Total Pageviews

Sunday, March 29, 2020

திருவெம்பாவை பாடல் எண் : 3




முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்


முத்தை போல புன்னைகையை சிந்தி கலகலப்பாக பேசுகிறவளே !

நல்லடியார்களை கண்டால் சிவன் மீது பற்று கொண்டவள் போல என் அத்தன் ; ஆனந்தம் நல்குகிறவன் ; அமுதம் போன்றவன் என்றெல்லாம் சிலாகித்து தித்திக்க தித்திக்க நீ பேசுவதெல்லாம் பசப்பு தானோ ?

இன்னும் நீ வாசல் திறக்கவில்லையே ?

பந்த பாசம் என உலக பற்றும் ; இறைவன் மீது பழசாகிப்போன பற்றும் என ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக அல்லாடுகிற இயல்புடையவளே

நம் மீதும் குடும்பத்தின் மீதும் புற்று போல வளர்க்கிற புன்மை கர்மங்களை தீர்த்து ஆட்கொள்ள வல்லவர் நாம் சிவனல்லவோ ?

பழவினைகள் எத்தனை பொல்லாப்பு செய்துவிடும் ; எல்லாம் நாம் அறிவோமோ

அறிவுள்ளவர்கள் கர்மங்களை களைய சிவ சற்குருநாதன் மீது பக்தி கொண்டு புகழ்கிறார்களே ; இறைவனை தேடுகிறார்களே ?

அவனை நாடினால் உலக வாழ்விற்கும் அத்தனையும் அருள்வான் என்று அறியீரோ

வெளிநாட்டு மக்களை நல்வழிப்படித்த இயேசுவாக அவதரித்து வந்த ஸ்ரீகிறிஷ்ணர் உலக வாழ்விற்கும் ஆன்ம வாழ்விற்கும் இடையில் அல்லாடீதீர்கள் என கூறியுள்ள அறிவுரையை கேளுங்கள் :

24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் முடியாது.

25. ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

28. உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;

29. என்றாலும் சாலொமோன் ராஜா முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

30. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் இறைவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?

31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

33. முதலாவது இறைவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

34. ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத்தேயு : 6)






1 comment:

  1. திருவெம்பாவை பாடல் எண் : 3

    ReplyDelete