Total Pageviews

Sunday, March 2, 2014

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்ந்த இடம

by கிருபானந்தன் பழனிவேலுச்சா on 22/12/2013, 20:08


சுருளி மலையின் நுழைவு வாயிலில் பூத நாராயணன் திருக்கோவில் அமைந்துள்ளது இப்பகுதி மக்கள் இறந்தவருக்கு நாற்பதாம் நாள் கடமையாக நீர்க்கடன் செழுத்தி ஆத்மா சாந்தி வழிபாடு செய்ய உறவினர்களுடன் வாகனங்களில் இங்கு வருவார்கள் !எல்லோரு நீராடி சமையல் செய்து ; இங்குள்ள சந்நியாசிகளின் மூலமாக இறந்தோரின் ஆத்மா சந்திக்கு வழிபாடும் ஓதுதலும் செய்து அர்ப்பணித்து பின்பு அனைவரும் பந்தியிருப்பார்கள் கர்மம் செய்தல் அல்லது கருமாதி என அழைக்கப்படும் இச்சடங்கு அவர்களை அடுத்த பிறவிக்கு வழியனுப்பி வைத்தாலே ஆகும் சுருளி மலை முப்பதிமுக்கோடி தேவர்களும் அவ்வப்போது ஒன்றாக கூடி வழிபாடு செய்யுமிடம் என்றொரு ஐதீகம் உண்டு

அவ்வாறு ஒன்று கூடும் போது பூத நாராயணனே காவல் செய்கிறவராக இருப்பதால் காவல் - பூத நாராயணன் என்பதாக கதை உண்டு


ஆனால் உண்மை யாதெனில் ஆத்மாக்கள் தங்களின் பூத உடலையே தாங்கள் என்பதாக கருதிக்கொண்டு இறந்த உடலை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல் இருக்கும் நாற்பது நாளலவில் உடல் மண்ணால் திண்ணப்பட்ட பிறகு அவை இனி அடுத்த நிலைக்கு கடந்து சென்றே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் அல்லது அவ்வளவுதான் என்ற தெளிவு உண்டாகும் அதன் தொடர்பாகவே இப்பிறவி வாரிசுகள் அந்த ஆத்மாவுக்கு சாந்தி உண்டாகும் படியாக சாரீரங்களுக்கும் காரணகர்த்தாவாகிய பூத நாராயணனிடம் அகண்ட விளக்கு ஏற்றி வேண்டுதல் செய்து அடுத்த பிறவி நற்பிறவியாக அமைய வழியனுப்பி வைப்பதாகும் இந்தப்பிரார்த்தனை

எனவே இவருக்கு பூத நாராயணன் ! சரீரங்கள் அழிந்தாலும் அடுத்த சரீரத்தை - அடுத்த பிறவியை கொடுப்பவர் இக்கோவிலை அடுத்து சுருளி நீர்வீழ்சி உள்ளது அடுத்த மலை சிகரத்தில் கைலாசநாதர் குகை அல்லது சுருளி வேலப்பர் சன்னதி உள்ளது






இங்கு எப்போதும் சில சித்த புருஷர்கள் தவத்தில் இருப்பார்கள்

நான் பத்து வயதிருக்கும் ; இங்கிருந்து நாற்பது கிலோமீட்டர் துரம் உள்ள எனது பிறந்த ஊருக்கு அருகில் டோம்புச்செரி என்ற கிராமத்தில் எனது உறவிணர் தாத்தா -ஒருவர் தவ யோகா வாழ்வு வாழ்ந்தவர் தனது பிள்ளைகளை வற்புறுத்தி தன்னை புதைக்கசொல்லி விட்டார்

சில நாட்களுக்கு பின்பு அவர் இந்த மலைக்குகையில் இருப்பதாக தகவல் வந்து உறவினர்கள் படை திரண்டு சென்று அழுது முறையிட்டும் அவர் வர மறுத்து விட்டார்

அப்புறம் பின்னாளிலும் உறவினர்கள் தொந்தரவு அதிகமாகவே கிராமம் வந்து சில நாட்கள் இருந்தார் பின்பு சமாதி ஆவதாக அங்கேயே சமாதி வைத்து அவரின் நினைவாக ஒரு பள்ளிக்கூடம் ஒன்று நடத்தி வருகிறார்கள்

நான் சென்ற மாதம் ஸ்ரீரெங்கம் செல்ல ; அங்கு எனது (சன்மார்க்க )நண்பர் ஆதியின் வீட்டிற்கு சென்றேன் அங்கு ஒரு புகைப்படத்தில் பக்கத்து கிராமத்தில் இருந்து சமாதியான ஒரு சித்தரின் புகைப்படம் ஒன்றை அவர் வைத்துக்கொண்டிருந்தார் அவரைப்பற்றி பல கதைகளை சொன்னார் ஆனால் எனக்கு ரெம்ப தெளிவாகவே அது அவர்தான் என்பது புரிந்தது

முக்தியை நெருங்கும் நிலையில் உள்ளோர் உலக வாழ்வில் பட்டும்படாமலும் வாழ்ந்து சில பாவங்களை கடற வேண்டி வரும்போது இத்தகைய வாழ்வு அவர்களுக்கு உண்டாகும் . நாம் அவர்களை சித்தர்கள் என்று சொல்லுகிறோம் சிலர் உபதேசிப்பார்கள் சிலர் உபதேசிப்பதில்லை அனால் இவர்களின் இருப்பு அப்பகுதியில் கடவுளின் இறை பேரரசை நிலைநாட்டும் ! அசுர ஆவிகளும் பூமியில் கிரியை செய்து அனேக ஆத்மாக்களை தீமைக்குள் ஊக்குவிக்கும் போது இவர்களின் இருப்பு அதை நீர்த்து போகச்செய்யும்










கடந்த பத்தாண்டுகளாக சுருளி மலையை ஒட்டி அப்படி ஒரு நபர் வாழ்ந்து கொண்டுள்ளார் அவரின் பெயர் ஊர் எதுவும் தெரியாது ! எதையும் உண்பதுமில்லை யாரிடமும் பேசுவதுமில்லை

சுருளி செல்லும் பாதையில் ரோட்டோரத்தில் அங்கும் இங்கும் இருப்பார் நள்ளிரவிலும் நடந்து கொண்டே இருப்பார் ! அவர் நடந்து கொண்டிருப்பது ஒரு மைய புள்ளியாக வைத்து மெதுவாக அவர் சுருளி மலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் அப்படி அவர் சுருளி மலையை அடைந்ததும் சமாதி ஆகி விடுவார் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்

அவருக்கென்றும் இப்போது ஒரு கூட்டம் உருவாகி விட்டது ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை அவர் ஒரு பாலத்தில் உட்கார்ந்திருப்பார் அவரை சுற்றிலும் சிலர் நின்று கொண்டு பழத்தை பீடியை வைத்துக்கொண்டு வாங்கிக்கொள்ள மாட்டாரா என்று காத்திருப்பார்கள் வாங்கினால் பழத்தை கீழே வைத்துவிடுவார் அதை எடுக்க போட்டி போடுவார்கள் பீடியை மட்டும் பிடிப்பார் அந்த வெப்பத்தையே உணவாக்கிகொள்கிறார் பிறகு அவர் பாட்டுக்கு நடக்கத்தொடங்கி விடுவார்

அவரை போட்டோ எடுக்கலாம் என நினைத்தேன் என்னால் அவரை காண முடியவில்லை


கைலாசநாதர் குகை !!

சுருளி மலை அடிவாரத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் மலைப்பாதை வழியாக நடந்து சென்றால் கைலாசநாதர் குகையை அடையலாம் 

திரேதா யுகத்தில்நாராயணன் ராமராக அவதரித்தபோது அவருக்கு உதவும் நோக்கத்தில் தேவர்கள் அனைவரும் வாணரர்களாக அவதரித்தனர்

அப்படி அவர்கள் அவதரித்து வாழ்ந்த மலை இந்த சுருளிமலை  அதனாலேயே முப்பத்தி முக்கோடி தேவர்கள் வாழ்ந்த மலை சுருளிமலை என்கிறார்கள் 



இங்கு அருள் சக்தி பொங்கி வழிவதை கண்கூடாக கண்டேன்  தியானத்தில் மிக அற்புதமான பேரானந்தம் சித்தித்தது புகைப்படத்தில் கூட என்னை சுற்றிலும் ஆற்றல் ஒளிர்வதை காணலாம்