Total Pageviews

Sunday, January 29, 2012

யார் குரு?குருவிலும் பல படிகள் இருக்கிறதா ?சற்குரு யார் ?

யாரிடமிருந்தும் கற்றுகொள்கிர மன நிலை முதலாவது கடவுளை தேடுகிற சாதகனுக்கு வேண்டும்!ஏனென்றால் பூரண உண்மை,முற்றறிவு என்பது கடவுளின் தன்மை!முற்றறிவை நெருங்குவது என்பது குருடர்கள் யானையை தடவிய கதை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்!குருடர்கள் உணர்ந்ததெல்லாம் தவறு என ஒதுக்க முடியுமா?மனிதர்களின் முன்னேறிய அறிவு இப்படிபட்டதே!தும்பிக்கை கயிறு போலுள்ளது என்பது `பகுதி உண்மை`!கால் உலக்கை போலுள்ளதும் `பகுதி உண்மை`!இப்படிப்பட்ட பல `பகுதி உண்மைகள்` ஆண்மீக உலகில் வலம் வருகின்றன!இவை தவறல்ல!நான் கண்டதுதான் உண்மை மற்றது தவறு என புறந்தள்ளூவதில் தவறு வருகிறது!யானை கயிறு என்பதிலும் எவ்வளவோ மனதை மயக்கும் விளக்கங்களும் நுனுக்கங்களும் இருக்கும்!இவைகளை அறிந்துகொள்வதும் கடவுளை தேடுகிற ஒரு பாதையே!ஒரு பாதையில் கொஞ்சம் முன்னேறியவுடன் மற்ற பாதைகளில் உள்ள `பகுதிஉண்மைகளை` உள்வாங்கினால் முழுமையை நோக்கி முன்னேற முடியும்!ஆனால் தான் கண்டதுமட்டுமே உண்மை என்கிற மாயை தடுக்கிறது!அப்படியில்லாமல் மாற்று கருத்துகளை `விசாரம் செய்வது` உள்வாங்குவது கடவுளை நெருங்குகிற `யோகம்` என்கிறது கீதை!

பரமாத்துமாவை சிலர் தனக்குள்ளாக மூழ்கி தியானிப்பதாலும்;சிலர் தத்துவ விசாரம் செய்து முற்றறிவை விளையவைப்பதாலும்;இன்னும் சிலர் பலனில் பற்றுவைக்காத கர்மயோக உழைப்பினாலும் கண்டடைகிறார்கள்!--கீதை13:25

மனிதாபிமானம்,அஹம்பாவமின்மை,அஹிம்சை,சகிப்புதன்மை,எளிமை உடயவனாய் இறைதண்மை உணர்ந்த குரு ஒருவரை அண்டி சுயகட்டுப்பாடு,நிலைத்தமனம்,பரிசுத்தம் கற்று புலனிண்பங்களை விட்டவனும் ;பிறப்பு இறப்பு முதுமை வியாதி என்கிற பயத்தை கடந்து நான் என்கிற சுயத்தை அழித்தவனும் வீடு மனைவி பிள்ளைகள் செல்வம் என்கிற பந்தங்களில் தவிக்காதவனும் விருப்பு வெறுப்பு இரண்டிலும் மனசம நிலையை அடைந்தவனும் உள்ளார்ந்த பக்தியில் நிலைத்தவனும் தன்னை உணர்வதிலும் எல்லா தத்துவங்களையும் விசாரம் செய்து முற்றறிவை பெறுவதிலும் சலிப்பில்லாதவனுமாகிய இவைஅணைத்தையும் செய்கிறவனே ஞானி --இதில் ஒன்று குறைந்தாலும் அவன் அஞ்ஞானத்தில் உழல்பவனே!---கீதை 13:8

மேற்கண்ட குணாதிசயங்கள் அடையப்பெற்றவர் இறைதண்மை உணர்ந்த குரு!முழுமையடையாத ஒன்றிரண்டு கைவரப்பெற்றவரும் குருவாகிவிட முடியும்!தன்னை விட பெரிய குருடனுக்கு சிறிய குருடன் சிறப்பாகவே வழிகாட்ட முடியும்!நாமும் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அந்த குருவையே பெருமை பேசிக்கொண்டு தேங்கி நின்று விடாமல் அடுத்த அடுத்த படிகளில் உள்ள குருமார்களிடம் கற்றுகொண்டே வளறவேண்டும்!இதற்கு ஜன்னலை திறந்துவைத்து பழகவேண்டும்!மாற்று கருத்துகளை உள்வாங்கவேண்டும்!ஆனால் கிணற்று தவளை மனப்பாண்மை மனிதனை வஞ்சிக்கிறது!தெறிந்த விசயத்தையே திரும்ப திரும்ப பேசகேட்டு புளகாங்கிதம் அடையும் ஒருகூட்டத்தில் திருப்தியடைந்து விடுகிறோம்!நான் பெருசு நீ சிருசு என சண்டையும் போடுகிரோம்!மனித முயற்சியால் குருவாக உயர்ந்தவர்களிடம் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அவர்களை கடந்து சற்குருவை நாடி செல்லவேண்டும்!``தேங்கிய தண்ணீர் சாக்கடை ``ஆகிவிடும் !நாம் தேங்காமல் தேடவேண்டும் !முற்றறிவாளன் கடவுள் ஒருவரே!அவர் தனது செய்தியை;வழிகாட்டுதலை;ஞானத்தை தனது வாயாக உலகிற்கு தானே அனுப்பிய இறைதூதர்கள் மூலமாக அவ்வப்போது வெளிபடுத்தியுள்ளார்!இந்த இறைதூதர்கள் மூலமாக அந்த காலகட்டத்திற்கு அருளபட்டவைகள் பின்னாளில் கலப்படமும் அடைந்து விடுகின்றன!இருந்தாலும் அவைகளை கவனத்துடன் ஆராய்ந்து வேதத்தை உள்வாங்க வேண்டும்!அவைகளில் கலப்படங்களை மட்டும் சுட்டிகாட்டி  ஒதுக்கிவிடாமல் சாரத்தை பிழிய கற்றுகொள்ள வேண்டும்!
உலகின் சற்குருநாதர்கள் 1)ஸ்ரீராமர் 2)கிரிஸ்ணர் 3)மோசே 4)இயேசு 5)முஹமது மட்டுமே!இவர்கள் அந்த காலகட்ட சமுதாயத்தில் உள்ள சாதாரண மக்களும் இறைவனோடு ஒப்புறவு ஆக்கியவர்கள்!வேதம் கொணர்ந்தவர்கள்!இவர்களளவு இறைவனை நெருங்கிய குருமார்கள்:புத்தர்,மஹாவீரர்,ஜொராஸ்டியர்,குருனானக்&வள்ளலார்!இவர்கள் எல்லொரும் ஏக இறைவனை வணங்க ஊக்கபடுத்தியவர்கள்!சித்தர்கள்,ஞானிகள் எல்லாம் கீழ் நிலையில் உள்ளவர்கள்!இவர்கள் எல்லோரையும் உள்வாங்கி கடவுளை நெருங்கி செல்ல வேண்டுவது நமது கடமை!கலப்படங்கள் அதிகரிக்கும் போது கடவுள் இன்னொரு இறைதூதரை அணுப்புவார்!அவரை அணுப்பும்படி நாமும் வேண்டவேண்டும்!

கீதையின் மஹத்துவம் என்னவென்றால் எல்லா மனிதர்களும் அவரவர் உள்ள படியிலிருந்து கடவுளை அடைய 17 பாதையை மிக ஆழமாக விஞ்ஞான பூர்வமாக எளிமைபடுத்தி உபதேசித்துள்ளது!நாம் அறைகுறையாக செய்துகொண்டிருப்பதை பட்டைதீட்டி கொடுத்துள்ளது!கீதையின் சாரத்தை பிழிந்துகொண்டவன் மாத்திரமே ஆண்மீக வாழ்வில் தான் கடைபிடிக்கும் மார்க்கத்தை ஜீவனுடன் புரிந்து கொள்ளமுடியும்!கீதையை புரிந்துகொண்டால் மட்டுமே பைபிளையும் குரானையும் புரிந்துகொள்ளமுடியும்!இல்லாவிட்டால் வெறுமையான வழிபாடாகவும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் சண்டைபோடுகிறதாகவும் கலப்புள்ளதாகவும் முடியும்!

உண்மைகளை மறக்கடித்து மாயம் செய்கிறவைகள் மனிதனது குணங்கள் மட்டுமல்ல!உபதேசங்களில் கலப்பையும்;திரித்து உபதேசிப்பதும் மனிதனை விட மேலான சக்திகளான அசுரர்களின் மாய்மாலங்களாகும்!மனிதர்கள் தேராமல் நியாயத்தீர்ப்பு நாளன்று தங்களுடன் அழிக்க படவேண்டும் என்பது அசுரர்களின் திட்டமாகும்!கடவுளால் படைக்க படுகிற மனித ஆத்துமாவை அவனது சரீரத்தின் புலனிச்சைகளை தூண்டி அதற்கு சந்தர்ப்பமும் ஏற்படுத்தி உலக மாயைகளில் உலலும் படி அசுரர்கள் செய்கிறார்கள்!மனிதன் தவறுக்கு போகும் போது அதற்கு ஒத்துழைப்பு அதிகம் உண்டாக்குவதும் அதே மனிதன் கடவுளை நாடும்போது அதற்கு சொல்லொண்ணா முட்டுகட்டைகளை பிரச்சினைகளை உண்டாக்குவார்கள்!ஒவ்வொரு மனிதனின் மூலமும் இறைசக்தியும் அசுர சக்தியும் குருஸேத்திர யுத்தம் நடந்து கொண்டுதான் உள்ளது!மனிதனை தீங்குக்கு அழைக்க அசுரர்கள் படைதிறண்டு கவ்ரவர்களாய் தாக்குகிறார்கள்!மனித சரீரமாகிய தேரில் குடிகொண்டு உள்ள ஆத்துமாவாகிய அர்ச்சுணன் மீது அசுரர்கள் தாக்கும்போது அர்ச்சுணன் தனது சாரதியாக--வழிகாட்டியாக இறைதூதனாகிய கிரிஸ்ணரை வைத்து அவரின் உபதேசத்தை கேட்டு அசுரர்களுடன் அனுதினம் யுத்தம் செய்து ஜெயிக்க வேண்டும் என்பதே குருஸேத்திர யுத்தம்!இந்த யுத்த களத்தில் மனித ஆத்துமாக்கள் அசுரர்களுடன் போரிட்டே ஆகவேண்டும் என்பதை பலர் ஏற்றுகொள்வதில்லை!போர்க்களம் உணராத போர்வீரனாய் இருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்!மனிதர்களிடம் உள்ள தீய குணங்கள் அவர்களை மயக்கும் மாயைகளை அவர்கள் அஹிரினை என கருதுகிறார்களே தவிர அவைகளின் பின்னணியில் அக்குணங்களை தூண்டி விடும் அசுரர்கள் என்கிற உயர்திணை -ஆவிமண்டல அசுரர்கள் ,தேவர்கள் என்கிற மனிதனை விட உயர்ந்த சக்திகள் உள்ளன!கடவுளை அடையும் பாதையில் தனகுள்ளும் புறத்திலும் அசுரர்களுடன் போராடியே ஆகவேண்டும் !எனவே கீதை போர்க்களத்தில் வைத்து உபதேசிக்க படுகிறது!!!

1 comment:

  1. குரு சாட்சாத் பரப்பிரம்மா
    புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் ! எது புண்ணியம்!
    குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?! குருவை வணங்க கூசி
    நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் உரைத்த
    நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே புண்ணியம்! நல்ல சற்குருவை
    பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!
    http://sagakalvi.blogspot.in/2012/02/blog-post_20.html

    ReplyDelete