Total Pageviews

Friday, May 4, 2012

வெறுமை ஆக்கல்

இருக்கிறேன் என்ற இருப்பை தவிர வேறுதுவும் இல்லாது இருங்கள் !
                         --- Rrs Sundaram 
நான் நித்தியமானவல்ல பூமியும் வாணமும் ஓர் நாள் அழிக்கபடும் ஆனால் நித்தியமானவர் கடவுள் ஒருவரே அவர் நாடினால் நித்தியமானவனாக வாக்களிக்கபட்ட பரலோகத்திற்குள் நுழைவேன் இது கடவுள் தமது இறைதூதர்கள் மூலமாக உறுதிபடுத்தியது இதனை மறுக்கிற தத்துவ ஞானம் எவ்வளவு புலமை வாய்ந்தது ஆனாலும் சூனியவாதம் அசுரனின் கடைசி மாய்மாலம்

மனிதனின் குழப்பம் பிரச்சினைகளுக்கு காரணம் அவன் கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் -அவரின் சித்தம் மட்டும் செய்து விட்டு நிம்மதியாய் இருப்பதற்கு பதில் சுய சித்தம் செய்வதை தேர்ந்தெடுத்து கொண்டது !சுய சித்தம் சிறப்பாய் செய்து கடவுளை போலவே உன்னால் ஆகிவிட முடியும் என அசுரன் ஏமாற்றியதை கேட்டு கடவுளாகும் ஆசையில் இந்த குழப்பங்களுக்குள் மாட்டி கொண்டான் !


மனிதனுக்கு முந்தய படைப்பு --வானவர்கள் --இவர்களுள் எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் கடவுளின் சித்தம் மட்டுமே செய்கிறவர்கள் தேவர்கள் !எங்களுக்கும் ஆற்றல் இருக்கிறது ஆகவே நாங்களும் எங்கள் இஷ்டப்படி செயல்படுவோம் என கலகம் செய்கிறவர்களே அசுரர்கள் ! இந்த அசுரர்களே மனிதனுக்கு துர்போதனை செய்து அவனை தீமையில் வழிநடத்துபவர்கள் !தேவ -அசுர ஆவிமண்டல யுத்தம் மனிதர்கள் மூலமாக நடை பெற்றுகொண்டே இருக்கிறது !இது கற்பனையா உண்மையா மனித வாழ்வுக்கு ஒரு இலக்கு இருக்கிறதா இவை எல்லாவற்றையும் நான் நம்புகிறேன் !


தங்கள் கடிய உழைப்பு ஒரே ஒரு நூலிலையில் கடவுளை விட்டு விலகிநிர்க்கிறதோ விலகிநிர்ப்பதால் ஒரு இழப்பு இந்தியாவிற்கு உண்டாகிறதோ என கவலை உண்டாகிறது !


போகர் தேவ -அசுர யுத்தத்தில் அசுரர்களை அழிக்க மனிதானாக  மாறிவரும் முருகு இறைதூதன் என உருவகம் கொடுத்தார் !அந்த முருகன் எவ்வளவு ஆற்றல் உள்ளவனாக இருந்தாலும் கடவுளிடம் பிச்சை பாத்திரம் ஏந்தி எதிர்பார்த்திருக்கிற ஆண்டியாய்தான் இருப்பான் !அவன் சுயத்தை நம்பாமல் கடவுளுக்காக காத்திருக்கிற ஆண்டி மனப்பான்மையிலேயே இருப்பான் !இந்த மன நிலையில் நீங்கள் மேலே பதிவிட்டதை செய்து பாருங்கள் அது பெரும் வெற்றி !

விவேகானந்தரின் பிரார்த்தனை :


நான் பூஜ்யம் ,,இந்த உலகம் பூஜ்யம்,,நீர் மட்டுமே செயல் புரிபவர்! .

நான் உமது கரத்தில் வெறும் கருவி மட்டுமே!...... அன்பே வடிவான இறைவா !பலர் உனக்கு பலவற்றை அளிக்கின்றனர்.நான் ஏழை ,ஆனால் எனக்கு உடலும்,மனமும்,ஆன்மாவும்,உள்ள
ன.நான் இவற்றை உனக்கு அளிக்கிறேன்!

No comments:

Post a Comment