Total Pageviews

Sunday, January 29, 2012

`அருள்` x `மருள்`

ஆவி மண்டல சக்திகள் ஆட்கொள்ளும் போது எல்லா மனிதர்களிடமும் அருள் வழிவதும் அதை கடவுள் என மனிதர்கள் நம்புவதும் உண்டு! எல்லா ஆவிகளும் கடவுள் சார்பானவையல்ல! !ஆனால் மனிதனை விட உயர்ந்த சக்திகள்!இவைகளால் பூமிக்குரிய சில நன்மைகளை செய்து தறமுடியும்!நடந்த சம்பவங்களை சொல்ல முடியும்!சில நடக்க போவதை பற்றியும் சொல்ல முடியும்!அதனை உபாசிக்கிறவர்களுக்கு பணம் சம்பாதிக்க ``ஏவல்`` செய்து செய்விணை செய்து கெடுதல் செய்ய முடியும்!எதிர்தரப்பு நபர்கள் வந்து பணம் கொடுத்தால் வைத்த செய்விணையை எடுக்கவும் முடியும்!இவையெல்லாம் `அருள்` அல்ல `மருள்` என்றார் வள்ளலார்!

கடவுளிடமிருந்து வருவது `அருள்` என்றால் அசுர ஆவிகளிடமிருந்து வருவது `மருள்`!அசுர மாயங்களை இனம் காண தெளிவு உண்டானாலேயே கடவுளை நோக்கி முன்னேற முடியும்நம்மை சகலவற்றையும் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் !இந்த ஒருவரை மறைக்கும் முயற்சியில் அசுர ஆவிகள் செயல்படுகின்றன !உடலின் இச்சைகளை தூண்டி உலக மாயைகளில் மனிதனை வீழ்த்துவது; அதனை அடைவதற்கு அக்கிரமத்தையும் துணிவையும் தன்முனைப்பையும் தூண்டி விடுவது!அதற்கு சாக்கு கற்பிப்பது!அந்த தவறுக்குள் மனிதன் ஊறியவுடன் அவனை குற்றவாளி என குற்றம் சொல்லி பாவ சுரணை அற்றவனாக முழுக்க நனைந்து விட்டாய் இனி உனக்கும் கடவுளுக்கும் சம்மந்தம் இல்லை எனவே கல் நெஞ்சக்காரனாய் ஆகிவிடு என கற்பிக்கும் அதே அசுர ஆவிகள் நல்லவர்களுக்கு வைத்திருக்கிற உபதேசம் உனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் என்பது !மனிதனும் கடவுளாகலாம் என்பது மனிதனின் தன்முனைப்பை தூண்டுவது !நீயம் கடவுளாகலாம் நாங்களும் கடவுளாக ஆகிவிட்டோம் அதனால் கடவுள் என்று ஒருவர் அவசியமில்லை என்பது! இறைபேரரசை கலகம் செய்து சுயராஜ்ஜியம் செய்வது!கடவுளின் ஆளுமையை மறுக்கிற எல்லாமே அசுர பின்னணி !ஞானம் போல தோற்றமளிக்கிற மாயாவாதம் அசுர உபதேசம் !இந்த மாயையில் நிறைய நல்லவர்கள் மாட்டிக்கொண்டு உள்ளனர் !கடவுள் தான் வழிகாட்ட வேண்டும் !அசுரர்களின் மாய்மாலங்களை அழிக்கவே இறைதூதர்கள் பூமிக்கு வருவார்கள் என்பது கீதையில் கிரிஷ்ணரின் வெளிப்பாடாகும் !!!


I யோவான் 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசின் ஆதிக்கத்தில் இருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே இயேசு  வெளிப்பட்டார்.

 ராமரோ கிரிஷ்ணரோ இயேசுவோ; அசுரர்களோடும் மாயைகளோடும்; மாயைகளை பின்பற்றுபவர்களோடும் ;மனிதர்கள் உருவாக்கி கொண்ட நிறுவனங்களில் பதவியில் போய் ஒட்டிக்கொண்டு தத்துவங்களை திரித்து உபதேசித்து தங்களை கடவுளுக்கு ஏஜென்ட்டுகளாக காட்டி கொள்கிரவர்களோடும் யுத்தம் செய்தார்கள் !பழைய சடங்காச்சாரங்களை பொய்களை உடைத்தெறிந்தார்கள்! அவர்கள் காலத்தில் சாதாரண மனிதர்களும் கடவுளோடு ஒப்புரவு ஆனார்கள் !ஆனால் அவையும் காலப்போக்கில் சீரழிந்து போய் விட்டது !இதனை சீர் செய்ய மறுபடி இறைதூதர்கள் வருவார்கள் என்றே இம்மூவரும் சொல்லியுள்ளனர்!

No comments:

Post a Comment