எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
ஆயிரம் இருந்தாலும் சுபத்ரை கோதை அக்காவின் மைத்துனி அல்லவா ; கதவுக்கு வெளியே இருந்துகொண்டே அவளை பாராட்டியும் கண்டித்தும் ஏலே வாலே என்று அவளோடு பேசிக்கொண்டேதான் இருக்கிறாள்
குளித்து தயாராகிவிட்டாள் சுபத்ரை ; ஆனால் கொஞ்சம் லேட்டு அவ்வளவுதான்
பலர் போய் விட்டனர் ; ஆனாலும் நான் உனக்காகத்தான் காத்திருக்கிறேன் ; உன்னை சொட்டி பேச மாட்டேன்
உன் அண்ணனை சேவிக்க உனக்கும் எனக்கும் தானே முன்னுரிமை
வலிய அரக்கர்களை கொன்றவன் அல்லவா
அவனுக்கு மாறுபாடு உடையவர்களை அடக்கவும் வல்லவ்ன் அல்லவா
ஆனாலும் உனக்கும் எனக்கும் அவனிடத்து தயவு உண்டு என்கிறாள் கோதை அக்கா
No comments:
Post a Comment