாவே !உம் நாமம் மகிமைப்படுவதாக !உம் ராஜ்ஜியம் வருவதாக !பரமண்டலங்களில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலும் உம் சித்தம் செய்யப்படுவதாக ! எங்களுக்கு அன்றாடம் தேவையான ஆகாரத்தை இன்றைக்கு தாரும் !எங்கள் பாவ தோஷங்களை எங்களுக்கு மன்னியும் !அது போல பிறரின் தீமைகளை மன்னிக்கிற நல்ல இதயத்தை எங்களுக்கு தாரும் !எங்களை சோதனைக்கு உட்பட பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும் ! ராஜ்ஜியுமும் வல்லமையும் மகிமையும் என்றென்றும் உம்முடையவைகளே!

நித்தியமான  இறைவா !! நீரும் உமது வாக்காகிய நாராயணனும் மட்டுமே நித்திய ஜீவன் உள்ளவர்கள் உங்களால் அருளப்படுபவர்கள் மட்டுமே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும்  !!! .உமது சித்தம் ஒன்றே செய்யப்பட தகுதியுள்ளது !! உமது கரத்தில் கருவியாய் இருப்பதே நல்லது  ! ஆனாலும் அசுரர்கள் உமக்கு விரோதமாக என்னை ஆண்டுகொள்ளவும் பயன்படுத்தவும்  முயல்கிறார்கள் !!!...... இதில் தற்காத்துக்கொள்ள இயலாதவனாக இருக்கிறேன்  !!அன்பே வடிவான இறைவா !. எனக்கு உடலும்,ஆன்மாவும்,நீர் அருளிய உயிரும் உள்ளன.நான் இவற்றை உமக்கே அர்ப்பணிக்கிறேன் ! .என்னை ஆண்டு கொள்வீராக !!! நேர் வழிபடுத்துவீராக !!!

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் என்னை நிரப்புவீராக -  சாந்தி உண்டாக்குவீராக ! உம் சக்தியால் என் ஆத்மாவை துய்மையாக்குவீராக ! ஒளி சரீரம் பெரும் தகுதி உண்டாக்குவீராக ! 

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் என் குடும்பத்தை நிரப்புவீராக சாந்தி உண்டாக்குவீராக  !!

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் என் தொழிலை நிரப்புவீராக - சாந்தி உண்டாக்குவீராக  !!   

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் உலகம் முழுமையும் சாந்தி உண்டாக்குவீராக  !! சகல் மதங்களுக்கிடையிலும் சாந்தி உண்டாக்கும் சமரச வேதத்தை அருள்வீராக !!