Total Pageviews

Saturday, December 28, 2019

திருப்பாவை 14





         உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கற் பொடி சூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.


அதிகாலையில் சமையல்காரர்கள் தங்கள் வேலையை ஆரம்பிக்கும் அளவு பெருங்கூட்டம் நந்தகோபருடைய அரண்மனை .


சமயல்கட்டிலிருந்து கழுநீர் வழிந்தோடி உனது அரண்மனையின் புழக்கடை குளத்தில் போய் கலக்கிறது


அந்த  சத்தான நீரை குடித்து (டார்ச் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை இல்லாததால்) சூரிய ஒளி அவசியமில்லை என்ற நிலைமைக்கு ஆம்பல் செடிகள் போய் விடுகின்றன


அதனால் இலைகளை குவித்து அவைகள் ஓய்வுக்கு போய்விடுகின்றன என்கிறாள் கோதை அக்கா


அருளில் நிரம்பி பாடப்படுகிற பாடல்களில் தானாக உண்மைகள் - அறிவியல் வந்து குவியும்


செடி ; கொடி ; மரங்களுக்கு வாய் எதுவென்றால் அவைகளின் இலைகளே ஆகும்


அந்த இலைகளில் உள்ள பச்சயம்  என்ற வேதிப்பொருள் சூரிய சக்தியை ஈர்த்து வேர்கள் மூலமாக உறிஞ்சிய தண்ணீர் மற்றும் பூமியின் சத்துக்களை டார்ச் என்ற சாத்தாக மாற்றிக்கொள்கிறது

காற்றிலுள்ள கரியமில வாய்வுவை பிராண வாயுவாக மாற்றி வெளி விடுகிறது 


மரங்கள் மேகங்களை ஈர்த்து மழை பெய்யவைக்கும் ; எனவே மரங்களை வெட்டாதீர்கள் ; மரங்களை நாடுங்கள் ; மரம் வளர்ப்போம் என்றெல்லாம் விளிப்புணர்வு உண்டாக்குகிறார்களே


மழை மட்டுமல்ல ; உயிரிணங்கள் சுவாசிக்க அவசியமான பிராண வாயுவை பூமியில் அதிகரிக்கிற வேலையையும் மரங்கள் ; செடி ; கொடிகள் செய்கின்றன


பிராணவாயுவை எப்போது வெளியிடும் என்றால் உணவு தாயாரிக்காமல் ஓய்வு எடுக்கும் நேரத்தில் பிராணவாயுவை வெளியிடும்


சுபத்ரையின்  சமயல்கட்டிலிருந்து சத்தான நீர் வெளியேறுவதால் வாவியின் ஆம்பல்கள் ஓய்வுக்கு போய் பிராண வாய்வை வெளியேற்றி குடும்பத்தாருக்கு தெம்பை கொடுக்கின்றனவாம்


அதிகாலையில் வாக்கிங் போக சொல்லும் காரணம் பூமியில் பிராணவாய்வு அதிகமாக இருக்கும் என்பதால் ஆகும்


மார்கழி நீராடுதலுக்கும் இக்காரணம் உண்டு


விரதம் ; தூய்மையான பிராணவாய்வு ; இறை பேரருள் நிரம்பி மனிதர்கள் தெம்பாகி விடுவார்கள்

அதுமட்டுமல்ல செங்கல் பொடியை பஸ்பமாக்கி அக்காலத்தில் எல்லோரும் பல் துலக்க மாட்டார்கள் .

வசதி ; வாய்ப்பு நிரம்பியவர்களே அப்படிபட்ட பொடிகளை பயன்படுத்தி பல்துலக்கி பளிச்சென்று வைத்திருப்பார்கள்

இந்த பாடல் ஏதென்றால் சுபத்ரை படுக்கையை விட்டு இறங்கி குளியல் அறைக்கு போய் விட்டாள் ; வெண்மையான பல்லை உடையவளாக இருக்க செங்கல் பொடி பஸ்பத்தை பயன்படுத்து என ஆலோசனை சொல்கிறாள்.

மைத்துனி ஆயிற்றே முத்துப்பல் அழகி என புகழ்கிறாள்

அடுத்து வாயழகை பற்றி பாட வந்து கொஞ்சம் உணச்சி வசப்பட்டு வாயாடி என கண்டித்து விட்டாள்

மார்கழி நீராட எங்களை எழுப்புகிறேன் ; கோவிலுக்கு போய் மங்களம் பாடுவோம் என வாய்கூசாது சொன்னீயே தாயி

உன்னைய உடுக்கடிச்சு அல்லவா எழுப்பிக்கொண்டிருக்கிறேன்

சரி சரி விரைந்து வா

சங்கோடு சக்கரம் தாங்கும் தடக்கையன் ; தாமரைக்கண்ணன் உன் அண்ணனை பாடுவோம் வா

No comments:

Post a Comment