Total Pageviews

Saturday, July 11, 2020

ஒருவரின் பாவத்தை அடுத்தவர் சுமக்க முடியுமா ?





குரானையும் பைபிளையும் ஆராயும்போது அரபியர்களுக்கும் யூதர்களுக்கும் இரத்தத்தில் ஊறியுள்ள சக்களத்தி சண்டை ஆங்காங்கே இறைவார்த்தைகளில் கைவைத்திருக்கும் என்பதை மறக்கலாகாது

அதேபோல ஆப்ரகாமியர்கள் போதிய ஆன்மீக அனுபவமற்றவர்கள் என்பதால் இவைகளுக்கு இந்துதத்துவ ஞானத்தின் அடிப்படையில் விளக்கம் சொன்னால் முழு உண்மையை உணரலாம்

ஒருவரின் பாவத்தை அடுத்தவர் சுமக்க முடியாது என பைபிலும் குரானும் இந்து தத்துவமும் ஒத்துக்கொள்கின்றன

ஆனால் சகலவற்றையும் படைத்தவருக்கு அவரால் படைக்கப்பட்டவர்களின் பாவத்தில் நிச்சயம் பங்கு உண்டு

அதனால் சகலரின் பாவங்களுக்காக நான் மரிக்கிறேன் என இயேசு பல இடங்களில் சொல்லியே மரித்ததால் ; பின்பு உயிர்த்தெழுந்ததால் இயேசு அல்லாஹ் என்ற பிதாவாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு பைபிலியர்கள் போய்விட்டனர்

ஆனால் அவர்களுக்கு பின்பு வந்த வேதமான குரான் இயேசு அல்லாஹ் அல்ல அவரும் ஒரு நபியே என சொல்லிவிட்டது

ஆகவே இயேசு சகலரின் பாவங்களுக்காக மரித்தார் என்று ஒத்துக்கொண்டால் அவரே அல்லாஹ் என்று ஒத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்துவிடும் என்பதால் குரானை உமர் காலத்தில் தொகுத்து எழுதும்போது தங்கள் அறிவுக்குத்தக்க கொஞ்சம் உள்ளடி வேலையை செய்துவிட்டார்கள் - சில வசனங்களை திருத்தி எழுதிக்கொண்டனர்

ஆப்ராகாமியருக்கு போதிய இறை வாழ்வு ; ஆன்மீக அனுபவம் ; ஞானம் இல்லாததால் இப்படிப்பட்ட துர்ப்பாக்கிய நிலையை அடைந்து இன்றளவும் சண்டை போட்டு வருகிறார்கள்

ஆழ்ந்த இந்து தத்துவ ஞான பின்னனியில் இவ்விவகாரத்தை விளக்கம் சொன்னால் இயேசு சகலரின் பாவங்களுக்காக மரித்ததும் உண்மை அதே நேரத்தில் அவர் அல்லாஹ் வும் அல்ல என்பது நிருபனை ஆகும்

அதாவது பைபிலும் உண்மை குரானும் உண்மை ; அதை விளக்கம் சொல்பவர்களே குறை மதியாளர்கள் என்பது விளங்கும்

வெட்டவெளி யில் நூறில் ஒரு பங்கு கூட படைக்கப்பட்ட பிரபஞ்சம் இல்லை

வெட்டவெளியில் அருவமான அல்லாஹ் குன் என பேசியபோது முதலில் வந்தது சத்தம் அதாவது வார்த்தை

இந்த வார்த்தையே சகல பிரபஞ்சமாக மாறியுள்ளது

அதோடு படைக்கும் எதையும் அல்லாஹ் இந்த பிரபஞ்சத்திற்குள்ளேயே படைக்கிறார்

அவர் நாடினால் பிரபஞ்சத்திற்கு வெளியேயும் படைக்கலாம் ; ஆனால் அல்லாஹ்வோ மனித படைப்புகள் வரை அனைத்தையும் இந்த பிரபஞ்சத்திற்குள்ளேயே பிரபஞ்சத்திலிருந்து எடுத்தே படைக்கிறார் . அதாவது பிரபஞ்சமே பரமாத்மா

இந்த பிரபஞ்சம் படர்க்கை மட்டுமல்ல அவர் ஒரு அதி தேவர்

வாரத்தையானவர் என்றால் ஜிப்ரீல் - நாராயணன் என்று அர்த்தம்

கீதையில் இவ்விவரங்கள் சகல படைப்புகளும் பரமாத்மாவுக்குள்ளிருந்தே அவர் மூலமாகவே அல்லாஹ் வால் படைக்கப்படுகின்றன என விளக்கப்படுகிறது

கீதை 10 : 6 எல்லா லோகங்களிலும் வாழும் சகல ஜீவராசிகளும் என்னிலிருந்தே வந்தவை !!

கீதை 10 : 7 யாறொருவன் இந்த உண்மையை -- எனது மறைசக்தியை ; மகிமையை உணர்ந்து விசுவாசிக்கிறானோ அவன் சந்தேகம் தெளிந்தவனாக திடமான பக்திதொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வான் !!

கீதை 10 : 8 எல்லா பவ்தீக மற்றும் அமானுஸ்ய உலகங்களின் ஆதாரம் நானே ! ஒவ்வொன்றும் என்னிடமிருந்தே வெளிப்படுகின்றன ! மிகச்சரியாக புரிந்துகொண்ட ஞானவான்கள் முழு இதயத்தோடு என்னை பின்பற்றி பக்தி தொண்டாற்றுவார்கள் !!


இதே கருத்தை குரானின் வசனங்களும் மெய்பிக்கின்றன

17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.

6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.


படைக்கப்பட்டவைகள் அனைத்தும் யாருக்குள் படைக்கப்பட்டிருக்கிறதோ அவர் அல்லாஹ் வை அடுத்த பெரியவர்

இந்த ஜிப்ரீளை சாதாரண வேலைக்காரன் என்பதாக ஆப்ராகாமியர் தங்கள் அஞ்ஞானத்தால் புரிந்துள்ளார்கள்

2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்

கிறிஸ்தவர்களுக்கு முந்திய ஜபூர் வேதத்தில் இவரை குமாரன் என்ற குறிப்பு உண்டு

சங்கீதம் 2:7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

சங்கீதம் 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

யோவான் 1

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.


பைபிள் சகலமும் அவர் மூலமாக உண்டாக்கப்பட்டது என சொல்லுகிறதே தவிர அவரே படைத்தவர் என சொல்லவில்லை . படைத்தவர் என்று அல்லாஹ் வை ஒத்துக்கொள்கிறது

அதாவது வானவர் காப்ரியேல் - பரமாத்மாவானவர் - அதிதேவர் நாராயணன் என்ற தெளிவு ; மும்மத வேதங்களையும் சமரசப்படுத்தினால் மட்டுமே புரியும்

இந்த ஜிபாராயிலே பூமியில் மலக்கு துத்ராக இயேசுவாகவும் அதற்கு முன்பு ராமராகவும் கிறிஷ்ணராகவும் வந்தார்

4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்;

19:17. மர்யம் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

ஆதாவது ருஹ் என்ற ஜிப்ரீல் மர்யம் வயிற்றில் நின்று ஈஸா மசீஹ் அவதரித்தார்

மசீஹ் என்றால் வானவர் மனிதனாக அவதரித்து வந்தவர் என்ற அர்த்தம்

அறைகுறை ஞானத்தால் அவரும் சாதாரண ஒரு தூதர்தான் என்று சொல்வது தவறு

10. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.

11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.


ஆக யாருக்குள் யாரைக்கொண்டு சகலவற்றையும் அல்லாஹ் படைத்தாரோ அந்த இயேசுவுக்கும் சகல படைப்புகளின் பாவத்தில் அல்லாஹ் வைப்போலவே பங்கிருக்கிறது

ஆகவே அவரவர் பாவத்தை இயேசுவாலும் சுமக்க முடியும்

ஆதி இந்து உபநிசத்தில் ஆதி புருஷ்னை அல்லாஹ் படைத்தபிறகு படைக்க்ப்பட்டவை செய்யும் பாவங்களுக்காக அவரை பளியிட்டதாக வர்ணனை புருஷ சூக்தாத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டுவிட்டது

இயேசுவுக்கு முந்தின தீர்க்கதரிசி ஏசாயா 53:4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

ஏசாயா 53:10 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

பரமாத்மா காப்ரீயேல் நாராயணன் என்ற அதிதேவரைப்பற்றிய தெளிவு அரபியர்களுக்கு இல்லாததால் குரானின் சில வசனங்களை கைவைத்துவிட்டனர்

ஆகவே பாபேல் சாபத்தின் படியாக குரானும் உண்மை பைபிலும் உண்மை என்று புரிந்துகொள்ள முடியாமல் சண்டையிட்டு கொண்டுள்ளனர்

அதுமட்டுமல்ல அந்த காப்ரியேல் இந்தியர்களை நல்வழிப்படுத்த ஏற்கனவே ராமராகவும் கிறிஷ்ணராகவும் அவதரித்துவிட்டார் என புரியாமல் மதம் மாற்றுவோம் என நேரத்தை வீனடித்துக்கொண்டுமுள்ளனர்

முகமதுநபியால் வாக்களிக்கப்பட்ட அல்மஹ்தி என்ற சமரச வேதாந்தி வரும் போது இந்த சண்டைகளை நீக்கி பூமியில் சமாதானம் உண்டாகும்




1 comment:

  1. ஒருவரின் பாவத்தை அடுத்தவர் சுமக்க முடியுமா ?

    ReplyDelete