Total Pageviews

Thursday, July 19, 2012

எனது ராமநாதபுரம் மாவட்ட பயணம் !!

எனது நெருங்கிய நன்பர் ஜவஹர் அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ளார்! அவரது நீண்ட நாள் வேண்டுதலுக்கிணங்க குடும்பத்துடன் சென்று வந்தேன்!!! அத்தோடு இப்பயணத்தில் மூன்று இடங்கள் என் மனதில் முக்கியத்துவ படுத்தி இருந்தேன்!

1)திருப்புல்லாணி
2)சேதுக்கரை
3 )உத்திரகோசமங்கை

1)திருப்புல்லாணி 
1989 ல் ஜவஹர் சற்று சுகவீணமடைந்திருந்தார் என்பதால் அவரை காணுவதற்காக சென்றிருந்தேன்! அச்சமயம் நான் ராமர் படத்தை கட்டிலுக்கு நேரே ஒட்டி வைத்துக்கொண்டு தியானித்து கொண்டிருந்த காலகட்டம்! அது எனக்குள் நல்ல சாத்வீகத்தையும் சரீரத்தில் ஒரு தேஜசும் கூட உண்டாக்கியிருந்தது! நல்ல சந்தடிசத்தம் உள்ள ஒரு லாட்ஜில் அய்ந்து நண்பர்கள் -எல்லோருமே வாலிப வயதிற்கான வேட்கையில்லாமல் ஏதோ ஒரு ஆண்மீக தொடர்புள்ளவர்கலாய் சேர்ந்திருந்தோம்! ராமகிருஸ்ணர்,விவேகானந்தர்,வள்ளலார்,சிவானந்தர்,இயேசு என குருமார்களின் சீடர்கள் அதில் இருந்தார்கள்! வேலைக்கு போய் திரும்பி வந்தால் சிணிமா,பெண்கள்,காதல் என்று இல்லாமல் ஒரு சத்சங்கம் போலவே இருக்கும்!தியானிக்கவும் செய்வோம்! ஒரு அய்ந்து நிமிடம் போனது போல தெறிந்தாலும் வம்பாக தியானத்தை முறித்தால் ஒரு மணி நேரம் என்கிற அளவு தியானம் எனக்கு சித்தித்தது!எதிர்காலத்தில் துறவற அழைப்பிற்கான வாய்ப்பு உள்ளதா என கேள்வி இருந்தது! ஜவஹரை காண்பதோடு ராமர் தொடர்பான இடங்களை காணவுமே சென்றிருந்தேன்! ஜவஹர் சிறுவயதிலிருந்தே நுன்னிய அறிவுள்ளவர்!விஞ்ஞானத்தில் ஆழ்ந்த அறிவும் உழைப்பும் இருந்தது! இந்தியாவிற்கு ஒரு நல்ல விஞ்ஞானியாய் வருகிற வாய்ப்பு இருந்தும் சுற்றமும் சூழலும் வாய்ப்பும் இல்லாததால் தேங்கிப்போய் மனசோர்வு அடைந்திறுக்க வாய்ப்பு இருக்கலாம் என்பதால் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தால் அவர் வெளியே வரவாய்ப்பு அமையும் என நம்பினேன்! அவரை அழைத்துகொண்டு ராமேஸ்வரத்தில் ஒரு நாள் முழுவதும் சுற்றிகொண்டே அவரை பேசவைத்து கொண்டிருந்தேன்! மறுநாள் திருப்புல்லானி, சேதுக்கரை சென்றோம்! திருப்புல்லானியில் இலங்கைக்கு செல்ல பாலம் கட்டுமான பணி நடந்துகொண்டிருக்கும் போது தர்ப்பை புல்லை படுக்கையாய் விரித்து ராமர் தூங்கிய இடம் என்பது வரலாறு! அதனை காணும் போது பிரிவுதுயரத்தில் அவர் மூழ்கி தவித்திருக்க வேண்டும் போல எனக்கு ஒரு படிமானம் உண்டாயிற்று!எனக்குள்ளும் ஒரு இனம்புரியாத சோகம் கவ்விகொண்டது!
திரும்பி வந்த பிறகு பஸ்ஸில் பயணிக்கும் போது திடீரென நினைவு மாறுவதும் எனக்குள் யாரோ பேசுவது போலவும் இருந்தது!நெஞ்சில் ஒரு வேதனை --காதல் தோல்வி அடைந்தவரின் துயரம் போல என்னை பற்றிகொண்டது! தியானம் முன்பு போல ஆழ்ந்து சித்திக்கவில்லை! பின்னோக்கி வந்துகொண்டே இருந்தேன்!விடுதலைக்காக பலமுயற்சி எடுத்தும் சிராய்த்துக்கொண்டிருந்தேனே தவிற முன்னேறமுடியவில்லை! லவ்கீக வாழ்க்கை-உலக இன்பங்களாலும் அதனை சரிக்கட்டமுடியவில்லை! உலகவாழ்விலும் ஊறி கொட்டைபோட இயலவில்லை! வேதாத்திரியம் இன்னும் பல ஞானமார்க்கம் என்று சொல்லிகொள்கிறவர்களின் பின் சென்றும் பலனில்லை! என்னை நானே உலகில் காத்துகொள்வதும் சிரமம் போல உணர்ந்து ஒரு நல்ல மனைவியின் துனை அவசியம் என்று உணர்ந்தேன்! கடவுளின் அருளால் உலகியலில் எனக்கு ஒரு நல்ல அரன் போல வாழ்க்கைதுனை கிடைத்தது! உலக பாரங்கள் அனைத்தையும் அவர்கள் மீது ஏற்றிவைத்து விட்டு நான் எனது பாணியில் வேலைக்கு போவதும் வீட்டிற்கு வந்ததும் தியானம் ஆண்மீகதேடலுக்கான வாசிப்பு என வாழ்க்கை போவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை!உலகியலில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை என்பதை விட அதற்கு போதிய திறமை இல்லை என்றே சொல்லலாம்!
ஆராவாரம்--பிரபலம் இல்லாத சாமானியனான எனது வாழ்விலும் கடவுள் என்னை இம்மையிலும் மறுமையிலும் அருளுக்குள்ளாக நடத்திக்கொண்டுதான் உள்ளார்! ஆரம்ப காலத்தில் கீதையை பற்றி பாரதியார் எழுதிய விளக்க உரை படித்திருந்தாலும் அதில் நிறைய விசயம் புரியாமல் இருந்தது !ஆனால் வாழ்க்கை என்னும் பள்ளியில் இந்து -பைபிள்-குரான் வரை என்னை கடரசெய்து மீண்டும் கீதையை பற்றிய ஒரு தெளிவுக்குள் -ஒன்றும் புறியாத கீதையை ஒரு கோணத்தில் முழுமையாய் புறிந்து கொண்டது மாதிரியான ஒரு தெளிவு கடவுள் கொடுத்துள்ளார் என்றே நம்புகிறேன்!

அடுத்து எப்பொதும் ஒரு வரையரைக்குள் என்னை புரிந்து கொள்ள முடியாமல் கிறுக்கு லூசு என்றாவது முடிவுக்கு வரமுடியாமல் சக மனிதர்களை தவிக்க விடுகிற என்னையும் சமூக அந்தஸ்தில் பரவாயில்லாத இடம் கடவுள் அருளியதால் மதிக்கிற சூழ்னிலை உருவாகியுள்ளது!
தியானம் -பிரார்த்தனையை பொறுத்து கேட்கபடுகிறோம் என்கிற நெருக்கம் உள்ளதுபோலவே தெறிகிறது!
``முதலாவது கடவுளது ராஜ்ஜியத்தையும் அவரது நீதியையும் தேடுங்கள் அப்போது எல்லாமே கூட கொடுக்கபடும்`` என்று இறைதூதர் இயேசு அறிவுறித்தியது போல அரைச்சாமியாரான எனக்கும் குடும்பம் ;தரமான வீடு; பிள்ளைகள் சமூக உறவுகள்;கருத்தாக்க சுகத்தை அனுபவிக்க சமூகவலைதளம்;அங்கங்கு ஒத்த சிந்தனையுள்ள ஆன்மீக அன்பர்களுடன் சம்பாசனை; ஆலோசனை நாடி வருவோருக்கு உபதேசம்; வேலையில் முடிந்த அளவு ஈடுபாடோடு உழைத்து கொண்டே இருப்பது இப்படி ஒரே நாளில் பல நாடகங்களில் பல பாத்திரங்களில் ஜொலித்தாலும் இவற்றையெல்லாம் ஒட்டாத ஒரு அமைதி எனக்குள் இருப்பது சகஜ பிரார்த்தனை என்பது போல மனம் கடவுளிடம் போய்போய் வருகிற தன்மை கொஞ்சம் வந்திருக்கிறது!


இந்த சூழ்னிலையில் குடும்பத்துடன் திருப்புல்லாணி செல்வது ராமருக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றொறு சித்தம்!அவர் எனது ஆதி குரு --தியான வாழ்வு அவரை முன்னிலை படுத்தியே ஆரம்பித்தேன்!முன்பு திருப்புல்லாணி சென்று வந்ததும் காதலிக்காமலேயே காதல்தோல்வி--அல்லது பிரிவுத்துயரம் சில நாளாக என்னை வாட்டிவதக்கியது-- எனவே சமாதானம் உண்டாகும் படியாக பிரார்திக்க வேண்டும் என திட்டம் செய்து கொண்டேன்!
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு புதிய தூது செய்தியை கடவுளிடமிருந்து இறைதூதர்கள் கொண்டு வரும்போதெல்லாம் இந்த உலகமும் அதன் பின்னனியில் மனிதர்களை தூண்டுவிடும் அசுரர்களும் அந்த இறைதூதரை கொடுமைகள் செய்தே வந்திருக்கிறார்கள்! வட்டிவதக்கியிருக்கிறார்கள்! அவர்கள் துன்ப துயறத்தோடு அறத்தை நிலைனாட்டி சென்ற பிறகு அவர்களை கடவுளுக்கு இணைவைத்து இவரை கும்பிட்டால் போதும் இவரின் உபதேசங்களை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை அல்லது அவரின் பக்தர்கள் என்கிற பெறும் அலட்டல் செய்து வேண்டாத சடங்குசம்பிரதாயங்களை பிரபல படுத்தி அவரின் மூல உபதேசத்தை மெதுவாக ஓரம்கட்டுவார்கள்!

``யார் கடவுள் என அறிந்து கொள்வது ஆன்மீக வாழ்வில் ஒரு ஆத்துமாவிற்கு எந்த பலனையும் கொடுக்காது! உபதேசங்களை உணர்ந்து கடைபிடித்து அதை தனக்குள்ளாக எவ்வளவு விளையவைக்கிறோமோ அந்த அளவு கடவுளிடம் பலனும் நெருக்கமும் கொடுக்கும்--அது யார் கடவுளாக இருந்தாலும்!!``
ராமரின் மூல உபதேசம் என்ன?
திரேதா யுகத்தில்--10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் பலதார & பலபுருஸ திருமண வாழ்வில் இருந்தனர்! பக்கத்து ஊர் மீது படையெடுத்து ஆண்களை கொண்று விட்டு பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாகவும் ஆடுமாடு செல்வங்களையும் கொள்ளயடித்து கொண்டுவருவது வீரம் என புகழபட்ட காலம்! சுக்ரீவனின் மனைவியை வாலி வைத்து கொண்டதற்காக ராமர் வாலியை கொண்றார்! அப்பொது வாலி ``ராமா இது எங்களுக்கு தர்மம் `` என்று சொல்லவில்லையா?


பலதார & பலபுருஸ திருமண வாழ்வில் இருந்த மனித சமுதாயத்திற்கு ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கையை கடவுளின் தூது செய்தியாக கொணர்ந்தவர் ராமரே!!அதற்காகவே அவர் பலமுறை இன்னலடைந்தார்!


1) தன்னை அழைத்த சூர்ப்பனகையின் இச்சையை தீர்க்க ராமர் மறுத்ததால் திருமனமாகி ஓராண்டிற்குள் சீதை ராவணனால் தூக்கி செல்லபட்டார்!!அதனால் இளம் மனைவியை பிறிந்தே வாடினார்!! அவர்களை மீட்ட தேடி அழைந்தார்!! மீட்டு கொண்டு அயோத்தி சென்றாலும் குடிமக்களின் அவதூறு பேச்சுக்காக மீண்டும் மனைவியை பிறிந்தே வாழ்ந்தார்!! ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கையை நிலைனாட்ட அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இல்லற சுகத்தை அணுபவிக்க முடிந்தது! உலகமே சிற்றிண்பத்தில் பலதார --பலபுருஸ சுகத்தில் மூழ்கி திளைத்த போது ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கைக்காக அந்த சுகத்தை தியாகம் செய்ய வேண்டிவந்தது!!

2) கடவுள் சிலரை ராஜாக்களாக உயர்த்தி வைக்கிறார்! அந்த பதவியை அடைந்தவர்கள் தங்களிடம் உள்ள பதவியையும் அதிகாரத்தையும் தங்கள் இஸ்ட்டம் போல பயன்படுத்தி கடவுளின் சொரூபங்களான மனிதர்களை அடக்கி ஒடுக்கி ஆணவமாய் வாழதொடங்குகின்றனர்!! எங்கெங்கும் சர்வாதிகாரிகளாய் மனிதர்கள் மாறிவிடுகின்றனர்! ``சொன்னதை செய் சொன்னதை செய் சஸ்பெண்டு செய்வேன் என கண்ணை மூடிக்கொண்டு மிரட்டுவதை தான் நிர்வாகம்`` என்பதாக IAS IPS Acadamy களிலும் கற்று கொள்கின்றனர்! மிறட்டுவது தான் திறமையான நிர்வாகி எனவும் அவர்களின் முன்னால் கூணிகுருகுவது போல நடித்து விட்டு அவர்கள் போனதும் அவன் கிடக்கிறான் நாதாரி என திட்டி விட்டு அரைகுறையாக வேலையை செய்வதும் அரசுதுறைகளில் செயல்பாடாக போய்விட்டது!! பதவிகளை அணுபவிக்கும் அளவு அந்த பதவிகளின் செயல்பாடுகளில் கர்மயோகம் வெளிப்படுவதில்லை! பதவியை கொடுத்த கடவுள் அதை எப்படி பயன்படுத்தவும் விட்டுவிடுகிறார்; ஆனால் நியாயதீர்ப்பு நாளன்று அவரிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற உணர்தல் மனிதர்களிடம் இல்லை! அதிகாரிக்கு தனது கீழ் உள்ளவர்களை ஆட்டிபடைக்க அதிகாரம் உள்ளது ஆனால் தனக்கும் மேலான அதிகாரி கடவுள் என்கிற உள்ளார்ந்த பயம் இல்லாமல் துஸ்பிரயோகம் செய்யும் போது அவன் அரக்கனாகிறான்!! ஒரு அதிகாரி முதலில் தனக்கு கீழ் உள்ளவர்களின் கஸ்ட்டனஸ்ட்டங்களை கருத்துகளை காது கொடுத்து கேட்க உள்வாங்க தெறிந்திருக்க வேண்டும் !! கீழ்மட்ட அணுபவங்களை ஜனநாயகமாய் உள்வாங்கி முடிவெடுத்து அதை அமுல்படுத்தும் போது சர்வாதிகாரியை போல அமுல்படுத்த வேண்டும்!அமுல் படுத்தும் போதே கீழுள்ளவர்களின் அணுபவங்களை உள்வாங்க வேண்டும்!! மாற்று கருத்துகளை பேச அணுமதிக்க வேண்டும்! சாதக பாதக அம்சங்களை நடுனிலையோடு சீர்தூக்கி பார்த்து முடிவெடுக்க வேண்டும்! பெரிய பாதிப்பில்லாத மாற்றுகருத்துள்ளவர்களை அரவணைத்து போகும் பக்குவமுள்ளவனே வெற்றிகரமான தலைவனாய் பரிணமிக்க முடியும்! லெனின் கூட முடிவெடுக்கும் பொது உட்கட்சி ஜன நாயகம் இருக்க வேண்டும் செயல்படுத்தும் போது அந்த முடிவை சர்வதிகாரமாய் செயல்படுத்த வேண்டும் என்றார்! அவர் அப்படி பட்டவராய் இருந்ததால் வெற்றி பெற முடிந்தது !ஆனால் பதவிக்கு வந்ததும் மாற்றுகருத்து உள்ளவர்கள் அனைவரையும் ஸ்டாலின் கொன்றொளித்து ஆமாம்சாமிகளாய் சேர்த்து வைத்து இதன் பேர் ஒற்றுமை என்றார்! அறிவாளிகள் ஒழிக்க பட்டு அடிவருடிகளும் ஆமாம்சாமிகளுமாய் பதவிக்கு வந்து சில நாளில் முழு சோவியத்கூட்டமைப்பும் அக்கு வேராய் ஆணிவேராய் சிதறிவிட்டது!

இறைதூதர் ராமர் தன்னிஸ்டம் போல செயல்படுவது அரசனுக்கு அழகன்று நாளும் குடிமக்களின் கருத்தை அறிந்து சாதக பாதக அம்சங்களில் நீதியோடு நடுனிலை தவராமல் ஆட்சி செய்ய வேண்டும் என்கிற ராஜ நீதியை சொன்னவர்! வழக்கு உள்ளவர்கள் --பாதிக்க பட்டவர்கள் இரவுபகல் எந்த நேரமும் தன்னிடம் வருவதற்கு வசதி உண்டாக்கியவர்! குடிமக்களின் இன்னல்களை போக்குவதுதான் அரசனின் தலையாய கடமை அதை செய்வதற்கு அரசனுக்கு தூக்கம்-- ஓய்வு நேரம் தடையாய் இருக்க கூடாது என்றார்! அவரது சபையின் ஆராய்ச்சி மணி என்னேரமும் திறந்து வைக்க பட்டது! பொது மக்களின் கருத்தை அறிய அவர் தமது அதிகாரிகளை மட்டும் நம்பாமல் தானே மாறு வேடத்தில் குடிமக்களோடு கலந்து உறைவார்!


பொது மக்களுக்கு அப்பற்பட்ட அரச நீதி அவன் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட முன்னுதாரனமாய் வாழ வேண்டும் என்பதற்காக மீண்டும் சீதையை வணவாசத்திற்கு அணுப்பி விட்டு பிரமசாரியாகவே வாழ்ந்தார்!! ``மக்களுக்காகவே அரசன்!! அரசனுக்காக மக்கள் அன்று!!`` என்கிற ராஜ நீதியை வாழ்ந்து காட்டினார்! ஒரு அரசன் லோகங்களுக்கெல்லாம் அதிபதியாகிய கடவுளுக்கு பயந்து அவரது ராஜ்ஜியத்தில் தான் ஒரு அதிகாரி என்கிற கர்மயோகத்தில்--ராஜரிஸியாய் வாழவேண்டும் என்பதான கடவுளின் தூது செய்தி ராமர் மூலமாக வெளிபடுத்த பட்டது!


இதற்கு ராமர் செலுத்திய விலை; விலை மதிப்பில்லாத தனது இளமையை--இளம் மனைவியை பிறிந்து வாடியது! தனது மனைவியையும் வாட்டியது! அந்த துயரம் ராமரை வாட்டிய போது அவர் தர்ப்பை புல்லை விரித்து துயரனித்திரை செய்த இடம் திருபுல்லாணி! இங்கு ராமரின் ஆறாத்துயரில் கடவுளது சாந்தியும் சமாதானமும் உண்டாகும் படியாக பிரார்திப்பது நல்லது என்பதாக எனக்கு பட்டது!
ஜவகர் முஸ்லீம் என்பதால் காருக்கு காவலாக இருக்கும் படி விட்டு விட்டு கோவிலுக்குள் சென்றோம்! கடவுளின் சாந்தியும் சமாதானமும் இறைதூதர் ராமருக்கு உண்டாகும் படியாக கோவிலை சுற்றிசுற்றி வந்து பிரார்த்தித்தேன்!மன நிறைவை பெற்றுகொண்டேன்!!


2)சேதுக்கரை  
சேதுக்கரை  என்பது திருப்புல்லாணியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை ஆகும் ! சேது என்றால் சமஸ்கிரதத்தில் பாலம் என்பது பொருள் !இரண்டு பகுதிகளை சேர்ப்பதால் ``சேது `` எனப்படுகிறது!
 
 சேது  அல்லது ஆடம் ப்ரிட்ஜு
மனிதனுடன் கடவுள் பேசிய முதல் மொழி ``தேவநாகரி `` !அதிலிருந்து மொழி மறுவியதால் பிரகிருதம் எனப்பட்டது !அந்த பிரகிருதங்களில் மூலமானது தமிழாகவும் வடபகுதியிலே பலகிருதங்களை சமப்படுத்திய சமஸ்கிரதமாகவும் மூல மொழிகளாகின !தமிழிலிருந்து மருவிய ஐந்து மொழிகளான தென்னிந்திய மொழிகளை மட்டும் திராவிடம் எனவும் சமஸ்கிரத அடிப்படையிலான வாட இந்திய மொழிகளை ஆரியம் எனவும் தவறான விளக்கம் கொடுத்து அரசியலும் நடத்தி பிழைத்தும் விட்டனர் !ஆனால் தமிழ் ,சமஸ்கிரதம் இரண்டும் திராவிட மொழிகள் என்பது உண்மை !!
ஆதி மனிதர்களான தமிழர்கள் லெமூரியா கண்டத்தில் வளர்ந்து இந்தியா முழுவதும் பரவி சென்றார்கள் ! அப்போது உலகின் வேறு பகுதிகளில் மனிதர்களே இல்லை!!! உலகின் வேதங்கள் என பரவலான மக்களிடம் புழக்கத்தில் உள்ளவை :
1) இந்தியாவின் கீதை ! --இறைதூதர் கிரிஷ்ணரால் கொணரப்பட்டது
2)யூதர்களின் தவ்ராத்(பழைய ஏற்பாடு )--இறைதூதர் மோசே கொணர்ந்தது !! ;அதனுடன் ஒட்டி வைத்த புதிய ஏற்பாடு சேர்த்து பைபிள்!!
3)அரபியர்களின் குரான் !!! --இறைதூதர் முகமது கொணர்ந்தது !!!
இம்மூண்று வேதங்களும் கடவுளிடம் கேட்டு எழுதப்பட்டவை !உலக மக்களின் வாழ்க்கை நெறியை வடிவமைத்தவை !உணர்ந்தோ உணராமலேயே மனிதர்களால்  தங்கள் வேதம் என சொல்லி கொள்ளபடுபவை !
கீதை முதல் மனிதன் மணு அதாவது மண்ணு என சொல்லுகிறது ! மனுவுக்கு ஆதியிலேயே இந்த பூமியின் யுக புருஷன் மூலமாக கீதை உபதேசிக்க பட்டதாக கிருஷ்ணர் குறிப்பிடுகிறார் !! பைபிளும் குரானும் முதல் மனிதன் ஆதாம் என சொன்னாலும் அவன் மண்ணிலிருந்து உண்டாக்க பட்ட படியால் ஆதாம் எனப்பட்டான் என சொல்லுகிறது !ஆக எபிரேய பாஷையில் மண்ணு என பொருள்வரும் சொல்லே ஆதாம் என முதல்மனிதனை குறிக்க பயன்படுத்த பட்டுள்ளது !!
ஆக மண்ணு/ஆதாம்/மணு சொர்க்கத்தில் படைக்கபட்டார் !தேவதூதர்கள் அனைவரும் அவருக்கு பணிவிடை செய்யும் படியாக கடவுள் மனிதனை மகிமையுள்ளவனாக்கினார் !!களிமண்ணிலிருந்து உண்டாக்கப்பட்ட மனுவை விட நெருப்பிலிருந்து உண்டாக்க பட்ட நான் பெரியவன் ;எனவே மனுவை பணிந்து கொள்ளமுடியாது என ``இப்ளீஸ் `` என்னும் தேவதூதணும் அவனோடு ஒரூ கூட்டமும் கடவுளை பகைத்து பிரிந்தனர் !இந்த கூட்டமே ``அசுரர்கள் `` எனப்படுபவர் !! தேவதூதர்களாய் கடவுளோடு ஒப்புரவாய் இருந்தவர்கள் மனிதனை தனக்கு எஜமானனாய் ஏற்றுகொள்ள மறுத்ததாலேயே அசுரர்களாய் மாறினார்கள் !கடவுளை பகைத்தனர் !கடவுளால் படைக்க பட்ட மனிதன் தீயவன் தகுதியில்லாதவன் என நிருபிப்பதாகவும் வீம்பு பேசினார்கள் !அப்போது நியாயத்தீர்ப்பு நாள் வரை மனிதனுக்கும் அசுரர்களுக்கும் அவகாசம் பெற்றுக்கொண்டார்கள் !
கலகம் செய்து பிரிந்த அசுரர்களால் பரலோகத்தில் ஒரு வெற்றிடம் உண்டாகியுள்ளது !அதற்கு தகுதியுள்ள மனிதர்கள் தேறினால் நியாயத்தீர்ப்பும் தங்களுக்கு அழிவும் நிச்சயம் என்பது அசுரர்களுக்கு நன்றாக தெறியும்!அதனாலேயே எப்படியெல்லாம் வகைவகையாக மாயைகளை கொண்டுவந்து மனிதனை தேறாதவனாக வைப்பதற்கு அசுரர்கள் கடும் முயற்சி செய்கிறார்கள் !எல்லா தீய சிந்தனைகளையும் மனிதனுக்கு அழகாக்கி காட்டுவதும் தூண்டிவிடுவதும் ஆவிமண்டல அசுரர்களே !!இந்த அசுரர்களுக்கு தலைவன் இப்லீஸ் /சாத்தான் /பிசாசு /அலகை என அழைக்க படுகிறான் !
சொர்க்கத்தில் கடவுளுக்கு அடுத்த மகிமையுடன் படைக்க பட்ட மனு --அவரிலிருந்து வேறு பிரிக்க பட்ட பெண்ணாகிய அவர் மனைவி --பாதியாள்--பின்னாளில் மருவி பாரியாள் என அழைக்கபடுகிறது ! இருவரும் ``நன்மைதீமை அறிகிற அறிவை தரும் மரத்தின் கனியை ``தவிர எல்லாவற்றையும் அனுபவிக்கலாம் ; அனுதினமும் கடவுளோடு உறவாடி அவரிடம் வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம் ;தேவதூதர்கள் சேவையுமுண்டு  என சகல வசதிகளுடன் வாழ அனுமதிக்க பட்டனர் !இவ்வளவு வசதிகள் செய்த கடவுள் கேவலம் ஒரு பழம் விசயமாகவா மனிதனை சபித்தார் ;சொர்க்கத்திலிருந்து துரத்தினார் என மேலோட்டமாக கேட்க தோன்றும் !மனிதன் சகல வல்லமையோடும் திறமையோடும் இருந்தாலும் கடவுளை முன்னிலை படுத்தி அவரின் சித்தம் மட்டும் செய்கிறவனாய் இருப்பதா அல்லது தானே தனது சுய சித்தம் செய்கிறவனாக இருப்பதா என்கிற பிரதானமான கேள்வி அது !ஆன்மீக ரீதியாக தவம் தியானம் தற்சோதனை தன்னயுனர்தல் பக்தி இவையெல்லாம் மனிதன் தன்னை வெறுமையாக்கி கடவுளிடம் முழு சரணாகதி அடைவதை பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றன !கீதையும் கர்மயோகம் ,ஞான கர்ம சன்யாச யோகம் ,பக்தி யோகம் இன்னும் பல யோகங்களில் திரும்ப திரும்ப ``விருப்பு வெறுப்புகளை களைந்து பலனில் பற்று வைக்காமல் கர்மத்திர்க்காக கர்மத்தை கடவுளுக்கு அர்ப்பணம் ``என்று செய்துவருவாயக என வற்புறுத்துகிறது !மனிதன் தனது மேலே சுமத்தப்படும் கர்மத்தில் முழு ஈடுபாடோடு காரியமாற்ற கடமை பட்டவன் --அது கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட வேலை அதை நிறைவேற்றுவது நமது கடமை என்கிற அளவில் மனிதன் வினையாற்ற வேண்டுமே ஒழிய அக்காரியம் வெற்றியா தோல்வியா அதில் பலன் நமக்கு மட்டும் கிடைகிறதா என்றெல்லாம் சிந்திப்பது கர்மயோகம் ஆகாது !சாமான்ய மனிதர்கள் சுய லாபம் கருதி எந்த வினையையும் ஆற்றி வரும் போது யோகத்தில் பக்தியில் முன்னேற்றம் அடையும் போது பலனில் பற்றுவைக்காது கர்மம் செய்யும் நிலை சித்திக்கும் !தன்னை அறிதல் என்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் எனக்குள்ளே கடவுள் இருக்கிறார் என நுனிநாக்கில் அலட்டிகொண்டிருப்பதல்ல ;மாறாக தனது சுய சித்தம் எது செய்தாலும் முடிவில் அனர்த்தம் -துன்பம் தான் உண்டாகிறது ;தன்னை வெறுமையாக்கி கடவுளின் சித்தம் எதுவோ அதனை மட்டும் செய்து கொண்டிருப்பது என யார் உணரத்தொடங்கி கடவுளின் வழிகாட்டல் என்ன என ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்து பிரார்த்தித்து ஒத்திசைவாய் வாழ முயற்சித்தல் --தன்னை உணர்தலாகும் !அவன் தன்னை சுற்றிய ஒவ்வொரு செயல்பாடுகளிளிருந்தும் கடவுள் நமக்கு உணர்த்துகிற பாடம் என்ன என கற்றுக்கொள்ள முயற்சித்து கொண்டே இருப்பான் !தான் ஜீவாத்துமா தன்னை சுற்றி சூழ்ந்த பராத்துமாவின் செயல்பாடுகளில் சுயத்தால் பிசிறடித்து கெடுக்காமல் பரமாத்துமாவின் செயல்பாடுகளில் ஒத்திசைவாக காரியமாற்றுவது ஒன்றே சகல ஆசிர்வாதத்தையும் சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்கும் என்பதை உணர்ந்திருப்பான் !இத்தகையவன் ஜீவன்முக்தன் என கீதை சொல்லுகிறது !அவன் நிலைத்த அறிவுடையவன் -எதனாலும் அசைக்க படாதவனும் கூட --இந்த யோகநிலையை அடைவது என்பது சுய அறிவை அடக்கி கடவுளின் சித்தத்தோடு ஒருமித்து வாழும் நிலை !
இதற்கு மாறுபாடாய் தனது சுயசித்தத்தின் மூலம் அறிவு ஆற்றலை பெருக்கி யோகத்தின் மூலமாய் பல சித்துக்களை கைவரப்பெற்று அவற்றை பயன்படுத்தி தனது அதிகாரத்தை ஆழுமையை பிறர்மீது பயன்படுத்தி மனித இனத்தை அடக்கயொடுக்கும் நிலைக்கி உயர்வது --தனக்கென அதிகாரம் பட்டம் பதவி அரசு செல்வம் என ஏற்படுத்திக்கொண்டு காயகல்பம் சித்துக்கள் மூலம் மரணமற்ற பெருவாழ்வு வாழ்ந்து விடலாம் தானும் கடவுளை போல ஆகிவிடலாம் என முயற்சியும் செய்தவர்களே மனிதர்களில் ``அரக்கர்கள்`` எனப்பட்டவர்கள் !!
முதல் மனிதனையும் மனுஷியையும் சாத்தான் பாம்பு ரூபம் கொண்டு ஏமாற்றி பாவத்தில் வீழ்த்திய போது ஓதிய விஷயம் :``இந்த பழத்தை நீங்கள் சாப்பிட்டால் நன்மைதீமை அறிகிற அறிவுண்டாகி நீங்களும் கடவுளாக ஆகிவிடுவீர்கள் என்பதை கடவுள் அறிவார் ;அதனால்தான் இக்கனியை உண்ணவேண்டாம் என தடுத்திருக்கிறார் ``என்பதே ! இந்த இடத்தில் ஆதிமனிதன் தானும் கடவுள் ஆகவேண்டும் என்பதற்காகவே அக்கனியை உண்டான் !!தான் கடவுள் ஆகி கடவுளின் ஆழுமையில்லாமல் சுயமாய் வாழலாம்  அல்லது கடவுளை போலாகி சர்வ அதிகாரம் உள்ளவனாக வேண்டும் என்பதுதான் !!
யோகத்தின் மூலம்  தன்னை வெறுமையாக்கி  தனது சுய சித்தத்தை அடக்கி கடவுளின் சித்தம் மட்டும் செய்வது ஜீவன்முக்தன் ஆவது !! அதே யோகத்தின் மூலம் தன் சுய சித்தத்தை திறனுள்ளதாக்கி சித்துக்கள் கைவசமாக்கி அதிகாரத்தை பெருக்கி கடவுளுக்கு இணையானவனாக தன்னை உயர்த்துதல் அரக்கனாகுவது !!இத்தகையோர் பதவி பெற்றதும் எளியோரை வாட்டி வதக்கி ஆணவமாய் நடக்க தொடங்கி பாவத்தின் மேல் பாவம் செய்ய தொடங்கி விடுவர் !!ஆரம்பிக்கு போது மனித சமுதாயம் உயர்வு பெற பாடுபடுகிறேன் என ஆரம்பித்து நான் சொல்லுவதை செய்வதுதான் எல்லோருக்கும் நல்லது என்பதாக சர்வாதிகாரிகளாக மாறிவிடுவர் !!
நன்மைதீமை அறிகிற அறிவு ;பகுத்தறிவு கோஷங்களெல்லாம் குடும்ப நலனுக்கும் அரசியல் ஆதிக்கத்துக்கும் பலரை பகடைகாய் ஆக்கி விட்டது என்பதை சமீபத்திய உதாரணங்களே போதுமானவை !! தானக்குள்ளாக கடவுளை தேடுகிறேன் என்னும் நுட்பமான மாயை ஒருவகையில் சுயத்தை உயர்த்துவதே !!ஒவ்வொருவரும் தனக்குள்ளாக இருக்கிற கடவுளின் பேரால் பிறரை தனக்கு அடியவராய் ஆகும்படியாக அழைக்கும் சுய பெருமையில் ஆணவத்தில்  போய் அது முடியும் !எல்லாருக்குள்ளும் இருக்கிற கடவுள் தன்னையும் தாண்டி இருக்கிற கடவுளை அறிவது என்பது பக்தியிலும் அடக்கத்திலும் போய் முடியும் !நாமும் கடவுளாகலாம் என்கிற சாத்தானின் சரக்காகிய மகாமாயையிளிருந்து தப்பிக்க முடியும் !
அந்தோ பாவம் !!ஆதிமனிதன் தானும் கடவுளாகிறேன் என ஆசைப்பட்டு அந்த கனியை உண்டு சாபத்துக்கு உள்ளாகி கடவுளின் சமூகத்திலிருந்து பூமிக்கு அனுப்பபட்டான் !அப்படி அவன் பூமியில் முதலில் வந்த இடம் இலங்கையில் உள்ள ஸ்ரீபாதமலை !!

ஸ்ரீ பாதமலை அல்லது மகேந்திர மலை அல்லது குமரிமலையின் பகுதி !!
                                    அங்கு ஆதிமனிதன்  ஒற்றை காலில் நின்று மன்னிப்பு கோரியதால் கடவுளுக்கும் அவனுக்கும் சிறு சமாதானம் உண்டாயிற்று !கடவுள் யுக புருஷன் மூலமாக கீதையை உபதேசித்தார் !அதுவே ``மனுதர்மம் `` எனப்படும் ``ஆதி இந்து மதத்தின் ``மூல உபதேசமாகும் !ஆதிமனிதனுக்கு ஏற்கனவே தேவதூதர்கள் பணி செய்ய கடவுளால் கட்டளை இருந்ததை நினைவு கூறவும் !அத்தோடு அவனுக்கு துருபதேசம் செய்து அவனை கடவுளுக்கு இணை ஆக்கி கடவுளின் அவசியம் இல்லாமலேயே மனித குலம் சிறப்பாய் வாழ்வதாக கடவுளுக்கு சவால் விடுவது --அசுர கணங்களின் லட்சியமாகும் !இந்த இரண்டு ஆவிமண்டல கூட்டத்திற்கும் இடம் கொடுத்தவனாய் ஆதிமனிதன் 900 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தான் ! அவர்களது சந்ததி லெமூரிய கண்டம் அல்லது குமரி கண்டம்முழுவதும் இலங்கையிலிருந்து பரம்பிற்று !!

லெமூரியா கண்டம் அல்லது குமரிகண்டம் !! 
குமரி மலை ;மகேந்திர மலை ;ஸ்ரீபாதமலை ஒன்றாகவே இருந்திருக்க வாய்ப்பு உள்ளது !இதுவே கைலாய மலையாக--மேருமலையாகவும் குறிக்க படுவது !திரேதா யுகத்தில் இலங்கையும் இந்தியாவும் குறுகிய நீரோட்டாத்தால் மட்டுமே பிரிக்க பட்டிருக்க வேண்டும் !இன்றளவும் மணல் திட்டுகள் நிறைய உள்ளன !இதில் ஆதி மனிதர்கள் கட்டிய பாலமே ``சேதுவாகும் `` இது இயற்கையான கடல் பாலமாக கூட இருந்திருக்கலாம் !!ஆனால் அதை ஆதி தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் !எனவே இன்றளவும் அந்த பாலம் ``ஆதாம் பிரிட்ஜு``என்றே அழைக்க படுகிறது !!நான் தியானத்தால் உணர்த்தபட்டதை எழுதுகிறேன் !நம்புவது நம்பாதது உங்களிஷ்டம் ;அனால் உண்மை நியாயதீர்ப்பு நாளில் நாம் அனைவரும் அறிவோம் !

3 )உத்திரகோசமங்கை 
ஆதிமனிதர்களான ஆதாமும் எவாலுமே சிவனாகவும் பார்வதியாகவும் பின்னாளில் கடவுளுக்கு இணை வைக்க பட்டிருக்க வேண்டும் !இவர்கள் 1000  ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளனர் !சுர கணங்கள் இவர்களுக்கு பக்க பலமாக இருந்துள்ளது !திருப்புல்லானிக்கு வடக்கே ``உத்திரகோசமங்கை ``என்றொரு ஸ்தலம் உள்ளது ! இங்கு ஆருத்திரா தரிசனம் என்பது புகழ் பெற்றது !இங்கும் நான் சென்றிருந்தேன் !அந்த சிவன் கோவிலில் ஒரு வயதான பெரியவருடன் நான் பேச்சு கொடுத்த போது அவர் சொன்ன முக்கியமான விஷயங்கள் :

ருத்திரன் +கோசம் +மங்கை 
1 )உலகிலேயே முதல் சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில்  !ஆதி காலத்தில் நவ கிரகங்கள் அறியப்படாத காலத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் மட்டுமே  கிரகங்களாக அறியப்பட்டதால் இக்கோவிலில் இம்முன்று கிரகங்கள் மட்டுமே  உள்ளது என்பதிலிருந்து இக்கோவில் கட்டப்பட்ட காலம் பழமையானது என்பதை அறியலாம் !
2 )சிவன் பார்வதிக்கு உபதேசம் செய்த இடம் இது !உத்திரன் +கோசம் +மங்கை =மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம் !``குருகீதை `` என்பது சிவன் பார்வதிக்கு குருவின் மகத்துவத்தை பற்றி உபதேசித்தது (இது தற்போது சமஸ்கிரத பாடலாக உள்ளது -இதனை தமிழ் படுத்தி திரிபுகளை நீக்கி விரிவுரை கடவுள் சித்தத்தால் செய்வேன் )கடவுளை அடைய பக்தன் குருவை நாடி அடைவது பற்றி அற்புதமாக சிவனால் பார்வதிக்கு உபதேசிக்க பட்டுள்ளது !இது அவர்கள் ஆதிமனிதர்கள் என்பதையும் பின்னாளில் மனிதர்கள் தங்கள் குல தெய்வ வழிபாட்டின் படி இவர்களை கடவுளுக்கு இணை வைத்திருக்க வேண்டும் என்கிற சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது !
ஆதிமனிதர்கள் --தமிழர்களிடம் ஒரு பரவலான பழக்கம் !ஆங்காங்கே குடி பெயர்ந்து சென்று அங்கே நிலைத்து பேருக்கும் போது பேர்சொல்லும் படி வாழ்ந்த தங்கள் மூதாதைக்கு அவ்விடத்திலே குலதெய்வ வழிபாடு செய்வார்கள் !அதை மைய படுத்தி தங்களை ஒரு புதிய குலமாகவும் அறிவித்து கொள்வார்கள் !ஒரு சாதனையாளர் அல்லது ஞானி ,முனிவர் ,சித்தர் அடங்கினால் அந்த சமாதியின் மேல் ஒரு லிங்கம் வைத்து அவர் பெயரோடு ``ஈஸ்வரன் `` என சேர்த்து அதை கோவிலாக்கி வழிபடுவார்கள் !அதன் அர்த்தம் இவரும் கடவுளுக்கு இணை ஆகிவிட்டார் என்பதுதான் !!அகத்தியர் அடங்கிய இடம் அகத்தீஸ்வரம் ; கமல முனி அடங்கிய இடம் திருவாரூர்  ; கும்ப முனி அடங்கிய இடம் கும்பேச்வரம்  இப்படி தமிழகத்தில் பல கோவில் ஸ்தல வரலாறுகள் உள்ளன !

அப்படி ஆதாமும் ஏவாளும் அடங்கிய இடம் முதல் சிவாலாயமாக உத்திர கோச மங்கையில் அமைந்திருக்க வேண்டும் !

ராவணேஸ்வரன் மணைவி மண்டோதரி நீண்ட நாள் திருமணம் இல்லாத போது உத்திரகோசமங்கையில் இக்கோவிலில் வேண்டுதல் செய்து அதன் பலனாக ராவணனுக்கும் மண்டோதரிக்கும் இங்கு தான் திருமணம் நடந்ததால் மங்களநாதர் சன்னதி என பெயர் வைக்க பட்டுள்ளது !

ஆக இயற்கையாய் அமைந்த கடல் பாலத்தின்  மூலம் ஆதிமனிதர்கள் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் போக்கும் வரத்துமாய் இருந்திருக்க வேண்டும் !அந்நாளில் கடல் மட்டம் அதிகம் இல்லாமலும் இருந்திருக்கும் !

அத்தோடு திரேதா யுகத்தில் அசுரர்கள் மனித பெண்களை திருமணம் முடிப்பது தடை செய்ய படாததால் இவர்களால் ``அரக்கர்கள் `` --மிக பலம்வாய்ந்த மனிதர்கள் உருவானதாக யூதர்களின் வேதத்தில் குறிப்பிட பட்டுள்ளது !

நமது புராணங்களிலும் தவம் இருந்து வரம் வாங்கி அனேக அசுரர்கள் பிறந்து பூமியை ஆண்டு கொடுமை படுத்திய வரலாறுகள் உள்ளன !

இப்படி உருவான அரக்கர்கள் குலம் இலங்கையில் இருந்திருக்க வேண்டும் !கலியுகத்தில் கலிங்கத்திலிருந்து நாடுகடத்தப்ட்டு வந்த விஜயன் இந்த அரக்கர் குல பெண்மனியோருவருடன் சேர்ந்தே சிங்களவர்கள் உண்டானார்கள் ! 

இப்படி தவம் செய்து வரம் பெற்று தங்களை கடவுளுக்கு இணையாய் அறிவித்து கொண்டவர்களும் தங்கள் பெயருடன் ஈஸ்வரன் என சேர்த்து கொள்ளும் வழக்கின் படி ராவணனும் இலங்கையில் ஒரு பலம் வாய்ந்த பேரரசை நிறுவி தன்னை ராவணேஸ்வரன் என அழைத்து கொண்டிருக்க வேண்டும் !

 அந்நாளில் குமரிமலையிலிருந்து குமரியாறு ,பகுருளியாறு என வற்றாத ஜீவநதிகள் ஓடியதாக அறிகிறோம் !இந்த நதிக்கரை ஒன்றிலேயே இறைதூதர் ராமர் பிறந்திருக்க வேண்டும் !ராவணனை அழிக்கும் வரத்தோடு ராவணனுக்கு சீதை மகளாக பிறந்து அதை அறிந்த ராவனணன் சீதையை ஒரு பேழைக்குள் வைத்து ஆற்றில் விட்டதை ஜனகர் எடுத்து வளர்த்தார் என்பது வரலாறு !

இலங்கைக்கும் வடஇந்தியாவில் ஓடும் கங்கைக்கும் சம்மந்தமே இல்லை !மேலும் ராமரின் வணவாசத்திலிருந்து சீதையை ராவணன் தூக்கி கொண்டு வரும் போது 

அதைக்கண்டு ராமருக்கு சாட்சி சொன்ன சபரி அன்னை வாழ்ந்த இடம் கேரளாவில் உள்ள சபரிமலை ! சபரி வாழ்ந்ததால் அது சபரிமலை !

இலங்கை --திருப்புல்லாணி --சபரிமலை -நேர்கோட்டில் இன்றைய கேரளாவிற்கு மேற்கில்   லேமூரியாகண்டத்தில் ராமர் வாழ்ந்த அயோத்தி இருந்திருக்க வேண்டும் !!

பின்னாளில் மனிதர்கள் அதன் நினைவாக இன்றைய அயோத்தியை கங்கை கரையில் அமைத்திருக்க வேண்டும் !கேரளா என்பது மலைநாடு அதில் திரேதா யுகத்தில் வால் உள்ள பேசத்தெரிந்த குரங்கு இனம் இருந்திருக்க வேண்டும் !இந்த இனமே பொதுவாக ``வாலி ``எனப்படுகிறது ! இந்த இனம் தற்போது இல்லாமல் போய் விட்டது !ஆனாலும் அதனை ஒத்த கருங்குரங்கு உள்ளது !இதன் சுபாவம் குரங்குகளை விட அதிகம் முன்னேறியது ! 10 வருடங்களுக்கு முன்பு தேனிமாவட்டத்தில் புதிய பிரதேசமான வருசநாடு கடமலைக்குண்டு ஏரியாக்கள் மனிதர்கள் போக்குவரவு தொடர்பு இல்லாமல் இருந்தது !அப்படியானால் திரேதா யுகத்தில் இலங்கைக்கும் வட இந்தியாவிலுள்ள கங்கைக்கும் தொடர்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை !

அகத்தியர் ,வசிஷ்டர் ,விசுவாமித்திரர் போன்ற சமகால முனிவர்களின் ஏட்டுநூல் சுவடிகள் தமிழகத்தில் உள்ளன !இவர்கள் அனைவரும் லேமூரியாகண்ட தமிழர்களாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது !இவர்கள் குருகுலம் அமைத்து கடவுளை அடைய இல்லறத்தில் துறவற பாதையை கற்பித்த ஞானிகள் !இவர்களது முயற்சிக்கு பக்கத்தில் உள்ள இலங்கையிலிருந்த அரக்கர் இனத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி தொல்லைகள் கொடுத்ததன் விளைவாகவே ராமர் கடவுளால் இறைதூதராக அரக்கர்களை அழிப்பதற்கென்றே அனுப்பபட்டார் !அருகில் உள்ள பகுதியாதலால் மட்டுமே அடிக்கடி அரக்கர்கள் இப்பகுதிக்கு வந்துசெல்ல முடிந்தது !இம்முனிவர்கள்வர்ணசாலைஅமைத்து வேதம் வளர்த்தஆரண்யமே வேதாராண்யம் 

இப்படி ஆதி நாட்களிலிருந்தே இலங்கை அசுரர்கள் மற்றும் அசுர ஆவிகளின் ஆழுமைக்கு உள்ளேயே இருந்திருக்கிறது ! எனவே தான் அதன் தொடர்பிலேயே இனத்தின் பெயரால் ஒரு இனத்தை அடக்கவும் சித்திரவதை செய்யவுமான செயல்பாடுகள் அங்கு தொடர்ந்து கொண்டே உள்ளன ! சிங்களவர்கள் என்ற இனம் அங்கு வாழ்ந்த அரக்க இனப்பெண்ணுக்கும் அங்கு ராஜதுரோக குற்றத்தினிமித்தம் நாடுகடத்தப்பட்டு வந்த வங்காளிக்கும் உண்டான தொடர்பில் உண்டான இனம் ! அதற்கு முன்பே அங்கு வாழ்ந்த தமிழ் இனத்தை சகோதரத்துவத்துடன் ;சம மரியாதை செலுத்த இதயம் இல்லாத அரக்க சிந்தனை அசுர ஆவிகளால் மட்டுமே விதைக்க பட்டு வளர்க்க பட்டு வருகிறது !
தீராத வியாதி நீடிக்குமானால் `` நோய்க்கும் பாரு ; பேய்க்கும் பாரு `` என்பது பழமொழி ! வீரம் , துடிப்பு , ரத்தம் சிந்திய போராட்டம் இவைகளெல்லாம் நோய்க்கு பார்ப்பது போல ! அதை அநேகர் செய்கிறார்கள் !எவ்வளவோ முயற்சிக்கும் போராட்டத்திற்கும் பிறகும் தோல்விகள் உண்டாகும் பொது ; பேய்க்கும் பாரு என்பதை சிந்தித்தாக வேண்டும் ! அது ஆவிமண்டல சக்திக்குள் அசுர சக்திகளை பலவீன படுத்தியாக வேண்டும் ! இலங்கையில் சமாதானத்தை உண்டாக்கும் படி கடவுளிடம் தொடர்ந்து வேண்டுவதுவே அது ! உள்ளார்ந்த பாரம் உள்ளவர்கள் இலங்கையின் சமாதான வாழ்வுக்காக வேண்டும் போது ஆவிமண்டல மாறுதல்கள் உண்டாகி அது பூமியிலும் பிரதிபலிக்கும் !
அத்தகைய பிரார்த்தனை பயிற்சி ; முயற்சி உள்ளவர்கள் அந்த பிரார்த்தனையை ராமரின் சேனை கட்டிய அல்லது ஒழுங்கமைத்த சேது துவங்கும் ``சேதுக்கரை `` யில் நின்று மனமுருகி கடவுளிடம் பிரார்த்தியுங்கள் ! அது விரைவில் பலனளிக்கும் !! ஏனென்றால் அதர்மத்தை அழிக்க இவ்விடமே திறப்பின் வாசலாக திரேதா யுகத்தில் இருந்திருக்கிறது ! அந்த திறப்பின் வாசலாகிய சேதுக்கரை இலங்கையின் உபத்திரவத்தை தீர்க்கும் பிரார்த்தனைக்குரிய சரியான இடமாகும் !!
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் இம்முயற்சியில் இடுபடுவோர் மீது அபிரிதமாய் பெருகுவதாக !!


Friday, May 4, 2012

பிதா!!

    படைப்பவன்
அல்லாவின் 99 நாமங்களும் அவரின் குணாதிசயங்கள் --அதாவது வினையெச்சம்! அல்லது காரண பெயர் !
அதில் 11 வது பெயர் படைப்பவன்---காலிக்!

 உற்பத்தி செய்பவன்
58 வது பெயர் உற்பத்தி செய்பவன்---முப்டி !அல் -முப்டி என்றால் அனைத்தையும் உற்பத்தி செய்பவன்!

அல் என்பதற்கு அனைத்தும் என்ற பொருளும் உண்டு !அல்லா என்றால் அனைத்துமானவன் !--கடவுள் !எங்கும் நிறைந்த ஏகாந்த பரம்பொருள் !

பிதா என்றால் உற்பத்தி செய்பவன்! ஒரு பொருளை உருபாக்குபவனை அப்பொருளின் பிதா என சொல்லுவது தமிழில் வழக்கம் !

முப்டி என்பதும் பிதா என்பதும் ஒன்று ! காலிக் என்பதும் படைப்பவன் என்பதும் பிதா என்பதும் ஒன்று !

அனைத்தும் என்றால் பரம என்பது அர்த்தம் !

அல் முப்டி என்பதும் அல் காலிக் என்பதும் பரம பிதா என்பதும் ஒன்று !

அல் எனும் அரபு வார்த்தையின் பொருள் உயிரற்ற பொருட்களை குறிக்கும் "The" என்ற ஆங்கில வார்த்தையைக் குறிக்கும் பதத்தைக் கொண்டது என நண்பர் ஒருவர் வாதிட்டார் ! The என்பது உயிரற்ற பொருள் மட்டுமல்ல உயிருள்ள நபர்களை உயர்வு படுத்தும் மரியாதை சொல் !

அல்லா என்ற வார்த்தைக்கும் அல் என்பதற்கும் தொடர்பு உள்ளது !அல்லாவை அல் -அல்லா என்று அழைப்பது இல்லை ! யூத பாஷையில் எல் என்பதும் அரபியில் அல் என்பதும் கடவுளை குறிக்கிறது யூதர்கள் தானியேல் மைக்கேல் ஜோயேல் என பெயர் வைப்பதில் எல் என்பது அல்லாவை குறிக்கிறது

அல்லாவும் முதல் மனிதனான மண்ணு/மணு/ஆதாமும் அதாவது சிவனும் பேசிய மொழி தேவநகரி அதில் இருந்து தோன்றியவை தமிழும் சமஸ்கிரதமும்!ஆதி மொழிகள் ! மற்ற மொழிகள் கலப்படைந்தவை--பின்னால் வந்தவை ! கலப்பில்லாத மொழியாகிய தமிழில் எந்த சொல்லும் சிறந்த அர்த்தம் வரும்

எல் என்றால் எல்லாமுமாணவன்
 
அல்லாவின் திருநாமங்களில் இரண்டு திருநாமங்கள் ஒரே குணத்தை குறிக்கும் காரண பெயர் !அதன் தமிழ் அர்த்தம் பரம பிதா என்பது !
பரம பிதா என்ற நாமம் அல்லாவின் திருநாமமே !!!அது இணைவைப்பு அல்ல !

நான் இனைவைக்கிரவநல்ல !கடவுள் அல்லது உங்கள் பாஷையில் அல்லாவை மட்டுமே வழிபடுகிறவன் !

அல்லா படைக்க பட்ட அனைத்திற்கும் பிதா அதாவது பரமபிதா என்பது இயேசுவின் உபதேசம் ! இயேசு இனைவைப்பாலறல்ல ! இறைதூதர் --நபி !உயிரோடு கடவுளிடம் எடுத்து கொள்ள பட்ட ஒரு  நபி !பூமியில் இருந்த காலத்தில் இறந்தவர்களை எழுப்பவும் நோயாளிகளை சுகமாக்கவும் அல்லாவால் அதிகாரம் கொடுக்க பட்ட ஒரு நபி !மீண்டும் பூமிக்கு வந்து தஜ்ஜாலை(கலியனை ) அழித்து பூமி முழுமையும் அல்லாவின் ராஜ்ஜியத்தை நிறுவ போகிறவர் !அவர் வந்து ஜிசியா வரியை ஒழிப்பார் என்றால் என்ன பொருள் ? மார்க்க வேறுபாடுகள்  இல்லாது போகும்  என்பது அர்த்தம் ! அதாவது  சகல  மதங்களின்  மூலமாக  அருளப்பட்ட  இறைவார்த்தைகள்  அனைத்தும் சமரசப்படுத்தப்படும்  . அதுவரை மாற்று மார்க்கத்தினர் இருப்பார்கள் என்பதால் ஜிசியா வரி இருக்கும் !

முகமது மறித்து பூமியில் நித்திரையில் உள்ளார்! அல்லாவிடம் சென்றவர் இயேசு !இயேசுவை வழிபட கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை !கடவுள்  எல்லோருக்கும் பிதாவாக இருக்க அவர் இயேசுவுக்கு மட்டும் பிதா என புரட்டும் கிறிஸ்தவ புரட்டு தவறானது !ஆனால் அதற்காக இயேசுவை ஓரங்கட்டி அவரை காபீர் போல பாவிக்கும் முஸ்லீம்களின் அணுகுமுறையும் தவறு !அவரை நபி என்கிற மரியாதையுடன் அவரின் உபதேசங்களை கற்று கொள்ள வேண்டும் !ரூஹுள் குதுஸ் என்னும் பரிசுத்த ஆன்மாவினால் கன்னி மேரியின் வயிற்றில் ஜனித்தவர் !அதனால் பிறவியிலேயே பரிசுத்த ஆன்மா அவர் !

 அல் குரான் 2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.


எனவே தனிமனிதன் பரிசுத்தம் அடைய ;அல்லாவுக்கு பிரியமான மனிதனாக மாற இயேசுவின்  உபதேசங்களை புரிந்து கொள்வது நல்லது !அப்போது மட்டுமே பரிசுத்தமான முஸ்லீமாக மாற முடியும் !வெறும் சடங்காலும் வழிபாட்டாலும் குரானை ஒதுவதாலும் மட்டும் பரிசுத்தம் அடைய முடியாது !அதற்கு அடையாளம் முகமது நபி பூமியில் நித்திரையில் உள்ளார் !ஆனால் பிறவியிலேயே பரிசுத்த ஆன்மாவான இயேசு உயிரோடு அல்லாவிடம் எடுத்து கொள்ள பட்டர் !
பைபிள் ,குரானின் வசனங்களின் படி கடவுளிடம் சென்றவர்கள் ஏனோக்கு , ஆப்ரஹாம் ,மோசே ,எலியா , இயேசு  மட்டுமே ! அல்லாவிற்கு  எப்படி அலை  பட்டமோ  அதே அலை பட்டம் ஈசா (அலை) க்கு உள்ளது  . யாரெல்லாம் பரலோகம் சென்றார்களோ  அவர்களுக்கு மட்டுமே  அலை  பட்டம் குர்ஆனில் உள்ளது மற்ற மனிதர்கள் எல்லாம் மறித்து நியாயத்தீர்ப்பு நாளுக்காக பூமியில் நித்திரையில் உள்ளனர் !

ஏனோக்கு என பைபிளில் குறிப்பிட படுபவர் ஜலப்பிரளயத்தால் பூமி அழிவதற்கு முன்பு வாழ்ந்தவர் என்பதால் பைபிளில் அவரைப்பற்றிய விரிவான விபரங்கள் இல்லை !ஜலப்பிரளயத்திற்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்தது இந்தியாவின் லெமூரியா கண்டம் !
பைபிளும் குரானும்  ஆபிரஹாமின் வாரிசுகளுக்காக சொல்லப்பட்ட வேதங்கள் ஆனதால் ஜலப்பிரளயத்திற்கு முந்தய வரலாறுகள் அதிகம் விளக்க படவில்லை !அதனால் இந்தியர்களாகிய நாம் தான் நமது பாரம்பரிய உண்மைகளை உலகிற்கு சொல்லியாக வேண்டும் !}
ஏனோக்கு என்றால் ஒரே பார்வை -  நோக்கம் - சிந்தை உள்ளவர்  --அவரே ஆதாமாகிய சிவனுக்கு அடுத்து வந்த முதல் இறைதூதர்- ஸ்ரீராமர்  என்கிற இந்தியாவின் இறைதூதர் !

அவர் கடவுளுக்கு மனிதர்களை  இணை வைத்த நடைமுறையை தலைமை ஏற்று நடத்திய ராவணனை ; வேதங்களை  தேடிய  முனிவர்களுக்கு தொந்திரவு கொடுத்த ராவணனை அழித்து வேதங்களுக்கு புத்துயிர் கொடுத்தார் 

ஸ்ரீராமர் ஏக இறை வழிபாட்டுக்காரர் . அவர் ஒரே ஒரு பாணம் (அம்பு) மட்டுமே வைத்திருந்தார் . அது இறைவனால் சர்வ வல்லமை உள்ளதாக அவருக்கு அருளப்ப்ட்டிருந்தது . பல மனைவிகள் என்ற நடைமுறையை மாற்றி ஒரே ஒரு மனைவி என்ற ஏகதார கொள்கைக்கு முதல் உதாரணமாக இருந்தார் 


அவரைப்பற்றி பழைய ஏற்பாட்டு தவ்ராத்தில் சொல்லப்பட்டுள்ள விபரமாவது :


ஆதியாகமம் 5:23 ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
எபிரெயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.








யார் பரம பிதா ?

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;
அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.---இறைதூதர் இயேசு!!!(மத்தேயு:6)


கடவுளை இயேசு உங்கள் பிதா என சொல்லியுள்ளதை நன்கு கவணிக்க வேண்டுகிறேன்!!!

மனிதன் உள்ளத்தூய்மை, உள்ளார்ந்த ஞானம் பெற நுட்பமான, எளிய உபதேசங்கள் இயேசு வழிகாட்டியுள்ளார்! எல்லா மதத்தினரும் கற்றுகொள்ள வேண்டியவை!எளிதாய் கடைபிடித்து கடவுளின் பிரியத்திற்கு பாத்திரமாகலாம்!

யார் கடவுள் என குழப்பம் செய்வதில் மனிதன் காட்டுகிற அக்கறை;அதில் தனது கொள்கை தான் பெரிசு மற்றதெல்லாம் சிரிசு என மதப்பெருமை பாராட்டுவதில் மனிதனுக்கு உள்ள பிரியம்; கடவுளோடு ஒப்புறவு ஆவது என்பதில் அக்கறை இருப்பதில்லை!!!அதனால் கடவுள் யார் என்கிற குழப்பங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க இயேசு ஒரு எளிய வழியை காட்டினார்! அவர் கடவுள் எனக்கும் உங்களுக்கும் சகலருக்கும் பிதாவானவர்--பரமபிதா என்றார்!

அவரது உபதேசங்களை படிக்கிற ஒருவர் ``என் பிதாவானவர் என குறிப்பிட்டதை விட உங்கள் பிதாவானவர் என அதிகம் குறிப்பிட்டுள்ளார்`` என்பதை எண்ணிகூட பார்க்கலாம்!அந்தோ பரிதாபம்! கிறிஸ்தவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் என்பிதா என்பதை மட்டும் பிடித்து அவர் ``இறைமகன்``--சொந்த மகன் --ஒரேபிள்ளை--அதனால் இவர் கடவுளோடு கூட்டணி வைத்து குழு ஆட்சி செய்வதாக ஒரு மாய்மாலத்திற்குள் விழுந்து விட்டார்கள்!தாங்கள் செய்கிற பிரார்த்தணையில் இயேசுவிடமே பிரார்திப்பதும் பாடல் பாடி ஆட்டம் போட்டுவிட்டு எப்போதாவது ஒரு வார்த்தை பிதாவே-கடவுளே என சொல்லிகொள்வதுமாக உள்ளனர்!

பிறப்பினாலோ அல்லது சடங்காச்சாரங்களாலோ அல்லது காணிக்கை செலுத்துவதாலோ கடவுளோடு ஒப்புறவு ஆகமுடியாது! உள்ளார்ந்த இறைஅச்சம், அன்பு, பக்தியின் மூலம் மட்டுமே கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் என்பது இயேசுவின் உபதேசம்! ஆனால் இவைகளைப்பற்றிய பிரஞ்ஞை அக்கறை இல்லாத வறட்டு மதவாதிகள் இயேசுவை கடவுளாக சித்தரித்து அய்ரோப்பிய கலாச்சாரத்தை திணிப்பதால் உயர்ந்த இந்திய பாராம்பரியத்தில் கலாச்சார சீர்கேடுகள் தினிக்கபடுகின்றன!``வந்துட்டார் வந்துட்டார்!! தொட்டுட்டார் தொட்டுட்டார்!! பாவத்தையெல்லாம் இப்பவே போக்கிட்டார்!! இப்பவே சுகம் கொடுத்துட்டார்!!! கைகால் இடுப்புவலி சுளுக்கு`` என திறமையாக லேகியம் விற்கிற வியாபாரத்தை ஆண்மீகம் என்றும் கடவுளின் ராஜ்ஜியம் என்றும் சித்தரிக்கின்றனர்! எனவே பைபிள் என்றாலே வெறுக்கபடுகிற சூழ்நிலை காணப்படுகிறது

கிருஸ்தவர்களின் தவறான வியாக்கியானங்கள் இயேசுவின் அற்புதமான உபதேசங்களை ஓரங்கட்டி மறைக்கிறது! அவர் கடவுளை அடைய ஒரு நல்லபாலம்--சிறந்த குரு என்கிற உண்மையோடு அவரது உபதேசங்களை அணுக வேண்டும்!!!அஞ்ஞானிகளான கிறிஸ்தவர்களின் வறட்டு கூச்சலை கண்டு இயேசுவின் மீது வெறுப்படையாமல் அவரது உபதேசங்களில் அக்கறை காட்டவேண்டும்!!!

புத்தம்! சமணம் !!

சனாதனமதத்தின் வீழ்ச்சியும் புத்த மதத்தின் வளர்ச்சியும்!
புத்தமதத்தின் வீழ்ச்சியும் சமண மதத்தின் வளர்ச்சியும்!
சமணமதத்தின் வீழ்ச்சியும் சைவ சமயத்தின் வளர்சியும்!



புத்தருக்கு முன்பு உருவ வழிபாடும் பலகடவுள் கொள்கையும் அந்தணர்கள் உயந்த வகுப்பாக கடவுளுக்கு குத்தகைதாரர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர் !அதனை மாற்றி அரச மதமாக ஆனது புத்த மதம்!
புத்தர் கடவுள் மறுப்பாளாரல்ல! தடியெடுத்தோர் தண்டல்காரன் என கடவுள்கள் பல இட்டுகட்ட படுவது ஒரு புறம் ; பிரபலமானைவகளில் பூசாரிகள் என கடவுளை குத்தகை எடுத்துகொண்டவர்கள் ஒருபுறம் என கடவுளின் பெயரால் பிழைப்புவாதங்கள் பெருகி அடிமைத்தனத்தில் பொதுமக்களை ஆட்டிபடைத்த அறியாமை இருளை களைய வந்தவர் புத்தர்!

பலகடவுள் கொள்கையை உடைத்து இந்தியா முழுமையும் ஏக இறை கொள்கையை ஸ்தாபித்தவர்! எல்லா மனிதனுக்குள்ளும்  (தனக்குள் மட்டும் அல்ல) துலங்கும் இறைவனை தன்னை தூய்மையாக்கி இச்சைகளை அடக்கிய புத்தனாக மாறிய மணிதனே கண்டுணரமுடியும்! அப்படிப்பட்ட துறவிகள் மட்டுமே ஆண்மீகம் தொடர்பாக மக்களுக்கு வழிகாட்ட முடியுமே தவிற பிறப்பாலும் மந்திரம் கற்று ஓதுவதால் மட்டும் அந்தணர் --பூசாரி ஆகிவிட முடியாது என்பதை பலத்த எதிர்ப்புக்கு இடையில் ஸ்தாபித்தவர்!

ஆலயங்கள் பிழைப்புவாதிகளின் கொள்ளைகூடாரமாக மாறி பிறப்பாலும் மந்திரம் கற்றதாலேயும் கடவுளை குத்தகை எடுத்துக்கொண்டவர்கள் பொதுமக்களின் ஆண்மீகதலைமை ஆக மாறிய இருண்ட இந்தியாவில் தன்னை உணர்ந்து தனது அய்ம்புலன்களை அடக்கியாள கற்றுகொண்டவனே ஆண்மீக தலைமை ஏற்க வேண்டும் என்றது புத்த நெறி !
மணிதர்களின் புலண்கள் இச்சையை தூண்டி ``ஆசையை`` கொடுக்கிண்றன! அந்த ``ஆசையே துண்பத்திற்கு காரணம்`` அது பாவபதிவுகளை உண்டாக்கி கடவுளிடமிருந்து மணிதனை அன்னியப்படுத்துகிறது!

கடவுள் +பாவபதிவுகள்= மனிதன்! கடவுளுக்கு அன்னியமானவன்!
மனிதன் -பாவபதிவுகள்= புத்தன்! கடவுளோடு இணைந்த நிலை!
அந்த புத்த நிலை என்பது அடிப்படையில் எங்கும் எல்லா உயிர்களிலும் துலங்கும் எக இறைவனை உள்ளத்தால் வழிபடுவது!
புத்தர் இந்தியாவில் ஏக இறைகொள்கையை உயர்த்திபிடித்த ``குரு``


இக்கொள்கை அசோகர் மூலம் இந்தியாவின் அரச மதமாக மாறி இலங்கை மங்கோலிய இணம் முழுமையும் பரவி நிலைபெற்றது!அதன் பிறகு இச்சைகளை அடக்கு என்ற கொள்கையை பயிற்சிக்கிற புத்தவிகாரங்களில் பொன்னும் பொருளும் புகழும் வந்து குவிந்தன !

இப்போது பிழைப்புவாதிகளின் கவணம் புத்தவிகாரங்களின் மீது விழுந்தது! அந்த பொன்னையும் பொருளையும் புகழையும் நாடி பிழைப்புவாதிகள் புத்ததுறவிகளாய் மாறினார்கள்! புத்த விகாரங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரங்களாக மாறத்தொடங்கின!

ஒரு நடைமுறையை உங்களுக்கு சொல்கிறேன்! ஏழ்மையான நிலையில் ஒரு குடும்பம் இருந்தால் ஒரு எளிய வழி! ராணுவத்தில் சென்று சேர்வார்கள்! அது குடும்பத்திற்காக ஒரு தியாகம் போல! அங்கு குடும்பத்தை கொண்டு வைத்திருப்பது அவ்வளவு ஒத்துவராது !பணமும் செலவாகும்! ஆனால் குடும்பத்தை பிறிந்து அங்கிருக்கும் ஒருவருக்கு உணவு உடை இருப்பிடம் ராணுவ செலவு! மாதாமாதம் சம்பளம் மிச்சம் ! அந்த சம்பளத்தால் குடும்பத்தை மூண்று படி முன்னேற்றி விடலாம் !அது ஒரு மணிதன் தன்னை தியாகமாக்கி வீட்டுக்கும் நாட்டுக்கும் அர்ப்பணிப்பது!

இது போன்ற ஒரு தியாகம் --ஒரு எளிய வழி--கத்ததோலிக்கர்களுக்கு உண்டு! குடும்பத்தில் ஒருவர் பாதிரியாராக --அல்லது சகோதரியாக மடத்தில் சேர்ந்து விட்டால் போதும் !பதவியில் இருக்கும் போது மடத்தின் சொத்துகளை நிர்வாகிக்கிற வகையில் தனது உடன்பிறந்தவர்களை பல மடங்கு உயர்த்திவிடுகிறார்கள்! இந்த வசதியை கொள்கைக்கும் அப்பாற்பட்ட பிழைப்புவாதிகள் தெறிந்து கொண்டு பிழைப்பதற்காக கொள்கை பேசும் ஆண்மீக வாதிகளாய் ஆவது இயற்கை! இந்தியாவில் இப்படி பல குடும்பங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர்! எப்போதும் உண்மையை விட பொய்மை தன்னை அதிகம் பிரபலபடித்திக்கொள்ளும்! நடிக்கும்! சாய்பாபா மீது உண்மையான பக்தி கொண்ட சீடர்கள் வெளியே இருந்தார்கள்! ஆனால் அவரிடமிருந்த செல்வத்தின் மீது கண் வைத்த பொய் சீடர்கள் அதிகம் நடித்து அவரிடம் ஒட்டி கொண்டு பலனடந்தார்கள்! அவர் இறந்தவுடன் எவ்வளவு செல்வத்தை கடத்த முடியுமோ கடத்திவிட வில்லையா?

இதுபோல செல்வம் ஓரிடத்தில் குவியும் போது கொள்கையில் ஈடுபாடு இல்லாத பிழைப்புவாதிகள் பிழைப்புக்காக கொள்கையை ரெம்பவே பசப்பி புத்தமடாலயங்களில் புகுந்து கைப்பற்றிகொண்டு திறைமறைவில் பல ஆட்டூளியங்களை செய்யதொடங்கினார்கள்!

அவர்கள் தங்களை புத்தரின் மீது ரெம்ப அபிமாணம் கொண்டவர்கள் போல காட்டிகொள்ளும் பசப்பு வாதத்தின் ஒரு பகுதியாக ஒரு பெரிய சீரழிவு திருத்தல் வாதத்தை புத்தரின் கொள்கையில் சேர்த்தார்கள்! அது புத்தருக்கு ஆயிரம் ஆண்டுக்கு பிறகு ஒரு புத்தமஹாநாட்டில் காணாத ஒன்றை கண்டுவிட்டதாக அறிவித்தார்கள்! ``கடவுள் தான் புத்தராக பூமிக்கு வந்தார் !எனவே இன்று முதல் புத்தரையே கடவுளாக வைத்து வழிபட போகிறோம்`` என்பதே! அதுவரை அரூப ஏக இறைவனை உள்ளத்தை தூய்மையாக்கி வேள்வியாக வழிபட்ட புத்தமதம் ``ஹீணயானம்`` என முத்திரை இடப்பட்டு புத்தரையே கடவுளாக்கி ``மஹாயானம்`` என்ற முத்திரையில் நின்றனிலையில் புத்தர் உட்கார்ந்த நிலையில் புத்தர் படுத்தனிலையில் புத்தர் ஆயிரம் படுத்த புத்தர் என தெருத்தெருவாக உருவ வழிபாடாக மாற்றினார்கள்! புத்தரை கடவுளாக மற்றி தாங்கள் தான் உத்தம சீடர்கள் என்பதுபோல காட்டிகொள்கிற சாக்கில் போலிசீடர்கள் புத்தரின் கொள்கையை குழிதோண்டி புதைத்து விட்டணர்!புத்த விஹாரங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக மாறி வீழ்ச்சியை நோக்கியது!


அப்போது அரூப ஏக இறைக்கொள்கையின் தொடர்ச்சியாக மஹாவீரரால் முன்னெடுக்க பட்டது ``சமண மதம்``! பிழைப்பு வாதிகள் உள்ளே நுழையாமல் தடுத்தாக வேண்டும் என்பது அவசியம் என்பதாலேயே ``சமண முனிகள் சகலத்தையும் துறந்த பக்குவம் எட்டியிருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக மஹா நிர்வாணம் வலியுருத்தபட்டது !மலை குகைகளில் கல்படுக்கைகளில் தான் வாழவேண்டும் ! பொதுமக்கள் கட்டிய கட்டடங்களில் வாழகூடாது! ஊருக்குள் சென்று முதல் வீட்டில் பிச்சை கிடைத்தால் உண்ணலாம்; கிடைக்கவிட்டால் அடுத்த வீடு செல்லாமல் பட்டிணி இருக்கவேண்டும்! காசை கையாலும் தொடக்கூடாது என்ற கடும் சட்டங்கள் அமலுக்கு வந்தன! இந்த சாதகன் எதையும் துறந்து தன் உணவுக்கு கூட கடவுளை மட்டுமே நம்பி வேண்டி முதல் வீட்டை தேர்ந்தெடுத்தாக வேண்டும்! இத்தகைய பயிற்சி உள்ளர்ந்த இறைதேடல் இல்லாத பிழைப்புவாதிகளால் ஒரு நிமிடம் கூட நிற்க முடியாதது! இந்த சமண மதம் தனது பற்றுருதியால் தர்ம நெறியால் இந்தியா முழுவதும் 1800 ஆண்டுகள் வரை அரசமதமாக மாறிற்று! கலப்பிரர் என்று இல்லை தமிழக சேர சோழ பாண்டியர் வரை சமணமதத்தை தழுவியவர்களாகவே இந்தியா இருந்தது!

சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம், மணிமேகலை,திருக்குறள்--இவையெல்லாம் சமணர்களின் இலக்கியங்களே! இங்கு இறைவன் ``ஆதிபகவன்`` இருள்சேர் இரு விணையும் சேரா இறைவன் என குறிக்க படுவதை காணலாம்! அரூப ஏக இறைவனே உள்ளத்தால் வழிபடப்பட்டவர்! சித்தன்னவாசல் குடைவரை கோவில் என்பது சமணர்களின் தியாண மண்டபமாகும்! அந்த கோவிலின் பெயர் ``அறிவர் கோவில்`` கடவுள் முற்றறிவாளன்--அறிவர் என இங்கு குறிக்க படுகிறது! செயல்விளைவு தத்துவம் --கர்மா தத்துவம் என்ற இந்துமத்தத்தின் ஜீவ நாடியான தத்துவம் புத்த,சமண மதங்களின் உபதேசமாகும்! எங்கும் எல்லா உயிர்களிலும் நிறைந்த இறைவனை உள்ளத்தால் வழிபடுவது என்பதாலேயே ஒரு எறும்பை கூட அறியாமல் மிதித்து விடக்கூடாது என்ற ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைபிடிக்க பட்டது! ஆயிரம் ஆயிரம் துறவிகள் கூடி உண்ணாமல் உறங்காமல் தியாணித்து அதன் பலனாய் இந்தியா செழிப்பானா நாடாய் இருந்தது! மக்கள் மண்ணர்கள் இறைஅச்சம் உள்ளவர்களாய் நீதிதவறாமல் வாழ்ந்தனர்! மண்ணர்களுக்கிடையில் சண்டைசச்சரவுகளும் யுத்தங்களும் கூட அதிகம் இல்லை! உண்மையில் அது ஒரு ``பொற்காலமே`` ஆனால் உருவ வழிபாடு கோவில்கள் யாவும் அடைக்க பட்டு புல்மண்டி போய் இருந்தது! அந்தணர்கள் விவசாயம் பல தொழில் செய்து பிழைக்கும் நிலையில் இருந்தனர்!

மதுரை கூண்பாண்டியனை திருனாவுக்கரசர் சைவத்திற்கு மாற்றும் வரை சமண மதமே அரச மதமாக இருந்தது! திருனாவுக்கரசர் சைவசமயத்தை மீண்டும் உயிரூட்டி கோவில்கோவிலாக திறந்து புல் வெட்டும் வேலையைதான் செய்தார்! ``உழவாரப்படை `` அமைக்க வேண்டிய அளவு உருவவழிபாட்டு கோவில்கள் யாவும் அடைக்க பட்டு இருந்தன! அடுத்து மாணிக்கவாசகர் பாண்டிய மண்ணனின் அமைச்சராக இருந்து சைவசமயத்தை உயிரூட்டினார்!

அதுவரை வேறு தொழில் செய்த அந்தணர்கள் மீண்டும் கோவில் நிர்வாகத்திற்கு வந்து சேர்ந்தனர் !அது நாள் வரை அடக்கி வாசித்தவர்கள் தங்கள் பழியை தீர்த்து கொண்டனர்! சமண முனிவர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது உண்மையே! சமண மதம் சுவடே இல்லாமல் அழிக்கபட்டது! ஸவ்ராஸ்ட்ராவில் மட்டுமே நிலை கொண்டு உள்ளது!

சமண மதத்தின் வீழ்ச்சிக்கு வழக்கம் போல கலப்பு ஒரு காரணமாகும்! எந்த ஒரு தத்துவமும் நாளடைவில் மனித கற்பனைகள் கலப்புள்ளதாகி சீர்கெட்டு போவது இயற்கை! சமண மதத்தில் ஏக அரூப வழிபாட்டில் சிறுகசிறுக ஆவிமண்டல சக்திகள் மீது நம்பிக்கை வளந்தது! பல வாணவர்கள் நன்மை செய்ய உள்ளனர் என்கிற நம்பிக்கையும் அவர்களை துணைக்கு அழைப்பதும் ஏவல்செய்வதும் வளர்ந்தது! மணிமேகலையில் இப்படி வாணவர் ஒருவர் ``மணிமேகலையை ஆசை கொண்ட சோழ இளவரசணை கொண்றதாக ஒரு கதை உள்ளது!`` அது ஏவல்! இந்த ஏவல் கலை சமண மதத்தை தழுவியவர்கள் செய்ய தொடங்கி பொதுமக்களுக்கு இடரல்கள் கொடுக்க தொடங்கினர்! வாணவர்களை சிலையாக செதுக்குவது கிராம தெய்வ வழிபாட்டுக்காரர்களை கொல்லுவது கலுவேற்றி கொல்லுவது என ஆதிக்கம் செய்கிறவர்களாய் மாறத்தொடங்கினர்!அதுவுமல்லாமல் மாஹாவீரரை அரச மரத்தடியில் உபதேசிக்கிற குருவாக சிலை வடிக்க தொடங்கினர் ! உருவ வழிபாட்டை முற்றிலும் துடைத்து அந்தணர்களை செல்லாக்காசாக மாற்றி வேறு தொழில் செய்யவைத்த சமணர்கள் காலப்போக்கில் உருவ வழிபாடு போல வாணவர்களை பற்றிய கதைகளை பரப்பியதால் மீண்டும் உருவ வழிபாட்டிற்கு அவர்களே பாதையை திறந்து கொடுத்தது போல ஆயிற்று! ஆதியில் வாதில் சமணர்களை வெல்ல முடியாமல் மாற்று சமயத்தினர் பல முறை தோல்வியடைந்தனர்! அவர்களை சமணர்கள் கலுவேற்றினர் ! எறும்பை கூட மிதிக்க கூடாது என்ற ஆதி உபதேசம் மறைந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைனிறுத்த மணிதர்களை கலுவேற்றுகிறவர்களாக சமணர்கள் மாறியது அவர்களின் சீரழிவுக்கு காரணமாயிற்று! அவர்களின் பல தவறுகள் கடவுளின் பலத்தை அவர்கள் இழந்து போவதற்கு காரணமாயிற்று!

முதலில் ``தர்மசேனர்`` என பெயரை மற்றிகொண்டு சமண துறவியாக மாறியவர் திருனாவுக்கரசர்! அங்கு சமண மத குருமார்கள் செய்கிற அக்கிரமங்களை கண்டு வெறுப்படைந்தும் அக்காள் திலகவதியின் முயற்சியாலும் அவர் மீண்டும் சைவரானர்!
காலசக்கரம் மீண்டுவரும்; இக்கரைக்கு அக்கரை பச்சையாக அடிக்கடி மாறும்! மக்கள் மாறிமாறி ஓட்டுபோடுவது போல!அதனை பலகடவுள் கொள்கையை உபதேசிக்கும் ஆவிமண்டல சக்திகள் பயன்படுத்தி கொண்டன! ஏக இறைகொள்கை பேசிணாலும் கடவுளுக்கு பிரியமில்லாத அக்கிரமங்களை கடவுள் ஆதரிக்கமாட்டார்! அதனால் வாதில் திருனாவுக்கரசர் வென்றார்! வைகையில் திருனாவுக்கரசர் விட்ட சுவடி எதிர்னீச்சலடித்து திருவேடகத்தில் கரை ஏறிற்று! கூண்பாண்டியர் சைவமதத்தை ஏற்று அரச மதமாக்கிணார்! அப்போது சமணர்கள் முன்பு பிறரை கலுவேற்றியது போல சமணரையும் கலுவேற்றினார்கள்! இருப்பினும் சமண மதத்தின் ஆதிகால நண்மைகளை மறக்கமுடியாததாலும் மஹாவீரரின் சாதனையை மதித்தும் மஹாவீரர் குருவாக தட்சிணாமூர்த்தியாக அரசமரத்தடியிலிருந்து உபதேசிப்பவராக சைவ கோவில்களில் சேர்த்து கொள்ளப்பட்டார்!``குரு``என்ற சொல்லுக்கு நீங்காத மரியாதையை சைவர்கள்  மகாவீரருக்கே கொடுத்துள்ளனர் !!

கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????

இறைதூதர் பூமியில் இருக்கும்போது அவரை மனிதர்களை தூண்டி விட்டு எதிர்ப்பதும் கொடுமைப்படுத்துவதும் கொல்லுவதும் சாத்தானின் இயல்பு!இறைதூதர்கள் சென்றுபோனவுடன் அவர்களை கடவுளுக்கு இணைவைத்து கும்பிட்டால் போதும் என சீடர்களின் அபிமாணத்தை மிகைப்படுத்தி தூண்டி விடுவதும் சாத்தானின் இயல்பு!
                       இயேசு சதா கடவுளை துதிப்பவராக உயர்த்துபவராக வாழ்ந்து காட்டியும்``என் பிதாவின் சித்தத்தை செய்கிறவனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவேகர்த்தாவே என அழைக்கிறவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை``என எச்சரித்தும் இன்றைக்கு கிரிஸ்தவர்கள் ஜெபம் என்ற பெயரில் 99% இயேசுவிடம் பேசிவிட்டு முடிக்கும் போது மட்டும் பிதாவே-கடவுளே என முடிக்கும் பழக்கம் வந்துவிட்டது!திரித்துவம்,திரியேகத்துவம் என குழப்பத்தில் மூழ்கி கடவுளை விட்டுவிட்டார்கள்!
                       கடவுளுக்கும் கடவுளின் வார்த்தைக்கும்(இயேசு) வித்தியாசம் உள்ளது!வழிபாடு கடவுளுக்கு மட்டும் உரியது!நான் `வழி` என்பதை ` நான்தான்` என சொன்னதாக கிறிஸ்தவர்கள் திரித்து விட்டனர் !
                        இது போலவே முந்தய இறைதூதர்களான ராமனும் கிரிஸ்ணரும் கடவுளாக்கப்பட்டனர்!நான் உடைத்தால் மண்சட்டி நீ உடைத்தால் பொண்சட்டி! வெளி நாட்டில் மரித்தவர்களை  கடவுளுக்கு இணை ஆக்கு ஆனால் உள்நாட்டில் மரித்தவர்களை ஓரங்கட்டு!என்றால் மதச்சண்டை வராமல் என்ன வரும்?!
              `லார்ட்` என்பது அதிகாரிகளை குறிக்கும் மரியாதை சொல்!லார்ட் ஜீசஸ், லார்ட் காட் என்று மரியாதை சொல்லை கர்த்தர் என்று தமிழ் தெறியாத ஒருவர் மொழிபெயர்க்க கர்த்தரை ஒரு கடவுளாக்கிய கொடுமை கிரிஸ்தவர்கள் மீது சத்தானின் நுட்பமான
ஆளுகைக்கு சான்று!லார்ட் ஜட்ஜ்,லார்ட் மினிஸ்டர்,லார்ட் கவர்னர்,லார்ட் சீ,எம்,லார்ட் பி.எம்,லார்ட் பிரசிடெண்ட் என்று அழைப்பது அரசு மரபு!இந்த லார்ட்-ய் கர்த்தர் என மொழிபெயர்த்து ``கர்த்தாவேகர்த்தாவே``என பிரார்த்திக்கும் கிரிஸ்தவர்கள் எந்த கர்த்தரை அழைக்கிறார்கள்?
                       உலகம் முழுவதிலும் மரித்த மனிதர்களின் மேலுள்ள அபிமானத்தை அவர்களின் பெயரை சொல்லி சில அற்புதங்களை செய்து அவர்களும் கடவுளாகி விட்டனர் என மாயையை பரப்புவது அசுரர்கள் ! கணக்கடங்காத கடவுளை உண்டாக்கி வழிபட செய்து கடவுளை காணாமல் போக செய்யும் வேலையை அசுரர்கள் வெற்றிகரமாக ஆதாம் முதல் செய்து வருகிறார்கள்!
                       அதே வேலையை தான் கடவுளும் இயேசு மூலம் செய்திருப்பாரா?ஆதாம் தான் அர்த்தனாரீஸ்வர்--ஆண் பாதி பெண் பாதி என்பது அவர்தான்!மரித்த மனிதர்கள் பலர் சாத்தானின் கைங்கரியத்தால் கடவுளாக்கபட்டனர்!அதை கடவுளும் காப்பியடித்திருப்பாரா?

ஆதி மனிதர்கள் வரலாறு!

முதல் மனிதனான ஆதாம் பாவம் செய்து சொர்க்கத்திலிருந்து பூமியில் இறக்க பட்டது நமது இந்தியாவும் தெற்க்கே இருந்த ஜலப்பிரளயம் வந்து அழிந்த லெமூரியாக்கண்டமாகும்!இங்கு பேசப்பட்ட மொழி `தேவனகரி`என்பதாகும்!இது தமிழுக்கும் சமஸ்கிரதத்திர்க்கும் மூலமான மூத்த மொழி! எனவே தான் தமிழை முன் தோன்றிய மூத்த மொழி எண்கிறார்கள்!

 ஆதாம் கடவுளை கடவுள் என்று மட்டும் வழிபட்டார்! உருவமற்ற ஏக இறைவனே அவரது தெய்வமாகும்! இதுவே உலகத்தின் ஆதி இந்து மதமாகும் !இந்து என்றால் கடவுளுக்கு பயந்த பக்தி என்று பொருள்! இம்மனிதர்கள் ஒவ்வொருவறும் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளனர்!


அக்காலத்தில் முனிவர்கள் தபோவனம் அமைத்து கடவுளை தேடுவதும் இறைபக்தி,போர்க்கலை,கல்வி,தர்மனியாயங்கள் பற்றி கற்பித்து வந்தார்கள்! வசிஷ்டர் விசுவாமித்திரர் சமகாலத்தவர்கள் ராமரின் குருமார்கள் ராமஅவதாரத்தைப்பற்றி முன்கூட்டியே தெரிந்தவர்கள் -முனிவர்கள்!


வசிஷ்டரின் மனைவி அகல்யை வானமண்டலத்து தேவதூதன் ஒருவரால் மோகிக்கப்பட்டு நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு சாபத்துககுள்ளானார்கள் அதுபோல அருந்ததி வான்வெளியில் சென்ற தேவதூதர்களை குளத்து தண்ணீரில் கண்டு அழகு என சிந்தித்ததற்கே கற்பு இழந்தவளாகி சாபம் பெற்றாள் என்கிற கதை உண்டு!


இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆதாம் முதல் நோவாவின் காலத்தில் பிரளயம் உண்டாகி பூமி அழியும்வரை பல ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் இரண்டு யுகங்கள் கடந்திருக்க வேண்டும் பைபிளில் தேவபுத்திரர்கள் மனிதபுத்திரிகள் அழகுள்ளவர்கள் என்று கண்டு தங்களுக்கு பெண்கொண்டதால் பூமியில் அரக்கர்கள் பிறந்து பலத்தார்கள் என்று ஒரு வசனம் உள்ளது சாகுந்தலை என்கிற புகழ் பெற்ற காதல் காவியத்தில் சகுந்தலை தன்னை திருமணம் செய்த கந்தர்வன் --தேவபுத்திரனான துஷ்யந்தனை- பிரிந்து சென்றவனை   தேடிகண்டுபிடித்த வரலாறு உள்ளது!


இப்படி மனிதர்களுக்கும் தேவதூதர்களுக்கும் பிறந்த  அரக்கர்கள் பலமும் ஆணவமும் கொண்டு மனித இனத்தை துண்பம் செய்தபோது ராமரும் கிருஷ்ணரும் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டினார்கள் அசுரர்களை அழித்தார்கள் அதன்பிறகு தேவபுத்திரர்கள் பூமியில் நேரடி தலையீடு செய்வது தடைசெய்யப்பட்டுவிட்டது! தேவபுத்திரர்கள்--கந்தவர்கள்-- தேவதூதர்கள் பூமியில் பெண் கொள்ளுவது தடைசெய்யப்பட்டுவிட்டது கிருஸ்ணர் தாம் பரலோகம் செல்லும்முன்னர் கலியுகம் பிறக்கபோவதைப்பற்றி தர்மருக்கு எச்சரிக்கை செய்துள்ளார்! கலிபுருசன் என்பவனது ஆட்சி என்பது அமானுஷ்யமானது! கடவுளுக்கு கீல்படிதலற்ற தேவதூதர்களுக்கு --அதாவது அசுரர்களுக்கு--சாத்தானின் கூட்டத்திர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது!


             அசுரர்கள் யாருக்கும் கண்முன்னால் தோன்றி உபதேசிப்பதில்லை! மனிதர்களின் உணர்வுகளை தூண்டி இச்சைகளை அழகாக்கி காட்டி ஆணவத்தை சுயபெருமையை குழு உணர்வுகளை தூண்டி ஒருவருக்கு ஒருவர் தீங்கு செய்ய தைரியம் கொடுப்பது அதை நியாயப்படுத்துவது அசுரர்களின் அமானுஷ்ய வேலை!காமம்,மோஹம்,குரோதம்,மதம்&மாச்சரியம் எங்கிர அய்ந்து வகை தீய குணங்களின் வழி அசுரன் ஆட்சி செய்கிரான்!இது மனிதர்களின் தீய குணங்கள் என்று மட்டும் வாதிடாதீர்கள் எதிரிகளை சரியாக கணிக்காவிட்டால் யுத்த களத்தில் முன்னேறவே முடியாது இக்குணங்கள் அஹிரினை அன்று உயர்தினை (personallity caused by Evil Spirits)பேய்,பிசாசு இருப்பதெல்லாம் உண்மையே!(இறந்தவர்கள் எப்படி பேயாய் வருகின்றனர் என்பதை விரிவாய் பிற்பாடு எழுதுகிறேன்)---மனிதருக்கு தீய குணங்களை ஆவியாய் இருந்து அசுரர்கள் தூண்டுகிறார்கள் என்றால் இதை இல்லை என்று மறுப்பதால் என்ன சாதித்துவிடப்போகிறீர்கள் ஏற்றுக்கொண்டால் என்ன குறைந்துவிடும்?ஆனால் நமது நற்குணங்களில் கடவுளின் அருள் வெளிப்படுவதைப்போல நமது தீய குணங்களில் அசுரர்களின் மருள் வெளிப்படுகிறது கடவுளின் அருள் வெளிப்படுகிற என்னிடத்திலேயே அசுரர்களின் மருளும் வெளிப்படுகிறது என்கிற எதார்த்ததை புரிந்துகொள்ளவேண்டும் மனித சரீரம் இரண்டு சக்திகளும் செயல்படுகிற ஒரு ஆடுகளம்!உயிராகிய ஆவியின் மூலமாக கடவுளும் சரீரத்தின் மூலமாக அசுரர்களூம் மனித ஆத்துமாவை ஆதிக்கம் செய்யமுடியும்! ஒரு மனிதனின் ஆத்துமா தன் உயிரை சார்ந்து அதிகம் உள்ளதா அல்லது உடலை சார்ந்து உள்ளதா என்பதைப்பொறுத்து அவன் ஆண்மீக மனிதனாகவோ லவ்கீக மனிதனாகவோ உள்ளான்!இரண்டு சக்திகளுக்கிடையிலும் பந்து போல பந்தாடப்படுகிறான்!கடவுளை அதிகம் சார்ந்துள்ள நிறை பக்தனிடம் கூட அசுரன் சில சமயங்களில் செயல்படுவான் எங்கிர நிதர்சனத்தை தாழ்மையோடு ஒத்துக்கொள்ளுகிற பக்குவம் வேண்டும்!தன்னிடமும் தவறுகள் அடிக்கடி அசுரர்களின் தூன்டுதலால் வருகிரது என்பதை ஒத்துக்கொள்ளாதவர்களே நானும் கடவுளும் மட்டுமே உள்ளோம் என கூப்பாடு போடுகிரார்கள்!
இப்படி கலி பெருத்து அக்கிரமம் பெறுகியபோது நோவாவின் காலத்தில் பூமி ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்டது!அப்போது நோவா குடும்பத்தினர் மட்டுமே மனித இனத்தில்  கப்பல் மூலமாக பாதுகாக்கப்பட்டனர்! இந்த கப்பல் தரை இறங்கிய இடம் அராராத் மலை--ஈராகில்  உள்ளது!


ஜலப்பிரளயத்திர்க்கு முந்தைய மனித சமூகம் இந்தியாவை மையமாக கொண்ட லெமூரியாக்கண்டத்திலும் ஜலப்பிரளயத்திர்க்கு பின்னால் யுப்ரட்டீஸ்,டைக்க்ரீஸ்,நைல் சமவெளியிலும் மனித சமூகம் வளரத்தொடங்கியது!
நோவாவிர்க்கு மூன்று மகன்கள் 1 )யாப்பே 2 )சாம் 3) காம்

காம் இளவயது முதலே நிர்வாணம்--காமவிகாரங்களில் போதிய அக்கறை இல்லாத போக்கு காரணமாக நோவாவால் சபிக்கப்பட்டு துரத்திவிடப்பட்டு அய்ரோப்பா கண்டத்தில் செண்று வாழ்ந்தனர்!இன்றளவும் காமவிகாரங்கலே அய்ரோப்பியர்க்கு பெறும் இடரலாகவும் தடுக்கலாகவும் உள்ளது. இது நாள் வரை அங்கு இறைதூதரும் இல்லை இணிமேலும் வரப்போவதில்லை!ஆசியாக்கண்டத்து கிரிஸ்தவம் பாவவிசயங்களில் மென்மையானது போல தெறிவதாலேயே வெள்ளைக்காராத்தணமான ஒரு இயேசுவை அவர்களாக உருவகப்படுத்திக்கொண்டு அய்ரோப்பிய மயமான கிருஸ்தவ மதத்தை-பாவமன்னிப்பு, இயேசு என்பதையே திரும்ப திரும்ப ஒப்பித்துக்கொண்டே காலம் ஒட்டுகிரார்கள்!பைபிளை பேறுக்கு கய்யில் வைத்துக்கொண்டு தானும் படிக்காமல் இவர்களைக்கண்டு வெறுத்து பிறரும் படிக்காதபடி தடுத்துக்கொண்டும் உள்ளனர்!


முதல் மகனான யாப்பே தாங்கள் வாழ்ந்த பூர்வீகபூமியான இந்தியாவுக்கு வந்து சிந்துசமவெளியில் வாழ்ந்தனர்!இவர்கள் இந்தியா வந்ததால் தாங்கள் அறிந்திருந்த ராமர் கிரிஷ்ணர் வரலாறுகளை செவிவழி செய்தியாக கிராமிய நாடகமாக நிணைவு கூர்ந்து பேணிக்காத்தனர்!


சாம்மின் சந்ததியிலேயே ஆப்ராம் பிறந்தார்! இவறை கடவுள் வேறு பிறித்து உருவமற்ற ஏக இறைவனை வழிபடுபவராக மாற்றி தன் இணத்தாரை விட்டு பிறிந்து கடவுளை மட்டும் நம்பி வாழும் மனிதனாக `அன்னியனும் பரதேசியுமாக` வாழ்கிற ஒரு வாழ்க்கைக்குள் இஸ்ரேலுக்கு வந்து வாழ்ந்தார்!இவரின் வாரிசுகலே சுன்னத் எங்கிர விருத்தசேதணம் செய்கிரவர்கள்---யூதர்கள்&அரபியர்கள்! யூதர்களுக்கு மோசே என்பவரை கடவுள் இறைதூதராக மாற்றி அவர் மூலமாகவே `தவ்ராத்` வேதம் கொடுக்கபட்டது!அரபியர்களில் முஹமது மூலமாக அதே வேதமே `குரான்` ஆக கொடுக்கபட்டது!இவ் வேதங்களை தங்களது அறிவினால் அவர்கள் கொண்டு வரவில்லை !மாறாக தேவதூதர்கள் மோசேக்கும் முஹமதுவுக்கும் பிரத்தியட்சமாக தோன்றி முகமுகமாய் பேசி அவர்கள் சொன்னதையே எழுதினார்கள்!ஆதனால் தான் மனிதன் தோன்றிய வரலாறு ஆதாம் முதல் நோவா -வரை சுருக்கமாகவும் ஆபிராம் காலமுதல் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது! இந்தவேதங்களில் கலி யுகத்தில் அசுரர்களின் செயல்பாடுகளும் அவர்களின் ஏவுதலுக்கு இணங்குகிர மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் கலி யுக முடிவிலே நியாயத்தீர்ப்பும் நரகமும் உண்டு என்பதும் கடவுளின் வழி-கடவுளால் அவ்வப்போது எச்சரிக்கையின் குரலாக அணுப்பபடுகிற இறைதூதர்களின் வழியில் நடந்தால் நித்தியஜீவன்-பரலோக ராஜ்ஜியத்திர்க்குள் பிரவேசிக்கமுடியும் என்பது வாக்களிக்கப்பட்டுள்ளது!

எனது தியான அணுபவங்கள்!!!

கடவுள், மனிதன் ,தேவர்கள் அசுரர்கள் என்ற கடவுளுக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட சக்திகள் இவற்றின் செயல்பாட்டு களம் பூமி!மனிதன் கடவுளை நோக்கி முன்னேறும்போது அசுரர்களை இனம் காண பழகாமல் மாயைகளை வெல்ல இயலாது!இனம் காணும் போது தனக்குள் தேடுவது மட்டும் போதுமானதல்ல கடவுளை சரண் அடைந்தே ஆகவேண்டும் என்பது விளங்கும்!குண்டலினி மணி பூரகத்தை எட்டியவுடன் கடுமையான ஆவிமண்டல தாக்குதலை சந்தித்தே ஆகவேண்டும்!அப்போதே ஆவியுலகை பகுத்தறிய அறிவை கடவுள் கொடுப்பார்!மூலாதாரத்தை விட்டு கிளம்பிவிட்டாலே மதி நுட்பம் நுண்ணிய அறிவு விசாரம் உண்டாகும்! இந்த நிலையிலேயே குருடன் குருடனுக்கு வழி காட்டமுடியும்!இதை நம்பி ஏமாறுவது நிறைய உண்டு !அசுரர்களை பற்றிய பிரக்ஞை வராதவர்கள் மணி பூரகத்தை எட்டாதவர்களே!மணி பூரகத்தை எட்டாத நிலையிலேயே சமாதியை போன்ற நிலை கிடைத்தது எனது அனுபவமும் கூட!

ஆழ்ந்த தியானம் ,தன்னை மறப்பது , ஒருமணி இரண்டு மணி தியானம் ஒரு சில நிமிடம் போல தெரிவது!உடல் மென்மையாவது மெருகேறுவது ,நம்மிடம் பழகும் போதே நல்லது நடக்கிறது என்பதை அனுபவத்தில் கண்டு நமக்கு அணுக்க நண்பர்கள் உண்டாவது 1988 ல் எனக்கும் இருந்தது!இதில் கொஞ்சம் கர்வம் இருந்தது போலவும் தெரிகிறது!ஆனால் அதன் பிறகு கடுமையான சூடு என் சரீரத்தை தாக்கியது!ஒரு தியானத்தில் என்னை சுற்றி சூறாவளி போல சுழன்று என்னை எதோ தாக்க முயற்சித்து விளித்து கொண்டேன்!திருப்பதி சென்று மலை இறங்கும் போது பஸ்சில் வளைவில் மயக்கம் உண்டாகி எனக்குள் ஒரு பெண் பேசிக்கொண்டே இருந்தது!அதன் பிறகு கொஞ்சம் தூக்கம் போல நினைவு தப்பி அதே குரல் பேசுவது அனுபவமாகி சொல்லொன்னாத மன குழப்பங்கள் ஆட்கொண்டு அதிலிருந்து விடுபட போராடிபோராடி நான் சரியதொடங்கினேன்!இந்த நிலையில் முழு மனித ஆவி ஒன்றை இரவில் பார்த்து நான் ஒதுங்கி போனேன் !சிந்திக்காமல் இருக்க முடிந்த பயிற்சி கைகொடுத்திருக்கலாம் !அடுத்து ஒரு முறையும் பார்த்தேன் !அடுத்து பகலிலேயே நல்ல பாம்பு ஆவி சீறி மறைந்தது !தெருவில் போகையில் வருகையில் காணும் அருவெருப்புகள் பிரேத அழுகல் உணர்வுகள் அப்படியே என் சரீரத்திற்குள் நிறைந்து விரக்தியடைவேன்!வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் இரண்டு முறை நேரடியாக தொட்டு ஆசி பெற்றும் விடுதலை இல்லை! அவரவர் பாவத்தை அவரவர்கள் அனுபவிக்க வேண்டும் உதவி நான் தூக்கி சுமக்க முடியாது என்பதுபோல அவரிடம் பயம் இருப்பது போல தெரிந்தது!வேணுகோபால சுவாமி நான் வழிகாட்டுகிறேன் என்றார்!ஆனால் அது போதவில்லை!!


ஜீவசமாதிகளை தேடி தியானித்தும் விடுதலை இல்லை!கோவிலாக சுற்றியும் தீரவில்லை!ராமானுஜர் சமாதிக்கு அருகில் கூட தியாணம் செய்தும் பலனில்லை! உடம்பில் கொப்புளங்கள் உண்டாகி அடுத்தவர் முன் அருவெருப்பாகி கூனி குறுகி மன ஊக்கம் தன்னம்பிக்கை சுயம் எல்லாம் அடியோடு போயிற்று !நடை பிணமாய் அதல பாதாளத்தில் ஜாதகம் பார்த்து அதனால் ஜாதகமும் கற்று சித்த வைத்தியர்களின் பின்னால் அலைந்து கொஞ்சம் மூலிகையும் தெரிந்து பல மருத்துவர்களை பார்த்து பலனற்று ஒரு மூன்று மாதம் படுக்கை நிலைக்கு செல்லும்படி ஆயிற்று!அப்போது ``வருத்தப்பட்டு பாரம் சுமக்கிரவர்களே என்னண்டை வாருங்கள் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்`` என்ற வாசகம் இயேசுவை பற்றிய ஆர்வத்தை கொடுத்தது!அவர் 10 பெரியாராய் தெரிந்தார்!சித்தர்களில் 10 சித்தருக்கான ஆற்றல், கடவுளது ராஜ்ஜியத்தை தேடுவதற்கு அழைப்பு, கடவுள் மீது பக்தி, அன்பு, சக மனிதர்களை நேசிப்பது, மன்னிப்பது, கடவுளால் பூமிக்கு அனுப்ப படுகிற குருவை -இறைதூதர்களை அடையாளம் கண்டு ஏற்றுகொள்வது ,மனிதர்களின் தீய செயல்களுக்கு பின்னணியில் அசுர சக்திகள் இருப்பது ,இந்த சக்திகளை அவர் தேவனது விரலினாலே துரத்துவது ,அசுர ஆவிகள் வெளியேறும் போது வியாதிகள் சுகமாவது ,அசுத்த ஆவிகள் அவரிடம் பேசுவது இதையெல்லாம் அவர் பிறவியிலேயே பெற்றிருந்தது சிந்திக்க வைத்தது!மனித முயற்சியால் குருவாவனவர்கள் தவிர கடவுளால் அனுப்பபடுகிரவர்களை பற்றி சிந்திக்க வைத்தது!அவர் ஆதியிலிருந்து ஆபிராமுக்கு முன்னமே இருக்கிறேன் மேரியின் மகனாக மட்டும் என்னை பார்க்காதீர்கள் என்றது ராமராகவும் அடுத்து கிரிஷ்ணராகவும் அவதரித்த அனுப்ப பட்டவரை ஞாபக படுத்தியது !அவர்களும் அசுர ஆவிகளை துரத்தும் பணியை செய்தவர்கள் !மறுபடி மறுபடி அவதரிக்கிற கீதையின் வாசகம் நெருடியது!மறுபடி மறுபடி பிறக்கிற கிரிஷ்னரை 5000 வருடமாக தூக்கி வைத்து ஆடுகிற நாம் 2000 வருடத்திற்கு முன் அவர் பூமிக்கு வந்ததை ஏன் உணரமுடியவில்லை?கல்கியாக அடுத்த யுகத்தில் வருவேன் என்று கிருஷ்ணர் சொன்னதை இயேசுவும் மீண்டும் வந்து உலகை ஆளப்போகிரவன் நானே என்றார்!இருவரும் வேறு வேறு என மத சண்டை போடும் நாம் இருவரும் ஒருவர் என்பதை ஏன் புரிந்து கொள்ள கூடாது!


ஆனால் அந்த இயேசு தன்னை கடவுளின் பிரதிநிதி என்றாரே தவிர அவர் இடைவிடாது பிரார்த்திப்பது வாடிக்கை!நாம் ராமரையும் கிரிஷ்ணரையும் கடவுளுக்கு இணை வைத்து ஒரு கும்பிடு போட்டு அவரது கொள்கைகளை காற்றில் விட்டது போல இயேசுவையும் கிறிஸ்தவர்கள் செய்துள்ளார்கள்!இயேசுவும் இறைதூதரே! வழிபாடு கடவுளுக்கு மட்டுமே என்பது குரானின் வெளிப்பாடு!முகமதுவுக்கு குர்ஆனில் உனக்கு சொல்லாத இறைதூதர்கள் உண்டு என சொல்லபட்டது !ராமர் முதல் முகமது வரை 3000 இறைதூதர்கள் பூமிக்கு வந்திருப்பதாக குரான் சொல்லுகிறது!படுக்கையில் பைபிளையும் குரானையும் புரிந்து கொண்டேன்!கீதையை படித்திருந்த எனக்கு என முதல் குருவான ராமரே பைபிளையும் குரானையும் புதிய கோணத்தில் புரிய வைத்தது!வியாதியிலிருந்து விடுபட 7 ஆண்டுகள் வரை கற்றுகொண்டேன்!தியானித்து விட்டு ஏக இறைவனை பிரார்த்திப்பது, எதற்க்கெடுத்தாலும் கடவுளை கெஞ்சுகிற பயிற்சிகள் எனக்கு உண்டாகிறது!அன்றாட வாழ்வில் ஆவிமண்டல செயல்பாடுகளில் அனுபவமேற்படுகிறது!மனதளவில் திருவோடு ஏந்தியவனை போல ஒரு நிலை உள்ளது!இருப்பினும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்!இந்த அனுபவத்தாலேயே அசுரர்களை பற்றிய எச்சரிக்கையை ஆன்மீக அன்பர்கள் பெற திரும்ப திரும்ப பேசிவருகிறேன் !இந்தியாவை உய்விக்க இறைதூதர் ஒருவரை கடவுள் அனுப்பினால் இத்தனை ஞானத்தேடல் உள்ள இந்தியா மீண்டும் உச்சத்திற்கு வருமே என்பதால் அதற்காக பிரார்திக்கிற மன நிலையை உருவாக்க முயற்சிக்கிறேன்!

தன்னை உணர்வது ;தனக்குள்ளாக தேடுவது என்பது முழுமையை நோக்கி அழைத்து செல்லாது!அது ஆவி மண்டல சக்திகளுடன் இடைபட பக்குவபடுத்தும் அவ்வளவே !கடவுளை நோக்கிய பிரார்த்தனை ;அவரோடு நேரடியாக உறவாட முயற்சிக்க வேண்டும் கடவுளால் அனுப்ப பட்ட சற்குரு நாதர்களான ராமர் கிருஷ்ணர் இயேசு முகமது ஆகியோர் மூலம் கடவுளே வெளிபடுத்தியுள்ள இறைவார்த்தையை விசாரிக்க பழக வேண்டும் !தியானம் யோகம் என்பது ஒரு கருவி அதனை அறிந்து கொண்டதை பற்றி மட்டுமே பெருமை பாராட்டி கொண்டிராமல் கடவுளை முக்கியப்படுத்தி பிரார்த்திக்கவும் தொடர்பு கொள்ளவும் முயலவேண்டும் !எல்லா புகழும் இறைவனுக்கே!!!

வெறுமை ஆக்கல்

இருக்கிறேன் என்ற இருப்பை தவிர வேறுதுவும் இல்லாது இருங்கள் !
                         --- Rrs Sundaram 
நான் நித்தியமானவல்ல பூமியும் வாணமும் ஓர் நாள் அழிக்கபடும் ஆனால் நித்தியமானவர் கடவுள் ஒருவரே அவர் நாடினால் நித்தியமானவனாக வாக்களிக்கபட்ட பரலோகத்திற்குள் நுழைவேன் இது கடவுள் தமது இறைதூதர்கள் மூலமாக உறுதிபடுத்தியது இதனை மறுக்கிற தத்துவ ஞானம் எவ்வளவு புலமை வாய்ந்தது ஆனாலும் சூனியவாதம் அசுரனின் கடைசி மாய்மாலம்

மனிதனின் குழப்பம் பிரச்சினைகளுக்கு காரணம் அவன் கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் -அவரின் சித்தம் மட்டும் செய்து விட்டு நிம்மதியாய் இருப்பதற்கு பதில் சுய சித்தம் செய்வதை தேர்ந்தெடுத்து கொண்டது !சுய சித்தம் சிறப்பாய் செய்து கடவுளை போலவே உன்னால் ஆகிவிட முடியும் என அசுரன் ஏமாற்றியதை கேட்டு கடவுளாகும் ஆசையில் இந்த குழப்பங்களுக்குள் மாட்டி கொண்டான் !


மனிதனுக்கு முந்தய படைப்பு --வானவர்கள் --இவர்களுள் எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் கடவுளின் சித்தம் மட்டுமே செய்கிறவர்கள் தேவர்கள் !எங்களுக்கும் ஆற்றல் இருக்கிறது ஆகவே நாங்களும் எங்கள் இஷ்டப்படி செயல்படுவோம் என கலகம் செய்கிறவர்களே அசுரர்கள் ! இந்த அசுரர்களே மனிதனுக்கு துர்போதனை செய்து அவனை தீமையில் வழிநடத்துபவர்கள் !தேவ -அசுர ஆவிமண்டல யுத்தம் மனிதர்கள் மூலமாக நடை பெற்றுகொண்டே இருக்கிறது !இது கற்பனையா உண்மையா மனித வாழ்வுக்கு ஒரு இலக்கு இருக்கிறதா இவை எல்லாவற்றையும் நான் நம்புகிறேன் !


தங்கள் கடிய உழைப்பு ஒரே ஒரு நூலிலையில் கடவுளை விட்டு விலகிநிர்க்கிறதோ விலகிநிர்ப்பதால் ஒரு இழப்பு இந்தியாவிற்கு உண்டாகிறதோ என கவலை உண்டாகிறது !


போகர் தேவ -அசுர யுத்தத்தில் அசுரர்களை அழிக்க மனிதானாக  மாறிவரும் முருகு இறைதூதன் என உருவகம் கொடுத்தார் !அந்த முருகன் எவ்வளவு ஆற்றல் உள்ளவனாக இருந்தாலும் கடவுளிடம் பிச்சை பாத்திரம் ஏந்தி எதிர்பார்த்திருக்கிற ஆண்டியாய்தான் இருப்பான் !அவன் சுயத்தை நம்பாமல் கடவுளுக்காக காத்திருக்கிற ஆண்டி மனப்பான்மையிலேயே இருப்பான் !இந்த மன நிலையில் நீங்கள் மேலே பதிவிட்டதை செய்து பாருங்கள் அது பெரும் வெற்றி !

விவேகானந்தரின் பிரார்த்தனை :


நான் பூஜ்யம் ,,இந்த உலகம் பூஜ்யம்,,நீர் மட்டுமே செயல் புரிபவர்! .

நான் உமது கரத்தில் வெறும் கருவி மட்டுமே!...... அன்பே வடிவான இறைவா !பலர் உனக்கு பலவற்றை அளிக்கின்றனர்.நான் ஏழை ,ஆனால் எனக்கு உடலும்,மனமும்,ஆன்மாவும்,உள்ள
ன.நான் இவற்றை உனக்கு அளிக்கிறேன்!

கண்டவர் விண்டிலர்!; விண்டவர் கண்டிலரே!!!

கடவுளோடு இடைபடவும்; அவரின் சித்தத்தை உணரவும்; அவரின் குரலை கேட்கவும் பழகி கொண்டவர்களே இறைதூதர்கள்!ஆனால் அவர்கள் கண்டதாக ஒரு உருவத்தையோ பெயரையோ சித்தரிக்க முயலவே இல்லை !அப்படி சித்தரித்தவர்கள் அனைவரும் கொஞ்சம்கூட இறை அனுபவம் இல்லாதவர்களே என்பது மேற்கண்ட சித்தர் வரிகள் !!!
வள்ளலார்; முருகன், சைவம் என படிபடியே கடந்து உண்மையான இறைஅனுபூதி பெற்றபோது அருட்பெரும்ஜோதி என முடிந்தார்!! முன்பு என் அறிவு குறைவாக இருந்தது எனவும் ஒத்துகொண்டார்!
அவர் கடவுளை உண்மையில் உணராதபோது உருவத்தை பெயரை விண்டார்!வழிபட்டார்! ஆனால் உண்மையை உணர்ந்தவுடன் விண்டதை விட்டுவிட்டார்!உருவ வழிபாட்டையும் விட்டுவிட்டார்!முழு உண்மையை உணாராதபோதும் அவருக்கு உள்ளிருந்த தேடுதல் மற்றும் இறைவனின் வழிகாட்டல் அவரை 5 திருமுறை பாடவைத்தது! அவர் கடவுளை வெளியே தேடிய பக்தி யோகி!தனக்குள்ளாக தேடிகொண்டே இருப்பதாக பசப்பு காட்டியவரல்ல!அவரின் பக்தி பேரன்பே ஞானத்தையும் அவருக்கு அருளவைத்தது! ஆனால் ஆழமாக உள்ளார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஞானமார்க்கிகள் என்கிற போர்வையை தற்போது போர்த்து கொண்டனர்! இது ஞானமல்ல மாயாவாதம்!!

ஞானம் போல தோன்றும் மாயாவாதம் அல்லது சூனியவாதம் என ஒன்று உள்ளது!அது கடவுளால் உருவாக்க பட்டுள்ள எல்லா இயக்கங்களையும் அதற்கான மின் காந்த புல மண்டலங்களின் செயல்பாடுகளை ஆய்ந்து அறிந்து விஞ்ஞான விளக்கமளிக்கிறது!இது தொழில் நுட்பத்தை குறித்த ஆய்வு!பிரபஞ்சம் இயங்கும் தொழில் நுட்பத்தை குறித்த ஆய்வு!மனதின் நுட்பத்தை குறித்த ஆய்வு!ஆனால் இது இதனை யார் இப்படி ஒழுங்கமைத்தார்கள் என்பதை --கடவுளின் திறமையை மறைத்து இதுவெல்லாம் இயற்கை என குறிப்பிடும்!இந்த அறிவை கொண்டு மனித வாழ்வை நாமே ஒழுங்கமைத்து சிறப்பாய் வழலாம்!கடவுள் என்றொருவர் தனியாய் தேவையில்லை என சொல்லி விடும்!
எவ்வளவு திறமை இருந்தாலும் அதனை நம்பாமல் கடவுள் மீது நம்பிக்கை வைக்க பழகுவதே உண்மையான ஞானம்!தன்னை வெறுமையாக்கி கடவுளிடம் ஒப்படைதவர்களே செயற்கரிய காரியங்களையும் மகத்தான ஞானத்தையும் பூமிக்கு கொணந்தவர்கள்!கடவுளின் சித்தம் எதுவென சரியாக கேட்டறிந்து அதனை சாதாரன பொதுமக்களும் கடைபிடிக்க எளிய வாழ்க்கை நெறியை உண்டாக்கி பலரை கடவுளோடு ஒப்புரவாக்கியவர்கள் இறைதூதர்கள்!ஆனால் கடவுளின் ஆளுமையை ஒதுக்கி மனித அறிவை கொண்டே வாழ்ந்துவிடலாம் என்பது மாயாவாதம்!உலகில் நடந்தவைகள் எப்படி நடந்தது என ஆழமாக தர்க்கித்து ``தர்க்கம்`` என்கிற தொழில் நுட்பத்தை ஞானம் போல சித்தரிக்கிறவை!சிறந்த தர்க்கம் பொய்யயும் உண்மை போல காட்டி விட கூடியது!அல்லது சில சார்பு உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட கூடியது!இந்த சார்பு உண்மைகள் அகண்ட உண்மையாகாது!
சார்பு உண்மை ;அகண்ட உண்மை என இரண்டு உண்மைகள் உள்ளன! அதில் சார்பு உண்மைகள் ஒன்றைவிட ஒன்று முன்னேறியதாக தெறியும்! அப்படி நட்ட கல்லை கடவுள் என சுற்றி வருவதை விட நமக்குள்ளிருக்கும் கடவுளின் ஆவியாகிய நமது உயிர் கடவுளை நெருங்கிய ஒன்று என்பது உண்மை !அந்த உயிரில் நிலைத்து நிற்க பழகும் தியானம், யோகம்; சிலை வழிபாட்டை விட நிச்சயம் மேலாதானது !ஆனால் அதுவே முழுமையானதல்ல!நமது உயிர்தான் சகலத்தையும் படைத்ததா?சகலத்தையும் நிர்வகிக்கிறதா?
கடவுள் எங்கும் நிறைந்தவரானாலும் அவர் தனித்த ஒரு நபர் அவரின் மையம் நமது உடலிலோ பூமியிலோ கூட இல்லை அவரது மையம் நமது பூமியை போல ஏழு பூமி வானங்களை நிர்வகிக்கும் சொர்க்கம் அல்லது பரமண்டலத்தில் உள்ளது! அங்கு அவர் மையம் கொண்டிருந்தாலும் எங்கும் வியாபித்துள்ளவர்!அவரை நமது உயிரில் நிலைத்து நின்று வழிபட வேண்டும் !ஜீவாத்துமாவிலிருந்து பரமாத்துமாவை நோக்கி வழிபட வேண்டும் !உயிரில் நிலைத்து நிற்க பயிற்சி கொடுப்பது மட்டுமே தியானம் !அதன் பிறகு கடவுளை நோக்கி தொழவேண்டும் !ஞான மார்க்கிகள் தியானம் செய்வதோடு நின்று விடுவது அல்லது எனக்குள்ளே கடவுள் இருக்கிறார் என பகுதி உண்மையை மட்டும் நம்பிக்கொண்டு அடுத்த வளர்சிக்கு வராமல் தேங்கி நிற்கும் போக்கு தமிழகத்தில் நிறைந்துள்ளது !இதை கடரவேண்டிய கட்டம் வந்து விட்டது !இதை கடந்தால் மட்டுமே கடவுளை நோக்கி முன்னேற முடியும் !
வித விதமான தியானத்தை போதிக்கிறவர்கள் புதுபுது முறையை கொண்டு வரும் தொழில் நுட்ப வாதிகளே !ஆனால் தமிழகத்திற்கு இப்போதைய தேவை அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது !
இயேசு கடவுளை பற்றியும் அவரை வழிபடும் முறை பற்றியும் சொன்னதை சற்று கவனியுங்கள்!

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.!
கடவுள் சர்வ வியாபியாய்--அகண்ட ஆவியாய் --அகண்ட உயிராய் இருக்கிறார் !எல்லா படைபினங்களிலும் அவரது ஆவி உயிராய் சிற்றுயிராய் உள்ளது !எனவே அந்த ஆவியில் நிலைத்து அது வந்த அகண்ட ஆவியாகிய கடவுளை நோக்கி உள்ளார்ந்த ஈடுபாடோடு தொழவேண்டும் !
நமது சிறு உயிரில் நிலைத்து அகண்ட உயிரை நோக்கி தொழவேண்டும்!

அல்லது
மனித உயிர் + மனிதஆத்துமா = ஜீவாத்துமா!
கடவுளின் உயிர் +கடவுளின்ஆத்துமா =பரமாத்துமா !
ஜீவாத்துமாவிலிருந்து பரமாத்துமாவை தொழவேண்டும் !!

இந்த ஆத்துமா உணர்வு தனக்குள்ளாக தேடுகிற தியானத்தின் மூலமாக மட்டுமே சித்திக்கும் !மற்றவர்கள் தன்னை உடலாக மட்டுமே கருதி உடலுக்கும் அதன் புலன்களை மயக்கி ஈர்க்கும் உலக மாயைகளுக்கு அடிமையாய் உள்ளனர் !தன்னை உடல் என கருதுபவர்ககே தன்னை போல ஒரு சிலையை கடவுளாக கண்டால் மட்டுமே கடவுள் பயம் வருகிறது!தன்னை போலவே அந்த உருவத்திற்கும் ஆசாபாசம்;குடும்பம் குழந்தைகள் சண்டைசச்சருவுகளை மேலேற்றி கற்பனைகளை புணையமுடிகிறது!இது இச்சாவாதம்!தன் உடல் மற்றும் புலணிச்சைகளின் மூலமாகவே பூமியையும் கடவுளையும் பார்க்கிறது! ஆனால் யார் `நான் உடலல்ல ஆத்துமா` என்பதை உணர்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பரமாத்துமாவை -உன்மையான கடவுளை பற்றிய உணர்வு உண்டாகும் !அதற்கு இச்சாவாதம் ,மாயாவாதம் என்ற இரண்டு வழி விலகல்களில் செல்லாமல் நடு பாதையில் கடவுளை தேடி பயணிக்க வேண்டும்! அந்த காலம் இப்போது வந்திருக்கிறது என்பதே இயேசுவின் வெளிப்பாடு !
யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.!!!

எனது பிரார்த்தனை!!!!

அன்றாடம் பிரார்த்தனையில் அனுகூலங்களை அதிகம் பெற வேண்டி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இறுதி வடிவம் பெற்ற எனது பிரார்த்தனை இப்பிரார்த்தனையோடு சொந்த தேவைகளையும் இணைத்துக்கொள்ளலாம் !!
தினமும் சொல்லி வருகையில் உலகியல் வாழ்விலும் அதிக முன்னேற்றமும் ஆன்ம வாழ்வில் அதிக மேன்மையும் ரகசியங்கள் வெளிப்படுவதும் தேவர்களின் அனுசரணையும் கிடைப்பதை அறியலாம் !!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  நாரயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் 
கடவுளே உம்மைத்துதிக்கிறேன் உமது அருளால் என்னை நிரப்புவீராக சாந்தி உண்டாக்குவீராக 

எல்லா புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து காத்து வளர்க்கும் இறைவனுக்கே ஆகும் !நீர் அளவற்ற அருளாளன் ;நிகரற்ற அன்புடையோன் !நீரே நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி !உம்மையே நாங்கள் வணங்குகிறோம் உம்மிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் எங்களை நேர் வழியில் நடத்துவீராக!எவர்களுக்கு அருள் புரிந்தீரோ அவ்வழி !உம் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல ;நெறி தவறியோர் வழியுமல்ல !

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பரம பிதாவே !உம் நாமம் மகிமைப்படுவதாக !உம் ராஜ்ஜியம் வருவதாக !பரமண்டலங்களில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக!எங்களுக்கு அன்றாடம் தேவையான ஆகாரத்தை இன்றைக்கு தாரும் !எங்கள் பாவ தோஷங்களை நீர் எங்களுக்கு மன்னியும் !அது போல பிறரின் தீமைகளை மன்னிக்கிற நல்ல இதயத்தை எங்களுக்கு தாரும் !எங்களை சோதனைக்கு உட்பட பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்!ராஜ்ஜியுமும் வல்லமையும் மகிமையும் என்றென்றும் உம்முடையவைகளே!

நித்தியமான  இறைவா !! நீரும் உமது வாக்காகிய நாராயணன் மட்டுமே நித்திய ஜீவன் உள்ளவர்கள் உங்களால் அருளப்படுபவர்கள் மட்டுமே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும்  !!! .உமது சித்தம் ஒன்றே செய்யப்பட தகுதியுள்ளது !!நான் உமது கரத்தில் கருவியாக மட்டுமே இருக்கவிரும்புகிறேன் !ஆனாலும் அசுரர்கள் உமக்கு விரோதமாக என்னை பயன்படுத்த முயல்கிறார்கள் !!!...... இதில் தற்காத்துக்கொள்ள நான் போதிய தெளிவற்றவனாக இருக்கிறேன்  !!அன்பே வடிவான இறைவா !. எனக்கு உடலும்,ஆன்மாவும்,நீர் அருளிய உயிரும் உள்ளன.நான் இவற்றை உமக்கே அர்ப்பணிக்கிறேன் ! .என்னை ஆண்டு கொள்வீராக !!! நேர் வழிபடுத்துவீராக !!!

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் எனது புலன்களில் சாந்தி உண்டாக்குவீராக ! உமது சக்தியால் எனது ஆத்மாவை துய்மையாக்குவீராக ! ஒளி சரீரம் பெரும் தகுதி உண்டாக்குவீராக ! 

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் உலகம் முழுமையும் சாந்தி உண்டாக்குவீராக  !! சகல் மதங்களுக்கிடையிலும் சாந்தி உண்டாக்கும் சமரச வேதத்தை அருள்வீராக !!

Sunday, January 29, 2012

யார் குரு?குருவிலும் பல படிகள் இருக்கிறதா ?சற்குரு யார் ?

யாரிடமிருந்தும் கற்றுகொள்கிர மன நிலை முதலாவது கடவுளை தேடுகிற சாதகனுக்கு வேண்டும்!ஏனென்றால் பூரண உண்மை,முற்றறிவு என்பது கடவுளின் தன்மை!முற்றறிவை நெருங்குவது என்பது குருடர்கள் யானையை தடவிய கதை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்!குருடர்கள் உணர்ந்ததெல்லாம் தவறு என ஒதுக்க முடியுமா?மனிதர்களின் முன்னேறிய அறிவு இப்படிபட்டதே!தும்பிக்கை கயிறு போலுள்ளது என்பது `பகுதி உண்மை`!கால் உலக்கை போலுள்ளதும் `பகுதி உண்மை`!இப்படிப்பட்ட பல `பகுதி உண்மைகள்` ஆண்மீக உலகில் வலம் வருகின்றன!இவை தவறல்ல!நான் கண்டதுதான் உண்மை மற்றது தவறு என புறந்தள்ளூவதில் தவறு வருகிறது!யானை கயிறு என்பதிலும் எவ்வளவோ மனதை மயக்கும் விளக்கங்களும் நுனுக்கங்களும் இருக்கும்!இவைகளை அறிந்துகொள்வதும் கடவுளை தேடுகிற ஒரு பாதையே!ஒரு பாதையில் கொஞ்சம் முன்னேறியவுடன் மற்ற பாதைகளில் உள்ள `பகுதிஉண்மைகளை` உள்வாங்கினால் முழுமையை நோக்கி முன்னேற முடியும்!ஆனால் தான் கண்டதுமட்டுமே உண்மை என்கிற மாயை தடுக்கிறது!அப்படியில்லாமல் மாற்று கருத்துகளை `விசாரம் செய்வது` உள்வாங்குவது கடவுளை நெருங்குகிற `யோகம்` என்கிறது கீதை!

பரமாத்துமாவை சிலர் தனக்குள்ளாக மூழ்கி தியானிப்பதாலும்;சிலர் தத்துவ விசாரம் செய்து முற்றறிவை விளையவைப்பதாலும்;இன்னும் சிலர் பலனில் பற்றுவைக்காத கர்மயோக உழைப்பினாலும் கண்டடைகிறார்கள்!--கீதை13:25

மனிதாபிமானம்,அஹம்பாவமின்மை,அஹிம்சை,சகிப்புதன்மை,எளிமை உடயவனாய் இறைதண்மை உணர்ந்த குரு ஒருவரை அண்டி சுயகட்டுப்பாடு,நிலைத்தமனம்,பரிசுத்தம் கற்று புலனிண்பங்களை விட்டவனும் ;பிறப்பு இறப்பு முதுமை வியாதி என்கிற பயத்தை கடந்து நான் என்கிற சுயத்தை அழித்தவனும் வீடு மனைவி பிள்ளைகள் செல்வம் என்கிற பந்தங்களில் தவிக்காதவனும் விருப்பு வெறுப்பு இரண்டிலும் மனசம நிலையை அடைந்தவனும் உள்ளார்ந்த பக்தியில் நிலைத்தவனும் தன்னை உணர்வதிலும் எல்லா தத்துவங்களையும் விசாரம் செய்து முற்றறிவை பெறுவதிலும் சலிப்பில்லாதவனுமாகிய இவைஅணைத்தையும் செய்கிறவனே ஞானி --இதில் ஒன்று குறைந்தாலும் அவன் அஞ்ஞானத்தில் உழல்பவனே!---கீதை 13:8

மேற்கண்ட குணாதிசயங்கள் அடையப்பெற்றவர் இறைதண்மை உணர்ந்த குரு!முழுமையடையாத ஒன்றிரண்டு கைவரப்பெற்றவரும் குருவாகிவிட முடியும்!தன்னை விட பெரிய குருடனுக்கு சிறிய குருடன் சிறப்பாகவே வழிகாட்ட முடியும்!நாமும் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அந்த குருவையே பெருமை பேசிக்கொண்டு தேங்கி நின்று விடாமல் அடுத்த அடுத்த படிகளில் உள்ள குருமார்களிடம் கற்றுகொண்டே வளறவேண்டும்!இதற்கு ஜன்னலை திறந்துவைத்து பழகவேண்டும்!மாற்று கருத்துகளை உள்வாங்கவேண்டும்!ஆனால் கிணற்று தவளை மனப்பாண்மை மனிதனை வஞ்சிக்கிறது!தெறிந்த விசயத்தையே திரும்ப திரும்ப பேசகேட்டு புளகாங்கிதம் அடையும் ஒருகூட்டத்தில் திருப்தியடைந்து விடுகிறோம்!நான் பெருசு நீ சிருசு என சண்டையும் போடுகிரோம்!மனித முயற்சியால் குருவாக உயர்ந்தவர்களிடம் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அவர்களை கடந்து சற்குருவை நாடி செல்லவேண்டும்!``தேங்கிய தண்ணீர் சாக்கடை ``ஆகிவிடும் !நாம் தேங்காமல் தேடவேண்டும் !முற்றறிவாளன் கடவுள் ஒருவரே!அவர் தனது செய்தியை;வழிகாட்டுதலை;ஞானத்தை தனது வாயாக உலகிற்கு தானே அனுப்பிய இறைதூதர்கள் மூலமாக அவ்வப்போது வெளிபடுத்தியுள்ளார்!இந்த இறைதூதர்கள் மூலமாக அந்த காலகட்டத்திற்கு அருளபட்டவைகள் பின்னாளில் கலப்படமும் அடைந்து விடுகின்றன!இருந்தாலும் அவைகளை கவனத்துடன் ஆராய்ந்து வேதத்தை உள்வாங்க வேண்டும்!அவைகளில் கலப்படங்களை மட்டும் சுட்டிகாட்டி  ஒதுக்கிவிடாமல் சாரத்தை பிழிய கற்றுகொள்ள வேண்டும்!
உலகின் சற்குருநாதர்கள் 1)ஸ்ரீராமர் 2)கிரிஸ்ணர் 3)மோசே 4)இயேசு 5)முஹமது மட்டுமே!இவர்கள் அந்த காலகட்ட சமுதாயத்தில் உள்ள சாதாரண மக்களும் இறைவனோடு ஒப்புறவு ஆக்கியவர்கள்!வேதம் கொணர்ந்தவர்கள்!இவர்களளவு இறைவனை நெருங்கிய குருமார்கள்:புத்தர்,மஹாவீரர்,ஜொராஸ்டியர்,குருனானக்&வள்ளலார்!இவர்கள் எல்லொரும் ஏக இறைவனை வணங்க ஊக்கபடுத்தியவர்கள்!சித்தர்கள்,ஞானிகள் எல்லாம் கீழ் நிலையில் உள்ளவர்கள்!இவர்கள் எல்லோரையும் உள்வாங்கி கடவுளை நெருங்கி செல்ல வேண்டுவது நமது கடமை!கலப்படங்கள் அதிகரிக்கும் போது கடவுள் இன்னொரு இறைதூதரை அணுப்புவார்!அவரை அணுப்பும்படி நாமும் வேண்டவேண்டும்!

கீதையின் மஹத்துவம் என்னவென்றால் எல்லா மனிதர்களும் அவரவர் உள்ள படியிலிருந்து கடவுளை அடைய 17 பாதையை மிக ஆழமாக விஞ்ஞான பூர்வமாக எளிமைபடுத்தி உபதேசித்துள்ளது!நாம் அறைகுறையாக செய்துகொண்டிருப்பதை பட்டைதீட்டி கொடுத்துள்ளது!கீதையின் சாரத்தை பிழிந்துகொண்டவன் மாத்திரமே ஆண்மீக வாழ்வில் தான் கடைபிடிக்கும் மார்க்கத்தை ஜீவனுடன் புரிந்து கொள்ளமுடியும்!கீதையை புரிந்துகொண்டால் மட்டுமே பைபிளையும் குரானையும் புரிந்துகொள்ளமுடியும்!இல்லாவிட்டால் வெறுமையான வழிபாடாகவும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் சண்டைபோடுகிறதாகவும் கலப்புள்ளதாகவும் முடியும்!

உண்மைகளை மறக்கடித்து மாயம் செய்கிறவைகள் மனிதனது குணங்கள் மட்டுமல்ல!உபதேசங்களில் கலப்பையும்;திரித்து உபதேசிப்பதும் மனிதனை விட மேலான சக்திகளான அசுரர்களின் மாய்மாலங்களாகும்!மனிதர்கள் தேராமல் நியாயத்தீர்ப்பு நாளன்று தங்களுடன் அழிக்க படவேண்டும் என்பது அசுரர்களின் திட்டமாகும்!கடவுளால் படைக்க படுகிற மனித ஆத்துமாவை அவனது சரீரத்தின் புலனிச்சைகளை தூண்டி அதற்கு சந்தர்ப்பமும் ஏற்படுத்தி உலக மாயைகளில் உலலும் படி அசுரர்கள் செய்கிறார்கள்!மனிதன் தவறுக்கு போகும் போது அதற்கு ஒத்துழைப்பு அதிகம் உண்டாக்குவதும் அதே மனிதன் கடவுளை நாடும்போது அதற்கு சொல்லொண்ணா முட்டுகட்டைகளை பிரச்சினைகளை உண்டாக்குவார்கள்!ஒவ்வொரு மனிதனின் மூலமும் இறைசக்தியும் அசுர சக்தியும் குருஸேத்திர யுத்தம் நடந்து கொண்டுதான் உள்ளது!மனிதனை தீங்குக்கு அழைக்க அசுரர்கள் படைதிறண்டு கவ்ரவர்களாய் தாக்குகிறார்கள்!மனித சரீரமாகிய தேரில் குடிகொண்டு உள்ள ஆத்துமாவாகிய அர்ச்சுணன் மீது அசுரர்கள் தாக்கும்போது அர்ச்சுணன் தனது சாரதியாக--வழிகாட்டியாக இறைதூதனாகிய கிரிஸ்ணரை வைத்து அவரின் உபதேசத்தை கேட்டு அசுரர்களுடன் அனுதினம் யுத்தம் செய்து ஜெயிக்க வேண்டும் என்பதே குருஸேத்திர யுத்தம்!இந்த யுத்த களத்தில் மனித ஆத்துமாக்கள் அசுரர்களுடன் போரிட்டே ஆகவேண்டும் என்பதை பலர் ஏற்றுகொள்வதில்லை!போர்க்களம் உணராத போர்வீரனாய் இருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்!மனிதர்களிடம் உள்ள தீய குணங்கள் அவர்களை மயக்கும் மாயைகளை அவர்கள் அஹிரினை என கருதுகிறார்களே தவிர அவைகளின் பின்னணியில் அக்குணங்களை தூண்டி விடும் அசுரர்கள் என்கிற உயர்திணை -ஆவிமண்டல அசுரர்கள் ,தேவர்கள் என்கிற மனிதனை விட உயர்ந்த சக்திகள் உள்ளன!கடவுளை அடையும் பாதையில் தனகுள்ளும் புறத்திலும் அசுரர்களுடன் போராடியே ஆகவேண்டும் !எனவே கீதை போர்க்களத்தில் வைத்து உபதேசிக்க படுகிறது!!!

குருஷேத்திர யுத்தம் என்பது என்ன?

குருஷேத்திர யுத்தம் என்பது நடந்ததா ?நடக்கவில்லையா ?ஏன் நடந்தது என்பதை விட யுத்தம் தொடங்கும் முன் ஒரு மனிதனாகிய அர்ச்சுனனுக்கு உண்டான மன கலக்கம் என்பது அன்றாடம் மனிதர்களுக்கு --முக்கியமாக கடவுளை தேடி அவரை கண்டடைய முயலும் பக்தனுக்கு எதிர் வருகிற சவாலே ஆகும்! இத்தகைய சோதனைகள் --இடறல்கள் உண்டாகும் பொது அதனை எதிர்கொள்ள நமக்கு அறிவூட்டும் ஞான உபதேசமே கீதை!கீதை வாழ்க்கைக்கான உபதேசம் ;பக்தனுக்கு கடவுளை நோக்கிய பயணத்தில் அன்றாட வாழ்வை கடந்தோட அனுபவ பூர்வமான செயல்முறை பயிற்சி! உலக வாழ்க்கையில் பல படித்தரமான நிலைமையில் மனிதர்கள் படைக்க படுகிறோம்!ஒரு சக்கரத்தின் அச்சுகள் பல உருப்புகள் எப்படி ஒன்றாக இணைக்க பட்டு அது சுற்றுகிறதோ;அதுபோல உலகவாழ்க்கை செம்மையாக நடக்க பலவிதமான வேலைகள்,பொறுப்புகள்,கடமைகள் பலரால் செய்ய படவேன்ண்டியுள்ளது!ஏற்றதாழ்வுகள்,பதவிகள்,பட்டங்கள்,செம்மைகள்,வறுமைகள்,முரண்பாடுகள் என கணக்கிலடங்கா பேதங்கள் இருந்தாலும் எல்லோரும் கடவுளை பொருத்து முக்கியமாணவர்களே!ஒரு சிரு துரும்பும் அவரின் கண்கானிப்பிலும் பேணுதலிலும் உள்ளன!அதுஅதற்குரிய எல்லையும் சுதந்திரமும் கொடுக்க படாமலுமில்லை!

ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.(இயேசு;மத்தேயு 10:29)

கடவுள் நம்மை ஜனிக்க செய்த நாள் முதல் நம்மோடே இருக்கிறார்;நம்மிடம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட பணி-திட்டமும் இருக்கிறது என்கிற உள்ளூணர்வு நமக்கு வேண்டும்!அவர் நம்மைப்பற்றிய நோக்கம் வைத்துள்ளார் என்கிற புரிதலே நமக்கு சந்தோசத்தையும் நம்பிக்கையையும் அவரிடம் உள்ளார்ந்த உறவையும் கொண்டுவந்து விடும்!உள்ளார்ந்த உறவை அணுபவிக்க தெறியாத--முடியாத நிலைமையிலேயே பக்தி செலுத்தியும் வழி விலகி போகிறார்கள் சிலர்!அது ஒரு அறியாமையே!

இப்பூமிக்குரிய வாழ்க்கை என்னும் குருஸேத்திர யுத்தத்தில் மனிதனாகிய அர்ச்சுணன் ஒரு போதும் தனித்துவிடப்படவில்லை!அவனுக்கு வழிகாட்டும் படியாக அவனருகில் இறைதூதனாகிய கிரிஸ்ணர் இருந்தார்!அன்றைய உலகில் இறைவனை நெருங்கிய நபராகிய கிரிஸ்ணர் என்பவரை அர்ச்சுணன் குருவாக ஏற்றுகொண்டிருந்தது அவனுக்கு கடவுளின் வழிகாட்டுதலை உறுதி செய்துவிட்டது!அவன் கடவுள் மீது பக்தியுள்ளவனாகவும் இறைதூதனால் நண்பன் என அழைக்கபடும் உறவுக்குள் உள்ளவனாகவும் இருக்க முடிந்தது!பக்தி உள்ளுக்குள் விளைந்து கடவுளோடு உறவாக பரிணமிக்க வேண்டும்!
எல்லா மனிதர்க்குள்ளும் கடவுளுடன் உறவை அணுபவிக்க முடியவில்லையே என்கிற இனம்காணாத துயரம் இருக்கிறது!எல்லா மனிதர்களுக்கும் ஆத்தும தாகம் ஆழ்மனதில் இருக்கும் அது தனது உயிர் பிரிந்து வந்த கடவுளை குறித்தது! இந்த பிரிவு துயர் அடையாளம் மாறி உடலை தானாக என்னி மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை ஆக மாறி நிற்கிறது இதில் முழுமையும் திருப்தியுமடைய முடியாமல் முட்டி மோதி தவிக்கும்போது இனம்புரியா வேதனை வெளிப்படும் விரக்தியாகவோ வக்கிரமாகவோ மாறவும் வாய்ப்புண்டு! இந்த ஏக்கம் நமது பிதாவாகிய கடவுளைக்குறித்த தேடலாக பக்தியாக பரிணமித்தால் இறைவனோடு இடைபடுதல் உண்டாகும்!அந்த தேடலுக்கு கடவுள் தன்னை உணர்ந்த மனிதர்களை நமக்கு குருவாக அணுப்பி வைப்பார்! 

இயேசு குருவா? கடவுளா?

இதற்கு இயேசு சொன்ன பதிலே போதும்!!!

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.


கடவுளை வழிபடுவது மட்டுமே இயேசுவால் முக்கியபடுத்த பட்டுள்ளது!இயேசுவை கடவுளின் தூதராக --மனிதர்களுக்கு குருவாக ஏற்றுக்கொள்ளும் படி அவர் அளைத்தாரே தவிர தன்னை வழிபடும்படி அவர் வழிகாட்டவில்லை!

இயேசுவிடம் வேதத்தின் சாரம் என்ன என கேட்ட போது அவரின் பதில் :
29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கடவுள் ஒருவரே கடவுள் .

30. உன் தேவனாகிய கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.

எப்படி பிரார்திப்பது என்று இயேசுவிடம் கேட்ட போது:
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே!.

ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் கடவுளுடையவைகளே என்பது இயேசுவின் முடிவு !அவர் எப்போதும் கடவுளை பிரார்திக்கிறவராகவே வாழ்ந்து காட்டினார் !


பூமியின் முடிவு காலத்தில் இயேசு என்ன செய்வார் என பைபிள் சொல்லுகிறது :
I கொரிந்தியர் 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.


இயேசு பூமிக்கு வந்தது ;மீண்டும் வரப்போவது பூமியில் தாங்களும் கடவுளாகிவிட்டதாக சொல்லிக்கொண்டுள்ள அசுர ஆவிகளை பரிகரித்து கடவுளுக்கு ராஜ்ஜியத்தை உண்டாக்குவதற்கு!ஆனால் அவரின் வார்த்தைகளை திரித்து அவரும் கடவுளாகி விட்டதாக அசுர ஆவிகள் செய்கிற அதே வேலையை இயேசுவும் செய்வதாக கிறிஸ்தவர்கள் சொல்லுவது சரியா ?


இயேசு கடவுளின் ராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிக்க வந்தவர் !தனது சுயராஜ்ஜியத்தை கட்டும் அசுரர்களை வெல்ல கடவுளால் அனுப்ப பட்ட இறைத்தூதர் !மனிதர்களுக்கு குரு !இயேசுவின் மூலமாக கடவுளிடம் பிரார்திப்பதே இயேசுவுக்கு பிரியமானது !


இயேசுவின் எச்சரிக்கையை கவனியுங்கள் :
மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

வழிபாடு கடவுளுக்கு மட்டுமே !இயேசுவின் மூலம் வழிபடலாமே தவிர இயேசுவை வழிபட கூடாது !


0 Comments | Add Comment | Permalink RSS

ஞான மார்க்கத்தினருடன் ஒரு சம்பாஷனை!!!

நண்பரே !தங்களை வாழ்த்துகிறேன்!கீதையை கொஞ்சமாவது புரிந்திருந்த கண்ணோட்டத்தில் பைபிளையும் குரானையும் படித்த போது நான் புரிந்து கொண்டது வேறு ;அதனை சடங்காச்சாரமாக பின்பற்றும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் வியாக்கியானம் செய்வது வேறு என்பதை சொல்லி வருகிறேன் !பைபிளையும் குரானையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமானால் கீதையை படிப்பது அவசியம் என்பதை அவர்களின் தளங்களில் சொல்லிவருகிறேன் !இந்தியர்களாகிய நாம் இன்னும் தெளிவு பெற பைபிளையும் குரானையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் !

உலகம் முழுவதும் ஒரே இறைவனே !தனது பிள்ளைகளாகிய மனிதர்களுக்கு உலகம் முழுவதும் கடவுள் தன்னை பற்றிய வெளிப்பாடுகளை கொடுத்திருக்க மாட்டாரா ??எங்களுக்கு மட்டுமே சொன்னார் என்பது போல மற்றவர்களை ஒதுக்குகிற கிணற்று தவளை மனப்பான்மையை விட்டு வெளி வருதலே இன்றைய தேவை !நான் இயேசுவை ஒரு இறைதூதராக மட்டுமே பார்க்கிறேன்!ஆனால் அவரை மனிதர்கள் தங்களின் தவறினால் கடவுளுக்கு இணை ஆக்கி பார்க்கிறார்கள் --இந்தியாவில் ராமரையும் கிரிஷ்ணரையும் இணை ஆக்கி விட்டதை போல !

இந்த பூமிக்கு என்று ஒரு யுக புருஷன் கடவுளிடம் உண்டு !அவர் கடவுளல்ல !அவரும் கடவுளின் தூதர் மட்டுமே !ஆனாலும் பூமியை பொறுத்தவரை கடவுளின் ஏக பிரதிநிதி --கணக்கு பிள்ளை என்பதை போல --இந்த நபரே ``குமாரன்`` என அழைக்கபடுகிரார்! ராம் என்றாலும் ஜெரோம் என்றாலும் ரஹீம் என்றாலும் ஒரே அர்த்தத்தில் இந்த குமாரன் என்ற பொருளில் வழங்கப்பட்டது !இவரையே போகர் தனது ஞானத்தால் உணர்ந்து தேவதூதன் என்கிற நிலையிலிருந்து மனித சரீரத்தில் அவதரிக்கிற முருகு -மாறி வருகிற முருகன் என்றார் !அது ஒரு உருவக உபதேசம் !இந்த முருகனாகிய யுக புருஷனாகிய இறைதூதன் யாரென்றால் திரேதா யுகத்தின் ராமன் ;துவாபர யுக கிருஷ்ணன் ;கலியுக இயேசு !இம்மூவரும் ஒருவரே !``அதர்மம் பெருகும் போது நான் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறேன் ``என்பது நிறைவேறியுள்ளது !இந்த நபரே கல்கி யுகத்தில் கல்கியாக வரபோகிறவர் !

கடவுள் எதையும் ஜோடுஜோடாகவே படைக்கிறவர்!அப்படி இந்த யுக புருஷனுக்கு நண்பனான ஒருவர் உள்ளார் !அவர் ராமருக்கு லக்ஷ்மணன் ;கிரிஷ்ணருக்கு அர்ச்சுனன் ;இயேசுவுக்கு முகமது நபி !இயேசு பரமேறுமுன் எனக்கு பின் வருகிற சத்திய ஆவியானவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் என முன்னறிவித்தார் !அந்த சத்திய ஆவியானவராகிய ``ஜிப்ரீல் ``என்கிற தேவதூதன் முகமதுவை ஆட்கொண்டு இறக்கிய வேதம் தான் குரான் !முகமது ஒரு சாதாரண படிப்பறிவு இல்லாத இடையன் ! ஜிப்ரீல் என்ற ஆவியே முகமதுவை ஒரு கருவியாக பயன்படித்தி ஆப்ராமின் சந்ததியினருக்கு வாழ்க்கை நெறிமுறைகளும்  ஆட்சி நெறிமுறையும் குரானாக வழங்கப்பட்டது!லக்ஷ்மணன், அர்ச்சுனன், முகமது மூவரும் யுத்த வீரர்கள் --ஒருவரே!!! கீதையில் கிரிஷ்னர் அர்ச்சுனனிடம் இதற்கு முன்பும் நாம் இருவரும் இருந்திருக்கிறோம்;ஆனால் நான் முந்தய பிறவி ஞானத்துடன் இருக்கிறேன்;நீ அந்த ஞாபக சக்தி அருளப்படாதவனாக இருக்கிறாய் என்று சொன்னது இந்த யுகபுருஷ ஜோடி திரும்ப வரும் என்பதையே!ஒருவர் கடவுளை நெருங்கியவர்;உடன் அவருக்கு உதவியான சத்திரியன்!

உலகம் முழுவதிலும் கடவுளை மனித முயற்சியால் நெருங்கியவர்களும் கடவுளை பற்றிய வெளிப்பாட்டை கொடுத்துள்ளனர் !நம் இந்திய ஞானிகளை போல! ஆனால் கடவுளே தமது தூதர்களாக சிலரை தேர்ந்தெடுத்து தம்மை பற்றி வெளிப்படுத்தியுள்ளது எதுவோ அதுவே சிறந்தது!அப்படி வந்தது கீதையும் பைபிளில் பழைய ஏற்பாடும் குரானும் மட்டுமே!இவைகளில் அருள்நிலையில் கடவுளே பேசுவதாக வார்த்தைகள் இறங்கியுள்ளன !நான் என அதிகாரத்துடன் சொல்லப்படும் வார்த்தைகளை கடவுள் இறைத்தூதர்களான கிருஷ்ணர் ,இயேசு ,முகமது மூலமாக கடவுள் பேசியதாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர கிருஷ்ணர் இயேசு முகமது சொன்னதாக எடுத்துக்கொள்ள கூடாது !குர்ஆனில் இதைப்பற்றி தெளிவாக வசனம் இறங்கியுள்ளது !இறைதூதர்கள் கடவுளின் வாயே தவிர கடவுளல்ல !இவர்களையும் வணங்கக்கூடாது !வழிபாடு கடவுளுக்கு மட்டுமே!எல்லா புகழும் கடவுளுக்கே என்ற குரானின் முத்தாய்ப்பான வாசகத்தை மனதில் வைக்கவேண்டும்!!!

இயேசு ``நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் ;என்னையன்றி ஒருவனும் கடவுளிடத்து வாரான் ``என்றார்!நான் கடவுளை அடைய பாதை --குரு என்றுதான் சொன்னார்!நான்தான் கடவுள் என்று சொன்னதாக கிறிஸ்தவர்கள் தவறாக திரித்து அப்பியாசிக்கின்றனர்!அதுபோலவே அவரது முந்தய அவதாரமான ராமரையும் கிரிஷ்ணரையும் குரு என்பதை மாற்றி கடவுளுக்கு இணையாக்கி நாம் அப்பியாசிக்கிறோம் !இது தவறு என குரான் சுட்டுகிறது!

இம்மூன்று வெளிப்பாடுகளையும் தொகுத்து பார்த்தால் ஒரே அடிப்படையில் செழுமையாக்க பட்டவை என்பது புரியும்!ஆனால் வேறுவேறானதாக அர்த்தப்படுத்தி சண்டை போடுகிறவையாக மனிதர்கள் மாற்றி கொண்டோம்! இறைதூதர்கள் சென்ற பிறகு அவர்களின் சீடர்கள் மூலமாக தங்களது விசத்தை சிறுகசிறுக கலந்து அவற்றை திரித்து தவறாக வியாக்கியானம் செய்வது அசுர ஆவிகளின் வாடிக்கை என குரான் சுட்டுகிறது! அதுதான் தற்போது நடந்து கொண்டுள்ளது!

எல்லா மதங்களும் இறைதூதர்களால் அடித்தளம் இடப்பட்டு வளர்க்கப்பட்டு பின்னாளில் அசுரர்களால் சீரழிக்க பட்டவையாய் இருக்கின்றன என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்!உண்மைகளை மட்டும் உள்வாங்கி முன்னேற கடவுள் அருள் வேண்டும்!பூமியில் மனிதர்கள் மூலமாக தேவ அசுர யுத்தம் நடந்து கொண்டேதான் இருக்கிறது!

இந்த யுத்த களத்தை புரிந்து கொள்ள பக்குவத்தை உண்டாக்கும் ஒரு சாதனம் தான் தியானம் யோகம் என்பது!அன்ன மயகோஷம் மனோமய கோஷம் இவற்றை விட்டு முன்னேறாமல் தியானம் யோகம் என்று கத்தியை மட்டும் தீட்டிக்கொண்டே இருப்பதால் பலன் என்ன ?கத்தியை தீட்டுவது விஞ்ஞான மய கோஷத்திர்க்குள் நுழைந்து தேவ அசுர யுத்த களத்தில் நுழைவதற்காக!அந்த நிலையில் ஒன்று கடவுள் சார்பாக கடவுளை உயர்த்தி பிடித்து அவரிடம் பிரார்திக்கிற பக்தனாக மாறி ஆகவேண்டும் !அல்லது கடவுளை மறைமுகமாக புறந்தள்ளி --அவரை ஒரு நபர் என்பதற்கு பதிலாக ஒரு பொருளாக்கி--இயற்கையாக சுட்டி மனித அறிவை கொண்டே சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவிடலாம் என அசுர குருவின் அணியில் நிற்க வேண்டும்!

அசுரர்கள்  தேவதூதன் என்ற நிலையில் இருந்து அசுரனாக மாறியது நாங்களும்  கடவுளுக்கு இணையாகி விட்டோம் என்றதாலேயே!ஆதி மனிதனான ஆதாமை நீயும் கடவுளாகலாம் என உபதேசித்து கெடுத்தான்!இறந்து போன அனேக மனிதர்கள் பெயரை சொல்லி பல அற்புதங்களை தேவைகளை மனிதர்களுக்கு செய்து கொடுத்து மனிதர்களும் தெய்வமாகி விட்டதாக மாயம் செய்வதும் அசுர ஆவிகளே!

இயேசு அசுரனைப்ப்ற்றி ``அவன் ஒரு பொய்யன்;பொய்களுக்கு பிதாவாய் இருக்கிறவன்`` என்றார்!நான் அசுரன் கடவுளுக்கு விரோதி;கடவுளை போல ஆற்றல் உள்ளவன் என்னை வழிபட்டால் உங்களுக்கு எல்லாம் செய்வேன் என உண்மையை சொன்னால் மனிதர்கள் அவனை எற்றுகொள்ளமாட்டார்கள்!அதனால் அவன் எப்போதும் இறந்த மனிதர்கள் பெயரால்தான் பூமியில் செயல்பட்டு தன்னை வழிபடுகிற ஒரு கூட்டத்தை உண்டாக்குகிறான்!``ஆட்டின் தோலை போர்த்துக்கொண்டு ஓநாய்கள் உங்களிடத்து வரும்`` என இயேசு எச்சரித்ததும் இதுவே!சென்று பொன இறைதூதர்கள்,ஞானிகள்,மஹான்களின் பெயரை கடவுளுக்கு இணைவைத்து அவர்களை வழிபடுவது,அவர்களின் உபதேசத்தை திரித்து வியாக்கியாணம் செய்வது,மனிதர்களை கடவுளை வழிபடுவதிலிருந்து திசைதிருப்புவது,நான் பெரிசு நீ பெருசு என குழு உணர்வை தூண்டி சண்டை போட வைப்பது எல்லாமே அசுரர்களின் வேலையாகும்!

கடவுளை தேடு என்று சொல்லாமல் மனிதனும் தெய்வமாகிவிடலாம் என்கிற உபதேசம் அசப்பில் ஞானம் போல தெரிந்தாலும் ஞானமல்ல!அசுர குருவின் உபதேசம்!எல்லா ஞானத்தையும் பேசி முடிவில் கடவுள் என்ற நபரை புறந்தள்ளும்!தீயவர்களுக்கு துன்மார்க்கத்தை   உபதேசிக்கிற அசுரர்கள் நல்ல ஆத்துமாக்களை ஏமாற்ற வைத்திருக்கும் உபதேசம் ஞானம் போல தெரிகிற மாயாவாதம்-அல்லது சூனிய வாதம் !வள்ளலார் கடவுள் சார்பானவர்!அவர் ஏழு மாயத்திரைகளை நீக்கி அருட்பெரும் ஜோதியாய் விளங்கும் கடவுளை வழிபடு என்றார்!யுக முடிவில் கல்கி வருவார் என்றார்!ஆனால் வேதாத்திரி மாயாவாதி!அறிவுதான் கடவுள் என்று அசுர உபதேசம் செய்தவர் !!!கடவுளை வழிபடுவதிலிருந்து மனிதர்களை திசைதிருப்புகிறவர்!!!

`அருள்` x `மருள்`

ஆவி மண்டல சக்திகள் ஆட்கொள்ளும் போது எல்லா மனிதர்களிடமும் அருள் வழிவதும் அதை கடவுள் என மனிதர்கள் நம்புவதும் உண்டு! எல்லா ஆவிகளும் கடவுள் சார்பானவையல்ல! !ஆனால் மனிதனை விட உயர்ந்த சக்திகள்!இவைகளால் பூமிக்குரிய சில நன்மைகளை செய்து தறமுடியும்!நடந்த சம்பவங்களை சொல்ல முடியும்!சில நடக்க போவதை பற்றியும் சொல்ல முடியும்!அதனை உபாசிக்கிறவர்களுக்கு பணம் சம்பாதிக்க ``ஏவல்`` செய்து செய்விணை செய்து கெடுதல் செய்ய முடியும்!எதிர்தரப்பு நபர்கள் வந்து பணம் கொடுத்தால் வைத்த செய்விணையை எடுக்கவும் முடியும்!இவையெல்லாம் `அருள்` அல்ல `மருள்` என்றார் வள்ளலார்!

கடவுளிடமிருந்து வருவது `அருள்` என்றால் அசுர ஆவிகளிடமிருந்து வருவது `மருள்`!அசுர மாயங்களை இனம் காண தெளிவு உண்டானாலேயே கடவுளை நோக்கி முன்னேற முடியும்நம்மை சகலவற்றையும் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் !இந்த ஒருவரை மறைக்கும் முயற்சியில் அசுர ஆவிகள் செயல்படுகின்றன !உடலின் இச்சைகளை தூண்டி உலக மாயைகளில் மனிதனை வீழ்த்துவது; அதனை அடைவதற்கு அக்கிரமத்தையும் துணிவையும் தன்முனைப்பையும் தூண்டி விடுவது!அதற்கு சாக்கு கற்பிப்பது!அந்த தவறுக்குள் மனிதன் ஊறியவுடன் அவனை குற்றவாளி என குற்றம் சொல்லி பாவ சுரணை அற்றவனாக முழுக்க நனைந்து விட்டாய் இனி உனக்கும் கடவுளுக்கும் சம்மந்தம் இல்லை எனவே கல் நெஞ்சக்காரனாய் ஆகிவிடு என கற்பிக்கும் அதே அசுர ஆவிகள் நல்லவர்களுக்கு வைத்திருக்கிற உபதேசம் உனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் என்பது !மனிதனும் கடவுளாகலாம் என்பது மனிதனின் தன்முனைப்பை தூண்டுவது !நீயம் கடவுளாகலாம் நாங்களும் கடவுளாக ஆகிவிட்டோம் அதனால் கடவுள் என்று ஒருவர் அவசியமில்லை என்பது! இறைபேரரசை கலகம் செய்து சுயராஜ்ஜியம் செய்வது!கடவுளின் ஆளுமையை மறுக்கிற எல்லாமே அசுர பின்னணி !ஞானம் போல தோற்றமளிக்கிற மாயாவாதம் அசுர உபதேசம் !இந்த மாயையில் நிறைய நல்லவர்கள் மாட்டிக்கொண்டு உள்ளனர் !கடவுள் தான் வழிகாட்ட வேண்டும் !அசுரர்களின் மாய்மாலங்களை அழிக்கவே இறைதூதர்கள் பூமிக்கு வருவார்கள் என்பது கீதையில் கிரிஷ்ணரின் வெளிப்பாடாகும் !!!


I யோவான் 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசின் ஆதிக்கத்தில் இருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே இயேசு  வெளிப்பட்டார்.

 ராமரோ கிரிஷ்ணரோ இயேசுவோ; அசுரர்களோடும் மாயைகளோடும்; மாயைகளை பின்பற்றுபவர்களோடும் ;மனிதர்கள் உருவாக்கி கொண்ட நிறுவனங்களில் பதவியில் போய் ஒட்டிக்கொண்டு தத்துவங்களை திரித்து உபதேசித்து தங்களை கடவுளுக்கு ஏஜென்ட்டுகளாக காட்டி கொள்கிரவர்களோடும் யுத்தம் செய்தார்கள் !பழைய சடங்காச்சாரங்களை பொய்களை உடைத்தெறிந்தார்கள்! அவர்கள் காலத்தில் சாதாரண மனிதர்களும் கடவுளோடு ஒப்புரவு ஆனார்கள் !ஆனால் அவையும் காலப்போக்கில் சீரழிந்து போய் விட்டது !இதனை சீர் செய்ய மறுபடி இறைதூதர்கள் வருவார்கள் என்றே இம்மூவரும் சொல்லியுள்ளனர்!