கடவுள், மனிதன் ,தேவர்கள் அசுரர்கள்
என்ற கடவுளுக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட சக்திகள் இவற்றின் செயல்பாட்டு
களம் பூமி!மனிதன் கடவுளை நோக்கி முன்னேறும்போது அசுரர்களை இனம் காண பழகாமல்
மாயைகளை வெல்ல இயலாது!இனம் காணும் போது தனக்குள் தேடுவது மட்டும்
போதுமானதல்ல கடவுளை சரண் அடைந்தே ஆகவேண்டும் என்பது விளங்கும்!குண்டலினி
மணி பூரகத்தை எட்டியவுடன் கடுமையான ஆவிமண்டல தாக்குதலை சந்தித்தே
ஆகவேண்டும்!அப்போதே ஆவியுலகை பகுத்தறிய அறிவை கடவுள்
கொடுப்பார்!மூலாதாரத்தை விட்டு கிளம்பிவிட்டாலே மதி நுட்பம் நுண்ணிய அறிவு
விசாரம் உண்டாகும்! இந்த நிலையிலேயே குருடன் குருடனுக்கு வழி
காட்டமுடியும்!இதை நம்பி ஏமாறுவது நிறைய உண்டு !அசுரர்களை பற்றிய பிரக்ஞை
வராதவர்கள் மணி பூரகத்தை எட்டாதவர்களே!மணி பூரகத்தை எட்டாத நிலையிலேயே
சமாதியை போன்ற நிலை கிடைத்தது எனது அனுபவமும் கூட!
தன்னை உணர்வது ;தனக்குள்ளாக தேடுவது என்பது முழுமையை நோக்கி அழைத்து செல்லாது!அது ஆவி மண்டல சக்திகளுடன் இடைபட பக்குவபடுத்தும் அவ்வளவே !கடவுளை நோக்கிய பிரார்த்தனை ;அவரோடு நேரடியாக உறவாட முயற்சிக்க வேண்டும் கடவுளால் அனுப்ப பட்ட சற்குரு நாதர்களான ராமர் கிருஷ்ணர் இயேசு முகமது ஆகியோர் மூலம் கடவுளே வெளிபடுத்தியுள்ள இறைவார்த்தையை விசாரிக்க பழக வேண்டும் !தியானம் யோகம் என்பது ஒரு கருவி அதனை அறிந்து கொண்டதை பற்றி மட்டுமே பெருமை பாராட்டி கொண்டிராமல் கடவுளை முக்கியப்படுத்தி பிரார்த்திக்கவும் தொடர்பு கொள்ளவும் முயலவேண்டும் !எல்லா புகழும் இறைவனுக்கே!!!
ஆழ்ந்த தியானம் ,தன்னை மறப்பது , ஒருமணி இரண்டு மணி தியானம் ஒரு சில
நிமிடம் போல தெரிவது!உடல் மென்மையாவது மெருகேறுவது ,நம்மிடம் பழகும் போதே
நல்லது நடக்கிறது என்பதை அனுபவத்தில் கண்டு நமக்கு அணுக்க நண்பர்கள்
உண்டாவது 1988 ல் எனக்கும் இருந்தது!இதில் கொஞ்சம் கர்வம் இருந்தது போலவும்
தெரிகிறது!ஆனால் அதன் பிறகு கடுமையான சூடு என் சரீரத்தை தாக்கியது!ஒரு
தியானத்தில் என்னை சுற்றி சூறாவளி போல சுழன்று என்னை எதோ தாக்க முயற்சித்து
விளித்து கொண்டேன்!திருப்பதி சென்று மலை இறங்கும் போது பஸ்சில் வளைவில்
மயக்கம் உண்டாகி எனக்குள் ஒரு பெண் பேசிக்கொண்டே இருந்தது!அதன் பிறகு
கொஞ்சம் தூக்கம் போல நினைவு தப்பி அதே குரல் பேசுவது அனுபவமாகி சொல்லொன்னாத
மன குழப்பங்கள் ஆட்கொண்டு அதிலிருந்து விடுபட போராடிபோராடி நான்
சரியதொடங்கினேன்!இந்த நிலையில் முழு மனித ஆவி ஒன்றை இரவில் பார்த்து நான்
ஒதுங்கி போனேன் !சிந்திக்காமல் இருக்க முடிந்த பயிற்சி கைகொடுத்திருக்கலாம்
!அடுத்து ஒரு முறையும் பார்த்தேன் !அடுத்து பகலிலேயே நல்ல பாம்பு ஆவி சீறி
மறைந்தது !தெருவில் போகையில் வருகையில் காணும் அருவெருப்புகள் பிரேத
அழுகல் உணர்வுகள் அப்படியே என் சரீரத்திற்குள் நிறைந்து
விரக்தியடைவேன்!வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் இரண்டு முறை நேரடியாக தொட்டு
ஆசி பெற்றும் விடுதலை இல்லை! அவரவர் பாவத்தை அவரவர்கள் அனுபவிக்க வேண்டும்
உதவி நான் தூக்கி சுமக்க முடியாது என்பதுபோல அவரிடம் பயம் இருப்பது போல
தெரிந்தது!வேணுகோபால சுவாமி நான் வழிகாட்டுகிறேன் என்றார்!ஆனால் அது
போதவில்லை!!
ஜீவசமாதிகளை
தேடி தியானித்தும் விடுதலை இல்லை!கோவிலாக சுற்றியும் தீரவில்லை!ராமானுஜர்
சமாதிக்கு அருகில் கூட தியாணம் செய்தும் பலனில்லை! உடம்பில் கொப்புளங்கள்
உண்டாகி அடுத்தவர் முன் அருவெருப்பாகி கூனி குறுகி மன ஊக்கம் தன்னம்பிக்கை
சுயம் எல்லாம் அடியோடு போயிற்று !நடை பிணமாய் அதல பாதாளத்தில் ஜாதகம்
பார்த்து அதனால் ஜாதகமும் கற்று சித்த வைத்தியர்களின் பின்னால் அலைந்து
கொஞ்சம் மூலிகையும் தெரிந்து பல மருத்துவர்களை பார்த்து பலனற்று ஒரு மூன்று
மாதம் படுக்கை நிலைக்கு செல்லும்படி ஆயிற்று!அப்போது ``வருத்தப்பட்டு
பாரம் சுமக்கிரவர்களே என்னண்டை வாருங்கள் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்``
என்ற வாசகம் இயேசுவை பற்றிய ஆர்வத்தை கொடுத்தது!அவர் 10 பெரியாராய்
தெரிந்தார்!சித்தர்களில் 10 சித்தருக்கான ஆற்றல், கடவுளது ராஜ்ஜியத்தை
தேடுவதற்கு அழைப்பு, கடவுள் மீது பக்தி, அன்பு, சக மனிதர்களை நேசிப்பது,
மன்னிப்பது, கடவுளால் பூமிக்கு அனுப்ப படுகிற குருவை -இறைதூதர்களை அடையாளம்
கண்டு ஏற்றுகொள்வது ,மனிதர்களின் தீய செயல்களுக்கு பின்னணியில் அசுர
சக்திகள் இருப்பது ,இந்த சக்திகளை அவர் தேவனது விரலினாலே துரத்துவது ,அசுர
ஆவிகள் வெளியேறும் போது வியாதிகள் சுகமாவது ,அசுத்த ஆவிகள் அவரிடம் பேசுவது
இதையெல்லாம் அவர் பிறவியிலேயே பெற்றிருந்தது சிந்திக்க வைத்தது!மனித
முயற்சியால் குருவாவனவர்கள் தவிர கடவுளால் அனுப்பபடுகிரவர்களை பற்றி
சிந்திக்க வைத்தது!அவர் ஆதியிலிருந்து ஆபிராமுக்கு முன்னமே இருக்கிறேன்
மேரியின் மகனாக மட்டும் என்னை பார்க்காதீர்கள் என்றது ராமராகவும் அடுத்து
கிரிஷ்ணராகவும் அவதரித்த அனுப்ப பட்டவரை ஞாபக படுத்தியது !அவர்களும் அசுர
ஆவிகளை துரத்தும் பணியை செய்தவர்கள் !மறுபடி மறுபடி அவதரிக்கிற கீதையின்
வாசகம் நெருடியது!மறுபடி மறுபடி பிறக்கிற கிரிஷ்னரை 5000 வருடமாக தூக்கி
வைத்து ஆடுகிற நாம் 2000 வருடத்திற்கு முன் அவர் பூமிக்கு வந்ததை ஏன்
உணரமுடியவில்லை?கல்கியாக அடுத்த யுகத்தில் வருவேன் என்று கிருஷ்ணர் சொன்னதை
இயேசுவும் மீண்டும் வந்து உலகை ஆளப்போகிரவன் நானே என்றார்!இருவரும் வேறு
வேறு என மத சண்டை போடும் நாம் இருவரும் ஒருவர் என்பதை ஏன் புரிந்து கொள்ள
கூடாது!
ஆனால் அந்த இயேசு
தன்னை கடவுளின் பிரதிநிதி என்றாரே தவிர அவர் இடைவிடாது பிரார்த்திப்பது
வாடிக்கை!நாம் ராமரையும் கிரிஷ்ணரையும் கடவுளுக்கு இணை வைத்து ஒரு கும்பிடு
போட்டு அவரது கொள்கைகளை காற்றில் விட்டது போல இயேசுவையும் கிறிஸ்தவர்கள்
செய்துள்ளார்கள்!இயேசுவும் இறைதூதரே! வழிபாடு கடவுளுக்கு மட்டுமே என்பது
குரானின் வெளிப்பாடு!முகமதுவுக்கு குர்ஆனில் உனக்கு சொல்லாத இறைதூதர்கள்
உண்டு என சொல்லபட்டது !ராமர் முதல் முகமது வரை 3000 இறைதூதர்கள் பூமிக்கு
வந்திருப்பதாக குரான் சொல்லுகிறது!படுக்கையில் பைபிளையும் குரானையும்
புரிந்து கொண்டேன்!கீதையை படித்திருந்த எனக்கு என முதல் குருவான ராமரே
பைபிளையும் குரானையும் புதிய கோணத்தில் புரிய வைத்தது!வியாதியிலிருந்து
விடுபட 7 ஆண்டுகள் வரை கற்றுகொண்டேன்!தியானித்து விட்டு ஏக இறைவனை
பிரார்த்திப்பது, எதற்க்கெடுத்தாலும் கடவுளை கெஞ்சுகிற பயிற்சிகள் எனக்கு
உண்டாகிறது!அன்றாட வாழ்வில் ஆவிமண்டல செயல்பாடுகளில்
அனுபவமேற்படுகிறது!மனதளவில் திருவோடு ஏந்தியவனை போல ஒரு நிலை
உள்ளது!இருப்பினும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்!இந்த அனுபவத்தாலேயே
அசுரர்களை பற்றிய எச்சரிக்கையை ஆன்மீக அன்பர்கள் பெற திரும்ப திரும்ப
பேசிவருகிறேன் !இந்தியாவை உய்விக்க இறைதூதர் ஒருவரை கடவுள் அனுப்பினால்
இத்தனை ஞானத்தேடல் உள்ள இந்தியா மீண்டும் உச்சத்திற்கு வருமே என்பதால்
அதற்காக பிரார்திக்கிற மன நிலையை உருவாக்க முயற்சிக்கிறேன்!
தன்னை உணர்வது ;தனக்குள்ளாக தேடுவது என்பது முழுமையை நோக்கி அழைத்து செல்லாது!அது ஆவி மண்டல சக்திகளுடன் இடைபட பக்குவபடுத்தும் அவ்வளவே !கடவுளை நோக்கிய பிரார்த்தனை ;அவரோடு நேரடியாக உறவாட முயற்சிக்க வேண்டும் கடவுளால் அனுப்ப பட்ட சற்குரு நாதர்களான ராமர் கிருஷ்ணர் இயேசு முகமது ஆகியோர் மூலம் கடவுளே வெளிபடுத்தியுள்ள இறைவார்த்தையை விசாரிக்க பழக வேண்டும் !தியானம் யோகம் என்பது ஒரு கருவி அதனை அறிந்து கொண்டதை பற்றி மட்டுமே பெருமை பாராட்டி கொண்டிராமல் கடவுளை முக்கியப்படுத்தி பிரார்த்திக்கவும் தொடர்பு கொள்ளவும் முயலவேண்டும் !எல்லா புகழும் இறைவனுக்கே!!!