Total Pageviews

Friday, February 21, 2020

நம்பி கெட்டவர் எவரையா ?


நம்பிக்கெட்டவர் எவரையா ?

பாபநாசம் சிவன் அவர்களின் பாடல்

பல ஆன்மீகர்கள் வாழ்வில் ஒரு பாபம் சாபம் வந்து உறுத்தும்போது அறிவு ஞானம் எல்லாம் வீண் என்பது போல உணர்வுக்கு அடிமையாகி முடங்கி விடுகிறார்கள்

அறிவைக்கொண்டு அவரவர் மனதிற்கு விளக்கம் சொல்ல முடியாது

அப்படிப்பட்ட நிலையில் எளிமையாக மனிதர்களை உயர்த்துவது ; மனதை வசப்படுத்துவது பக்தியோகிகளின் இசையே ஆகும்

நாலு நல்ல பாட்டுகளை உணர்ந்து பாடுபவர்களின் குரலில் கேட்டால் மனது ஆசுவாசப்படும்

சங்கீதக்காரர்கள் என சகல மதங்களிலும் ஆத்மாக்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள்

Dr. Shobana Vignesh அவர்கள் மிக எளியவர்களுக்கும் பலனளிக்கட்டும் என்ற அக்கறையோடு சங்கீத உலகில் சாதனைகள் செய்து வருகிறார்

அதுவும் வள்ளல்பெருமானின் பாடல்களை விருத்தமாக பாடி பிரபலப்படுத்தியும் வருகிறார்

வாழ்க வாழ்க

மயிலாப்பூர் என்று கேள்விப்பட்டதால் அதன் முக்கியத்துவம் உணராதவர்களில் ஒருவனாகத்தான் இருந்தேன்

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் சென்று அமர்ந்து நல்ல தியானமும் சித்தித்தது

தலை வெப்பமேறி கண்கள் எரிச்சல் பட்டதால் அங்கிருந்த கலையரங்கத்தில் தூணில் சாய்ந்தவாறு ஆசுவாசப் படித்திக்கொண்டிருந்தேன்

அப்போது பிராகாரத்தில் மயில் போல அசைந்தாடி எட்டு வைத்து ஆங்காங்கே நின்று ஒருவர் வணக்கம் செய்து கொண்டிருந்தார்

உண்மையிலேயே அப்படி ஒருவர் அங்கிருக்கலாம் அல்லது எனக்கு மட்டுமே கண்ணில் தெறிபவராகவும் பல நிகழ்வுகள் உண்டு

ஸ்தல வரலாறு கல்வெட்டுகளில் உண்டா என தேடியபோது அன்னை மயிலாக மாறி சிவனை சேவித்து வழிபட்ட ஸ்தலம் அதனால் மயிலை என்பது புரிந்தது

நம்பிக்கெட்டவர் எவரையா
உமை நாயகனை
திருமயிலையின் இறைவனை

சிவனும் உமையும் சாதாரண மனிதர்களாக மாறி ஆதம் அவ்வாவாக உலகம் முழுவதிலும் மனித இனங்களை உற்பத்தி செய்தார்கள்

பெண்களை மயிலின் ஒயிலுக்கு ஒப்பிடுவார்கள்

அன்னையோ மயிலாகவே மாறி சிவனை மனம் மகிழ செய்துமுள்ளார்

சிவநாமத்தால் அருட்பெருஞ்ஜோதி

சிவநாமத்தால் அருட்பெருஞ்ஜோதி






1 comment:

  1. நம்பி கெட்டவர் எவரையா ?

    ReplyDelete