Total Pageviews

Saturday, July 11, 2020

ஆப்ரகாமிய வேதங்கள் வணங்கா கழுத்து உள்ளவர்களை வளைக்கும் ஆரம்ப பாடம்









ஆப்ரகாமைத்தவிர அவரின் வாரீசுகள் இறைவனை உள்ளத்தால் உணர்ந்து ஒழுகியவர்கள் அதிகமில்லை

தவ்ராத் மற்றும் குரான் எங்கிலும் மக்கள் அல்லாஹ் வோடு இணங்கி வாழாதவர்கள் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி வருகிறது

யாத்திராகமம் 32:9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்

இயேசு வரையான பல தீர்க்கதரிசிகள் அடுத்தடுத்து வந்து கண்டித்தும் ஆப்ரகாமின் வாரீசுகள் இறைநெறிக்கு பயந்தவர்களாக இல்லாமல் சடங்காச்சாரிகளாகவே இருந்தார்கள்

ஏசாயா 58:3 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.

ஏசாயா 58:4 இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்

ஏசாயா 58:5 மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?

ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

எரேமியா 14:12 அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக்கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை

யூதர்கள் பாபிலோனுக்கு சிறைபட்டு போய் விடுதலை பெற்று மீண்டு வந்து கோவிலை கட்டி ரெம்ப தீவிரமாக கும்பிட்டு கொண்டிருந்தபோதுதானே அல்லாஹ் இயேசுவை அனுப்பிவித்தார்

அவர் வந்து அல்லாஹ் வை கும்பிட்டால் மட்டும் போதாது இறைநெறியை உணர்ந்து வாழ வேண்டும்

லூக்கா 3:8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

மத்தேயு 23:25 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

மத்தேயு 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மத்தேயு 23:13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.

குரானும் இதையே வலியுறுத்துகிறது

2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).

ஐந்து வேளை தொழுதல் ; குறிப்பிட்ட நாளில் பள்ளியிலோ ; சினகாக்கிலோ ; குனிந்து வளைந்து தொழுதல் என்பது உடலை ஒடுக்க கற்றுக்கொள்வது அல்லது சர்ச் ளில் கைதட்டி டான்ஸ் ஆடி ஆவேசம் ஆதல் என்பன சரியை வகைப்பட்ட அடித்தட்டு ஆன்மீகம்

ஆரம்ப பள்ளி பாடம்

ஆப்ரகாமிய வேதங்கள் வணங்கா கழுத்து உள்ளவர்களை வளைக்கும் ஆரம்ப பாடம் என்பதற்கு அதிகமாக பெரிய பலன் கொடுக்காத ஒன்று


சரியைக்கு பிறகு பாவ புண்ணியம் ; பிறர் மனம் புண்படுத்தாது வாழ்தல் ; நல்லொரோடும் தீயோரோடும் வளைந்து நெளிந்து நன்மையின் பால் இருத்தல் போன்ற கிரியை என்ற படி உள்ளது

சரியை ; கிரியை என்ற படிகளில் தேறிய பிறகே யோகம் என்ற படிநிலை உள்ளது

அது தியானம் தவம் மூலமாக பரமண்டல சக்திகளுடன் கூடி வாழ்தலாகும்

அது எவ்வளவு வரங்கள் இறைவனிடம் பெற்றாலும் அதை பயன்படுத்தாது இறைவன் சொன்னால் மட்டுமே செயல்படுகிற நிலை - சரணாகதி தத்துவம் என்பார்கள்

ஆப்ரகாமில் வந்த இறை தூதர்கள் அப்படியிருந்தார்கள்

முகமதுநபி முன்னுதாரணமானவர்

ஆனால் ஆப்ரகாமியர் எவருக்கும் அந்த தகுதியில்லை ; அதை வளர்த்துக்கொள்ளும் உபதேசமும் இல்லை

அப்படியானால் சொர்க்கம் வாக்களிக்கப்படுல்ல்தே என்றால் ஆப்ரகாமிய வேதங்கள் ஒரு டோக்கண் அவ்வளவே

அதில் தேறியவர்கள் அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்து கிரியை யோக மார்க்கங்களில் ஞானிகளின் பின்னால் வளர்வார்கள்

யோகம் என்றால் கூடியிருத்தல் என்றே பொருள்

பரமண்டல சக்திகளில் யார் தேவர்கள் யார் அசுரர்கள் ; அவர்கள் உளவியல் ரீதியாக மனித மனங்களை எப்படி ஆளுமை செய்கிறார்கள் என்பதை அவரவர் அனுபவத்தில் உணர்ந்து ஒவ்வொரு தீய குணங்களில் இருந்து விடுபட்டால் அது ஞானமாக உள்ளே விளையும்

அப்போது மட்டுமே சைத்தானால் விளைய வைக்கப்பட அழிவுக்கேதுவான மாமிச சரீரத்தை மீண்டும் ஆதி சரீரத்திற்கு அழிவில்லாத ; வெட்கத்தளங்கள் வெளிப்படை ஆகாத ஒளி சரீரத்திற்கு ஒவ்வொரு மனிதனும் மாற முடியும்

20:121. பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.

சைத்தானால் வழிபிசகிய பிறகே இந்த மாமிச சரீரம் உண்டானது . ஆனால் படைக்கப்பட்டபோது தேவர்களைப்போல ஒளி சரீரம் இருந்தது

அதுவே நித்திய ஜீவன் ; மரணமில்லா பெருவாழ்வு

33 கோடி தேவர்களில் 6 கோடி பேர் சைத்தானாக மாறினார்கள்

அந்த விடுபட்ட இடத்திற்கு தகுதியுண்டாகும் மனிதர்களே ஒளி சரீரம் அடைந்து பரலோகம் போகிறார்கள்

அப்படி முதலாவது சென்றவர் ஆதம் என்ற சிவனே ஆவார்

அவ்வாறு அவர் ஆன இடம் காரைக்குடி அருகிலுள்ள திருப்பத்தூர் வைரவன் பட்டி

இங்குள்ள கோவிலில் ஆதியோகியான சிவன் வைரவனாக மாறினார் என்பதை அடையாளப்படுத்தி உள்ளனர்

வைரம் என்பது அழிவில்லாதது ; பூமியில் புதையுண்டாலும் மக்காதது . ஒளிர கூடியது

அப்படிபட்ட சரீரத்தை ஆதம் மீண்டும் அடைந்து பரத்திற்கு ஏறியதால் அவரை பரமேஸ்வரன் என்றார்கள்

இப்படி பரமேறுபவர்கள் இந்தியாவில் பிறந்து ஞானமார்க்கத்தில் பயின்றுதான் செல்ல முடியும் . சமீபத்தில் அப்படி சென்றவர் வடலூர் வள்ளலார்

ஆகவே ஒருவர் மதம் மாறுவதாலும் யாதொரு பிரயோஜனமுமில்லை என்பதை உணரவேண்டும் இந்து கிறிஸ்த்துவ இசுலாமிய மும் மதங்களில் சமரசம் படைக்கும் சமரச வேதாந்தி என்ற அல்மஹ்தி விரைவில் இறைவனால் அனுப்பபடட்டும் என வேண்டுதலே இப்போதைய கடமையாகும்

1 comment:

  1. ஆப்ரகாமிய வேதங்கள் வணங்கா கழுத்து உள்ளவர்களை வளைக்கும் ஆரம்ப பாடம்

    ReplyDelete