குருவிடம் வரவேண்டியது நெருக்கமான பணிவு !நம்மை கடைதேற்ற பொறுப்பெடுத்தவர் என்கிற நம்பிக்கையால் அது வரும் !தன்னிடம் உள்ளதை அப்படியே பெற்றுகொள்கிர ஆத்துமாவிற்காய் குருவின் இதயம் ஏங்கும்!தன் மூலம் விதை ஊண்றப்படுகிற நல்ல நிலத்தின் மீது அக்கறை கொள்ளும்! உணர்வினாலும் அறிவினாலும் ஆக்கஊக்கம் கொடுக்கும்! அப்படி அக்கறை இல்லாத குரு நல்ல குரு அல்ல!
ஒவ்வொரு மனிதனுக்கும் சில அனுபவங்கள் இருக்கும் !அது சமயம் வாய்க்கும் போது ஒத்த அணுபவம் உள்ளவர்களை இணம்கண்டுகொள்ளும் ! இத்தகைய மனிதர்கள் பழகினால்தான் நெருங்குகிறோம்!! ஆனால் ஏதோ ஒரு விசயத்திலும் தேறிய ஒரு குருவின் மனம் அதை அவரிடம் உண்மையாய் கற்றுகொள்ள முயற்சிக்கும் ஆத்துமாவை அதிகம் பழகாமலேயே கண்டுகொள்ளும்! ஒரு லயிப்பு உண்டாகும் !பழகாமலேயே உணர்வினாலேயே ஒன்றும்! ஆயிரம் பேர் இருக்கிற கூட்டத்திலும் குருவின் பார்வை நம்மை அடிக்கடி தழுவும்! நமது கேள்விகளுக்கு அவரிடம் பதில் இருந்தால் அவரின் பொதுக்கூட்ட உரையிலேயே அது பளிச்சென்று தெறித்து விழும்! நான் இப்படி பல குருமார்களை கடந்து வந்திருக்கிறேன்!
நமக்கு தெளிவு உண்டாக்க கடவுள் அவ்வப்போது ஒரு குருவை அனுப்பிவைப்பார்! அவரிடம் நாம் கற்றுகொள்ளும் போது பணிவு காட்டுவது என்பதை தவிற வேறு ஒன்றும் அவருக்கு நாம் செய்யமுடியாது--வேண்டுவதுமில்லை!
குருவிற்கு கீழ்படிவது என்பதை கடவுள் தன் மீது பக்தியாகவே எடுத்து கொள்கிறார் !ஆனால் கடவுளின் மீதுள்ள தாகத்திலே குருவுக்கு மதிப்பளிக்க வேண்டும் !இப்படி நாம் இருக்கும் போது தகுதியற்ற குரு ஒருவரிடம் நாம் இருந்தாலும் கடவுள் நம்மை வளர்த்து அவரையும் விட்டு புதிய விஷயங்களுக்குள் அழைத்து சென்று விடுவார் !மனித குருமார்கள் பலரிடம் பல விசயங்களை கற்றுக்கொள்ளும் படியாக கடவுளே நடத்துவார் !ஆனால் கடவுள் மீது மட்டும் அடங்காத தாகம் நமக்கு வேண்டும் !
நம்மிடம் கடவுளுக்கான தாகம் --முற்றறிவை நோக்கிய தாகம் இருக்கும் வரை அடுத்தடுத்து குருவை கடந்து செல்லும் அணுபவம் உண்டாகும்! குருவிடம் பணிவு என்பதை குருட்டு பக்தி என்பதாக சிலர் ஆக்கி கொள்கிறார்கள்! குருவை அவரிடம் கற்றுகொண்ட பிறகு அவரிடம் இல்லாத விசயங்களை உணர்ந்து அவரை விட்டு விலகி செல்லும் தாகம் உள்ளவனே நல்ல சீடன்!!!
அவரிடம் உள்ளதை கற்றுகொள்ளாதவர்களே அவரை அப்படி இப்படி என இல்லாததையும் பொல்லாததையும் புனைசுருட்டுகளை புனைந்தும் நம்பியும் அவருக்கு நாங்கள்தான் உண்மையான சீடர்கள் அதனால் நாங்கள் பெருமைக்கு உரியவர்கள் என்பதான சுய பெருமைக்காரர்கள்! தங்களை பெருமை பேசுகிற உள் நோக்கத்தில் குருவை தலையில்வைத்து ஆடுவது போல காட்டி கொள்கிறவர்கள்!! `` என் எதிரிகள் எனது சீடர்கள் தான் !!`` என்று கண்பூசியஸ் சொன்னது இவ்வகை சீடர்களைத்தான்!!!
No comments:
Post a Comment