நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
கோதை அக்கா ரெம்ப அட்வான்ஸ் திங்கிங்க் உள்ளவள்
சுபத்ரை தயாராகி வரும்போதே வாயில் காப்போனையும் எழுப்புகிறாள்
பெரிய பெரிய தலைவர்கள் மேடையில் உட்கார்ந்திருக்கும் போதும் பேசும் போதும் அவர்கள் பின்னால் AK 47 BK 47 உடன் நின்று சுற்றும் முற்றும் கண்ணாலேயே அளவெடுத்துக்கொண்டிருக்கும் பூனைப்படை யானைப்படையை பார்த்திருப்பீர்களே
அவர்தான் நாயகனாக நிற்கும் நபர்
மெய்க்காப்பாளர்கள் மிக மிக முக்கியத்துவம் உள்ளவர்கள் ; அவர்கள் அனுமதியில்லாமல் தலைவர்களால் ஒன்றும் செய்ய முடியாது
அக்கா விவரமானவள் என்பதால் நாயகனாய் நிற்கும் நந்தகோபருடைய வாயில் காப்போனே என புகழ்கிறாள்
விதவிதமாக கொடிகளையும் தோரணங்களையும் வைத்து அழகுபடுத்தியவன் நீயல்லவா
ஆயர் சிறுமியர்களான நாங்கள் உமது பாதுகாப்பில் அல்லவோ மகிழ்ச்சியாக உள்ளோம்
மணிக்கதவம் திறப்பாயாக
உன் எஜமாணி சுபத்ரை எங்களை அழைக்க வந்துகொண்டிருக்கிறாள் பார்த்தாயா
மாயன் மணிவண்ணனை நாங்கள் துயில் எழுப்புமபடியாக ; பாடும்படியாக எங்களுக்கு உள்ளுணர்வு கொடுத்துள்ளான் .
மார்கழி நோன்பு என்ற புது சம்பிரதாயத்தை நான் அவனது உத்தரவு இல்லாமல் ஆரம்பிக்கவில்லை
எப்ப பேசுன கேட்ட என்று ஏதாவது குறுக்கு மறுக்க பேசிராத தாயீ .
No comments:
Post a Comment