Total Pageviews

Sunday, December 29, 2019

திருப்பாவை 18






உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய் 

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் 

வந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப 

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 


எதிரிகளை கண்டு ஓடாமல் 
மதயானை போல துரத்துகிற வலிமையான தோளை உடைய நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்


கோதை அக்காவிடம் வார்த்தை விநயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்

கூட்டத்தோடு கூட்டமாக கிறிஸ்ணனின் முதல் மனைவியை எழுப்பலாம் அல்லவா

நக்கவிநயம் பிடிச்சுட்டாள்னா

ஆகவே தனி ஆவர்த்தனமாக கட்டம் கட்டி கவணமாக எழுப்புகிறாள்

முதலில் சுபத்ரையை கைக்குள் போட்டுக்கொள்ள ஐந்தாறு பாட்டு பாடினாள்

அவ விட்டுக்கொடுக்க மாட்டாள் அல்லவா

அதே போல நப்பின்னையை புகழ்கிறாள்

கந்தம் தூபத்தால் நறுமணம் கமழும் குழல்களை உடையவளே

கோழி விடாமல் கூவுகிறதே கேட்டாயோ

உன் வீட்டில் நீ அமைத்துள்ள மாதவிப்பந்தலில் பல வகையான விசேஸ மலர்கொடிகளில் வாசம் செய்யும் குயிலிணங்கள் கூவி இன்னிசை பரவுகிறதே

கந்தரலங்காரத்தில் இதழி என்றொரு வார்த்தை வரும் அது ஏதென்றால் நாக்கை மையமாக வைத்து வாழும் பாம்பை குறிக்கும்

அதுபோல எதுகை மோனையாக விரலி என்ற வார்த்தையை பெண்களை குறிக்க பயன்படுத்துகிறாள் அக்கா

சொற்சுவை என்பது இதுதான்

வந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட

உன் வீட்டுக்காரரைபுகழ்ந்துபாடி பரிசில்கள் பெற பெண்கள் வந்திருக்கிறார்கள்

செந்தாமரை போன்ற உன் கைகளில் வளையல்கள் சிறப்பாக ஒலிக்க வந்து உள் வாசலை திறந்து அவனை தரிசிக்க விடு





1 comment: