Total Pageviews

Sunday, December 29, 2019

திருப்பாவை 17




                       

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே 

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த 

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா 

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய். 


பூமிக்கு வானம் ஒரு பாதுகாப்பு வளையம்

பூமியில் வசிக்கும் பறக்கும் எல்லா உயிரிணங்கள் மீதும் காற்றழுத்தத்தால் நிலைத்து இயங்க செய்கிறது ; பிராணவாயுவை தருகிறது

ஒசோன் படலம் என்ற அடுக்கால் பிரபஞ்சத்திலிருந்து வரும் கதிர்வீச்சுகளை தடுத்துக்கொள்கிறது

சூரிய வெப்பத்தை கூட வடிகட்டித்தான் அணுப்புகிறது

பந்துபோல பூமியை சுற்றிய பாதுகாப்பு அடுக்காக வானம் இருப்பதால் அதை அம்பரம் என்கிறது தமிழ்

தமிழ் இலக்கியங்களில் அருளாளர்கள் அருளில் நிறைந்து பாடியவைகளில் பல விபரங்கள் விஞ்ஞானத்தை மெய்பிப்பதாக இருக்கும்

ஆனால் மனித மூளையால் நிதானித்து பூமி தட்டை ; அது பாய் போன்றது என பைபிளில் வசனத்தை சேர்த்துவிட்டு இதுவும் இறைவார்த்தை என கிறிஸ்தவர்கள் நம்பித்திரிந்தார்கள்


பைபிளில் இறைவார்த்தையோடு மனித கலப்புகளும் உள்ளன என பரந்தமனதோடு அவர்கள் ஒத்துக்கொள்ளவேண்டும்

அப்படி இல்லாமல் பூமி உருண்டை என கண்டுபிடித்த விஞ்ஞாணி கலிலியோவின் கண்ணை கெடுத்தார்கள்

தங்களை அன்பின் மதம் என்றும் சொல்லிக்கொண்டார்கள்

மற்ற மதங்களெல்லாம் கடவுளிடத்திலிருந்து வராதவை என்று அவைகளை ஒழிப்பது கடவுளுக்கு செய்யும் தொண்டு என கிறிஸ்தவர்களும் இசுலாமியரும் நினைப்பதை விட்டுவிட்டால் பூமியில் குழப்பங்கள் வராது

கோதை அக்கா கதவை திறந்து அரண்மனைக்குள் வந்துவிட்டாள்

இப்போது மாமனை மாமியாரை கண்ணனை பலராமனை எழுப்புகிறாள்

அவள் உள்ளத்திலிருந்து வரும் மரியாதை ஒவ்வோரு மருமகளுக்கும் முன்னுதாரணம்

பெரியோர்களை மதிப்பது மருமகளின் கடமை

மாமனை பார்த்து சொல்கிறாள்

குடும்பத்தின் அம்பரமே ; தண்ணீரே ; சோறே ; எம்பெருமானே ; அறம் செய்கிறவரே

இல்லறம் அல்லாது நல்லறம் இல்லை


என் மாமன் தர்மவான் ; நீதிதவறாதவன் ; அறம் செய்து குடும்பத்தையும் சமூகத்தையும் காக்கிறவன்

குடிப்பெருமை பெண்களுக்கு தகுதியானதே


ஆயர்கள் கொம்பு ஒன்று வைத்திருப்பார்கள்

கிடையை ஓட்டுவது ; கிளைகளை ஒடித்துவிடுவது ; எதிரிகளை தாக்குவது என பலனளிக்கும்

ஆகவே குலத்தை கொம்பனார் என்கிறாள்

ஆயர்குலத்திற்கே நீ குத்துவிளக்கு ; கொழுந்து என்கிறாள் மாமியாரைப்பார்த்து

மாமனை கூட எழுந்திரு என்பவள் மாமியிடம் ஞாபகப்படுத்துகிறேன் என பவ்வியம் காட்டுகிறாள்

அதே அம்பரத்தை தனது ஒரே காலால் ஊடறுத்தவனே

மேய்ப்பர்களின் தலைவனே

மேய்தல் என்றால் விலங்குகள் உணவு எடுப்பது

ஆகவே அவர்கள் மேய்ப்பர்

அழகுதமிழால் உம்பர் ; ஊட்டுகிறவன் என்கிறாள்

கிறிஸ்ணா படியளக்கும் நேரம் வந்துவிட்டது ; எழுந்திரு


அடுத்து பலராமன் ;அண்ணி என்கிற உரிமையோடு கொஞ்சவும் செய்கிறாள்

செம்பு போன்ற பாதங்களை உடைய செல்லமே பலதேவா

படியளக்கிறவனோடு நீயும் உறங்காதே ; அவனையும் எழுப்பிவிடு

குடும்ப அக்கறை ; பாராம்பர்யம் ; பெருமை எதையும் கோதை அக்கா விட்டுக்கொடுக்கவில்லை

குடும்ப குத்துவிளக்கு அவள்







No comments:

Post a Comment