Total Pageviews

Sunday, March 29, 2020

லலித சகஸ்ரநாமம் பாடல் 112 -Lalita Sahasranamam (Verse 112)





VimarshaRupini : விமர்ச ரூபிணி - விமர்சிக்கப்படும் ரூபம் உள்ளவள் – ஈர்ப்பதால் கணக்கிடப்பட்டுக்கொண்டே இருக்கப்படுபவளாம்

அன்னையின் அம்சமான பெண்கள் அனைவருமே ; அவர்கள் உலாவும் போது காண்போர் அனைவராலும் ஏதாவது கணக்கீடு செய்யப்பட்டுக்கொண்டுதானே உள்ளார்கள்
சாதாரண பெண்களுக்கே அப்படி என்றால் சர்வ அழகுள்ள அன்னை ஆராதிக்கப்படாமல் இருப்பாளா ?

Vidya : வித்யா – வித்தைகளின் உறைவிடமானவள் – அறிவின் ஞானத்தின் பிறப்பிடமானவள்

நாம் பார்க்கிற ஒன்றை கணக்கீடு செய்யாமல் – விபரங்களை சேகரிக்காமல் அதைப்பற்றிய அறிதல் – அறிவு வராது

ஒன்றை பற்றிய பல பல விபரங்களே அறிவு ; அதைப்பற்றிய ஆழமான அனுபவமே ஞானம்

அன்னையின் அழகு ஈர்ப்பு மட்டுமல்ல ; அவளைப்பற்றிய பல பல பரிமாணங்களை அவள் உணர்த்திக்கொண்டே இருப்பதால் பக்தனுக்கு ஞானம் பயிற்சியாகிறது

அறிவின் பாதையில் ஞானத்தின் பாதையில் அவள் நம்மை பயிற்சி கொடுக்கிறாள்

ஆகவே அவளே வித்யை

VIydAdi JagatprasUh : வியாதி ஜகத் பிரசூஹ் – உலக வாழ்வின் மீதும் அதன் ஆடம்பரங்கள் மீதும் மோகத்தை கொடுக்கிறவளும் ; அதனால் பாவங்களை செய்ய வைத்து துன்பத்தை ; நோயை வரவழைத்துக்கொள்ள வைக்கிறவளூம் அவளே

Sarva vyAdhi prashamani : சர்வ வியாதி பிராசாமணி – அப்படி நோவுகளில் உலழும் போது அதில் படிப்பினையை கொடுத்து ஞானத்தை கற்றுக்கொடுக்கிறவளூம் இவளே

அந்தந்த நோவுகளுக்கு ஏற்ற படிப்பினை என சர்வ நோவுகளுக்கும் சர்வ படிப்பினையை நமக்கு கற்பிக்கிறவள்
Sarvamrutyu nivArini : சர்வ மிருத்யோ நிவாரணி _ சர்வ நோவுகளாலும் நாம் அழிந்து விடாதபடி நம்மை தற்காத்து விடுவிக்கிறவளூம் இவளே ; தற்காத்து ஞானத்தை நல்கி பாவங்களிலிருந்து ஒவ்வொன்றாக நம்மை விடுவித்து விடுவாள்

பாவத்திலே நம்மை மூழ்க வைக்கும் போது அவள் காளி

சிவனையும் அவரால் உண்டான மனுக்குலத்தையும் மிதித்து இச்சைகளுக்கு ஆட்படுத்துகிறவளாக நாக்கை தொங்கிட்டவளாக சித்தரிக்கப்படுபவள்

அவளே பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கும் போது பவதாரிணி

அவளின் ஒரு கரம் சிவலிங்கத்தை ஆராதிக்கிறவளாக சித்தரிக்கப்படுபவள்






1 comment: