கடவுளை உள்ளே தேடிக்கொண்டே இருக்கிறோம் --ஞானமார்க்கம் என்கிற உன்னதமான நெறியுள் வந்துவிட்டோம் என்பதான சுய பெருமை இன்று பலரை சூனியவாதம் என்கிற மாயைக்குள் நடத்தி கொண்டுள்ளது !சூனியவாதம் என்பது ஞானமார்க்கம் போல தெரிகிற கானல் நீர் !
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிற அடிப்படை உண்மையின் படி அண்டத்தை புரிந்து கொள்ள பிண்டத்தை புரிந்து கொள்ள அப்பியாசிப்பது உதவும் ! தனக்குள்ளாக கடவுளை தேடுவது என்பதில் அப்பியாசித்து ஒருவர் முன்னேற்றம் அடைந்தால் அண்டத்தில் உள்ள கடவுளோடு ஒத்திசைவு உண்டாகி பக்தி நெறிக்குள் வந்தே தீர வேண்டும் !அப்படி வராத நபர்கள் எல்லாம் கொஞ்சம் கூட முன்னேற்றமடையாமல் தேடுகிறோம் தேடுகிறோம் என சுயபெருமையில் திருப்தி அடைபவர்களே !!
ராமர் .கிருஷ்ணர் .இயேசு மூவரும் அசுரர்களின் கிரியைகளை பூமியில் அழித்தார்கள் குரானும் அசுரர்களின் கிரியைகளை எதிர்க்கவே அழைக்கிறது !மனிதனிடம் உள்ள தீய குணங்களை அழகாக்கி காட்டுவது அதனை பல மடங்கு தூண்டி விடுவது அதற்க்கு சுற்றுப்புற சூழ்நிலையை உருவாக்குவது-- ஏற்ற நபர்களை துணைக்கு கொண்டுவந்து சேர்ப்பது எல்லாமே இந்த அசுரர்களே !!
மனிதனின் பிண்டத்தில் மட்டுமே நன்மை தீமை குணங்கள் இருப்பதாக இந்த சூநியவாதிகள் வாதிடுகிறார்கள் !மனிதனிடம் உள்ள தீமை குணங்களை தியானம் செய்து ;தன்னை உணர்வதன் மூலம் திருத்தி கொண்டால் உள்ளே உள்ள கடவுளை அறிந்து விடலாம் என நம்புகிறார்கள் !ஆனால் பிண்டத்தில் உள்ளது எல்லாமே அண்டத்தில் இருந்து தான் பாதிப்பை உண்டாக்குகிறது என்ற மகத்தான உண்மையை உணர வம்பாக மறுக்கிறார்கள் !அண்டத்தில் கடவுளும் அவரை சார்ந்த தேவதூதர்களும் மனிதர்களில் நன்மையை தூண்டுவது போல அண்டத்தில் உள்ள கடவுளின் விரோதிகளான அசுரர்கள் மனிதர்களின் தீய குணங்களை பலமடங்கு தூண்டி ஆழுமை செய்கிறார்கள் !
மனிதன் தனது எதிரியை உணர்ந்தால் மட்டுமே ஆன்மீக சாதனைகளில் முன்னேற முடியும் !ஒரு தவறுக்கு மனிதன் மட்டுமே காரணமல்ல அதனை தூண்டி விடுகிற அசுரர்களும் காரணம் என்பதலாயே கடவுள் மனிதனை மன்னிக்க எப்போதுமே தயாராயிருக்கிறார் என்பதும் ; உணர்ந்து திருந்துகிற மனிதனுக்கு கடவுள் எப்போதும் சமீபமாக இருக்கிறார் என்பதும் இயேசுவின் வெளிப்பாடு !
ஒன்றை அறிவது என்பதற்கு இலக்கு வேண்டும் !கடவுளை அறிவது என்பதற்கு கடவுள் என்ற இலக்கு வேண்டும் !ஆனால் கடவுளை விட்ட --இலக்கை விட்ட எந்த உண்மையை தேடுவதாக நம்மை நாமே எமாற்றிகொள்வது? அது தர்க்க போதை என்ற பெரிய தடைக்கல்!
உண்மையை அடைய நிறைய மாயைகள் குறுக்கிடும் !அவை மறைத்து கொண்டே இருக்கும் !அதை ஒவ்வொன்றாக கடரும் போது மட்டுமே ஞானம் விளையும் !
நமக்குள் உள்ள கடவுளை அறிவது என்றால் நமக்கு அடுத்தவருக்குள் இருக்கிற கடவுளையும் நாம் அறிய முயலவேண்டும் என்பது வெளிப்படையானது ! அண்டம் முழுவதுமுள்ள கடவுளையும் அறிய முயலவேண்டும் ! நமக்குள் இருக்கிற கடவுளை நம்புவதாக சொல்லும் நாம் அயலாரிடத்தும் அண்டமெங்கும் உள்ள கடவுளையும் நம்ப வேண்டும் !வெளியே உள்ள கடவுளை நம்பாத --மதிக்காத நாம் நமக்குள் உள்ள கடவுளையும் நம்பவில்லை மதிக்கவில்லை என்பது உண்மை !
ஆனால் இன்று பலர் நுனி நாக்கில் எனக்குள் உள்ள கடவுளை மட்டும் நம்புகிறேன் என பேசுவதும் தங்களை கடவுளை தேடுகிரவர்களாக நம்பிக்கொள்வதும் நாகரீகம் போல ஆயிற்று !பல வருடமானாலும் எள்ளளவும் முன்னேற்றம் வரப்போவதில்லை !நானும் இப்படித்தானிருந்தேன் ! கடவுள் நம்பிக்கையில்லாத நவீன நாத்திகத்திற்குள் இருந்து கொண்டு கடவுளை தேடுவதாக நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்த பிறகுதான் ஆன்மீக முன்னேற்றமே உண்டாகிறது !
வெளியே இருக்கிற கடவுளை நம்பாத ஒருவர் தனக்குள்ளாக உள்ள கடவுளை நம்புவதாக நினைத்து கொண்டிருப்பது பொய்! கடவுளின் ஒரு துளியை கூட அனுபவிக்காத வறுமையே இந்த மாயத்தில் அவர்களை அடைத்து வைத்திருக்கிறது !
இறைவன் இருந்தார் இருக்கிறார் இருப்பார் என்பது எங்களது நம்பிக்கை !அது இல்லை என்பது நல்லவர்களுக்கு பயன்பட்டதை விட அக்கிரமக்காரர்களுக்கு அதிகம் பயன்பட்டுள்ளது !தன்னை அறிகிற அறிவில் வளர்கிற எவரும் மனித முயற்சியால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்கிற மெய்யை உணர்ந்து அண்டத்தில் உள்ள ஆவிமண்டல சக்திகளில் நன்மையை சார்ந்து தீமையை எதிர்க்க கடவுளை சரணடைவது ஒன்றே சிறந்த வழி என்னும் முடிவுக்கு வந்தே தீர வேண்டும் !அப்போது மட்டுமே ஆன்மீக சாதனைகளில் பெரும் வெற்றி பெற முடியும் !தனக்குள்ளாக இருக்கும் தீய குணங்களை வென்று தன்னை அறிகிற அறிவிலே வளர முடியும் !இருமைகளை கடந்த நிலைத்த மனத்தை பெற முடியும் !
கீதை 4:10 பந்தத்திலிருந்தும் பயத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுபட்டவர்களாய்; முற்றிலும் கடவுளில் நிலைத்து கடவுளுக்குள் புகலிடம் தேடியவர்களாய் கடவுளை அறிகிற அறிவாலே நிறைய மனிதர்கள் தூய்மை அடைந்தார்கள்!! அதனாலே கடவுளின் நித்திய அன்பிலே நிலைத்தார்கள்!!
No comments:
Post a Comment