Total Pageviews

Saturday, July 11, 2020

அல் மஹ்தி யாக முகமதுநபியே அவதரித்து வர உள்ளார்









4:125.மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்

யூதம் கிறிஸ்தவம் இசுலாம் மூன்றுமே ஆப்ரகாமிய மார்க்கங்கள்

12:38. “நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல

ஆப்ர்காமின் வாரீசுகளுக்கே உரிய மார்க்கங்கள் இவை

ஆபிரகாம் கலியுகம் பிறந்த பிறகு வந்தவர்

ஆப்ரகாமுக்கு முன்பே மூன்று யுகங்கள் கடந்துவிட்டன

கிருத யுகம் - இந்த யுகத்தின் ரசூல் ஆதம் என்ற சிவன்

இதுவே ஆதி தொன்மையாம் இயற்கை மார்க்கம்

30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

ஆதாமின் காலத்தில் ஆபிரகாம் பிறக்கவே இல்லை

ஆனால் அப்போதே இசுலாம் இருந்தது என்றால் அதுவே தமிழரின் வாழ்வியல்

தொல்காப்பியம் ; திருமந்திரம் ; பரிபாடல் முதலான சங்க இலக்கியங்களில் இவ்வழிபாட்டு நெறி பற்றிய குறிப்புகள் உண்டு

அதில் மனிதர்கள் மூலமாக பிசாசு தான் வாக்கையும் கலந்துவிட்டதால் இந்து மதத்தில் சீர்கேடுகள் வந்திருக்கின்றன

அவற்றை சரி செய்யவே அல் மஹ்தி வர உள்ளார்

அடுத்து திரேதா யுகத்தின் ரசூல்களாக நர நாராயண ஜோடி வந்தது

15:10. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்

ராமராக காப்ரியேலின்அம்ஸமும் லக்ஷ்மணராக மீகாயேலின்அம்ஸமும் வந்தனர்

அடுத்து துவாபர யுகம்

இதில் கிறிஷ்ணராக காப்ரியேலின்அம்ஸமும் அர்ச்சுனராக மீகாயேலின்அம்ஸமும் வந்தனர்

மகாபாரத யுத்தம் முடிந்த பிறகே ஆபிரகாம் பிறந்தார் . அதாவது கலியுகம்

இந்த கலியுகத்தில் இயேசுவாக காப்ரியேலின்அம்ஸமும் முகமதுநபியாக மீகாயேலின்அம்ஸமும் வந்தனர்

22:75. அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்

இறை தூதர்களில் மலக்குகளிலிருந்து வந்தவர்களும் உள்ளனர் . இவர்களை மசீஹ் அதாவது அவதாரம் என்பார்கள்

மலக்கு தூதர்களாக அவதாரங்களாக வந்தவர்கள் காப்ரியேல் மற்றும் மீகயெளின் அம்ஸங்களே அன்றி வேறு யாருமில்லை

ராமர் - கிறிஷ்ணர் - இயேசு இம்மூவரும் ஒருவரே காப்ரியேளின் அம்ஸமே

லக்ஷ்மணர் - அர்ச்சுனர் - முகமதுநபி இம்மூவரும் ஒருவரே மீகாயேளின் அம்ஸமே

ஆகவேதான் ஆப்ரகாமின் வாரீசுகளாக இயேசுவும் முகமதுநபியும் வந்தபோதிலும் ஆப்ரகாமின் வாரீசுகளின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தார்கள்

அவர்களின் அகம்பாவத்தை கடுமையாக கண்டித்தார்கள்

[லூக்கா 3:8] மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[லூக்கா 13:28] நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.

ஆப்ரகாமுக்கு முன்பே தாங்கள் இருக்கிறவர்கள் என்றார்கள்

[யோவான் 8:53] எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.

[யோவான் 8:56] உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.

[யோவான் 8:57] அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.

[யோவான் 8:58] அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆகவேதான் ஆபிரகாம் வழிபட்ட அல்லாஹ் வை மட்டுமே வழிபடாமல் இந்து தர்மத்தின் படியாக குருவின் மூலமாக வழிபடும் முறையை கொண்டுவந்தார்கள்

[மத்தேயு 11:27] சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

இயேசு நாராயணனின் அம்சம் என்பதால் இயேசுவின் நாமத்தால் அல்லாஹ் வை வழிபடும் மார்க்கத்தை உருவாக்கினார்

முகமதுநபியோ சிவனின் அம்சம் என்பதால் மோசேயின் அல்லாஹ் கோவிலுக்கு பதிலாக ஆதம்நபி உருவாக்கிய அஸ்த்ரக் சிவலிங்க கோவிலை வழிபாட்டு கோவிலாக மாற்றினார்

இந்த செய்கைகள் மூலமாக இயேசுவும் முகமதுநபியும் தாங்கள் ஆப்ரகாமுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல ; அவர்களை விட பெரியவர்கள் என நிரூபித்தார்கள்

4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்

யோவான் 15 26. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

யோவான் 16 : 13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;

சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவது என்பது முகமதுநபி அவதாரத்தில் முழுமை அடையவில்லை

ஆப்ரகாமின் வேதங்களோடு அதற்கு முந்திய சைவம் ; வைணவம் உள்ளிட்ட இந்து வேதங்களையும் சமரசப்படுத்தினாலே மட்டுமே அது சகல சத்தியம் ஆகும் .

அதற்காக அல் மஹ்தி யாக முகமதுநபியே அவதரித்து வர உள்ளார்

1 comment:

  1. அல் மஹ்தி யாக முகமதுநபியே அவதரித்து வர உள்ளார்

    ReplyDelete