Total Pageviews

Monday, January 9, 2012

புத்தர் கடவுளா ?குருவா ?

                   புத்தரை குருவாக வைத்து கடவுளை வணங்கிய வரையில் அது நல்ல மார்க்கமாகவே இருந்தது !கடவுளை வணங்குவதற்கு அன்பு மனித நேயம் தான் ஊடகம் என்பது புத்தரின் உபதேசம் !புத்தருக்கு பிறகு 2000 வருடம் வரை புத்தர் இறை தூதராக குருவாகவே மட்டுமே இருந்தார் (ஹீனயானம் )!
                 அதன் பிறகு புத்த துறவிகள் மாநாட்டில் ஒரு உண்மையை கண்டுபிடுத்தி விட்டதாக அறிவித்தார்கள் !அது கடவுள் தான் புத்தராக வந்தார் அல்லது புத்தரும் கடவுளாகிவிட்டார் ;எனவே புத்தரையே வழிபடுவது என முடிவெடுத்தார்கள் (மகாயானம் )அங்கு தான் கலி பிடித்து புத்த மதம் கெட்டு குட்டிய சுவராகி விட்டது !
                  புத்தர் மூலமாக கடவுளை வழிபட்ட வரை அது நல்ல மார்க்கம் !இறை தூதர் புத்தரையே கடவுளாக்கிய பிறகு அது துன் மார்க்கம் !பார்ப்பதற்கு புத்தர் மீது உள்ள பேரன்பால் குரு பக்தியால் இது நடந்தது போல் தோன்றினாலும் கடவுளை வழிபடு என்கிற புத்தரின் உபதேசத்தை குழிதோண்டி புதைத்து விட்டு புத்தரையே கடவுளாக்கிய அசுரர்களின் விஷம் இது !
                   எல்லா இறை தூதர்களும் சென்ற பிறகு அசுரர்கள் மிக நுட்பமாக சீடர்களின் மூலமாக தங்கள் விசத்தை கலந்து மதத்தை கெடுக்கிறார்கள் !கடவுளை விட்டு விட்டு கடவுளின் தூதர்களை வழிபட செய்து விடுகிறார்கள் !கண்பூசயுஸ் தன் முதல் எதிரிகளே சீடர்கள் தான் என்று சொன்னார் !ஆவி மண்டல தேவ அசுர யுத்தம் பூமியில் மனிதர்கள் மூலமாக நடந்து வருகிறது !அசுரர்கள் கடவுளை விட்டு விட்டு கடவுளின் தூதர்களை வழிபடுகிரவர்கலாக மனிதர்களை மாற்றி எல்லா மதங்களையும் கெடுத்து விடுகிறார்கள் !
                 மனிதனுக்கும் தன் இனத்தில் ஒருவன் கடவுளாகிவிட்டான் என்றவுடன் மாயை எளிதில் பிடித்து விடுகிறது !கொள்கையை கடைபிடிப்பதை விடஒரு கும்பிடு போடுவது எளிது ! ஒரு கும்பிடு போட்டு நிறைய பலன்களை அடைந்து விடலாம் என்கிற சுயநல பக்தி அவனை ஆட்கொண்டு விடுகிறது !
                உள்ளார்ந்த இறை அச்சமும் மனித நேயமும் தான் உண்மையான பக்தி ஆகும் !சாரமற்ற சரக்குகள் அசுரர்களின் விசமாகும் !இறை தூதர்கள் ராமன் ,கிருஷ்ணர் ,புத்தர் ,ஏசு ,-வின் சீடர்களை கெடுத்து அவர்களின் கொள்கைகளை விட்டுவிட்டு அவர்களை வழிபடுகிரவர்கலாக அசுரர்கள் மாற்றிவிட்டார்கள் !இறை தூதர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்களை கொடுமைபடுத்த மனிதர்களை தூண்டி விடுகிற அசுரர்கள் அவர்கள் சென்ற பிறகு அவர்களை வழிபட தூண்டி விட்டு அவர்களின் கொள்கைகளை குழி தோண்டி புதைப்பதில் வெற்றி பெறுகிறார்கள் !

No comments:

Post a Comment