Total Pageviews

Sunday, January 29, 2012

குருஷேத்திர யுத்தம் என்பது என்ன?

குருஷேத்திர யுத்தம் என்பது நடந்ததா ?நடக்கவில்லையா ?ஏன் நடந்தது என்பதை விட யுத்தம் தொடங்கும் முன் ஒரு மனிதனாகிய அர்ச்சுனனுக்கு உண்டான மன கலக்கம் என்பது அன்றாடம் மனிதர்களுக்கு --முக்கியமாக கடவுளை தேடி அவரை கண்டடைய முயலும் பக்தனுக்கு எதிர் வருகிற சவாலே ஆகும்! இத்தகைய சோதனைகள் --இடறல்கள் உண்டாகும் பொது அதனை எதிர்கொள்ள நமக்கு அறிவூட்டும் ஞான உபதேசமே கீதை!கீதை வாழ்க்கைக்கான உபதேசம் ;பக்தனுக்கு கடவுளை நோக்கிய பயணத்தில் அன்றாட வாழ்வை கடந்தோட அனுபவ பூர்வமான செயல்முறை பயிற்சி! உலக வாழ்க்கையில் பல படித்தரமான நிலைமையில் மனிதர்கள் படைக்க படுகிறோம்!ஒரு சக்கரத்தின் அச்சுகள் பல உருப்புகள் எப்படி ஒன்றாக இணைக்க பட்டு அது சுற்றுகிறதோ;அதுபோல உலகவாழ்க்கை செம்மையாக நடக்க பலவிதமான வேலைகள்,பொறுப்புகள்,கடமைகள் பலரால் செய்ய படவேன்ண்டியுள்ளது!ஏற்றதாழ்வுகள்,பதவிகள்,பட்டங்கள்,செம்மைகள்,வறுமைகள்,முரண்பாடுகள் என கணக்கிலடங்கா பேதங்கள் இருந்தாலும் எல்லோரும் கடவுளை பொருத்து முக்கியமாணவர்களே!ஒரு சிரு துரும்பும் அவரின் கண்கானிப்பிலும் பேணுதலிலும் உள்ளன!அதுஅதற்குரிய எல்லையும் சுதந்திரமும் கொடுக்க படாமலுமில்லை!

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.(இயேசு;மத்தேயு 10:29)

கடவுள் நம்மை ஜனிக்க செய்த நாள் முதல் நம்மோடே இருக்கிறார்;நம்மிடம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட பணி-திட்டமும் இருக்கிறது என்கிற உள்ளூணர்வு நமக்கு வேண்டும்!அவர் நம்மைப்பற்றிய நோக்கம் வைத்துள்ளார் என்கிற புரிதலே நமக்கு சந்தோசத்தையும் நம்பிக்கையையும் அவரிடம் உள்ளார்ந்த உறவையும் கொண்டுவந்து விடும்!உள்ளார்ந்த உறவை அணுபவிக்க தெறியாத--முடியாத நிலைமையிலேயே பக்தி செலுத்தியும் வழி விலகி போகிறார்கள் சிலர்!அது ஒரு அறியாமையே!

இப்பூமிக்குரிய வாழ்க்கை என்னும் குருஸேத்திர யுத்தத்தில் மனிதனாகிய அர்ச்சுணன் ஒரு போதும் தனித்துவிடப்படவில்லை!அவனுக்கு வழிகாட்டும் படியாக அவனருகில் இறைதூதனாகிய கிரிஸ்ணர் இருந்தார்!அன்றைய உலகில் இறைவனை நெருங்கிய நபராகிய கிரிஸ்ணர் என்பவரை அர்ச்சுணன் குருவாக ஏற்றுகொண்டிருந்தது அவனுக்கு கடவுளின் வழிகாட்டுதலை உறுதி செய்துவிட்டது!அவன் கடவுள் மீது பக்தியுள்ளவனாகவும் இறைதூதனால் நண்பன் என அழைக்கபடும் உறவுக்குள் உள்ளவனாகவும் இருக்க முடிந்தது!பக்தி உள்ளுக்குள் விளைந்து கடவுளோடு உறவாக பரிணமிக்க வேண்டும்!
எல்லா மனிதர்க்குள்ளும் கடவுளுடன் உறவை அணுபவிக்க முடியவில்லையே என்கிற இனம்காணாத துயரம் இருக்கிறது!எல்லா மனிதர்களுக்கும் ஆத்தும தாகம் ஆழ்மனதில் இருக்கும் அது தனது உயிர் பிரிந்து வந்த கடவுளை குறித்தது! இந்த பிரிவு துயர் அடையாளம் மாறி உடலை தானாக என்னி மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை ஆக மாறி நிற்கிறது இதில் முழுமையும் திருப்தியுமடைய முடியாமல் முட்டி மோதி தவிக்கும்போது இனம்புரியா வேதனை வெளிப்படும் விரக்தியாகவோ வக்கிரமாகவோ மாறவும் வாய்ப்புண்டு! இந்த ஏக்கம் நமது பிதாவாகிய கடவுளைக்குறித்த தேடலாக பக்தியாக பரிணமித்தால் இறைவனோடு இடைபடுதல் உண்டாகும்!அந்த தேடலுக்கு கடவுள் தன்னை உணர்ந்த மனிதர்களை நமக்கு குருவாக அணுப்பி வைப்பார்! 

No comments:

Post a Comment