(இங்கு க்ளிக் செய்து பாடலை கேட்டுக்கொண்டே படிக்கவும்)
வைகுண்ட ஏகாதசி விரதம் !!
புராண கதை கூறும் விரதம் :
கிருதா யுகத்தில் முரண் என்ற அசுரன் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அதை விஷ்ணுவிடம் முறையிட் டனர். விஷ்ணு முரணுடன் கடும்போர் செய்தார். ஒரு சமயம் அவர் களைப் படைந்து ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது முரண் விஷ்ணுவைக் கொல்ல முயன்றான்.
அச்சமயம் விஷ்ணுவின் 11 இந்திரியங்களில் இருந்தும் சக்தி உருவாகி, ஒரு சௌந்தர்ய தேவதை தோன்றி முரனை அழித்தாள். விஷ்ணு எழுந்து நடந்ததை அறிந்தார். 11 இந்திரியங்களிலிருந்து தோன்றியதால் அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு, "உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்றார். "இந்த நன்னாளில் எவர் விரதம் இருந்து தங்கள் நாமத்தை உச்சரித்து வழிபடுகிறார்களோ, அவர்கள் செய்த பாவத்தை விலக்கி வைகுண்ட பதவி தரும் சக்தியை எனக்குத் தாருங்கள்' என்றாள். அப்படியே திருமால் வரம் அருளினார். இப்படி உருவானதுதான் மார்கழி வளர்பிறை ஏகாதசி விரதம்
புராணக்கதைகள் என்பவற்றை அப்படியே நடந்ததா ? நடக்கவாய்புள்ளதா ? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை !
ஏனென்றால் இந்தக்கதைகளின் மூலம் உணர்த்தப்படும் ஞானம் முக்கியமே தவிர கதை முக்கியமில்லை ! இருந்தாலும் ஞான அப்பியாசம் இல்லாத சாதாரன மனிதர்களுக்கும் – ஆரம்ப நிலை சாதகர்களுக்கும் இந்த விரதம் நல்ல பலன்களை அடுத்த பிறவியில் அருளும் என்பதில் சந்தேகமே இல்லை
இந்து தர்மத்தில் சடங்காச்சார பக்தியும் ; ஞானம் பொதிந்த பக்தி யோகமும் மேற்பார்வைக்கு ஒன்று போல கடைபிடிக்கப்பட்டாலும் பலன்கள் வேறுவேறாக விளையும் !
அதனாலேயே ஒரு பெரிய ஞானத்தை எளிமைப்படுத்தி ஒரு புராணக்கதையாக ஆக்கி அதன் தொடர்பாக ஒரு சடங்கை அல்லது விரத்தத்தை கொடுத்திருப்பார்கள் !
இவ்விரதத்திலும் விளங்கப்படும் ஞானமாவது
பக்தியில் ; ஞானத்தில் ஓரளவு சாதகம் பல பிறவியில் செய்ததால் இப்பிறவியில் சத்துவத்தில் நிலைக்கிறவர்கள் இப்பிறவியில் அதில் முன்னேற விடாதபடி உலகமும் அசுர ஆவிகளும் முரண்பாடுகளை கொண்டுவரும் ! ஆரம்ப காலங்களில் உலகில் வாழத்தெரியாத ஏமாளிகளாக சிக்கலுக்குள்ளாவர்கள் !
லவ்கீக மாயை ; ஆசாபாஷைகளால் ஈர்க்கப்பட்ட உலக மாந்தர்களை பல தவறுகளில் இழுத்து விட்டு அவர்களின் பாவ கணக்கை முடிந்தளவு கூட்டி விடுவதால் கடவுள் அவர்களை வெறுத்து விடட்டும் என முயற்சிக்கும் அசுர ஆவிகள் ; மறுபுறம் கடவுளைத்தேட துவங்குவோர் ஒரு சிறு தவறு செய்தாலும் அதை பிரபலப்படுத்தி அவர்களை இழிவுக்குள்ளாக்க முயலும் ! அல்லது நீ கடவுளை தேட அருகதை அற்றவன் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கும் ! அதை விட கடவுள் ஒரு அடி அடித்தால் கூட பத்து அடி அடித்து பக்தர்களை அழிக்கவே முயலும் ! இத்தகைய இக்கட்டுகள் ஆன்மீக அன்பர்களுக்கு நிறையவே வரும் !
பொதுவாகவே பிறர் குறைகளை அதிகமாக பேசுகிறவர்கள் இப்படிப்பட்ட ஆவிகளின் பின்னணியில் தூண்டப்படுபவர்களே !
சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அதே தவறுகளை அவர்கள் பல மடங்கு செய்யத்தொடங்குவார்கள் !
எவ்வகையிலும் உலக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் முன்னேற விடாமல் தடுப்பவை முரண்பாடுகளே ! இவைகளை ஊதி ஊதி தூண்டி விடும் அசுர ஆவிகளே ! இந்த ஆவிகளையே முரண் என்ற அசுரன் என கதை சொல்லுகிறது !
இவைகளோடு போராடி போராடி களைப்படைவது ; சோர்ந்து போவது சாதகர்களின் வாழ்வில் தவிர்க்க இயலாது !
இந்த அசுரனை அடக்க நாராயணனின் இந்திரியங்களால் உண்டாகும் ஒரு ஈர்ப்பு சக்தியால் மட்டுமே முடியும் ! அது முரண்படுபவர்களை அழிப்பதல்ல ! அது வன்முறையாகவும் சாத்வீகத்திற்கு எதிராகவும் பக்தி நெறியற்றும் போய் விடும் ! தீமையை அழிப்பது பக்தர்களின் ஆன்மீக வாழ்வை பல மடங்கு பின்னேற்றம் கொடுத்து விடும் !
அப்படியானால் முரண்பாடுகளை வெல்ல என்னதான் வழி ?
நாராயணன் நாமத்தினால் நம்மோடு முரன்படுபவர்களுக்கும் அவர்களின் பின்னணியில் இயங்கும் ஆவிகளுக்கும் சாந்தி உண்டாகும்படியாக அனுதினமும் பிராதித்துக்கொண்டே இருக்கவேண்டும் !
இந்தப்பிரார்த்தனையை ஏகாதசி நாளன்று ஒரு சிறு விரத்தத்துடன் ஏறெடுத்து நமக்கு தீங்கு செய்தோரை மண்ணிக்கவும் அவர்களுக்கு சாந்தி உண்டாகும்படியாக வேண்டுவதும் விரைவில் நமக்கு வெற்றியை கொண்டுவரும் !
நம்மிடமிருந்து வெளியேறும் சாந்தியும் சாத்வீகமும் மட்டுமே இந்த முரண்டுகளை ஈர்த்து அவர்களை அடக்கும் ! அது ஒரு சாதகன் அடையவேண்டிய முக்கிய படி !
இன்று உலகில் அந்தந்த இனங்களுக்கு வந்த வேதங்கள் மதங்களாகி ஒன்றை ஒன்று அழிப்பதாகவும் ; இனங்களை அழிப்பதாகவும் மதவெறிகளாக முரண்பாடுகள் உச்சத்தை அடைந்துகொண்டுள்ளன !
இந்த முரண்பாட்டை சமப்படுத்தி உலகம் முழுவதும் சாந்தியை உண்டாக்கும் சமரச வேதம் வெளியரங்கமாவதே தீர்வு !
அதை நாராயணன் விரைவில் செய்யும் படியாக வேண்டிக்கொள்கிறேன் !
நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி