Total Pageviews

Wednesday, February 19, 2020

இரக்கம் வராமல் போனது என்ன காரணம் ?










இரக்கம் வராமல் போனது என்ன காரணம் ?

பாண்டிய அமைச்சராக இருந்த திருவாதவூறார் குதிரை வாங்கி வார பொக்கிசத்தை எடுத்துக்கொண்டு தொண்டி போகிறார்

வழியில் பட்டமங்கலத்தில் கனவில் தோன்றிய சிவன் ; இப்படியே திருப்பெருந்துறை சென்று அங்கு கோவில் கட்டு என பணிக்கிறார்

அதற்கு கீழ்படிந்து பணத்துடன் எஸ் ஆகி
திருப்பெருந்துறை சென்று கோவில் கட்டிக்கொண்டிருக்கிறார்

ஒற்றர்கள் பணத்துடன் காணாமல் போன மாணிக்கவாசகரை கண்டுபிடித்து இன்னும் ஒரு வாரத்தில் குதிரைகளுடன் மதுரை வராவிட்டால் கொல்லப்படுவாய் என கெடு வைக்கிறார்கள்

நாளக்கு காலை மைதானத்தில் நிற்கும் குதிரைகளை மதுரையில் ஒப்படை என்கிறார் சிவன்

அதுபோல மதுரை வந்த குதிரைகள் மிக நேர்த்தியாய் இருந்ததால் குதிரைகளுக்கு வரவேற்பு நடந்தது

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு வரவேற்ற குதிரைகள் இரவு நரிகளாகி ஊளையிட்டு தப்பித்து ஓடின

இவ்வளவு பித்தலாட்டத்திற்கு சிறையிலடைக்காமல் விடுவானா பாண்டியன்

சிறைபட்ட மாணிக்கவாசகர் என்ன நினைத்திருப்பார்

இறைவனுக்கு கீழ் படிவது ; எந்த சிக்கலுக்கும் அவரிடமே முறையிடுவது ; ஒருகால் அவர் காக்காமல் போனாலும் அதை ஏற்றுக்கொள்வது

அடுத்த பிறவி எடுத்து விட்டதை தொடர்வது

இதுவே முக்தர்களின் மன நிலை

ஆனாலும் ஏமாற்றுவது குற்றம்தானே

மாணிக்கவாசகரை இச்செயல் செய்ய ஏவிய சிவனே குற்றத்தை ஏற்று பிரம்படி பட்டார்

பிட்டுக்கு மண் சுமந்த கதை கேள்விப்பட்டிருப்பீர்களே

அப்போது பாண்டிய நாடே பிரம்படி பட்டது

அந்த நிகழ்வு பிட்டுத்திருவிழாவாக மதுரையில் கொண்டாடப்படுகிறது

பக்தியோகிக்கு நன்றோ தீதோ இறைவனே பொறுப்புதாரி

சங்கீதம் 138:7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.

அந்த மாணிக்கவாசகரே வள்ளல்பெருமானாகவும் வந்தார்







1 comment:

  1. இரக்கம் வராமல் போனது என்ன காரணம் ?

    ReplyDelete