Total Pageviews

Saturday, December 21, 2019

திருப்பாவை 4





மழைக்கு என்று ஒரு தேவர் இருக்கிறார் ; அவர் பெயர் வருணன்

அப்படியிருக்க மழையை கண்ணன் என்றே உருவகப்படுத்துகிறாளே கோதை அக்கா ?

இந்த கலிக்காலத்தில் ஒழுங்காக மழை பெய்யாது என்பதால் ஆழி மழையாகிய கண்ணா ; கரவேல் ; ஏமாத்தாதே என்று சொல்கிறாள்

விஞ்ஞானம் கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறுகிறது என்கிறது

அப்படியானால் கடந்த வருடங்களில் வெயில் கொளுத்தோ கொளுத்தோ என கொளுத்தியும் மேகம் உருவாகவில்லை

கோதை அக்கா சொல்கிறாள் : கிறிஷ்ணரின் கரம் கடல் தண்ணீரை முகர்ந்து வானத்தில் ஏற்றி விடுகிறதாம்

யுகங்களை மாற்றும் அதிகாரம் பெற்றவர்கள் நர நாரணர்கள் ; அதில் முதல்வன் நாராயணன் ; ஊழி முதல்வன்

அவன் நிறம் போல மேகம் கருத்து அவன் கையில் உள்ள சக்ராயுதம் போல மின்னி சங்கு போல அதிர்ந்து இடி இடித்து ; அவனது வில்லாகிய சாரங்கத்திலிருந்து புறப்படும் அம்புகள் போல மழை பெய்கிறதாம்

வருணன் என்றொரு மழைத்தேவர் இருப்பதையே மறைத்து ; எல்லாமே நாராயணன் என்கிறாளே அக்கா

இதன் செய்தி என்னவென்றால் ; அது வைணவத்தில் உள்ள ஏக வழிபாட்டு கொள்கை

ஏக இறைவழிபாடு ; ஏக இறைவழிபாடு என்று இசுலாமியர் ; சன்மார்க்கிக்களும் சொல்கிறார்களே ; வைணவமும் ஏக வழிபாட்டு கொள்கையில் உள்ளதுதான்


சகல தேவர்களும் நாராயணனிலிருந்தே வியாகப்பட்டுள்ளனர்

அவர்கள் தனித்த பிரகிரதிகளாக இருந்தாலும் நாராயணனுக்குள் அடக்கம்

ஆகவே நாராயணனை வழிபட்டாலே எல்லா தேவர்களையும் வழிபட்டதாகி விடுகிறது

தேவர்களுக்கென்று தனி வழிபாடு அவசியமில்லை

ஆதி காலங்களில் இந்திரவழிபாடும் வருண வழிபாடும் தனியாக செய்யப்பட்டும் வந்தன

வருணனும் தேவர்களின் தலைவரான இந்திரனும் இரட்டையர்கள்

ஆகவேதான் மழைக்கு என்று வருண ஜெபமும் ; இந்திர வழிபாடும் நடத்தப்பட்டதை சிலப்பதிகாரத்தில் காணலாம்

இந்திர வழிபாடு ஸ்ரீகிறிஷ்ணரின் காலத்தில்தான் முதல் முதலில் நிறுத்தப்பட்டது

பாகவதத்தில் இந்நிகழ்வு சொல்லப்ப
ட்டுள்ளது

நாராயணனே முழுமையாக அவதாரமாக வந்தது கிறிஷ்ணாவாதாரம்

ஆனால் அந்த விபரம் இந்திரன் அறியவில்லை

ஆகவே கிறிஷ்ணரை சோதிக்க விரும்பி அவர் மாடு மேய்த்தபோது பெருமழை பெய்வித்தனர் இந்திரனும் வருணனும்

கிறிஸ்ணரோ அங்கிருந்த மலையையே பெயர்த்து ஒரு விரலில் குடை பிடித்தார்

அதில் ஒதுங்கி பசுக்களும் மாடுகளும் ஆயர்களும் கழித்தனர்

தங்கள் பலம் செயலற்றுபோன பிறகே தாங்கள் யார் என வேண்டி நின்று நாராயணன் என அறிந்தனர்

அன்றுமுதல் இந்திரவிழா நிறுத்தப்படுவதாக கிறிஸ்ணர் அறிவித்தார்

தேவர்களின் தலைவரான இந்திரனுக்கோ ; படைப்பு தொழிலை செய்யும் பிரம்மனுக்கோ தனி கோவில் ; மரியாதைகள் வைணவத்தில் கிடையாது

ஏனென்றால் அதிதேவரான நாராயணனுக்குள் தேவர்கள் அனைவரும் அடக்கம்

பசுக்களை காத்ததால் மட்டுமே அல்ல ; இந்திரனுக்கும் வருணனுக்கும் வழிபாட்டை நிறுத்தியவர் கோவர்த்தன் என்பதை உணரவேண்டும்

கோ என்றால் பசு என்பது மட்டுமல்ல கோ என்றால் அரசனையும் குறிக்கும்

தேவர்களின் அதிபதி ; அதிதேவர் நாராயணன் ஒருவரே

தேவர்கள் மட்டுமல்ல ; அசுரர்களின் அதிபதி கருப்பசாமியும் அவரது அம்ஸமே

கருப்பசாமியை சைவர்கள் ; சக்தி வழிபாட்டுக்காரர்கள் கொண்டாடுவதால் அவரை சிவ அம்சம் என தவறாக கருதிக்கொள்கிறார்கள்

உண்மையில் கருப்பசாமி நாராயண அம்சம்

நல்ல அண்ணன் ; கெட்ட அண்ணன் என நாராயணிக்கு இரண்டு அண்ணன்மார்

சிவனை அங்கீகரித்த அண்ணன் திருமால் என்றால் சிவனை அங்கீகரிக்காத அண்ணன் கருப்பசாமி

திருமணத்திற்கு முந்திய நிலையில் அண்ணையை காக்கிறவர் என்ற போர்வையில் கண்ணை திரட்டிக்கொண்டு கத்தியை தூக்கிக்கொண்டு நிற்பார் கருப்பசாமி

கண்ணிமார் கருப்பசாமி கோவிலாகத்தான் கிராம கோவில்கள் இருக்கும்

அது ஏதென்றால் தேவர்களும் அசுரர்களும் நாராயணனிலிருந்தே வந்துள்ளனர்

தேவர்கள் அசுரர்களை அடையாளம் காண வேண்டும் என்றால் நான் சொல்லும் எளிய சூத்திரம் சிவனை அங்கீகரித்தால் தேவர்கள் ; எதிர்த்தால் அசுரர்கள்

ஆக்வேதான் நீதிமான்களும் ; பக்திமான்களும் ஆன வைணவர்கள் ; சன்மார்க்கிக்கள் ; இசுலாமியர் பலரும் சிவனை அங்கீகரிக்க தெரியாததால் இன்னும் அசுரர்கள் கணக்கிலேயே இருக்கிறீர்கள் என நான் சொல்வதுண்டு

இந்த ரெண்டும்கெட்டான் நபர்களுக்கு வேதம் தைத்ரியர்கள் என்ற பெயரே வைத்திருக்கிறது

பிரகலாதனை வேதம் தைத்ரியன் என்று சொல்லும்

சிவனை அங்கீகரிக்க தெரியாத பிரகலாதனை காக்க நரசிம்ஹ அவதாரம் வந்தது ; ஆனால் சாரபேஸ்வரராக சிவன் வந்து அவரை வாதித்தார் என்பார்கள்

ராமரையோ ; கிறிஷ்னரையோ ; இயேசுவையோ வாதிக்கும்படியாக சிவன் வரவில்லை

காரணம் அவர்கள் மனித குமாரர்களாக பூமியில் வந்தார்கள்

மனிதர்கள் அனைவரும் சிவனின் அம்ஸமானவர்கள்

தசரத குமாரன் ; நந்த குமாரன் என்றே அடையாளப்படுத்தப்பட்டனர்

இயேசுவை மற்றவர்கள் தேவகுமாரன் என்றால் அவர் பைபிள் முழுக்க தன்னைப்பற்றி சொல்லும்போது மனுஷகுமாரான் என்றே சொல்லியிருப்பார்

சகல நாமங்களை காட்டிலும் ராமநாமமே சிறந்தது என சிவனாரே சொல்லக்காரணம் நாராயணன் மனிதனாக அவதரித்து வரும்போது அங்கே சிவ நாராயண கலப்பு வந்துவிடுகிறது

மோஹினி அவதாரம் எடுத்த நாராயணனுக்கும் சிவனுக்கும் அய்யப்பன் பிறந்தார் என்ற கதையின் சாரம் இதுவே

நாராயணனும் சிவனும் இணைந்தால் அங்கு முழு வெற்றி ; அருவமான இறைவனின் அதாவ்து அல்லாஹ்வின் முழுமை அங்கு வந்துவிடும்


குரானில் காப்ரியேல் என்ற நாராயணனும் ; மீகாயேல் என்ற சிவனும் எப்போதும் இரட்டையர்களாகவே செயல்படுவது குறிக்கப்பட்டுள்ளது

இந்துமதம் ஏன் இறைவனின் மதம் என நான் இசுலாமியர்க்கும் கிறிஸ்தவர்களுக்கும் சொல்லக்காரணம் அல்லாஹ் வின் அதிதேவர்களான காப்ரியேல் என்ற நாராயணனையும் ; மீகாயேல் என்ற சிவனையும் வழிபடும் மதம் என்பதாலேயே

சைவம் சிவனை மட்டுமே வழிபடுகிறது ; வைணவம் நாராயணனை மட்டுமே வழிபடுகிறது ; இசுலாம் கிறிஸ்தவம் அல்லாஹ்வை மட்டுமே வழிபடுகிறது ; இவை அனைத்தும் எப்படி இறை மார்க்கமாகும் என்பதற்கு விளக்கம் குரானில் உள்ளது

2:285. இறை தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; அவ்வாறே முஃமின்களும் நம்புகின்றனர்; இவர்கள் யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை

4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய இவ் வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நம்பாமல் நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.

முகமதுநபி மூலமாக வந்த குரானை மட்டுமல்ல ; அதற்கு முன்பு மலக்குகள் (தேவர்கள்) மூலமாக வந்த வேதங்களையும் நம்பவேண்டும் என்பதே குரானின் கட்டளை

இறைதூதர்கள் யாருமே வராத காட்டுமிராண்டிகளான அரபியர்களையும் ரட்சிக்கும்படியாக குரான் வந்ததால் ; அரபியர்களுக்கு மலக்குகள் - தேவர்கள் யார் என்றே தெரியாததால் அல்லாஹ்வைத்தவிர யாரையும் வழிபடாதே என தவறுதலாக புரிந்துகொண்டனர்

ஆனால் குரான் சொல்லுகிறது அல்லாஹ்வை மட்டுமல்ல அவரது மலக்குகளையும் வழிபடவேண்டும்

ஆனால் வழிபாடு இறைவனுக்கு மட்டும்தானே என இசுலாத் மட்டுமல்ல ; சன்மார்க்கிக்கள் கூட சொல்கிறார்களே என்றால் :

இறைவனையும் தேவர்களையும் ஒருவரை ஒருவர் விட்டுவிடாமல் வழிபட வேண்டும் என்று வரப்போகிற சமரச வேதம் வழிகாட்டுகிறது

யாரையெல்லாம் நீங்கள் வழிபடவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்கள் நாமத்தால் இறைவா - அல்லாஹ் - அருட்பெருஞ்சோதி என்று வழிபட்டால் அது முழுமையானது

எந்த வேதங்களுக்கும் விரோதமானதல்ல


காலம் கலிகாலம் ஆனதால் இந்த உண்மையை இதுகாறும் இறைவன் வெளிப்படுத்தாது நீங்கள் மண்டைகளை உடைத்துக்கொள்ள இறைவன் விட்டிருந்தார்

சத்திய யுகம் நெருங்கியதால் ; வரப்போகிற சமரச வேதத்தின் முன் அறிவிப்பாளன் என்ற முறையில் அடியேன் அறிவிக்கிறேன்

நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் அல்லாஹ் உங்கள் அறிவுக்கண்களை திறந்தருளட்டும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி







No comments:

Post a Comment