Total Pageviews

Saturday, July 11, 2020

இறைவனால் பல மார்க்கங்கள் பூமியில் அனுமதிக்கப்பட்டுள்ளன






இறைவனால் பல மார்க்கங்கள் பூமியில் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றே குரானில் உள்ளது .

குரானுக்கு அர்த்தம் சொன்ன மனிதர்கள் ; பேராசைக்கார காலிபாக்கள் ; முகலாய மன்னர்கள் தங்கள் நாடுபிடி ஆசைக்காக இசுலாத்தை தவிர மற்ற அனைத்து மதங்களும் தவறானவை என்றும் பரப்பி விட்டனர்

5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

அல்லாஹ் மனிதர்களை ஒரே சமுதாயமாக மாற்ற விரும்பவில்லை ; விரும்பியிருந்தால் அப்படி செய்திருப்பார் என தெளிவாகவே கூறப்பட்டுள்ளது

ஏன் அல்லாஹ் மனிதர்கள் வேறு வேறு சமுதாயமாகவும் ; அவரவர்களுக்கு ஒரு வேதமும் அருள வேண்டும் ?

ஆதம் என்ற சிவனை பூமிக்கு அனுப்பும் முன்பு இறைவன் கொடுத்த சாபங்கள் மூன்று இன்னும் சமாதானம் அருளப்படாமல் உள்ளது ; அந்த மூன்று சாபங்களே மனிதர்களை பிரிவினை உள்ளவர்களாக மாற்றி வைத்திருக்கிறது

2:36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.

அல்லாஹ் வின் சாபமும் அனுமதியுமே அசுரர்களுக்கு சிந்தையால் மனிதர்களை கெடுக்க இடமும் கொடுக்கிறது

7:14. “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
7:15. (அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.

7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.

ஆதியாகமம் 11:9 பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.

10:19. மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர்.

5:48. அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான் . ; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு என்பது மனிதகுலத்தின் மீதுள்ள ஆதி சபங்களை குறிப்பிடுகிறது

நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

இதே வார்த்தை கிறிஸ்தவர்களும் யூதர்களும் இசுலாமியர்களும் செய்யும் பலவகையான தர்க்கங்களைப் பற்றியும் வருகிறது

2:113. யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.

இவ்வசனங்கள் அனைத்தும் ஒரு சாராரை உண்மை என்று கூறவில்லை . இருவரும் உண்மையை உணராமல் தர்க்கித்துக்கொண்டுள்ளனர் ; உண்மை எதுவென்பதை இறுதி நாளில் விளக்கப்படும் என்றே சொல்கிறது

3:73. “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்” (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்; உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?” (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.

39:3. அறிந்து கொள்வீராக ! களங்கமற்ற மார்க்க வழிபாடுகள் யாவும் அல்லாஹ் வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்;

அல்லாஹ் அல்லாதவைகளில் யார் தேவர்களோ அவர்களே சதா அல்லாஹ் வை வழிபாடுபவர்களாக இருப்பதால் ; அவர்களிடம் வைக்கப்படும் பிரார்த்தனையை அவர்கள் அல்லாஹ் விடம் நிச்சயமாக சேர்த்து விடுவார்கள்

ஆனால் யார் அசுரர்களோ அவர்கள் அல்லாஹ் விதம் பிரார்த்தனையை சேர்க்காது தாங்களே திருடிக்கொள்வார்கள்

யார் தேவர்கள் யார் அசுரர்கள் என்று உணர போதிய ஆன்மீக அனுபவம் ; பாராம்பர்யம் அற்ற ஆப்ரகாமின் வாரீசுகள் அல்லாஹ் வைத்தவிர யாரிடமும் வேண்டுதலே செய்யக்கூடாது என்ற தீவிரவாதத்தில் போய் நிற்கிறார்கள்

ஆதி இசுலாம் ஆகிய ஆதி இந்து தர்மத்தின் வழிபாட்டு மந்திரங்கள் இவ்விசயத்தில் மிக தெளிவாகவே உள்ளன

எந்த ஒரு தேவரின் அல்லது இலாஹா முன் நிற்கிறார்களோ அங்கு மந்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் ?

உதாரணமாக சிவன் முன்னாள் நின்றால் ஓம் நமோ சிவாயா ; சிவா என்று சொல்லாமல் சிவாய என்று சொல்ல வேண்டும்

இதன் அர்த்தம் சிவனாக ஆனவனை வழிபடுகிறேன் என்பதாகும் . மந்திரங்களை சரியாக உச்சரிக்கும் இந்துக்கள் அதன் அர்த்தத்தை காலப்போக்கில் தவறாக அதாவது சிவனையே வழிபடுவதாக புரிந்துகொண்டனர்

இங்கு குரானின் வெளிச்சத்தில் சமரச வேதம் இந்துக்களை சீர்திருத்தினால் போதும் என்கிறது .

உமக்கு பிரியமான எந்த தேவரையும் குருவையும் எப்படி வழிபடவேண்டும் என்றால் ; அவராக வெளிப்பட்ட அல்லாஹ் வை வணங்குகிறேன் என அறிந்த நபரை குருவாக வைத்து அறியாத அல்லாஹ் வை வழிபடு என்பதாகும்

நாராயணன் என்ற காப்ரியேல் தமது முதல் அவதாரமான ராமராக பூமியில் வந்தபோது நாமத்தால் வழிபடுங்கள் என உபதேசித்தார் ; ராமரை வழிபடாதே ராம நாமத்தால் இறைவனை வழிபடு என்றார்

ஒரு இந்து குழந்தையிடம் சென்று ராமர் பெரியவரா ராம நாமம் பெரியதா என கேளுங்கள் ; ராம நாமமே பெரியது என்று சொல்லும்

ராம நாமத்தால் அல்லாஹ் என்று வழிபடுவதே அதற்கு அர்த்தம்

நாராயணனின் இறுதி அவதாரமான இயேசுவாக வரும் போதும் இதே விஷயத்தை தெளிவாக வழிகாட்டினார்

23. அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.

என்னிடத்தில் கேட்காதீர்கள் ; என் மூலமாக அல்லாஹ் விடம் கேளுங்கள்

எந்தவொரு இறை மார்க்கத்திலும் இருவர் வந்துவிடுவார்கள்

ஒருவர் வழிபடப்படும் இறைவனாகிய அல்லாஹ்
அடுத்தவர் அந்த மார்க்கத்தை இறைவன் யார் மூலமாக பூமியிக்கு அனுப்பினாரோ அந்த குரு – இறை தூதர் – ரசூல்

இசுலாத்தில் இணைபவர்கள் முகமதுநபியிடம் சத்தியம் செய்வார்கள்

லா இலாஹா இல் அல்லாஹு
முகமது ரசூல் அல்லாஹு

இங்கு இந்த இருவரும் வருகிறார்களா


அல்லாஹ் வும் அவரால் அனுப்பபட்ட குருவாக முகமதுவை ஏற்றுக்கொண்டால் அது முகமதியம்

அல்லாஹ் வும் அவரால் அனுப்பபட்ட குருவாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் அது கிறிஸ்தவம்

அல்லாஹ் வும் அவரால் அனுப்பபட்ட குருவாக சிவவை ஏற்றுக்கொண்டால் அது சைவம்

அல்லாஹ் வும் அவரால் அனுப்பபட்ட குருவாக நாராயணனை ஏற்றுக்கொண்டால் அது வைணவம்

முகமதுநபியால் வாக்களிக்கப்பட்ட அல் மஹ்தி என்ற சமரச வேதாந்தி விரைவில் வந்து பூமியில் சமாதானத்தை நிலைநாட்டுவார் என்பது மற்ற மதங்களை அழிப்பது அல்ல ; சகல மதங்களையும் அல்லாஹ் வுக்கு ஒப்புரவு ஆக்குவதாகும்

சமரச வேதத்தின் கலிமா ஆவது

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் முகமதுநபியின் நாமத்தினாலும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலும் அல்லாஹ் உம்மையே வழிபடுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

1 comment:

  1. இறைவனால் பல மார்க்கங்கள் பூமியில் அனுமதிக்கப்பட்டுள்ளன

    ReplyDelete