Total Pageviews

Sunday, March 2, 2014

பாரதியை நினைவு கூர்வோம் !!

பாரதியின் ஆத்மா சாந்திக்காகவும் அவரது உலக வாரிசுகளின் நல வாழ்வுக்காகவும் நாராயணன் நாமத்தினாலே கடவுளை வேண்டுவோம் !!

அவர் முழு அரசியல்வாதியுமல்ல ! அப்படி காங்கிரஸ் இயக்கத்தோடு அரசியல் செய்திருந்தால் அந்த இயக்கம் அவரை போஷித்திருக்கும் !

அவர் ஆன்மீக வாழ்விலேயே முழ்கிப்போய்விடவுமில்லை ! அப்படி இருந்திருந்தாரானால் அரவிந்தரைப்போல அவருக்கென்று சீடர்களை உண்டாக்கிக்கொண்டு அந்த நிறுவனமாவது அவரைத்தாங்கி இருக்கும் !


தனக்குண்டான ஆன்மீகத்தெளிவால் சகல மனிதர்களையும் நேசித்தார் ; மதித்தார் அனைவருக்கும் பூணூல் அணுவித்தார் !

அந்த இயலாதவர்களாலும் அவரது குடும்பத்தை தாங்க இயலவில்லை ! அவசர உதவிக்கு வந்து உதவக்கூடிய சொந்த ஜாதியாரும் வெறுப்பால் தாங்க வரவில்லை !

அவரது குடும்பமே தனித்து விடப்பட்டது !

அவரது கவிதைகள் பலரை ஊக்கப்படுத்தியது !

அவரது கவிதையை காங்கிரஸ் பயன்படுத்தியது போல அவரை போஷிப்பவர்கள் அங்கு உருவாகவில்லை !

ஜாதிய இயக்கங்களில் சொந்த ஜாதி வெறியை துண்டி உரிமை போராளிகளாக பகட்டு காட்டுவோரை சொந்த ஜாதிக்காரர்கள் தலையில் வைத்து கூத்தாடுவது போல அடுத்த ஜாதிக்காரர்கள் ஜாதி சமத்துவத்திற்காக சொந்த ஜாதிக்காரர்களையும் பகைத்துக்கொண்டு தியாகம் செய்தாலும் அவரை உரிமைப்போராளிகள் அக்கறை காட்டியதாக இதுவரை வரலாறு இல்லை !

ஜாதி சமத்துவத்தை விட ஜாதி வெறியைத்தான் நம்மவர்கள் உரிமை என்று சொல்லிக்கொள்கிறார்கள் !

எதைச்செய்தாலும் அதன் பலன் விளைவில் பற்றுகொள்ளாமல் கடவுளுக்கு அர்ப்பணம் என்ற மன நிலையில் செயல்புரிவதே கர்ம யோகம் !

கடவுள் ஒருபோதும் கடனாளியல்ல !

ஆத்மா ஒன்றின் உழைப்புக்கு இப்பிறவியின் சந்ததியாருக்கும் அடுத்த பிறவியில் அந்த ஆத்மாவுக்கும் என இரண்டு மடங்காக பலனை திருப்பி கொடுப்பவர் !


கடவுள் தமது மாறாத அன்பால் ; கருணையால் அவர்களை நிரப்புவாராக !!



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி