Total Pageviews

Sunday, March 2, 2014

இந்து மதம் பிராமணர்களின் மதமா ?



இந்து மதம் திராவிடர்களின் மதம் ! அதை உருவாக்கியவர்கள் திராவிட ஞானிகள் ! வேதங்களை தொகுத்த வேத வியாசர் சத்திரியர் ! ராமர் , கிரிஸ்ணர் , வசிஸ்ட்டர் விசுவாமித்திரர் வால்மீகி அனைவரும் சத்ரியர்கள் ! சமஸ்கிரதத்தை சகல இந்திய பாஷைகளிலிருந்தும் பொதுப்படுத்தி - சமப்படுத்தி உருவாக்கியவர்கள் திராவிடர்கள் !

கோவிலில் பூசை செய்வதற்கு சில நியதிகளை கடைபிடிப்பது அவசியம் என்பதால் அதற்கென ஒரு குலத்தை வேறு படுத்தி அவர்களை போஷித்தவர்களும் திராவிடர்களே ! ஆனால் காலத்தின் கோலம் பிராமணர்கள் கோவில்பணி செய்கிறவர்கள் என்ற நிலையிலிருந்து சமுதாயத்தை ஆளுமை செய்கிறவர்களாக ஆதிக்கம் அடைவார்கள் ! அப்போதெல்லாம் இந்து தர்மம் சீர்கேட்டை - கடவுளுக்கு சம்மந்தமில்லாத சடங்காச்சாரங்களும் பிழைப்புவாதங்களும் ஜாதிய ஏற்றத்தாழ்வு கொடுமைகளும் தலதூக்கியிருக்கின்றன ! மனிதர்களின் அறியாமையை கடவுளின் பேரால் பிழைப்புக்கும் சீர்கேட்டுக்கும் பூசை செய்கிறவர்களால் கெடுக்கமுடியும் என்பது இயல்பு ! உலக வரலாற்றில் சீர்கெடாத எந்த கொள்கையும் இல்லை ! இயக்கமும் இல்லை ! மதங்களும் இல்லை !

சீர்கெடுவது  இயல்பு என்பது அங்கீகரிக்கப்படவேண்டும் ! அதுபோல அதில் சீர்திருத்தம் மீண்டும் கடவுளாலும் இறை நெறி உணர்ந்தவர்களலும் அல்லது இறைதூதர்களாலும் அவசியம் வரும் !

எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை சீர்படுத்த நான் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறேன் என்ற கிரிஸ்ணரின் வரிகளை மறந்துவிடலாகாது !

அவ்வரிகளை அதர்மம் வெளியிலிருந்து தலை தூக்குவதாக மட்டும் ஒவ்வொரு மதங்களும் புரிந்துகொள்ளுகின்றன !

வெளியிலிருந்து மட்டுமல்ல ; உள்ளிருந்தும் அதர்மம் தலைதூக்கும் ; வெளியிலிருந்து வரும் ஆபத்தை விட உள்ளிருந்து விளையும் ஆபத்துகள்தான் அதிகம் என்பது நிதர்சணம் !


அந்த ஆபத்து யார் பூசைப்பணியில் உள்ளார்களோ அவர்களால்தான் அதிகம் இருக்கும் !

தர்மத்தை சீர்படுத்த யுகங்கள்தோறும் அவதரிக்கிறேன் என்ற கீதையின் வாசகங்களை நிதானித்தோமென்றால் யுகங்களுக்கு ஒரு அவதாரம் என்பது புலப்படும் ! இந்த அவதாரம் மட்டுமல்லாமல் இறைவனை நெருங்கிய ஆத்மாக்களும் உபகுருவாக ஆங்காங்கு கொஞ்சம் முடிந்தளவு மனித ஆத்மாக்களை சீர்படுத்தியிருப்பார்கள் !

நாராயண அவதாரம் முழுமையான சீர்படுத்துதல் என்றால் மனித உபகுருக்கள் கொஞ்சமேனும் சீர்படுத்துதல் இருக்கும் !

இவை அனைத்தும் கடவுளின் சார்பு இல்லாமல் நடப்பதில்லை !

தாங்கள் பின்பற்றும் குரு நெறி மட்டும் கடவுளின் சார்பு என்பதை உணர்ந்திருக்கிற பக்தர்கள் - சீடர்கள் மற்ற உபதேசங்கள் கடவுளின் சார்பு அற்றவை என்பதுபோல எகிரிக்குதிப்பதும் வசைபாடுவதும் இளம்பிள்ளைக்கோளாறு !


அத்தோடு தங்களின் நெறியிலும் கோளாறு உள்ளுக்குள்ளிருந்து விளைகிறது என்பதை நம்பவே மறுக்கிறார்கள் ! பூசி மெழுகுவது கடமை என்பதுபோல வைராக்கியம் கொள்கின்றனர் !

ஆனால் இயல்பாக இருந்து சீர்படுத்துதலை ஏற்றுக்கொள்வது ஆத்ம முன்னேற்றத்திற்கு அடையாளம் ! அது தர்மத்தையும் முன்னேற்றும் !

புத்தருக்கு முன்பு உயிர்ப்பலியை யாகங்களாகவும் வேள்விகளாகவும் செய்த பிராமணர்கள் ; திராவிட வேதங்களை பக்கவாட்டில் வைத்துக்கொண்டு தங்களின் சொந்த சரக்காகிய இந்திர வழிபாட்டு வேள்விகளை அதிகப்படுத்தி அதர்மத்தை பெருக்கினர் !

நால் வகை வேதங்களில் திராவிட ஞானிகளால் கொடுக்கப்பட்ட உயிர்ப்புள்ள ; இறை நெறி உணர்ந்த வேதங்களுடன் ; மேற்கண்ட இந்திர சரக்கை இணைத்துவிட்டனர் ! அதனால் இந்து தர்மம் அக்கிரம் கூடாரமாக மாறியதால் புத்தர் வந்து அதை சீர்செய்தார் !

புத்தரின் பின்னால் சாதாரன பொதுமக்கள் அணி திரண்டபோது ; பிராமணர்களே அதை முழுமூச்சாக எதிர்த்தார்கள் ; நய வஞ்சகமாக விசம் கொடுத்தும் கொன்றார்கள் !


ஆனாலும் புத்த மதம் அரச மதமாக இந்தியாவில் நிலைத்தது ; தொடர்ந்து சமணமும் நிலைத்தது ! - இவைகள் பூசைக்கென்று ஒரு குலம் இருப்பதை தடைசெய்தன ! பல ஆண்டுகள் பிராமணர்கள் வேறு தொழிலுக்கு போனார்கள்

தகுதியுள்ளவர்கள் -  குடும்பம் அற்றவர்கள் - துறந்தவர்கள் -ஆன்மீக  தலைமையில் இருக்க்வேண்டும் என்ற நியதி வந்தது !

1500 ஆண்டுகள் வரை இந்தியா முழுதும் கோலோச்சிய அந்த மார்க்கங்களும் இறுதியில் சீர்கெட்டு அக்கிரமக்காரர்களின் கூடாரமாக மாறிப்பொயிற்று !

அதை முதன் முதலில் வென்று சைவத்தை வைணவத்தை தழையச்செய்தவர்கள் தமிழர்களே ! பின்னரே அது இந்தியா முழுதும் அடக்கப்பட்டது !


அப்போது மீண்டும் சதுர்வேதி மங்கலங்கள் என்ற பிராமண குடியிருப்புகள் தமிழ் மன்னர்களால் அமைக்கப்பட்டு வேத பாடசாலைகளில் பிராமணர்களுக்கு வேதங்கள் மனப்பாடம் செய்விக்கப்பட்டன ! கொஞ்சமேனும் புத்த சமண துறவிகளுக்கு ஈடு கொடுக்கவேண்டும் என்பதர்காக பிராமணர்கள் புலால் உண்பது தடை செய்யப்பட்டது !

முஸ்லிம்களின் கொலைவெறி தாக்குதல்களை தடை செய்து நிறுத்திய  விஜயநகர பேரரசு தென்னிந்தியாவில் தெலுங்கர் மற்றும் கன்னடர்களால் ஸ்தாபிக்கபாட்டு வைணவ சைவ கோவில்கள் பராமரிக்கப்பட்டன ! அந்த அரசு வீழ்ந்தது ; ஆனால் பிராமணர்களால் சாதிய பாகுபாடுகளும் வெறிகளும் உச்சாணியை அடைந்து இந்து தர்மம் சீர்கேடுக்குள்ளானது !

அப்போது அதை சரி செய்ய வந்தவைகள்தான் திராவிட இயக்கங்கள் !

பிராமண எதிர்ப்பு என்பதை கடவுள் எதிர்ப்பு என்பதாக அல்லது இந்துமத எதிர்ப்பு என்பதாக தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் !

அவர்களின் வாதப்படியே பிராமணர்கள் மிக ஆதிகாலங்களில் மத்திய கிழக்கு ஆசியாவில் அதாவது யூப்ரட்டீஸ் டைக்ரீஸ் நதிக்கரையிலிருது ( இன்றைய ஈராக் . ஈரான்  ஏகிப்த்து இஸ்ரேல் அரேபியா ) பிழைப்பு தேடி வந்தவர்கள் அதாவது ஆரியர்கள் என்றால் ; அவர்கள் பூசை செய்யும் தொழிலை செய்தார்கள் என்பதற்காக திராவிட ஞானிகள் உருவாக்கிய இந்திய வேதங்களை ; இந்து தர்மத்தை பிராமண மதமாக அர்த்தப்படுத்திக்கொள்வது தவறு !

பிராமணர்கள் யூதர்கள் . இந்தியாவில் வந்த இடத்தில் திராவிட மதத்தின் பூசைப்பணியை செய்யத்தொடங்கினார்கள் .திராவிடர்கள் பூசைக்கு உருவாக்கிய சமஸ்கிரதத்தை மணப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்கள் . அவர்களின் வீடுகளில் சமஸ்கிரதம் பேசப்படுவதில்லை

பிராமணர்களுக்கென்று சொந்த மொழி எதுவும் கிடையாது . இருக்கும் இடத்தின் மொழிகளையே பேசுகிறார்கள் . இப்படி இருக்க  திராவிட மதமான இந்து மதத்தை ஆரிய எதிர்ப்பு என எதிர்த்து சாட்சாத் ஆரிய மதங்களான கிரிஸ்தவ இசுலாமிய மதங்களுங்கு மறைமுக ஆதரவு காட்டுவது என்ற அரை வேக்காட்டு பகுத்தறிவு வாதம்  . ஆரியத்தை  எதிர்க்கிறோம் என்று வாயிலே சொனாலும் செய்கையில் ஆரியத்திற்கு அடிமையாகும் ஆரிய மாயை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் !

என்றோ வந்த ஆரியர்களை எதிர்க்க இன்றைக்கு இந்தியாவிற்கு அச்சுருத்தலாக இருந்து திராவிடர்களை ஐரோப்பிய வான்கோழிகளாகவும் அரபியவான் கோழிகளாகவும்  மாற்றும்  ஆரியத்துடன் கைகோர்ப்பது சரியா ?

இந்து மதம் பிராமணமதமல்ல என்பதை புரிந்துகொள்வதும் ; நவீன ஆரியத்துவம் கிரிஸ்தவம் மற்றும் இசுலாம் மூலமாக இந்திய திராவிடத்தில் பரவி வருகிறது என்பதை புரிந்துகொள்வதும் அவசியம் !

இந்து மதத்திற்கு முன்பு அச்சுருத்தலாக இருந்து ஏறக்குறைய 1500 வருடங்கள் இந்தியா முழுவதும் கோவில்களை அடைக்கச்செய்த புத்த சமண மதங்களை அதன் உண்ணத கொள்கைகளான உயிர்ப்பலியை தடைசெய்தல் ; பூசை செய்வோர் உயர் ஒழுங்கை கடைபிடித்தல் ; தகுதி எதிர்பார்த்தல் என்பவை இந்து தர்மத்தில் ஈர்க்கப்பட்டதால் மட்டுமே அடக்கமுடிந்தது !

அதுபோல  ஆபிராகாமிய மதங்களை அடக்கவேண்டுமானால் அதன் உன்னத கொள்கையான ஓரிறைக்கொள்கையை இந்து மதத்திற்குள் சுவீகரித்தாகவேண்டும் !

பூமியில் வெளிப்பட்ட அனைத்தும் குரு என்றும் அதன் மூலமாக அரூப இறைவனை வணங்குதல் என்ற ஆதி வைணவ நெறியை வெளிச்சப்படுத்திக்கொள்வோமானால் போதுமானது !

ஆதி மனிதர்கள் தூய நெறியில் இருந்தார்கள் என்றொரு குறிப்பு குரானில் உண்டு ! அது இந்தியாவின் வைணவமே !!



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே  
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



ஓரிறைவனையே துதிக்கிறோம்

சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி